காதலைத் தேடி.......

     நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ், நாவலாசிரியர். மனுசன் வாழ்க்கை முழுவது காதலாலேயே நிரம்பியிருக்கும் போல, வெகு சமீபத்தில்தான் இவரது ஒரு நாவலை பற்றி தோழி ஒருவர் சொல்லியிருந்தார். நாவல்கள், அதுவும் ஆங்கிலத்தில் படிப்பதென்பது என்னை பொருத்தமட்டிலும் சிரமமான காரியம், ஆகவே இவரது நாவல்கள் பற்றிய ஏதேனும் விஷயங்கள் கிட்டுமாவென இணையத்தில் தேடியபோதுதான் தெரிந்தது, Message in a Bottle, A Walk to remember, Notebook, Dear John மற்றும் The Last Song என  இவரது நாவல்களைத் தழுவி நிறைய திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருக்கின்றது, வெற்றிகரமாக    அதிலும்  MESSAGE IN A BOTTLE, A WALK TO REMEMBER, NOTEBOOK இந்த மூன்று படங்களையும் ஏற்கனவே பார்த்துவிட்டேன். ஆனால் அந்த படங்களை பார்க்கும்போது இவரை பற்றி எதுவும் தெரியாதது என் துரதிஸ்டமே. இவரது எல்லா கதைகளிலும் காதலும் மென்சோகமும் இழையோடிக்கொண்டேயிருக்கிறது. மனுஷன் அப்படியே நம்ம டேஸ்ட்டு...:-). இப்போ அவசர அவசரமா  Dear John மற்றும் The Last Song ரெண்டு படத்தையும் டவுன்லோட் செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் எழுதலாம் என்றதும் முதலில் தோன்றியது Message in a Bottle தான்.


வாழ்க்கை, எப்பொழுதும் ஒரு தேடலை நோக்கியே இருக்கும். சிலருக்கு தேடலே வாழ்க்கையாகவும் இருக்கும். எத்தனையோ வகையில் சொல்லலாம் தேடல்களை. இத்தனை பூவும் உதிர்ந்தா கிடந்தது? என்கிற ஒற்றை வரியை தேடியதில்தான் வண்ணதாசனையும் அவரது எழுத்துக்களும் கண்டுபிடித்தேன்.. கடலை மடித்து வந்த காகிதத்தில் இருந்த எழுத்துக்கள் தானே ஷைலஜா அவர்களை பாலச்சந்திரன் சுள்ளிக்காடை தேடி அவரது எழுத்தை தமிழில் மொழிபெயர்க்க வைத்தது. அதுபோல ஒரு தேடல்தான், இந்த கதையும்.
    
தெரசா ஒரு விவாகரத்து பெற்றவள், தன் மகனோடு, அவனுக்காகவே வாழ்ந்து வருகிறாள். மகனின் விருப்பப்படி அவனை அவன் தந்தையோடு இரண்டு தங்கி வர ஊருக்கு வருகிறாள். அங்கே ஒரு ரம்மியமான காலைப்பொழுதில் கடற்கரையில் ஜாக்கிங் செய்து கொண்டிருக்கிறாள், அப்போது ஒரு காகிதம் அடைக்கப்பட்ட பாட்டிலை பார்க்கிறாள். அதை பிரித்து படிக்கும் அவளுக்கு அதில் மனைவியை பிரிந்த ஒரு கணவனின் வலியும், காதலும் கவிதையாய் தெரிகிறது. அதில் லயித்துபோன அவள் தன் பத்திரிக்கை அலுவலகத்தில் சக நண்பர்களோடு அதை பகிர்ந்து கொள்கிறாள்.
     
அந்த கடிதத்தை யார் எழுதியது, அவரை கண்டுபிடிக்க வேண்டும், சந்திக்கவேண்டும் என்கிற உந்துதல் அவளுக்கு அதிகமாகிறது. அந்த பத்திரிக்கை அலுவலக மேலதிகாரி அந்த கடித்தை தனது பேப்பரில் வெளியிட்டு அது பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்கிறார். ஏன் இப்படி செய்தீர்கள்? இது ஒரு மனிதனின் தனிப்பட்ட பக்கம் அதை இப்படி ஏன் பொதுவில் வெளியிட்டீர்கள் என்று அவரோடு சண்டையிடுகிறாள். ஆனால் அந்த விளம்பரத்தை தொடர்ந்து வரும் கடிதங்களால் சமாதானமடைகிறாள். அதே போல வெவ்வேறு இடங்களில் கிடைத்த இன்னும் இரண்டு கடிதங்கள் அவளுக்கு கிடைக்கிறது. ஒரே மாதிரியான காகிதம், பாட்டில்கள்.
     
