இரு வேறு உலகங்களுக்கிடையே ஒரு வாழ்க்கை பயணம்

      அம்மா அப்பா ரெண்டு பேரும் வீ.ஆர்.எஸ்ஸில் வேலையை விட்டு வந்து ஒரு எட்டு வருடங்கள் இருக்கும். அக்கா, தங்கை திருமணம் முடிந்த பின் ஒரு நாலு வருடமாகவே வீட்டில் இருக்கிறார்கள். வேலைக்கு போயே பழக்கப்பட்டவர்கள். வீட்டில் சும்மா இருக்க முடிவதில்லை. இங்கிருந்து ஒரு அறுபது கிலோமீட்டரில் உள்ள ஊட்டிக்குகூட இதுவரை அப்பா போனதாக தெரியவில்லை. நான் அப்பாவிடம் அடிக்கடி சொல்வேன் “ஏம்ப்பா இப்பதான் உங்க கடமை எல்லாம் முடிஞ்சதே? அப்படியே ஊட்டி, கொடைக்கானல், கோவில்கள், சொந்தபந்தகள் வீட்டிற்கு இப்படி ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரலாமில்லையா? வேலைக்கு போகும்போதுதான் இதையெல்லாம் செய்ய நேரமில்லை, இப்ப என்ன?” என்று. இங்க எவ்ளோ வேலை இருக்கு... இதையெல்லாம் வேற யார் பாத்துக்குவா? உனக்கு யார் சமைச்சி போடறது? இப்படி எதாவது சமாளிப்புகள் வருமே தவிர. உண்மையான காரணம் வெளியே வராது.

      எல்லாம் வாழ்ந்து முடிச்சாச்சு, இனி நமக்கென்ன டூரு கீரு.... இப்படி ஊர் சுத்துற காசை சேர்த்தா பையன் கல்யாணத்துக்கோ, பேரன் பேத்திக்கோ ஏதாவது செய்யலாம் என்கிற மாத சம்பளம் வாங்கும் ஒரு டிப்பிகல் நடுத்தர குடும்பத்தின் மனநிலைதான் அது, அந்த நிதர்சனம். அவர்கள் உழைத்த காலத்தில் ஒரு ஐம்பது வயசு வரைக்கும்தான் இப்படி, புள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டா, அப்படியே காசி ராமேஸ்வரம்ன்னு ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரவேண்டியதுதான், இது அவர்கள் பேசி நான் கேட்டது. ஆனா இப்போ, இப்பவும் அவர்களால் அவர்களுக்கென வாழ முடிவதில்லை.

      இப்போ அப்பா ரொம்ப போரடிக்குதுன்னு அவர் பிரண்டு கடைக்கு வேலைக்கு போகிறார், தனியாக இருக்கும் அம்மாவை பார்க்க பல நேரங்களில் பாவமாயிருக்கிறது. அதிலும் மதிய நேரங்களில் தனியாக அமர்ந்து அம்மா சாப்பிடுவதை பார்க்கும்போது ஏதோ இனம்புரியாத குற்ற உணர்ச்சி மனதிற்குள் அதிகரிக்கிறது. திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். நேம்ஷேக்


      டிபெண்டபிளிட்டி - குழந்தைகளாய் இருக்கும்வரை பெற்றோரின் அரவணைப்பு அவசியமாகிறது. கொஞ்சம் வளரும்போது அது நண்பர்கள், அவர்களை சார்ந்தவர்களோடு பகிர்ந்துகொள்ளப்படுகிறது. திருமணமானபின் துணையுடன், குழந்தை பிறந்தவுடன் அதனோடு, அவர்கள் வளர்ச்சிக்கு பாடுபட்டு, பின் அவர்களின் துணையையே தேடி நிற்கும் பயணம்தான், இந்த வாழ்க்கை. குறிப்பாக இப்படியான ஒரு வாழ்க்கைமுறை இங்கு நம் நாட்டில் அதிகம். அப்பா சொத்து பிள்ளைக்கு என்பது முதல் வயதான பெற்றோர்களை தன்னோடு வைத்துக்கொள்ளும் பக்குவம் என்பது வரை. இந்திய கலாச்சாரத்தில் ஒரு ஆணிவேர்தான் இந்த சார்பு நிலை வாழ்க்கைமுறை.

