யூஸ் & த்ரோ

சமீபத்தில் நீயா? நானா? நிகழ்ச்சியில் பார்த்த இரண்டு சம்பவங்கள்.

ஒன்று.

ஒரு ஆசிரியரின் குரல்: இன்னைக்கு நாங்க பள்ளிக்கு நடந்தோ, டூ வீலர்லயோ வருகிறோம். ஆனா பசங்க கார்ல வரங்க. அவங்களுக்கு நான் வெரும் டீச்சர் மட்டும்தான்.

ஒரு மாணவி: இதுல என்ன இருக்கு? நாங்க குடுக்குற டொனேஷன்லதான் அவங்க சம்பளமே வங்குறாங்க, ஸ்கூலுக்குள்ள அவங்களுக்கு உரிய மரியாதை குடுக்கிறோம். அதுக்காக வெளிய பார்க்கிற இடத்திலெல்லாம் குனிஞ்சி சலாம் போட்டுகிட்டிருக்க முடியாது.

இரண்டு.

ஒரு பெற்றவர்: எங்க சார், முன்ன மாதிரியா? வீட்ல நமக்கு முன்னாடியே கால்மேல கால போட்டுக்கிட்டு, எதை கேட்டாலும் ஒத்த வார்த்தையில பதில். ம்ம்ம்ம்... காலம் மாறிப்போச்சுங்க.
ஒரு மகன்: அது எங்க பாடிலேங்வேஜ், சார். அப்பாவுக்கு ஒரு மாதிரி, ஆபீஸ்ல ஒரு மாதிரின்னு எங்க பாடி லேங்வேஜ மாத்திக்கிட்டு இருக்க முடியாது.

எனக்கு மாலை ஐந்து மணிக்கு அலுவலக பணிகள் முடிந்து விடுகிறது, அதன் பின்வரும் நேரத்தை கழிக்க நண்பர்கள் வேண்டும். அதன் பின்?
குறிப்பிட்ட ஒரு வயது வரை எடுத்த எடுப்பிற்கெல்லாம் தேவை பெற்றவர்கள், தேவைகள் பூர்த்தியான பின்?

ஒரு வங்கியில் எழுதக்கொடுத்த பேனாவிற்கு, மதிப்பில்லை. பேருந்தில் மறுக்கப்பட்ட சில்லறைகளைக்கும் மதிப்பில்லை. அம்மா, அப்பா, வீடு தெரு, நண்பர்கள் நாடு இப்படி எதை பற்றிய ஒட்டுதலும் இல்லை.

