படமும் பாடலும்

              சிங்கம் டிக்கெட் கிடைக்காம கற்றது களவு படத்திற்கு போனேன். கிருஷ்ணா வின் இதற்கு முந்தைய படமும் எதிர்பார்ப்பில்லாமல் போனதால் ரசிக்க முடிந்தது. படத்தில் வரும் முன்று பாடல்களையும் கட் பண்ணி அந்த நகைச்சுவை என்கிற பெயரில் போட்ட மொக்கையை தவிர்த்திருந்தால் இன்னும் விருவிருப்பாக இருந்திருக்கும். முதல் பாதி கதைக்குள்ள போகமுடியாத அளவிற்கு தூக்கியடிக்குது, நீரவ் ஷா கேமரா. மனுஷன் பூந்து விளையாடியிருக்கார். இரண்டாவது பாதி கேமரா உட்பட எதையும் கவனிக்க முடியாத படி வேகமாய் இருக்கிறது படம், தவறுகள் மறையுமளவிற்கு. ஓரளவுக்கு பரவயில்லைன்னு சொல்லக்கூடிய படத்தை நல்லா இருக்குன்ன் சொல்லவச்சிருக்கு இதற்கு முன் பார்த்தப்டங்கள். :-)

கிருஷ்ணா, பார்க்க எஸ்.ஜே.சூர்யா மாதிரி இருக்கார். நல்லா சண்டை போடறார், டேன்ஸ் ஆடறார்.  நல்ல பேனர், நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்தால் ஒரு மினிமம் கியாரண்டி நடிகர் கிடைப்பார், தமிழ் திரையுலகிற்கு.

பெட்டர் லக் கிருஷ்ணா. அந்த டைட்டில் பச்சோந்தி நல்ல கிரியேட்டிவிட்டி, அதைசெய்த கிராபிக் நிபுணர்களுக்கு வாழ்த்துக்கள்.

--------------------------------------------------------------------

            நல்ல ஒரு படம் பார்த்தேன், அ குட் இயர்-ன்னு. ரிட்லி ஸ்காட் (:-)) அவரோட பேவரைட்(என்னுடைய பேவரைட்டும் கூட) ரஸல் க்ரோ, ம்,ஈண்டும் இணைந்த படம். ரேப்பிட் ஷேரில் ஒருவாரமாய் கஸ்ட்டப்பட்டு டவுன்லோடி பார்த்தேன். ஒரு பதிவு போடலாம்ன்னா நம்ம கருந்தேள் முந்திகிட்டாரு. அவருடைய விமர்சனமே நல்லா இருந்ததால நான் எழுதல, இங்க படிங்க படம் பாருங்க, டிவிடி வாங்குங்க இல்லை டவுன்லோட் பண்ணிக்குங்க, நல்ல மழை நாளில் பாருங்கள் இன்னும் அழகாய்  இருக்கும் மழை.

--------------------------------------------------------------------

சட்டென நனைந்தது நெஞ்சம்,
சர்க்கரையானது கண்ணீர்
இன்னும் இன்பம் ஒரு துன்பம்,
துன்பம் எத்தனை பேரின்பம்

உடலுக்குள் மல்லிகை தூறல்,
உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு,
உயிரை மட்டும் விட்டுவிடு.

எந்தன் வாசல் வழி
காதல் நடந்துவரும் என்று
காத்துக்கிடந்தேன் - அது
வானில் பறந்துவந்து
கூரை திறந்துவரும் என்று
இன்று நானும் தெளிந்தேன்.

தாவி வந்து எனை அணைத்தபோது
எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன்.
சாவின் எல்லைவரை சென்று மீண்டும்
இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்.

துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைத்திடும் ஆதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை.

சுகமாய் சுகமாய் கொள்ளையிடு,
உயிரை மட்டும் விட்டு விடு

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்வரும் இந்த பாடல், அதிகம் கவனம் பெறாத பாடல் அல்லது முக்கியத்துவம் இல்லாத பாடல். இதிலேயே காட்சிக்கு பொருந்தகூடிய அருமையான வரிகள் மற்றும் ரம்மியமான இசையை கொடுத்திருக்கும் கவிஞரையும் இசையமைப்பாளரையும்.... ம்ம்ம். எனக்கு ரொம்ப பிடிச்சிடுக்கு.

