நான் மிகவும் மகிழ்ச்சியோடிருக்கிறேன்!

இந்த வலைப்பூவை எழுத ஆரம்பித்த நாள் முதல் வெறுமனவே ஏதேதோ எழுதுக்கொண்டிருந்தேன். கதை ,கவிதை, கட்டுரை என எதிலும் அடங்காமல் பத்தி பத்தியாக எழுதிக்கொண்டிருப்பேன். என்னால் சிறுகதை எழுத முடியும் என்ற நம்பிக்கையை உருவாகியதே இந்த உரையாடல் அமைப்பின் சிறுகதைப்போட்டியில்தான். நான் எழுதிய முதல் சிறுகதை (!) ‘பேருந்து பயணம்’ இந்த போட்டிக்காக எழுதியதுதான், வெற்றி பெறவில்லை எனினும் கலந்துகொண்டதே மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதன் மூலம் கிடைத்த நட்பு, சிறுகதை பட்டறை என என் நட்புவட்டம் பெரிதாகிக்கொண்டே போகிறது, அப்படிப்போவதிலும் மகிழ்ச்சி.இன்று கவிதைப்போட்டி ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள். நானும் இதிலும் கலந்து கொண்டேன். இந்த போட்டிக்கான முடிவுகளை முன் அறிவித்தபடி இருந்த நாட்களில் வந்து பார்ப்பேன், எங்கே என் பெயரேதும் இருக்கிறதாவென. ஆனால் இரண்டு முறை நாட்கள் தப்பிப்போக, எனக்கே முடிவுகளின் மீதிருந்த ஆர்வம் மெல்ல அற்று போயிற்று.. கவிதை எழுதிய எனக்கே இப்படியென்றால், உங்களை (ஜிவோவ்ராம் சுந்தர் மற்றும் சிவராமன்) நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. இவ்வளவு சிரமங்களுக்கிடையே ஒரு போட்டியை நடத்தி வெற்றிகரமாக முடித்திருக்கிறீர்கள், மகிழ்ச்சி.

நேற்றய முந்தினம் நண்பர் வெயிலான் சொல்லியே முடிவு அன்று வெளியாகியிருக்கிறது என்பதும், அதில் எனக்கும் பரிசு கிடைத்திருக்கிறது என்பதும் தெரியவந்தது. உரையாடல் கவிதை போட்டியில் நான் எழுதியதையும் கவிதையாய் பாவித்து, அதை தேர்வும் செய்து என்னை வெற்றியும் பெறச்செய்திருக்கிறீர்கள், அதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். என்னாலேயே கவிதையென தைரியமாக பெயரிடாதபடியிருந்த என் கிறுக்கலைத் தேர்ந்தெடுத்த கவிஞர் சுகுமாரன் மற்றும் என் ப்ரியமான யுவன் அவர்களுக்கும் கோடி நன்றி. வெற்றி பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என் மீது எனக்கிருந்த மரியாதையை இன்னும் ஒரு படி உயர்த்தி பிடித்திருக்கிறது, இந்த வெற்றி. தோழர்.மாதவராஜ் அவர்கள் தொகுத்த மரப்பாச்சியின் சில ஆடைகள், சிறுகதை தொகுப்பில் என்னுடைய சிறுகதையும் (பட்டாம்பூச்சி பார்த்தல்) தேர்வுசெய்யப்பட்டதும், இன்று உரையாடல் கவிதப்போட்டியில், அப்பாவும் ஆல் இந்தியா ரேடியோவும் என்ற என் கிறுக்கலுக்காக  முதல் இருபது பேரில் ஒருவனாய் என்னையும் தேர்தெடுக்கப்பட்டதும், எழுதுவதென்பது வெறும் பொழுதுபோக்கு, ஒரு சோஷியல் நெட்வொர்க், வெட்டிவேலை, டைம் பாஸ், மொக்கை இன்னும் என்னவெல்லாமோ சொன்னாலும் எல்லாவற்றையும் தாண்டி மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.

துக்கம் பங்கிடும்போது குறையும், மகிழ்ச்சி பங்கிடும்போது அதிகரிக்கும், என் மகிழ்ச்சி இன்னும் பெருக வேண்டும் என்ற பேராசையுடன் இந்த மகிழ்ச்சியை உங்கள் அனைவரோடும் பங்கிட்டுக்கொள்கிறேன். என்னையும் கிறுக்கத்தூண்டிய இந்த எழுத்துக்களுக்கு என் வெற்றியை காணிக்கையாக்குகிறேன்.