அந்த தேடுதல் வேட்கை அவளுக்கு இன்னும் அதிகமாகிறது, ஒரு வழியாய் கண்டும்பிடிக்கிறாள். நீண்ட பயணத்திற்கு பிறகு அவன் இருக்கும் இடைத்தை அடைகிறாள். அவன் கேராட் பிளாக் (கெவின் காஸ்ட்னர்,  கெவின் காஸ்ட்னர் எப்பொழுதுமே ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நடிகர், எனக்கு மிகப்பிடித்தமான நடிகர்களில் ஒருவர்). ஒரு மீனவன், கப்பல் கட்டும் தொழில் செய்து வருகிறான். கேராட், மனைவியை இழந்தவன், தன் தந்தையோடு தனியாக பண்ணை வீட்டில் வசித்து வருகிறான், வீடு முழுவதும் தன் மனைவி ஓவியங்கள், அவளது செருப்பு, அவளுடைய ஆடைகள் என உபயோகித்த பொருட்களை அப்படியே அதே இடத்தில் வைத்திருக்கிறான். அதை மாற்றி வைப்பது கூட அவள் நினைவினை கலைப்பதாய் நினைக்கிறான். அவனுடனான முதல் சந்திப்பிலேயே அவன் மீது அவளுக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது, அவனது மனைவி மீதிருக்கும் அன்பும் அந்த எழுத்துக்களின் காரணமாகவும்.
     
மெல்ல இவர்களுக்குள்ளாக ஒரு நட்பு வளர்கிறது, காதலுக்கு முந்தைய கணங்கள் அவை, அழகானவை. மெல்ல இவர்களுக்குள்ளாக, ஒருவர்மீது ஒருவருக்கு வரும் காதலும் அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றது. தெரசாவை சந்திக்க கேராட் அமெரிக்காவிற்கு வருகிறான், அங்கே ஒரு இரவில் அவனுடைய கடித்ததை அவளது படுக்கையறையில் பார்க்கிறான், பாட்டிலையும் கூடவே அந்த செய்தித்தாள் விளம்பரத்தையும். ஆக கடித்ததை செய்தித்தாளில் பார்த்தே தெரசா தன்னை தொடர்ந்திருக்கிறாள் என நினைக்கிறான், தெரசாவுடன் சண்டையிடுகிறான். தெரசா, தான் கடற்கரையில் முதலில் ஒரு பாட்டில் கடித்ததை பார்த்த்து முதல் அனைத்தையும் சொல்கிறாள். எனது மேலதிகாரி செய்த வேலைதான் அந்த செய்தி விளம்பரம் என்கிறாள், மேலும் அதன் மூலமாகத்தான் மற்ற இரண்டு கடிதங்களையும் உன்னையும் கண்டுபிடித்தேன் என்கிறாள்.
    
மொத்தம் மூன்று கடிதங்களா? நான் இரண்டுதானே எழுதியிருக்கிறேன்? என்று மற்ற கடித்ததை படிக்கும் கேராட்டிற்கு, அது இறந்துபோன அவள் மனைவி அவனுக்காக எழுதியது என்று தெரிகிறது. மனைவியின் நியாபகங்கள் அவனை அழுத்த அந்த கடித்ததை பெற்றுக்கொண்டு வீடு திரும்புகிறான். அந்த பிரிவு இருவரின் மனதிலும் நிறைய மாறுதல்களை கொண்டு வருகிறது. ஒரு நாள் கேராட் தான் மனைவியின் நினைவாக செய்துவந்த பாய்மரக்கப்பலை செய்துமுடித்து விட்டதாகவும் அதன் வெள்ளோட்டத்திற்கு வருமாறும் தெரசாவை அழைக்கிறான். சந்தோசமாய் அங்கே வரும் தெரசா, அவனது மனைவியின் மீதான காதலை அவனது பேச்சின் மூலம் உணர்கிறாள். தனது காதல் அவனது உணர்வுகளை புண்படுத்தலாம் என நினைக்கிறாள். ஆகவே அவனிடமிருந்து விலகியிருக்க நினைக்கிறாள்.
    