ஒரு நாள் ஒரு பொழுது
உன்மூஞ்சக் காங்காம
உசிரு அல்லாடுதே

மறுநாள் வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாமல்
மனசு தள்ளாடுதே

அந்திமந்தாரை படத்தில் வரும் இந்த பாடலும் ரகுமான் ஆல்பங்களில் அதிகம் கவனிக்கப் படாமல் போன பாடல்களில் ஒன்று. கேட்டுப்பாருங்க. ரம்மியமா இருக்கும். இது போல படத்தில், கேசட்டில் வராத அல்லது அதிகம் கவனம் பெறாமல் போன நல்ல பாடல்கள் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்க நண்பர்களே!
--------------------------------------------------------------------

ஒரு பதிவை எழுதிமுடித்து அதை போஸ்ட் செய்வதற்க்குள் ஒரு மூன்று முறையாவது படித்து பார்த்துவிட வேண்டியிருக்கிறது. எங்கே இதில் எந்த வரியாவது யாரையாவது குறிப்பிடும்படியாக இருக்கிறதா? என்று. ஒருபுறம் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. 
மோதல்கள் இல்லாமல் பயணிக்கவே முடியாதா? வெறும் நண்பர்களையும் மட்டும் பெற இயலாதா, நாலு நண்பர்கள் கிடைத்தால் ஒரு எதிரி இலவசமா, என்ன? யாருடைய செயல்களுக்கும் நான் நியாயம் கற்பிக்கவுமில்லை, வாதிடவுமில்லை. எல்லா நல்லவனுக்குள்ளாகவும் ஒரு கெட்டவன் இருக்கிறான். அவனை வெளிக்கொண்டுவராத வரைக்குமே, நல்லவன். முடிந்தவரை அவனை உள்ளேயே பூட்டிவையுங்கள்.   நாம் நண்பர்களாகவே இருப்போம். கூடித்தேர் இழுப்போம்.

ஊதி எரியவைக்கும் உதடாய் இரு
கற்றவை, பற்றவை
தீயவை, தீயை வை.
என்ற பாரதியின் வார்த்தைகளை கொண்டு வளம் சேர்ப்போம்


வழிகின்ற கண்ணீரில் நிறமில்லையே!
உதிரத்தின் நிறமிங்கு வேறில்லையே!
காற்றுக்கு திசையில்லை, தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்.
மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும்போது
மனதோடு மனதிங்கு பகை கொள்வதேனோ?
மனமெங்கும் மதம் ஓயட்டும் - தேசம்
மலர்மீது துயில் கொள்ளட்டும்.


பம்பாய் திரைப்படத்தில் வரும் கிளைமேக்ஸ் பாடல்14 கருத்துரைகள்:

க.பாலாசி said...

//முடிந்தவரை அவனை உள்ளேயே பூட்டிவையுங்கள்.//

முடிந்தவரை அவன் என்று ஒருவன் இல்லாமலே பார்த்துக்கொள்கிறேன்...

நான்கில் நானும் நண்பனாகவே...

padma said...

அருமையான பதிவு முரளி. நீங்கள் சொல்வது சரிதான் ..நாலு நண்பர்களுக்கு ஒரு எதிரி இலவசம் தான் .நம்மை ஏன் மற்றவர்க்கு பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலே இல்லை போலும். அந்த பாட்டு தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை லிங்க் தாங்க

திருநாவுக்கரசு பழனிசாமி said...

முரளி..வலையுலகில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற
யுத்தங்களை(...?) பார்த்து சற்று பயந்துதான் போனேன்.
யாரையெல்லாம் படித்து, பின்பற்றி அவர்களின் கரம்பற்றி வலையுலகிற்குள் வந்தோமோ
அவர்களின் பிம்பங்கள் எல்லாமே, அவர்களாலேயே உடைக்கப்படுவது வருத்ததிற்குரியது.
என்ன செய்ய வேண்டும் என்பவற்றை கற்றுதந்தவர்களே, என்ன செய்ய கூடாது
என்பதையும் கற்றுத் தருகிறார்கள்..
நல்லது கற்றுக்கொள்வோம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

கற்றது களவு.. எனக்கு பிடிக்கல நண்பா..

http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/05/blog-post_31.html

நீங்க கேட்ட மாதிரி சில பாடல்கள் இஙே.. அடுத்த தொகுப்பு கூடிய சீக்கிரமே வருது..:-))))

http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/03/blog-post_14.html

கனிமொழி said...

சட்டென நனைந்தது நெஞ்சம்......
:-)
my fav....
Thanks for giving the lyrics...