எஸ்.ராவின் ஒரு கட்டுரையில் வரும் தலையில்லாத ரப்பர் பொம்மை, ஒரு உபயோகித்து விட்டெறிந்த ஒரு விளையாட்டு சாமான்தான். தூக்கி எறிந்து விடுவது இன்றைக்கு வெகு சாதாரணமாகிவிட்டது. முதியோர் காப்பகத்தின் நிறைந்திருக்கும் அனைவரும் வீசியெறியப்பட்ட உயிருள்ள பொம்மைகளே. பிரதி உபகாரம் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை, உதவி என்ற சொல் மெல்ல மழுங்கி வருகிறது.
தேவைக்கு பின் எறிந்துவிடு. யூஸ் அண்ட் த்ரோ, எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை (?). அனேக பிரச்சனைகளின் ஆரம்பமாய் இருக்கும் இது வெறும் வார்த்தையாகவோ வாக்கியமாகவோ பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இது இன்றைய சமுதாயத்தின் மனப்பான்மை. குறிப்பாக இளைய சமுதாயம்.
என் அப்பா அவர் உபயோகிக்கும் பேனாவை பத்து வருடங்களுக்கும் மேலாக உபயோகித்து வருகிறார். அவரால் அந்த பேனாவுடனும்கூட ஒரு ஈர்ப்புடன் வாழ முடிகிறது. நாளைக்கு தூக்கி எறியப்போகும் இதனோடு என்ன உறவு இருந்துவிடமுடியும் என்பதுதான் இன்றைய சமுதாயத்தின் மனநிலை. அது வெறும் பேப்பரிலும் பேனாவிலும் ஆரம்பித்த இந்த யூஸ் அண்ட் த்ரோ பழக்கவழக்கங்கள் இன்று ஒரு கலாச்சாரம் அடையாளமாகவே மாறி நிற்கிறது.
இது நிச்சயம் ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தின் குரல் அல்ல, இருந்தாலும் வருத்தத்துடன் ஒத்துக்கொள்ளக்கூடிய விஷயம், இதுதான் பெரும்பான்மை. இதுதான் நிதர்சனம். வெறும் மேம்போக்கான கருத்துக்களுடனும், படிப்பறிவும் போது என்கிற மனோபாவம். பத்தாவதில் நல்ல மார்க் வந்தால் எந்த க்ருப்பில் சேர்க்கலாம், அடுத்து டாக்டரோ, இன்ஜினியரோ அடுத்த இலக்காக எது நிர்ணயிக்கப்படுகிறதோ அதை நோக்கிய தேடலும் ஓடலும். பின் நல்ல வேளை, கை நிறைய சம்பளம் பிறகு டீவியின் முன் அமர்ந்து உலகத்தையே குறை சொல்லும், மனப்பாங்கு. ஐ பே மணி, புட் சட்னி” அப்படிங்கிற மாதிரி நான் காசு கொடுக்கிறேன், நீ சொன்னத செய். என்கிறது இந்த யூஸ்&த்ரோ வகையறாக்கள். தன்க்கு ஒரு காரியம் ஆகவேண்டுமெனில் காசுகொடுத்தோ, கெஞ்சியோ காரியம் சாதிக்க தெரிந்தவர்கள். பின் ஏறி வந்தது ஏணியிலா? என்றும் கேட்பார்கள். எதைப்பற்றிய அறிவு சார்ந்த பார்வையும், அரசியல் சார்ந்த பார்வையோ இருப்பதில்லை, எல்லாவற்றிர்க்குமாய் ஒரு பொது புத்தி.

தற்ச்செயலாக ஒரு திருமண விழாவில் பந்தியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது என் 8ஆம் வகுப்பு ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது. என்னையும் அறியாமல் எழுந்து நின்று வணக்கம் சார், என்றேன். என் குழந்தைகளும் அவர்களின் ஆசிரியரை பிரிதொரு நாளில் சந்திக்கும்போது எழுந்து நின்று வணக்கம் சொல்லும் குழந்தைகளாகவே வளர விரும்புகிறேன். பணம் இருந்தால் எதுவும் சாத்தியம் என்கிற மேற்கத்திய மனநிலையை இங்கேயும் விதைக்கும் இந்த யூஸ் & த்ரோ ப்ற்றியும் நிச்சயம் குழந்தைகளுக்கு இதையும் சொல்லி வளர்த்த வேண்டும். பேனா, பென்சில் முதற்க்கொண்டு வீடு நாய்குட்டி வரை எதனுடனும் நமது உறவு மிகமுக்கியமானது.
சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட இந்த யூஸ்&த்ரோ அனுபவமே எனக்குஇதை எழுதச்செய்தது.இதில் என் தற்ப்போதைய மன நிலைய பதிவு செய்திருக்கிறேன். இந்த கருத்து அனைவருடனும் ஒத்துபோக வேண்டுமென்பதில்லை. அடுத்தவர் தவ்றுகளில் பாடம் படிப்பவனே, புத்திசாலி. யாராவது ஒருவருக்கு இது உதவுமெனினும் சந்தோசமே.

நமக்கு நடக்கும்வரை எதுவுமே வேடிக்கைதான் என்கிற ஆட்டோ வாசகம் புரிய போகிறது, வாழ்க்கை.

55 கருத்துரைகள்:

suresh said...

Good post.Every father should teach their children about the LADDER.

LK said...

100% right

ஜீவன்பென்னி said...