கேராட் தன் மனைவிக்கு என் ஒரு கடிதம் எழுதுகிறான், அதை க்டலில் வீச மழை நேரத்தில் கடலுக்குள் செல்கிறான். அங்கே நடுக்கடலில் படகு விபத்தில் சிக்கி மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தை காப்பாற்றும் முயற்சியில் இறந்தும் போகிறான். கேராட்டின் தந்தை தெரசாவிற்கு போன் செய்கிறார். நேரில் வரும் தெரசாவிற்கு அந்த கடித்ததையும் அவனது திருமண மோதிரத்தையும் தருகிறார்.
      
நான் இங்கே சொல்லாத இரண்டு விஷயங்கள், கேராட்டிற்கும் அவனது தந்தைக்குமிடையே நடக்கும் உரையாடலும், கிளைமேக்ஸிற்கு முன் தெரசாவினுடனுமான உரையாடலும் வெகு எதார்த்தம், அழகு. மேலும் அந்த நான்கு கடிதங்களும் கவிதை, நான் சொல்லப்போவதில்லை. படம் பாருங்கள், காதலை அனுபவியுங்கள். நீங்கள் எதைத்தேடி பயணிக்கிறீர்களோ, அதுவாகவே மாறிவிடுவீர்கள் என்கிற ஒற்றைவரியில் முடிகிறது கதை.

26 கருத்துரைகள்:

கே.ஆர்.பி.செந்தில் said...

கடிதங்கள் மின்னஞ்சல்களாக மாறிவிட்டபோதும் இபோதும் பாதுகாக்கிற கடிதங்கள் சிலரிடம் உண்டு ....

chandru / RVC said...

///நீங்கள் எதைத்தேடி பயணிக்கிறீர்களோ, அதுவாகவே மாறிவிடுவீர்கள்/// :)

Nice review Murali. thanks for sharing.

பத்மா said...

message in a bottle நான் இப்போ தான் படிக்கிறேன் முரளி.நேற்று தான் புக்ஸ் வந்தது.. அதனால் அதைப்படித்து விட்டு உங்கள் திரை விமர்சனம் படிக்கிறேன். புஸ்தகத்தையும் படித்து பாருங்கள். a walk to remember கூட படம் இருக்கா? அப்படியே to kill a mocking bird படமும் பாருங்கள்.

பிரியமுடன் பிரபு said...

நல்ல பகிர்வு

படம் எங்கே பார்க்கலாம்?

கனிமொழி said...

ஆஹா.... பார்த்துட்டா போச்சு...

அகல்விளக்கு said...

nalla review nanba...

naanum paarkiren...
:-)

Kayelen said...

தெரியாத ஒன்னுனா.. புக் படிக்கிறது ஒரு சுகமான அனுபவம் அதுலயும் லவ் ஸ்டோரினா மறக்க முடியாதது.!
sparks எல்லா புக்கும் படிச்சுட்டு படம் பாக்கலாம்னு இருக்கேன்.!
//மனுஷன் அப்படியே நம்ம டேஸ்ட்டு...:-)//
நானும் தான்..! எனக்கு என் taste தெரிஞ்சதே உங்க ப்ளாக் படிச்சு தான்.!!
Just லைக் பரயன் ஆடம்ஸ், லக்கி அலி.!!:)
ரொம்ப நன்றி னா.!!!!

ஜெய் said...

இந்த 5 படத்தையுமே பார்த்ததில்லை... :( பார்க்கவேண்டிய லிஸ்ட் அப்படி தாறுமாறா எகிறுதே..!!

நல்ல பகிர்வு முரளி...

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கே.ஆர்.பி செந்தில்
ஆமா தலைவரே! நிஜம். என்னிடம் நிறைய இருக்கிறது கடிதங்கள், நான் எழுதி, அனுப்பப்ப்டாத கடிதங்கள் அதிகம். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ சந்த்ரு
யோவ் சந்த்ரு இது நம்ம படம்ய்யா... பாருங்க......

முரளிகுமார் பத்மநாபன் said...