      ஆனால் மேலை நாடுகளில் குழந்தைகள் பள்ளி படிப்பு முடியும்வரை மட்டுமே பெற்றோரின் கட்டுப்பாடுகளில் இருப்பர், பின் அவர்களின் வாழ்க்கை அவர்களின் முடிவு, துணை தேடுவது முதல் பொருள் தேடும்வரை. பெற்றவர்கள் அவர்கள் சம்பாதியத்தோடு அவர்களின் மிச்ச வாழ்க்கையை அனுபவிக்க தொடங்குவர். குறிப்பாக அமெரிக்காவில் தனக்கென சொந்தமாக வீடு கட்டிக்கொள்ளவே தயங்குவார்கள், என கேள்விப்பட்டிருக்கிறேன். சொந்தவீடு என்கிற ஒரு நிலைமையே கிழக்காசியர்களின் வருகைக்கு பின்னரே அங்கே அதிகரித்திருக்கிறதாம்.

      அப்படிப்பட்ட ஒரு இந்திய கலாச்சாரத்தில் ஊறிய ஒரு பெண், அமெரிக்காவில வேலை பார்க்கக்கூடிய ஒருவனை திருமணம் செய்வதன் மூலம், அவள் வாழ்க்கை பயணம் எங்கெல்லாம் அவளை அழைத்து செல்கிறது, என்பதுதான் இந்த படம். உண்மையிலேயே எந்த எதிர்பார்ப்பும் இன்றிதான் இந்த படத்தை பார்த்தேன். என் நண்பரின் நண்பர் UTV-ல் பணி புரிகிறார், அவர் கொடுத்த திரைப்பட டிவிடிக்களில் இந்த படமும் இருந்தது. மீரா நாயர், தபூ, இர்ஃபான் கான் என்கிற மூன்று பெயர்களைத்தவிர வேறெந்த அறிமுகமும் இல்லாமல் பார்த்தேன்.

      கதாநாயகனின் ரயில் பயணம், அவனுடன் வரும் சக பயணியோடான உரையாடல். தபுவின் அறிமுக காட்சி. குறிப்பாக அந்தபாடல் ஆரம்பித்து முடிக்கும் வரையிலான காட்சியமைப்பும் இசையும். அப்படியே கல்கத்தாவை கண்முன் வைக்கிறது. அருமை. இர்பான் தபூவை பெண்பார்க்க வரும்போது, அவனது காலனியை அணிந்துகொண்டு நடக்கும் தபூ, ஒரு ஆணின் காலனியை அணிந்திருப்பதால் தன்னையும் ஆணாக பாவித்துக்கொண்டு ஒரு மாதிரி நெஞ்சை நிமிர்த்தி நிற்பார் பாருங்கள், அழகு. ஆதிக்க சிந்தனையை ஒரு நிமிடத்தில் சொல்லிவிட்டு போகும் காட்சி. இர்பானின் அப்பா, தபூவிடம் ஏம்மா, உன் சொந்த பந்தங்களை விட்டு, இந்த வீட்டை, நாட்டை விட்டு உலகின் பாதியை கடந்து பனிபொழியும் அந்த நாட்டில் உன்னால் தனியாக இருக்க முடியுமா? என்று கேட்ப்பார். அவர் இருப்பார்ல? என்ற கேள்வியின் மூலம் தன் சம்மதத்தை சொல்லும் அந்த காட்சி. இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.  இந்த படத்தில் எனக்கு பிடித்தமான காட்சிகளை, ரசித்த காட்சிகளை எழுதுவது என்று முடிவெடுத்தால் இன்னும் இரண்டு பதிவின் நீளம் கொள்ளும். அவ்வளவு விஷயமுண்டு. பதிவின் நீளம் கருதி நான் உணர்வுப்பூர்வமாக புரிந்த சில விசயங்களை மட்டும் முன்வைக்கிறேன்.

      ஒரு சார்பு நிலை வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்ட ஒரு கணவன் மனைவி, அதிலும் கணவன் சில இடங்களில் இதெல்லாம் இங்க சகஜம் என தன்னையே ஆறுதல் செய்துகொள்ளும் மனமுடையவன். அவர்களின் ஒரு மகன், மகள். இவர்களை சுற்றிய கதை. நாயகன் வேலை காரணமாய் அமெரிக்காவில் வசிப்பவன், நாயகி அவன் மனைவியானதால் அமெரிக்காவில் வசிக்கிறாள். அவர்களின் குழந்தைகள் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள், பெற்றோர்களின் மூலம் இந்திய கலாச்சாரத்தையும் நேரடி அனுபவங்களில் அமெரிக்க கலாச்சாரத்தையும் ஒருங்கே கடைபிடிக்கின்றனர்.