சரியா சொல்லொயிருக்கீங்க. எனக்கு நல்ல ஆசிரியரைப் பார்த்தவுடன் எழுவது அண்ணிச்சைசெயல் மாதிரி. அது மூளையில் பதிந்த ஒன்று. அதே மாதிரி ஒரு சில ஆசிரியர்களை பார்க்கும் போது சீக்கிரமா அங்கிருந்து கிளம்புன்னு மூளைச்சொல்லும்.

SIVA said...

எப்போ கல்வி வியாபாரமாயிருச்சோ,அப்புறம் அதனுடைய அவுட் புட் இப்படித்தான் இருக்கும்.போட்டி மட்டுமே வாழ்க்கைன்னு ஆயிருச்சு,சும்மா அப்டீயே ரோட்ல கொஞ்சம் பாருங்க
எத்தனை பேர் குழந்தைகளை வச்சுட்டு கரெக்டா இண்டிகேட்டர் போட்டு கரெக்டா ஒவர் டேக் பண்ணிப்போராங்க.அப்ப குழந்தைகள் மனசுல என்ன வரும். எப்படீப்போனாலும் தப்பில்லை முந்திப்போனாப் போதும்,அப்படீன்னுதான் தோணும். இதுல எங்கபோய் அவங்கள குத்தம் சொல்றது.வளரும் சூழ்நிலை ரொம்ப முக்கியம்.அது தாவரமானாலும் சரி..மனிதர்களானாலும் சரி...

சேரல் said...

//பேனா, பென்சில் முதற்க்கொண்டு வீடு நாய்குட்டி வரை எதனுடனும் நமது உறவு மிகமுக்கியமானது.//

Unmaidhaan.

-priyamudan
sEral

Anonymous said...

Nice one. There seems to be no value for value system these days. People are always in a hurry for something, dont know for what. The place where you compare your dad's attachment with the pen is a very nice one.

On the other hand, if you keep reflecting the same thoughts for a couple of days, don't you feel like you are getting old and joining the so called oldies group who always used to say 'naanga ellam antha kaalathila....' Just curious as I often think like exactly what you have written and then wonder have I really become too old and cannot be in sync with the youth of this age. FYI I am (only) 35.

Sukumar.

அன்புடன் அருணா said...

எவ்வ்ளோ அருமையான விஷயத்தை அழகா சொல்லியிருக்கீங்க.என் பெண் நான் முதல் முதல் கொடுத்த பேனாவைப் பத்திரப் படுத்திய போது வந்த உணர்வு இப்போதும் வந்து போகிறது.பூங்கொத்து முரளி.!

பேரரசன் said...

suprerb murali..!

ஹுஸைனம்மா said...

//நாங்க குடுக்குற டொனேஷன்லதான் அவங்க சம்பளமே வங்குறாங்க//

இதுல ‘நாங்க’ என்பது அவங்க பெற்றோர்தானே? என்னவோ இந்தப் பசங்களே சம்பாதிச்ச மாதிரி சொல்றாங்க?

ஒருவிதப் பயம்தான் வருது இதெல்லாம் பாக்கும்போது, படிக்கும்போது. நான் என் பெற்றோர் மேலே காட்டும் அன்புகூட, என் பிள்ளை நாளை என்னை மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனே செய்கிறேனோன்னு தோணுது இப்பல்லாம்!!

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுரேஷ்
தேங்க்ஸ் சுரேஷ், உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றீ எல் கே

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஜீவன் பென்னி
//அதே மாதிரி ஒரு சில ஆசிரியர்களை பார்க்கும் போது சீக்கிரமா அங்கிருந்து கிளம்புன்னு மூளைச்சொல்லும்.//
இதெல்லாம் பொதுவுல வைக்காதிங்கப்பா... ஹி ஹி ஹி

Venkat said...

மிகவும் நல்ல பதிவு

நேசமித்ரன் said...

எழுத்தில் மெருகு !வாழ்த்துகள்

முரளிகுமார் பத்மநாபன் said...