//எல்லா நல்லவனுக்குள்ளாகவும் ஒரு கெட்டவன் இருக்கிறான்.//

உண்மை நண்பா....

ஜெய் said...

சட்டென நனைந்தது நெஞ்சம் பாடல் எனக்கும் ரொம்ப பிடிச்ச பாடல்.. அருமையா இருக்கும்.. ஜானகி பாடினது..

raman- Pages said...

REALY MY FAVORITE SONGS.. CAN YOU GIVE ME DOWNNLOADABLE MP3

Anonymous said...

இதில், ஸ்டான்லி குப்ரிக் எங்கிருந்து வந்தார் ??!!

-anon

கார்த்திக் said...

தல நம்ம விண்ணைத்தாண்டி வருவாயல வராத பாட்டு
அன்பே நீ ஒரு சூறாவளி
உந்தன் பின்னே ஆண்கள் எல்லாம் சுத்தி சுத்தி வருவதால் னு ஒரு பாட்டு ஒருக்கும் கேட்டுப்பாருங்க.

முரளிகுமார் பத்மநாபன் said...

@க.பாலாசி

முடிந்தவரை அவன் என்று ஒருவன் இல்லாமலே பார்த்துக்கொள்கிறேன்...
நான்கில் நானும் நண்பனாகவே...///

நல்லதுதான் பாலாசி, எல்லாத்துக்கும் நல்லவனாவும் இருக்க முடியாது. :-(@ பத்மா

அருமையான பதிவு முரளி. நீங்கள் சொல்வது சரிதான் ..நாலு நண்பர்களுக்கு ஒரு எதிரி இலவசம் தான் .நம்மை ஏன் மற்றவர்க்கு பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலே இல்லை போலும். அந்த பாட்டு தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை லிங்க் தாங்க//

முழுசா பார்த்தாதான் அது வெங்காயம் உரிச்சிட்டே போனா உள்ள ஒன்னும் இருக்க போவதில்லை.

லிங்க் கொடுத்துட்டேன், பாட்டு கேட்டிங்களா?@ திருநாவுக்கரசு பழனிசாமி

முரளி..வலையுலகில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற யுத்தங்களை(...?) பார்த்து சற்று பயந்துதான் போனேன்.
யாரையெல்லாம் படித்து, பின்பற்றி அவர்களின் கரம்பற்றி வலையுலகிற்குள் வந்தோமோ
அவர்களின் பிம்பங்கள் எல்லாமே, அவர்களாலேயே உடைக்கப்படுவது வருத்ததிற்குரியது.
என்ன செய்ய வேண்டும் என்பவற்றை கற்றுதந்தவர்களே, என்ன செய்ய கூடாது
என்பதையும் கற்றுத் தருகிறார்கள்.. நல்லது கற்றுக்கொள்வோம்.///

சரியாக சொன்னீர்கள் திரு. நிறையவே வருத்தம் இதில். :-(

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கார்த்திகை பாண்டியன்
//நீங்க கேட்ட மாதிரி சில பாடல்கள் இஙே.. அடுத்த தொகுப்பு கூடிய சீக்கிரமே வருது..:-))))//

முழு பாடல்களாக இல்லாமல் பிட் சாங்க்ஸ் வகையறாக்களாக இருந்தால், உசிதம். :-)@கனிமொழி

ம்ம்ம்... செந்தமிழ் மாநாட்டு மைய நோக்கு பாடல் பார்த்தீர்களா?

@ ஜெய்

ஆமா ஜெய், திடீர்ன்னு நியாபகத்துக்கு வரும் கொஞ்ச நாளைக்கு மனசை விட்டு போகாது. இது அந்த வகை.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராமன்
என்ன ராமன்? நேர்ல வரும்போது தறேன். அவசரம்ன்னா இப்போ லின்க்கும் கொடுத்துட்டேன் டவுன்லோடிக்குங்க.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ஹாய் அனானி,
நீங்க யாரா இருந்தாலும் ரொம்ப தேங்க்ஸ்ங்க, ரெண்டு மூணு நாளா ஸ்டேன்லி குப்ரிக் படங்களை (ஐஸ் வைட் ஷட்) பற்றியே பேசிட்டு இருந்துல ரிட்லி ஸ்காட்க்கு பதிலா அவர் பேரை போட்டுட்டேன். ஹி ஹி
இப்போ மாத்திட்டேன், பார்த்திங்களா?

~~Romeo~~ said...

நான் good year படத்தின் DVD காக வெய்டிங் ...

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.