      அடிக்கடி இந்தியா சென்றுவர முடியாது என்பதை தன் மனைவிக்கு புரிய வைக்கும் இடத்திலாகட்டும், இந்தியா வந்திருக்கும் முதல் நாளிலேயே நாம எப்பண்ணா வீட்டுக்குப் போவோம் என்கிற தங்கையாகட்டும், பெயர் மாற்றி வைத்துக்கொள்ள விரும்பும் மகனுக்கு பதில் சொல்ல முடியாமல், இது அமெரிக்கா, இங்க எதுவும் சாத்தியம் என்று விரக்தியுடன் சொல்லிவிட்டு வெளியே செல்லும் அப்பா, மகன் ஒரு இடத்தில், மகள் ஒரு இடத்தில், கணவன் ஒரு இடத்தில் என நால்வரும் தனித்தனியாக பிரிந்து இருக்கும் சமயம், வீட்டில் தன் இந்திய சொந்தங்களுக்கு வாழ்த்து அட்டையை வரைந்து கொண்டிருக்கும் அவள், இப்படிக்கு அன்புடன் என் நால்வரின் பெயரையும் சேர்த்து எழுதுமிடத்தில் எடுத்துக்கொள்ளும் அந்த இரண்டு நொடி யோசனை (இத்தனிக்கும் அந்த காட்சியில் அவள் கைகளை மட்டுமே காட்சிப்படுத்தியிருப்பார்கள்), தாயின் ஆசைக்கிணங்க தான் விரும்பிய அமெரிக்க பெண்ணை தவிர்த்து அங்கேயே ஒரு பெங்காலி பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் மகன், பின் தன் மனைவிக்கு வேறு ஒரு பிரெஞ்சுகாரனுடன் காதலிருப்பதை அறியும் அவன், தன் தாயிடம் ஒரு வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு இருவரும் பெங்காலியாக மட்டும் இருந்தால் போதாது என்று சொல்லி அழும் காட்சி, தனிமையில் கணவன் இறந்துபோன செய்தியை நம்ப முடியாமல் அவஸ்தைப்படும் காட்சி, வீட்டின் பெரிய தோட்டத்தில் தனியாய் அழும் அந்த காட்சி என படம் நெடுகவும் மனித மனநிலையை பிரதிபலித்துக்கொண்டேயிருக்கிறது.

      இப்படி படம் முழுவதும் மனிதனின் ஒரு தடுமாற்றமான மனநிலையையே பார்க்க முடிகிறது. ஒவ்வொரு காட்சியமைப்பின் பின்னும் இயக்குனரும் கதாசிரியரும் தெரிகிறார்கள். கேமிரா - ஒவ்வொரு காட்சியிலும் ஸ்படிகமாய். படத்தில் குறிப்பிடும்படியான இன்னொரு விசயம் - இசை. நிதின் சஹானே. வயலின், தபேலா, புல்லாங்குழல், கிடார் மற்றுமொரு தந்திக்கருவி (கையில ஸ்பூன் மாதிரி வச்சி தட்டுவாங்களே, பெயர் தெரியலை.) இதை வைத்துக்கொண்டு மனுஷன் பூந்து விளையாடியிருக்கார். படத்தில் எங்கேயும் தனியாக பிண்ணனி இசை என்று தேட முடியாது. அவ்வளவு கச்சிதம். இந்த படத்தின் பாடல்களை தேடிக்கொண்டிருக்கிறேன், ஹிந்துஸ்த்தானி இசைதான் படத்தின் முக்கிய பலம். படத்தின் ஓப்பனிங் ம்யூசிக் இங்கே, மற்றுமொரு இசை வடிவம் இங்கே

      இன்னொரு விஷேசம். பொண்ணுக்கு சடங்கு வச்சிருக்கேன்னு சொல்ல வந்த மாமாவிடம் ஏண்டா இப்படி இளைச்சிட்டேன்னு கேட்டதும் சொல்ல வந்ததைவிட்டுவிட்டு இளைச்ச கதைய சொல்லுவாராம், அதுமாதிரி இந்த NAMESAKE படம் சொல்ல வருகிற விஷயமும் வேறுதான். ஆனால் நான் எடுத்துக்கொண்ட, கற்றுக்கொண்ட விஷயங்களை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன். வாழ்க்கையில் நாம் சந்திக்கிற நபர்கள், எதிர்படும் சின்ன சின்ன விஷயங்கள், எதுவுமே நமக்கு ஏதாவது ஒன்றை கற்றுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. கண்ணையும் மனசையும் திறந்தே வையுங்கள், இங்கே பார்க்கவும் கற்றுக்கொள்ளவும் ஏராளம் இருக்கிறது.  இனி வரும் மதியப்பொழுதுகளில் டீவியை அணைத்து விட்டு அம்மாவோடு ஏதாவது பேசிக்கொண்டிருக்கலாம் என்றிருக்கிறேன்.