@சிவா
//அப்ப குழந்தைகள் மனசுல என்ன வரும். எப்படீப்போனாலும் தப்பில்லை முந்திப்போனாப் போதும்,அப்படீன்னுதான் தோணும். இதுல எங்கபோய் அவங்கள குத்தம் சொல்றது.வளரும் சூழ்நிலை ரொம்ப முக்கியம்.அது தாவரமானாலும் சரி..மனிதர்களானாலும் சரி...//

ஆம் சரிதான் நீங்க சொல்றதும். ஆனா அடுத்த தலைமுறை ஊனமா பொறக்க நாம காரணமாயிடக்கூடாதுன்கிறது என் கருத்து.

நன்றீ சிவா.

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுகுமார்
//Nice one. There seems to be no value for value system these days. People are always in a hurry for something, dont know for what. The place where you compare your dad's attachment with the pen is a very nice one. //

ரொம்ப நன்றி சுகுமார்.

//On the other hand, if you keep reflecting the same thoughts for a couple of days, don't you feel like you are getting old and joining the so called oldies group who always used to say 'naanga ellam antha kaalathila....' Just curious as I often think like exactly what you have written and then wonder have I really become too old and cannot be in sync with the youth of this age. FYI I am (only) 35.//

அடப்பாவிகளா, எனக்கு இன்னும் முப்பதே முடியலை. ஹி ஹி ஹி சரி விடுங்க அடுத்து கல்ர்ஃபுல்லா ஒரு கிறுக்கலோட சந்திக்கிறேன். :-)

Sukumar.//

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி நண்பா சேரல். :-)

க.பாலாசி said...

உங்களின் மொத்த கருத்துடன் ஒத்துப்போகிறேன்.. சிறந்த கட்டுரை...

முரளிகுமார் பத்மநாபன் said...

//என் பெண் நான் முதல் முதல் கொடுத்த பேனாவைப் பத்திரப் படுத்திய போது வந்த உணர்வு இப்போதும் வந்து போகிறது.பூங்கொத்து முரளி.!//
ஏ.ஏ.... மறுபடியும் மேடம்கிட்டயிருந்து பூங்கொத்து. ஜாலி.... :-)

தேங்க் யூ மேம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

செந்தில் நம்ம பிளாக்கெல்லாம் படிக்கிறிங்களா? ஏ சூப்பர்பா. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

// நான் என் பெற்றோர் மேலே காட்டும் அன்புகூட, என் பிள்ளை நாளை என்னை மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனே செய்கிறேனோன்னு தோணுது இப்பல்லாம்!!//

இதை கொஞ்சமா மாத்தி சொல்லலாம், நாம நம்ம பிள்ளைகள் மீது காட்டும் அன்புகூட நாளை முடியாத போது அவர்கள் நம்மை கவனிப்பார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பினால் .... என்கிற நிலை இன்று உண்டு

நன்றி ஹுசைனம்மா.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

முரளி..நல்ல பதிவு
இன்றைய சூழலில் குடும்பம், நட்பு,காதல் உட்பட எல்லாமே
இந்த வகையறாக்களுக்குள் சிக்கிவிட்டது மிகப்பெரிய
சமூக பின்னடைவுதான்..

விக்னேஷ்வரி said...

பேனா, பென்சில் முதற்க்கொண்டு வீடு நாய்குட்டி வரை எதனுடனும் நமது உறவு மிகமுக்கியமானது.//
ரொம்பப் பிடிச்சிருக்கு. அப்படியே வாழத்தான் ஆசை. பிறரின் கேலிகளுக்காக மாற்றிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை.

பதிவு அவசரத்துல எழுதினீங்களா முரளி...

shortfilmindia.com said...

murali... நிச்சயம் அவரக்ள் வளர வளர புரிய ஆரம்பிக்கும்

கேபிள் சங்கர்

கனிமொழி said...

நல்ல பதிவு நண்பா...
முன்னாடியே இதை பற்றி பேசி இருக்கோம்.
நான்கு வருஷமா ஒரே பென்சில் தான், ஆனால் ஒரு விஷயம் என்ன தெரியுமா? என்னோட அனுமதி இல்லாமல் எத்தனையோ முறை என்னுடைய பென்சிலினை பயன்படுத்தி தொலைத்து உள்ளார்கள் என் தோழிகள். நான் கஷ்டப்பட்டு கிளாஸ் முழுதும் தேடும் போது அவர்களின் கேலி பேச்சும் காதினில் விழும், சிரித்துகொண்டே தேடுவேன். எத்தனை முறை பிறரால் தொலைகப்பட்டாலும், கிடைத்துவிடும். :-)

How do they know the relationship with me nd my pencil... :-)

padma said...