வரப்போகும்
விருந்தினர்க்காக
அதிகப்படி காய்கறி
வாங்கிவரப் போகையில்
தற்செயலாக நிலா
தலைக்குமேல் விழுந்தது.

ரயில் வண்டியின்
குலுங்குகிற
ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வழி
கலங்கித் தெரிந்தது
நீரற்ற ஆற்று
மணல்மேல் நிலா

மரணத்திலிருந்து
தப்பித்த கண்கள்
மருத்துவமனைக்
கட்டிலில் உறங்க
கணக்கும் மனத்துடன்
நிசியில் வெளிவந்து
நின்றபோது
வேப்பமரத்து
கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது

நண்பனின்
அறைபிரிந்து,
திரும்பும்போது
ஏற்பட்ட
திடீர் வெருமையில்
நிச்சயமற்ற
தெருக்களில்
நீண்ட நேரம் நடந்து
வீட்டைத்தொடுகையில்
பூட்டிய கதவை
நிலவும் தட்டியது

மின்வெட்டில் விசிறி
சுழற்சியை நிறுத்த
காற்றைத்தேடி
இருட்டில் துளாவி
கைப்பிடி சுவரில்
முகம் பதித்தபோது
நிலா வீசியது
சில நட்சத்திரங்களை

தானாக இப்படித்
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க
என்று போய்
நிலா பார்த்து
நாளாயிற்று.

                           -கல்யாண்ஜி-

43 கருத்துரைகள்:

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்!!! மகிழ்ச்சி தொடரட்டும்
இன்னும் இன்னும் உயரம் போக என் வாழ்த்துகள்
:)

Karthikeyan G said...

Congrats!!

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள்!! தங்கள் மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொண்டது! :-)

Cable Sankar said...

மேலும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்.. முரளி.. இன்னும் நிறைய வெற்றிகள் பெற மனதார வாழ்த்தும்..

ஜெய் said...

வாழ்த்துக்கள் முரளி... :)

பா.ராஜாராம் said...

:-)

kalyaanjiyin miga nalla kavithai ithu..

tharunatthirkku thakka pola murali.

ezhuthunga makkaa.

க.பாலாசி said...

மிக்க மகிழ்ச்சி நண்பரே... எத்தனைமுறை பாராட்டினாலும் தகும் அந்த நினைவினை உசுப்பிவிடும் கவிதைக்கு ஈடுடெது என்பதை தேடிக்கொண்டிருக்கிறேன். பரிசிற்குரிய கவிதைதான் அது, கவிதை என்று தங்களால் வகைப்படுத்தப்படாவிடினும்...

மாதவராஜ் said...

வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் உயரே செல்வீர்கள்!

☼ வெயிலான் said...

பெருகட்டும் மகிழ்வு!
தொடரட்டும் எழுத்து!

VELU.G said...

கவிதை மிக அருமை, நிச்சயம் பரிசுக்குரியது தான் சந்தேகமே இல்லை.

கல்யான்ஜீ கவிதைகள் எனக்கு முதலிலேயே நல்ல அறிமுகம். மீண்டும் படிக்கும் போது பழைய நினைவுகள் மீண்டன. நன்றி நண்பரே

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துகள் முரளி...

இன்னும் பல வெற்றிகள் உங்க்ளை வந்து அடையட்டும்..

ராஜ நடராஜன் said...

வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!

ஈரோடு கதிர் said...

வாழ்த்துக்கள் முரளி

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் வெற்றிப் பயணம்

கனிமொழி said...

WoooooW!!........

Congrats nanba....

All the best for the upcoming competions toooo...... :)

ஆண்டாள்மகன் said...

இன்னும் பல பல வெற்றிகள் வந்தடைய வாழ்த்துக்கள் முரளி. அடுத்தமுறை திருப்பூர் வரும்பொழுது உங்களை சந்திக்க முயற்சிக்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் தல.. இன்னும் நிறைய உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறோம்..:-)))

மோகன் குமார் said...

வாழ்த்துகள் முரளி.

தமிழ் வெங்கட் said...

//துக்கம் பங்கிடும்போது குறையும், மகிழ்ச்சி பங்கிடும்போது அதிகரிக்கும்,//

நானும் உங்கள் மகிழ்சியில் பங்கு
கொள்ளுகிற்றேன்..

கார்த்திக் said...

வாழ்துக்கள் தல

பத்மா said...

congrats murali

yeskha said...

வாழ்த்துகள் முரளி...