36 கருத்துரைகள்:

வித்யா said...

அரை மணி நேரம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முழுவதும் பார்க்க முடியவில்லை. டிவிடி தேடிக்கொண்டிருக்கிறேன்.

நல்ல அலசல்.

மோகன் குமார் said...

//தனியாக இருக்கும் அம்மாவை பார்க்க பல நேரங்களில் பாவமாயிருக்கிறது. //

Pl. get married soon & if your wife is there, your mother will not be bored. :))

மோகன் குமார் said...

//வாழ்க்கையில் நாம் சந்திக்கிற நபர்கள், எதிர்படும் சின்ன சின்ன விஷயங்கள், எதுவுமே நமக்கு ஏதாவது ஒன்றை கற்றுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது.//

Very true!!

பேரரசன் said...

டிபெண்டபிளிட்டி - குழந்தைகளாய் இருக்கும்வரை பெற்றோரின் அரவணைப்பு அவசியமாகிறது. கொஞ்சம் வளரும்போது அது நண்பர்கள், அவர்களை சார்ந்தவர்களோடு பகிர்ந்துகொள்ளப்படுகிறது. திருமணமானபின் துணையுடன், குழந்தை பிறந்தவுடன் அதனோடு, அவர்கள் வளர்ச்சிக்கு பாடுபட்டு, பின் அவர்களின் துணையையே தேடி நிற்கும் பயணம்தான், இந்த வாழ்க்கை.

அழகு முரளி...!

நேசமித்ரன் said...

நல்ல படத்தை தேர்ந்தெடுத்திருக்கீங்க

ஆனா எப்பவும் இருக்கும் எதோ ஒண்ணு மிஸ்ஸிங் :)

க.பாலாசி said...

அருமையான பகிர்வுங்க முரளி.. படத்தை தவிர்த்து முதலில் சொன்ன விசயமே அம்மாவின் தனிமையை உணர்த்தியது. அவ்வப்பொழுது இப்படி நினைப்பதுண்டு.

தகுந்தார்போல் இந்த படமும்...

SIVA said...

முர்ளீ : அந்த ஸ்பூன் வெச்சு தட்டற கருவி ”ஜலதரங்கம்” தானே.

ஒரு முறை star movies or HBO லோயோ பார்த்திருக்கிறேன்.

படத்தைப் பற்றி ரொம்ப மங்கலான நினைவுகளே இருப்பதால் என்னால் எதையும் இங்கு பகிர முடியவில்லை.

என்னினும் உங்களுடைய பதிவு நன்றாகயிருந்தது. வாழ்த்துக்கள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

இறுதிப் பாராவில் நீங்கள் கொண்ட உதாரணமும், சொன்ன மெஸேஜும் ரொம்ப அழகு.

படத்தைப்பற்றி சொல்ல ஆரம்பிப்பதற்கு முந்தைய பாராக்கள் உங்களைப் பற்றியதா என அறிந்துகொள்ள சிரமப்படவேண்டியதிருக்கிறது. இன்னும் வாக்கியங்களில் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் எடிட் பண்ணுங்கள். வாழ்த்துகள்.

படம் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி.

கனிமொழி said...

/////
மோகன் குமார் said...

//தனியாக இருக்கும் அம்மாவை பார்க்க பல நேரங்களில் பாவமாயிருக்கிறது. //

Pl. get married soon & if your wife is there, your mother will not be bored. :))

/////

இதையே வழிமொழிகிறேன்....

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//மோகன் குமார் said...

Pl. get married soon & if your wife is there, your mother will not be bored.//

YES,YES...

அன்பரசன் said...

படம் பாக்கணும் போல தோணுது தல.

விக்னேஷ்வரி said...

ஆமா முரளி. ரொம்ப நல்ல படம். அதுக்குக் குறைவில்லாத விமர்சனம்.

விக்னேஷ்வரி said...