முரளி அழகான பதிவு .இதை இன்றைய இளைஞரான நீங்கள் எழுதியுள்ளது மிகவும் பெருமைபடத்தக்கதாய் உள்ளது .இத்தைகைய values ஐ நானும் என் பெண்ணிற்கு புகட்ட முயன்று முற்றிலும் வெற்றியடையவில்லை ..எந்த ஒரு கால கட்டத்திலும் நாம் அவர்களுக்கு superior ஆக இருக்க வேண்டும் அப்போது தான் நம் மீது மதிப்பு வரும் என்ற நிலைமை இங்கு. இது ஒரு விதமான survival of the fittest தான். நாம் தான் அப்படி இருந்தோம் அவர்கள் இப்படி இருந்து விட்டு போகட்டும் என்கிறார் என் கணவர் .
மொத்தத்தில் எனக்கு இதில் உடன் பாடு இல்லை .இன்றைக்கும் நான் இருக்கும் நிலைக்கும் என் படிப்பார்வத்திற்கும் என் ஆசிரியர்களே காரணம் என்ற உறுதியான எண்ணம் உண்டு .நீங்களும் நானும் ஆசிரியர்களை பெற்றோர்களாய் அடைந்ததால் இப்படி நினைக்கிறோமோ என்னவோ?
மொத்தத்தில் அருமையான பதிவு .keep it up murali

ரோஸ்விக் said...

Nice Murali.

I planned to write regarding this. anyway I will write one day.

ஜெய் said...

அருமையான் பதிவு முரளி...

நீங்களே இந்த விஷயத்துல கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருக்கீங்க் இல்ல... அதான், ஒரு சைடுக்கு சப்போர்ட் இருக்க மாதிரி இருக்கு...

அந்த ஆசிரியர்-மாண்வர், பெற்றோர்-மகன் மேட்டர்ல ரெண்டு பக்கமும் தப்பு இருக்குன்னுதான் எனக்கு படுது... என் பையன் கால் மேல கால் போட்டுகிட்டு ம்ம்ம்னு சொன்னா அதை தப்புன்னு நினைக்க மாட்டேன்.. ஆனா, இது ஜெனரேஷன் கேப்-னால வர்ற சிந்தனை வேறுபாடா இருக்கலாம்... குருகுலத்துல இருந்த மரியாதையை நாம நம்ம ஆசிரியர்களுக்கு குடுக்கல.. எழுந்து நின்னு மரியாதையா வணக்கம் சொன்னோம் அவ்வளவுதான்.. காலம் மாற மாற பழக்க வழக்கங்கள் மாருது.. மரியாதை குறையுதுன்னு அர்த்தமில்லை..

// சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட இந்த யூஸ்& த்ரோ அனுபவமே எனக்குஇதை எழுதச்செய்தது.இதில் என் தற்ப்போதைய மன நிலைய பதிவு செய்திருக்கிறேன். இந்த கருத்து அனைவருடனும் ஒத்துபோக வேண்டுமென்பதில்லை. //
இதுதான் டாப்... உங்களுடைய மனநிலையை ஒரு நிமிஷம் வெளியேயிருந்து பார்த்துட்டு, எழுதி இருக்கீங்க... சூப்பர்...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

Good one Murali :-)

ஈரோடு கதிர் said...

மிக அருமையான தொரு எண்ணப் பகிர்வு...

தெரிந்தோ தெரியாமலோ மிகப் பெரிய இடைவெளியை உருவாகிக் கொண்டேயிருக்கிறது

கோபிநாத் said...

மிக நல்ல பதிவு சகா!