வணக்கம், நான் "எஸ்கா". யூத்ஃபுல் விகடன் டாட் காம், தமிழ்வணிகம் டாட் காம், உயிரோசை டாட் காம் ஆகிய வலைதளங்களில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். அவற்றில் வெளியான என்னுடைய கட்டுரைகளை தொகுத்து என் ப்ளாக்கில் பதிவேற்றியுள்ளேன். எனது ப்ளாக் முகவரி http://yeskha.blogspot.com/ அனைவரையும் வரவேற்கிறேன்.

yeskha said...

வாழ்த்துகள் முரளி...

வணக்கம், நான் "எஸ்கா". யூத்ஃபுல் விகடன் டாட் காம், தமிழ்வணிகம் டாட் காம், உயிரோசை டாட் காம் ஆகிய வலைதளங்களில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். அவற்றில் வெளியான என்னுடைய கட்டுரைகளை தொகுத்து என் ப்ளாக்கில் பதிவேற்றியுள்ளேன். எனது ப்ளாக் முகவரி http://yeskha.blogspot.com/ அனைவரையும் வரவேற்கிறேன்.

♥ ℛŐℳΣŐ ♥ said...

வாழ்த்துக்கள் முரளி..

முரளிகுமார் பத்மநாபன் said...

@ நேசமித்ரன்
//வாழ்த்துகள்!!! மகிழ்ச்சி தொடரட்டும்
இன்னும் இன்னும் உயரம் போக என் வாழ்த்துகள்
:) //
மிக்க நன்றீ(இப்படி போட்டா பெரிய நன்றி) தலைவரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

@ Karthikeyan G
//Congrats!!//
தேங்க்ஸ் கார்த்தி

முரளிகுமார் பத்மநாபன் said...

@ சந்தனமுல்லை
//வாழ்த்துகள்!! தங்கள் மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொண்டது! :-)//
நன்றி சந்தனமுல்லை, இன்னும் மகிழ்ச்சியாயுணர்கிறேன்.
@ ஜெய் said...
வாழ்த்துக்கள் முரளி... :)
தேங்க்ஸ் ஜெய்
@ Cable Sankar said...
மேலும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்.. முரளி.. இன்னும் நிறைய வெற்றிகள் பெற மனதார வாழ்த்தும்..//
கண்டிப்பா தல, உற்சாகம் கொடுக்கும் வாழ்த்துக்களை தவிர வேறொன்றும் தேவையில்லை

பா.ராஜாராம் said...
:-)
kalyaanjiyin miga nalla kavithai ithu..
tharunatthirkku thakka pola murali.

ezhuthunga makkaa.//

நன்றீ(!) மகாப்பா, இயல்பாக ஒத்துபோவதாலேயே இந்த கவிதையை இங்கே குறிப்பிட்டேன்,

முரளிகுமார் பத்மநாபன் said...

@ க.பாலாசி
//மிக்க மகிழ்ச்சி நண்பரே... எத்தனைமுறை பாராட்டினாலும் தகும் அந்த நினைவினை உசுப்பிவிடும் கவிதைக்கு ஈடுடெது என்பதை தேடிக்கொண்டிருக்கிறேன். பரிசிற்குரிய கவிதைதான் அது, கவிதை என்று தங்களால் வகைப்படுத்தப்படாவிடினும்...//
ரொம்ப... ரொம்ப... ரொம்ப .... நன்றி நண்பா!
@ மாதவராஜ்
//வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் உயரே செல்வீர்கள்!//
மிக்க நன்றி தோழரே!
மிக்க 23 June 2010 7:13 PM
@ ☼ வெயிலான்
//பெருகட்டும் மகிழ்வு!
தொடரட்டும் எழுத்து!//
தல மிக்க நன்றி... :-)
@ VELU.G
//கவிதை மிக அருமை, நிச்சயம் பரிசுக்குரியது தான் சந்தேகமே இல்லை. கல்யான்ஜீ கவிதைகள் எனக்கு முதலிலேயே நல்ல அறிமுகம். மீண்டும் படிக்கும் போது பழைய நினைவுகள் மீண்டன. நன்றி நண்பரே //
மிகவும் நன்றி நண்பரே! இன்னும் தேடிப் படியுங்கள் எனக்கு அலுப்பதேயில்லை அவர் கவிதைகள். 

@ நிகழ்காலத்தில்...
//வாழ்த்துகள் முரளி...
இன்னும் பல வெற்றிகள் உங்க்ளை வந்து அடையட்டும்..//
நன்றி சிவாண்ணா

முரளிகுமார் பத்மநாபன் said...