Pl. get married soon & if your wife is there, your mother will not be bored. :))//

சரியா சொன்னீங்க மோகன். புள்ளையும் அதை நேரா சொல்ல வெக்கப்பட்டுக்கிட்டுத் தான் அம்மா, பாவம்ன்னு கதை சொல்லிட்டு இருக்கு.
பை த வே, முரளிண்ணா, வீ வாண்ட் அண்ணி, வீ வாண்ட் அண்ணி.... :)

பத்மா said...

முரளி! படத்தில மெசேஜ் இருக்கோ இல்லையோ உங்க பதிவுல மெசேஜ் கட்டாயம் இருக்கு !
கவிதைப் போட்டிக்கு பிறகு அப்பா இப்போ கொஞ்சம் பதிவெல்லாம் படிக்கறார் ன்னு சொன்னீங்க இல்ல ?....மெசேஜ் தந்துடீங்க ..
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

நல்ல ஒரு பகிர்வு முரளி

கார்த்திகைப் பாண்டியன் said...

பகிர்வுக்கு நன்றி... பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்ல சேர்த்த்க்கிறேன்..:-))

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வான பகிர்வு முரளி. சற்று, கண்கள் கலங்கியது. எதுக்குன்னு தெரியல.

Cable Sankar said...

அருமையான படம்.. முரளி.. அதனால் தான் ஓடவில்லை..:(

Cable Sankar said...

அருமையான படம்.. முரளி.. அதனால் தான் ஓடவில்லை..:(

அகல்விளக்கு said...

Second Generation NRI patriya arumaiyana padaippu intha Namesake...

Jhumpa Lahiri yoda Full Length Novel-than ithu...

Naan ithai puthaga vimarsanam seiyalam endru irunthen...

Ungaludaiya paarvai-yil ithu arputhamaga enakkum therikirathu nanba... :)

//Pl. get married soon & if your wife is there, your mother will not be bored//

plz... think about it.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@வித்யா
//அரை மணி நேரம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முழுவதும் பார்க்க முடியவில்லை. டிவிடி தேடிக்கொண்டிருக்கிறேன். நல்ல அலசல்.//.

டிவிடி கிடைக்கலைன்னா சொல்லுங்க, அவசியம் தருகிறேன். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@வித்யா
//அரை மணி நேரம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முழுவதும் பார்க்க முடியவில்லை. டிவிடி தேடிக்கொண்டிருக்கிறேன். நல்ல அலசல்.//.

டிவிடி கிடைக்கலைன்னா சொல்லுங்க, அவசியம் தருகிறேன். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ மோகன் குமார்
//Pl. get married soon & if your wife is there, your mother will not be bored. :))//
தலைவரே! ஆரம்பிச்சி வச்சிட்டிங்க, இங்க பாருங்க எப்படி பதி எரியுதுன்னு... ஹி ஹி ஹி விடுங்க எல்லாமெ நல்லதுக்குத்தான்....

முரளிகுமார் பத்மநாபன் said...

@ பேரரசன்
//அழகு முரளி...!//
செந்தில் என்னையா சொல்றிங்க? அவ்வ்வ்வ்

முரளிகுமார் பத்மநாபன் said...

@ நேசமித்ரன்
// நல்ல படத்தை தேர்ந்தெடுத்திருக்கீங்க
ஆனா எப்பவும் இருக்கும் எதோ ஒண்ணு மிஸ்ஸிங் :)//


புரியிது தல எங்க மிஸ் ஆவுதுன்னு.. அடுத்து இது நடக்காது.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ க.பாலாசி
//அருமையான பகிர்வுங்க முரளி.. படத்தை தவிர்த்து முதலில் சொன்ன விசயமே அம்மாவின் தனிமையை உணர்த்தியது. அவ்வப்பொழுது இப்படி நினைப்பதுண்டு.
தகுந்தார்போல் இந்த படமும்...//

நன்றி நண்பரே! பாருங்க நல்ல ப்டம் இது...

முரளிகுமார் பத்மநாபன் said...

@ SIVA
//முர்ளீ : அந்த ஸ்பூன் வெச்சு தட்டற கருவி ”ஜலதரங்கம்” தானே//
கண்டிப்பா அது ஜலதரங்க இல்லைன்னு மட்டும் தெரியும். :-)

//ஒரு முறை star movies or HBO லோயோ பார்த்திருக்கிறேன்.
படத்தைப் பற்றி ரொம்ப மங்கலான நினைவுகளே இருப்பதால் என்னால் எதையும் இங்கு பகிர முடியவில்லை.
என்னினும் உங்களுடைய பதிவு நன்றாகயிருந்தது. வாழ்த்துக்கள்//

வாங்க படம் தரேன்.. பாருங்க... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதிமூலகிருஷ்ணன்
//இறுதிப் பாராவில் நீங்கள் கொண்ட உதாரணமும், சொன்ன மெஸேஜும் ரொம்ப அழகு.//
தேங்க்ஸ் அண்ணா நல்லா இருக்கிங்களா?