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க தல.. இந்த மாதிரியான விஷயங்கள் ரொம்பவே சாதாரணம் ஆகிடுச்சு..:-(((

Perry said...

excellent nanba, you done it! keep going!

முரளிகுமார் பத்மநாபன் said...

@ நேசமித்ரன்
நன்றி தல.

@ வெங்கட்
நன்றி வெங்கட்

ரங்கன் said...

நல்ல பதிவு..!!

மிகவும் யோசிக்க வைத்த பதிவு..இதுவரை நான் அப்படி யாரையேனும் உதாசீனப்படுத்தி இருக்கிறேனா என்று ஆராய வைத்தது. :)

ஈர்ப்பும் பிணைப்பும் இல்லாத எந்த பொருளும் செயலும் மதிப்பிழக்கும் என்பது இன்றைய சமுதாயத்தில் நாம் பார்த்துவரும் விஷயம்..!!

நான் எப்போதும் சொல்வது உண்டு
“பழுத்த பழம் அழுகும்..இந்த சமுதாயமும் அப்படித்தான்” என்று..

அதுதான் நடந்துகிட்டு இருக்கு :)

செல்வம் said...

முரளி....நல்ல பதிவு. ஆழ்ந்த விசயங்களைச் சொல்லிக் கொண்டே வரும் போது “I Pay money...Put Chatni" என்ற நகைச்சுவை இடைசெருகல் உண்மையிலேயே அழகு.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி பாலாசி
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ திருநாவுக்கரசு பழனிசாமி
//இன்றைய சூழலில் குடும்பம், நட்பு,காதல் உட்பட எல்லாமே
இந்த வகையறாக்களுக்குள் சிக்கிவிட்டது மிகப்பெரிய
சமூக பின்னடைவுதான்..//

உண்மைதான் திரு.

@ விக்னேஷ்வரி
//பதிவு அவசரத்துல எழுதினீங்களா முரளி...// சத்தியமா அப்படித்தான் :-)

@shortfilmindia.com
கேபிள் ஜீ நன்றி

@கனிமொழி
நல்ல பதிவு நண்பா...
முன்னாடியே இதை பற்றி பேசி இருக்கோம்.//

நன்றி கனி. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@பத்மா

//இது ஒரு விதமான survival of the fittest தான். நாம் தான் அப்படி இருந்தோம் அவர்கள் இப்படி இருந்து விட்டு போகட்டும் என்கிறார் என் கணவர் .
நீங்களும் நானும் ஆசிரியர்களை பெற்றோர்களாய் அடைந்ததால் இப்படி நினைக்கிறோமோ என்னவோ?
மொத்தத்தில் அருமையான பதிவு .keep it up murali//

தேங்க்யூ பத்மா மேம்

@ ரோஸ்விக்
// planned to write regarding this. anyway I will write one day.//

சீக்கிரமா எழுதுங்க, வாழ்த்துக்கள்

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஜெய்
//நீங்களே இந்த விஷயத்துல கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருக்கீங்க் இல்ல... அதான், ஒரு சைடுக்கு சப்போர்ட் இருக்க மாதிரி இருக்கு... //
உண்மைதான்

அந்த ஆசிரியர்-மாண்வர், பெற்றோர்-மகன் மேட்டர்ல ரெண்டு பக்கமும் தப்பு இருக்குன்னுதான் எனக்கு படுது... என் பையன் கால் மேல கால் போட்டுகிட்டு ம்ம்ம்னு சொன்னா அதை தப்புன்னு நினைக்க மாட்டேன்.. ஆனா, இது ஜெனரேஷன் கேப்-னால வர்ற சிந்தனை வேறுபாடா இருக்கலாம்... குருகுலத்துல இருந்த மரியாதையை நாம நம்ம ஆசிரியர்களுக்கு குடுக்கல.. எழுந்து நின்னு மரியாதையா வணக்கம் சொன்னோம் அவ்வளவுதான்.. காலம் மாற மாற பழக்க வழக்கங்கள் மாருது.. மரியாதை குறையுதுன்னு அர்த்தமில்லை.. //

சரிதான், ஆனால் எதிர்பார்ப்பவர்களுக்கு கொடுத்துதானே ஆகனும். உங்களுக்கு வேண்டாம், உங்க அப்பா அதை எதிர்பார்த்தால் நீங்க குடுப்பிங்களா? மாட்டிங்களா?