@ க.பாலாசி
//மிக்க மகிழ்ச்சி நண்பரே... எத்தனைமுறை பாராட்டினாலும் தகும் அந்த நினைவினை உசுப்பிவிடும் கவிதைக்கு ஈடுடெது என்பதை தேடிக்கொண்டிருக்கிறேன். பரிசிற்குரிய கவிதைதான் அது, கவிதை என்று தங்களால் வகைப்படுத்தப்படாவிடினும்...//
ரொம்ப... ரொம்ப... ரொம்ப .... நன்றி நண்பா!
@ மாதவராஜ்
//வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் உயரே செல்வீர்கள்!//
மிக்க நன்றி தோழரே!
மிக்க 23 June 2010 7:13 PM
@ ☼ வெயிலான்
//பெருகட்டும் மகிழ்வு!
தொடரட்டும் எழுத்து!//
தல மிக்க நன்றி... :-)
@ VELU.G
//கவிதை மிக அருமை, நிச்சயம் பரிசுக்குரியது தான் சந்தேகமே இல்லை. கல்யான்ஜீ கவிதைகள் எனக்கு முதலிலேயே நல்ல அறிமுகம். மீண்டும் படிக்கும் போது பழைய நினைவுகள் மீண்டன. நன்றி நண்பரே //
மிகவும் நன்றி நண்பரே! இன்னும் தேடிப் படியுங்கள் எனக்கு அலுப்பதேயில்லை அவர் கவிதைகள். 

@ நிகழ்காலத்தில்...
//வாழ்த்துகள் முரளி...
இன்னும் பல வெற்றிகள் உங்க்ளை வந்து அடையட்டும்..//
நன்றி சிவாண்ணா

முரளிகுமார் பத்மநாபன் said...

ராஜ நடராஜன்
வாழ்த்துக்கள்!//
நன்றி நண்பரே

முரளிகுமார் பத்மநாபன் said...

@ வால்பையன் said...
வாழ்த்துக்கள் தல!//
தேங்க்ஸ் தல
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ஈரோடு கதிர்
வாழ்த்துக்கள் முரளி
// தேங்க்ஸ் தல//@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் வெற்றிப் பயணம்
மிக்க நன்றி சங்கர்

முரளிகுமார் பத்மநாபன் said...

கனிமொழி
WoooooW!!........

Congrats nanba....

All the best for the upcoming competions toooo...... :)//
ம்ம்ம், ரொம்ப தேங்க்ஸ் கனி

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆண்டாள்மகன்
இன்னும் பல பல வெற்றிகள் வந்தடைய வாழ்த்துக்கள் முரளி. அடுத்தமுறை திருப்பூர் வரும்பொழுது உங்களை சந்திக்க முயற்சிக்கிறேன்.

அவசியம் சந்திப்போம் நண்பரே! வரும்முன்னர் அவசிய தொடர்புகொள்ளுங்கள், என் மின்னஞ்சல் – murli03@gmail.com

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கார்த்திகைப் பாண்டியன்
வாழ்த்துகள் தல.. இன்னும் நிறைய உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறோம்..:-))
ம்ம்ம், ரைட்டு தல. தேங்க்ஸ்.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@மோகன் குமார்
வாழ்த்துகள் முரளி.//
நன்றி தலைவரே!, நல்லா இருக்கிங்களா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@ தமிழ் வெங்கட்
//துக்கம் பங்கிடும்போது குறையும், மகிழ்ச்சி பங்கிடும்போது அதிகரிக்கும்,//

//நானும் உங்கள் மகிழ்சியில் பங்கு
கொள்ளுகிற்றேன்..///

நன்றி தலைவரே! ஆக இன்னும் பெருகுகிறது என் மகிழ்ச்சி.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கார்த்திக்
வாழ்துக்கள் தல
நன்றி கார்த்திக்

முரளிகுமார் பத்மநாபன் said...

@ பத்மா
congrats murali//

ஆரம்பித்துவிட்டேன், புத்தகத்தைவிட வாசிப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ♥ ℛŐℳΣŐ ♥
வாழ்த்துக்கள் முரளி.. //

நன்றி ரோமியோ! குழந்தையோடிருக்கும் படம் அழகாயிருக்கிறது.

மயில் said...

முரளி லேட்டாக படிக்கிறேன். வாழ்த்துக்கள், உங்க மகிழ்ச்சி படிக்கும் அனைவரையும் பற்றிக்கொள்ளட்டும் :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

அது சிறப்பான கவிதை முரளி.

/சில நேரங்களில் உதட்டிலும்
பல நேரங்களில் கண்களிலும்// உதட்டிலும் என்பது புதுமையான, ரசனையான பிரயோகம்.

வாழ்த்துகள். நங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்குகொள்கிறேன்.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.