@ பத்மா
வாவ்.... வாட் அ கோ இன்சிடென்ஸ்.
:-)

ஃப்ரீயா இருந்தா மெயில் பண்ணுங்க.... உங்களுக்கான கேள்வி ஒன்று என்னிடம் இருக்கிறது. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ப்ரியமுடன் பிரபு
நன்றி பிரபு, படம் பாருங்க...:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கனிமொழி
தேங்க்ஸ் கனி, பாருங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

@அகல்விளக்கு
நன்றி ராஜா, ப்டமும் பாருங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

//ரொம்ப நன்றி னா.!!//

ஹா ஹா, நன்றிங்ன்னா....:-)

திருநாவுக்கரசு பழனிசாமி said...

முரளி, எனக்கு ரொம்ப புடிச்ச படம்..நன்றி

விக்னேஷ்வரி said...

முரளி, நீங்கள் அதிகம் ரசனையானவர் என்பதை மேலும் மேலும் நிரூபித்துக் கொண்டுள்ளீர்கள். நல்ல பதிவு.

அன்புடன் அருணா said...

MESSAGE IN A BOTTLE பார்த்து அசந்திருக்கிறேன்.மற்றவைகளையும் நோட் பண்ணிக்கிட்டேன்.அழகா எழுதிருக்கீங்க!

Mohamed said...

unnoda ezhuthukkalai padichu comment podura alavukkulam nan valarala. Nanum visit pannen nu solradhukkaha intha comment.. "Present sir" ;-)

தமிழ் வெங்கட் said...

புத்தகங்கள், திரைப்படங்களை மட்டுமல்ல வாழ்கையையும் ரொம்ப
ரசிக்கிறீங்கன்னு தோணுது..

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ஜெய்

//இந்த 5 படத்தையுமே பார்த்ததில்லை... :( பார்க்கவேண்டிய லிஸ்ட் அப்படி தாறுமாறா எகிறுதே..!!

நல்ல பகிர்வு முரளி...//

நன்றி ஜெய், நீங்க பாருங்க பார்த்து விட்டு எழுதுங்க... உங்க பார்வையில் பார்க்கணும். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ திருநாவுக்கரசு பழனிச்சாமி
//முரளி, எனக்கு ரொம்ப புடிச்ச படம்..நன்றி//

தேங்க்ஸ் திரு,
நோட்புக் பத்தி எழுதசொன்னிங்க இல்லையா, நோட்புக் நாவலி படித்துவிட்டு, மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டுதான் எழுதுவதாயிருக்கிறேன். முடிந்தால் நீங்களே எழுதுங்கள்,

ஆகுபெயர் முடியனுமோ?

முரளிகுமார் பத்மநாபன் said...

@விக்னேஷ்வரி
//முரளி, நீங்கள் அதிகம் ரசனையானவர் என்பதை மேலும் மேலும் நிரூபித்துக் கொண்டுள்ளீர்கள். நல்ல பதிவு//

ம்ம்ம்... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ அன்புடன் அருணா
//MESSAGE IN A BOTTLE பார்த்து அசந்திருக்கிறேன்.மற்றவைகளையும் நோட் பண்ணிக்கிட்டேன்.அழகா எழுதிருக்கீங்க!//

அவசியம் மத்த படத்தையும் பாருங்க மேடம், நான் அவரோட அடுத்த ரிலீஸ்க்காக வெயிடிங்... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@மொகமத்
unnoda ezhuthukkalai padichu comment podura alavukkulam nan valarala. Nanum visit pannen nu solradhukkaha intha comment.. "Present sir" ;-)
.
வர லையா? வளர லையா?
:-) தமிழ் ரொம்ப நுணுக்கமான மொழி தலைவரே! ஒரு எழுத்துல மாறி போயிடும் மொத்த அர்த்தமும்.

எனிவே, தேங்க்ஸ் ஃபார் யுவர் ப்ரசண்ட், மொகமத்.

:)@தமிழ் வெங்கட் said...
புத்தகங்கள், திரைப்படங்களை மட்டுமல்ல வாழ்கையையும் ரொம்ப
ரசிக்கிறீங்கன்னு தோணுது..

முரளிகுமார் பத்மநாபன் said...

@தமிழ் வெங்கட்
//புத்தகங்கள், திரைப்படங்களை மட்டுமல்ல வாழ்கையையும் ரொம்ப
ரசிக்கிறீங்கன்னு தோணுது..//

வாழ்க்கை ரசனையானதா இல்லைன்னா ரசிக்கிறதையே வாழ்க்கையாக்கிட வேண்டியதுதானே!

ஆகா தத்துவம் மாதிரியே இருக்கே...
கேட்ச் ப்ண்ணுங்கப்பா.....
:-)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.