//இதுதான் டாப்... உங்களுடைய மனநிலையை ஒரு நிமிஷம் வெளியேயிருந்து பார்த்துட்டு, எழுதி இருக்கீங்க... சூப்பர்...//

சோ தேங்க்ஸ் ஆஃப் யூ, ஜெய். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@உலவு.காம் நன்றி உலவு.

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
ஷங்கர் ஜீ, செளக்கியமா?

@ ஈரோடு கதிர்
//மிக அருமையான தொரு எண்ணப் பகிர்வு...
தெரிந்தோ தெரியாமலோ மிகப் பெரிய இடைவெளியை உருவாகிக் கொண்டேயிருக்கிறது//

ஆம், கதிரண்ணே. நன்றி உங்கள் வருகைக்கும், பகிர்விற்கும்.

@கோபிநாத்
//மிக நல்ல பதிவு சகா!//
சென்னை வந்திருந்திங்க போல?
:-(

@கார்த்திகைப் பாண்டியன்
// ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க தல.. இந்த மாதிரியான விஷயங்கள் ரொம்பவே சாதாரணம் ஆகிடுச்சு..:-(((//
ம்ம் எதோ வருத்தமும் சங்கடமுமே இதை எழுத செய்கிறது. :-(

@Perry
//excellent nanba, you done it! keep going!//
பெரி இந்த விஷயத்தை நாம எப்ப பேசினோம்ன்னு நியாபகம் இருக்கா? அந்த பெரியவரை பார்க்க போனோமே?
அது சரி நான் சொல்லாம நீங்களா படிச்ச பதிவு இதுவாத்தான் இருக்கும். :-)


@ரங்கன்
நல்ல பதிவு..!!
நன்றி நண்பா!

முரளிகுமார் பத்மநாபன் said...

@செல்வம்
//முரளி....நல்ல பதிவு. ஆழ்ந்த விசயங்களைச் சொல்லிக் கொண்டே வரும் போது “I Pay money...Put Chatni" என்ற நகைச்சுவை இடைசெருகல் உண்மையிலேயே அழகு//

ம்ம்...:-)
தேங்க்ஸ் செலவம்.

KLN said...

மிக சரியாக இது அன்னிச்சையான அன்பின் வெளிபாடே.!!
//எத்தனை பேர் குழந்தைகளை வச்சுட்டு கரெக்டா இண்டிகேட்டர் போட்டு கரெக்டா ஒவர் டேக் பண்ணிப்போராங்க//
நம்மில் இருந்து தான் நம் சந்ததியும்!!

எங்கள் பள்ளியின் வழக்கம் ஆசானை கண்டால் எழுத்து நின்று வணக்கம் சொல்வது!! நானும் என் நண்பனும் அதை தொடர்ந்தோம் கல்லூரியின் முதல் நாளில்! வகுப்பே சிரித்தது!
இந்த கட்டத்தில் இதை நாங்கள் தொடர்ந்தால் நம்மக்கு நண்பர்களிடம் கிடைக்கும் பெயர்??
எப்படி இதில் ஒத்து போவது.?
அழகான பதில் கிடைக்குமா.!!??

manoj said...

நல்லா எழுதியிருக்கீங்க

manoj said...

நல்லாத்தான் இருக்கு, ஆனா இந்த காலத்தில் பணம் மட்டுமே வாழ்க்கைன்னு தொடங்கி அது ஆசிரியர் ,பெற்றோர்ன்னு எல்லார்தையும் விட்டு வைக்கல இதுல மாணவர்களை மட்டும் குத்தம் சொல்றது நல்லா இல்ல.

தியாகு said...