// படத்தைப்பற்றி சொல்ல ஆரம்பிப்பதற்கு முந்தைய பாராக்கள் உங்களைப் பற்றியதா என அறிந்துகொள்ள சிரமப்படவேண்டியதிருக்கிறது. இன்னும் வாக்கியங்களில் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் எடிட் பண்ணுங்கள். வாழ்த்துகள்.
படம் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி//

தேங்க்ஸ்ண்ணா, நிச்சயம் என்னை செதுக்குவதில்(யதில்) உங்கள் பங்கு நிச்சயம் அதிகம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@கனிமொழி

@திருநாவுக்கரசு பழனிசாமி

உங்க ரெண்டு பேருக்கும் இருக்குடீ.. இருங்க கவனிக்கிறேன். :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்பரசன்
//படம் பாக்கணும் போல தோணுது தல.//

அவசியம்பாருங்க தல...

முரளிகுமார் பத்மநாபன் said...

@விக்னேஷ்வரி
//ஆமா முரளி. ரொம்ப நல்ல படம். அதுக்குக் குறைவில்லாத விமர்சனம்.//

தேங்க்ஸ் விக்கி,


/சரியா சொன்னீங்க மோகன். புள்ளையும் அதை நேரா சொல்ல வெக்கப்பட்டுக்கிட்டுத் தான் அம்மா, பாவம்ன்னு கதை சொல்லிட்டு இருக்கு.
பை த வே, முரளிண்ணா, வீ வாண்ட் அண்ணி, வீ வாண்ட் அண்ணி.... :)//
ரைட்டு.. அட்டாக் பண்ணிட்டிங்கள்ள போயிட்டே இருங்க.... :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@பத்மா
//முரளி! படத்தில மெசேஜ் இருக்கோ இல்லையோ உங்க பதிவுல மெசேஜ் கட்டாயம் இருக்கு !
கவிதைப் போட்டிக்கு பிறகு அப்பா இப்போ கொஞ்சம் பதிவெல்லாம் படிக்கறார் ன்னு சொன்னீங்க இல்ல ?....மெசேஜ் தந்துடீங்க ..
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

நல்ல ஒரு பகிர்வு முரளி//

ஹா ஹா என்னா மேடம் நீங்களுமா? ரைட்டு விளையாடுங்க...

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்த்திகைப் பாண்டியன்
//பகிர்வுக்கு நன்றி... பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்ல சேர்த்த்க்கிறேன்..:-))//

நண்பா எத்தனை நாலாச்சு, நம்ம க்டைக்கு வந்து ம்ம்ம்ம்? :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@பா.ராஜாராம்
//மிக நெகிழ்வான பகிர்வு முரளி. சற்று, கண்கள் கலங்கியது. எதுக்குன்னு தெரியல//

மகாப்பா... எனக்கு தெரியும்.. ஒரு என் ஆர் ஐ கஸ்டம்......:-(

முரளிகுமார் பத்மநாபன் said...

@Cable Sankar said...
அருமையான படம்.. முரளி.. அதனால் தான் ஓடவில்லை..:(

தல மெசேஜ் அனுப்பினனே கிடைச்சுதா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@அகல்விளக்கு
Second Generation NRI patriya arumaiyana padaippu intha Namesake...
Jhumpa Lahiri yoda Full Length Novel-than ithu...
Naan ithai puthaga vimarsanam seiyalam endru irunthen...
Ungaludaiya paarvai-yil ithu arputhamaga enakkum therikirathu nanba... :)
ஹா ஹா அதனாலென்ன ராஜா, நீங்க புத்தக விமர்சனம் எழுதுங்க, எப்படியும் நாவல் ரொஉ அழகான வடிவத்தில்தான் இருக்கும். எழுதுங்க ஐ யாம் வெயிட்டிங்...

//Pl. get married soon & if your wife is there, your mother will not be bored//

plz... think about it.... :-)

யோவ் நீயுமா? இருங்கடீ எல்லாருக்குமா இருக்கு, ஒரு நாள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

எல்லாருமா திட்டம் போட்டு என்னை குழியில தள்ளவா பாக்குறிங்க... ஆதிண்ணா ஹெல்ப் மீ......

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.