//தற்ச்செயலாக ஒரு திருமண விழாவில் பந்தியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது என் 8ஆம் வகுப்பு ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது. என்னையும் அறியாமல் எழுந்து நின்று வணக்கம் சார், என்றேன். என் குழந்தைகளும் அவர்களின் ஆசிரியரை பிரிதொரு நாளில் சந்திக்கும்போது எழுந்து நின்று வணக்கம் சொல்லும் குழந்தைகளாகவே வளர விரும்புகிறேன். பணம் இருந்தால் எதுவும் சாத்தியம் என்கிற மேற்கத்திய மனநிலையை இங்கேயும் விதைக்கும் இந்த யூஸ் & த்ரோ ப்ற்றியும் நிச்சயம் குழந்தைகளுக்கு இதையும் சொல்லி வளர்த்த வேண்டும். பேனா, பென்சில் முதற்க்கொண்டு வீடு நாய்குட்டி வரை எதனுடனும் நமது உறவு மிகமுக்கியமானது.//ம்

முரளி அன்பு இழையோடும் உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம்

// நானும் என் நண்பனும் அதை தொடர்ந்தோம் கல்லூரியின் முதல் நாளில்! வகுப்பே சிரித்தது!
இந்த கட்டத்தில் இதை நாங்கள் தொடர்ந்தால் நம்மக்கு நண்பர்களிடம் கிடைக்கும் பெயர்?? //

ம்ம் புரிகிறது,,,,

எப்படி இதில் ஒத்து போவது.?
நிச்சயம் என்னிடம் பதில் இருக்கிறது, ஏன் உங்களிடம் கூட....

அழகான பதில் கிடைக்குமா.!!??
நிச்சயம் உங்கள் மெயில் ஐடி, தெரியப்படுத்துங்கள்

பரிசல்காரன் said...

மிக அழகான கட்டுரை. ஆழமானதும்

//கை நிறைய சம்பளம் பிறகு டீவியின் முன் அமர்ந்து உலகத்தையே குறை சொல்லும், மனப்பாங்கு. ஐ பே மணி, புட் சட்னி” அப்படிங்கிற மாதிரி//

உங்கள் இந்த வரிகள் ட்விட்டரில் சிலரால் சிலாகிக்கப்பட்டு ட்வீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்!

முரளிகுமார் பத்மநாபன் said...

@ மனோஜ்
மனோஜ்! டேய் மண்டையா, இது நீதானா? ஆச்சர்யமா இருக்கு.

//நல்லாத்தான் இருக்கு, ஆனா இந்த காலத்தில் பணம் மட்டுமே வாழ்க்கைன்னு தொடங்கி அது ஆசிரியர் ,பெற்றோர்ன்னு எல்லார்தையும் விட்டு வைக்கல இதுல மாணவர்களை மட்டும் குத்தம் சொல்றது நல்லா இல்ல//

நான் மாணவர்களை குத்தம் சொல்லலை, உனக்கு அடுத்த தலைமுறை செய்யும் தவறுக்கு தெரியாமலும் நீ காரணமாயிராதே, என்பதே என் கருத்து. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ தியாகு
//முரளி அன்பு இழையோடும் உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்//
நன்றி தியாகு, :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ பரிசல்காரன்

//கை நிறைய சம்பளம் பிறகு டீவியின் முன் அமர்ந்து உலகத்தையே குறை சொல்லும், மனப்பாங்கு. ஐ பே மணி, புட் சட்னி” அப்படிங்கிற மாதிரி//

உங்கள் இந்த வரிகள் ட்விட்டரில் சிலரால் சிலாகிக்கப்பட்டு ட்வீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்!//

அப்படியா தலைவரே! சந்தோசமா இருக்கு. நன்றி தெரியப்படுத்தியமைக்கும்

KLN said...

ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்..!!
karthik.kln@gmail.com
மெயிலில் தேடி பாருங்க முன்னாடியே மெயில் அனுப்பி இருக்கேன்,ஆனா உங்க கிட்டே இருந்து பதில் இல்லே..!!:)

Krishna said...

அருமையான பதிவு
நன்றி

அன்புடன்

ஸ்ரீனி
சுஜித்
மற்றும் கிருஷ்ணா

Krishna said...

Arumai inimai nandri
Anbe Sivam

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.