இன்செப்ஷன்


            ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு உயிரைத்தேடின்னு ஒரு படக்கதை காமிக்ஸ் வடிவில் சிறுவர் மலரில் வெளிவந்தது யாருக்கும் நியாபகம் இருக்கிறதா? இல்லை சமீபத்தில் வெளிவந்த ஐ யாம் லெஜன்ட் (வில் ஸ்மித்) படம் நியாபகம் இருக்கிறதா? இருந்தால் அடுத்த பத்தியை புரிந்துகொள்வதில் ஒரு ரசனை ஒளிந்திருக்கும்.


            ஒரு நாள் காலை தூங்கி எழுந்து தூக்கக் கலக்கத்தில் டாய்லெட் செல்கிறேன். தூக்கம் கலையாத கண்களோடு நான், அப்போது எனக்கு ஒரு கொட்டாவி வருகிறது, சில சமயம் கொட்டாவி வரும்போது காதுகள் அடைத்துக்கொள்ளுமே, சில வினாடிகள் எதுவுமே காதில் விழாது, ஒரு கும்மென்ற சப்த்தத்தை தவிர. இதை அனுபத்திருக்கிறீர்களா? அப்படி ஒரு கொட்டாவி எனக்கு வருகிறது. திறந்த வாயை மூடும்போது மண்ணும் புழுதியுமாய் உணர்கிறேன். அவசர அவசரமாய் கண் திறந்து பார்க்கும் போது சுற்றி உள்ள அனைத்து கட்டிடங்களும் இடிந்து கிடக்கிறது. நான் மட்டும் அமர்ந்திருக்கிறேன்.  அம்மா, அப்பா, அக்கா, தங்கை, பக்கத்து வீடு எதுவுமே இல்லை. தேடிப்பிடித்து ஒரு பையில் எனக்கு தேவையான சிலவற்றை எடுத்துக்கொண்டு நடக்கத்துவங்குகிறேன், உயிரைத்தேடி. அப்போது என் கால்களில் ஏதோவொன்று பலமாகத்தாக்க கால்கள் ஜில்லிடத்துவங்கின்றது. கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்து பார்க்கும்போது அம்மா கையில பால் குண்டாவோட சாரிடான்னு சொல்லிட்டு போயிட்டிருக்காங்க. காலை மிதிச்சதுக்கு சாரி. ஜில்லுன்னு இருந்தது என் காலில் கொட்டிய பால். 

             சில வினாடிகளில் அந்த கனவு முடிந்து விழித்துவிட்டேன். ஆனால் கனவில் நான் நடந்த தூரமும், நேரமும் எவ்வளவு? ம்ம்ஹும் கணக்கிட முடியவில்லைஇது என் கனவு, அப்போ எனக்கு பத்திமூணு வயசிருக்கலாம். அந்த கனவை இப்போ நினைத்து பார்க்கிறேன். காரணம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இன்செப்ஷன் என்கிற திரைப்படம். 
           
            ஒரு முழுமையான படம். மனுஷன் பிச்சி ஓதறியிருக்கார். காக்கா வடைய தூக்கிட்டு போற கதையிலேயே லாஜிக்கை விடுற ஆளுகளுக்கு மத்தியில இப்படி ஒரு குழப்பமான திரைக்கதையை எந்த குழப்பமுமில்லாமல் கொடுத்திருக்கிறார். கனவுகளை களவாடும் நாயகன். இறந்து அவன் நினைவில் வாழும் அவன் மனைவி, தன் போட்டியாளரிடம் அவர் மனதில் ஒரு தவறான கருத்தை விதைப்பதன் மூலம் அவரை போட்டியில் தோற்கடித்து வியாபர சாம்ராஜ்யத்தில் கொடி கட்ட நினைக்கும் ஒருவன். கனவில் எளிதாக சென்று திரும்பிவர நமக்கு விருப்பப்பட்ட மாதிரியான உலகை வடிவமைக்க ஒரு ஆர்க்கிடெக்ட் அப்பப்பா எத்தனை வித்தியாசமான கதாப்பத்திரங்கள். எப்படி இதையெல்லாம் யோசிச்சிருப்பார்? இன்னொன்னு எப்படி இதை நடிகர்களுக்கு புரியவைத்து அவர்களிடம் அந்த நடிப்பை  வாங்கியிருப்பார்? முடியலை மனசு முழுவது கேள்விகளால் நிறைந்துகிடக்கிறது. படம் எவ்வளவு குப்பை, ஒன்னும் புரியலை, ஓர் எளவும் விளங்கலை இப்படி யார் என்ன சொன்னாலும் இந்த படம் சூப்பர். ஐ லவ் திஸ் மூவி. கிளைமேக்ஸ் காட்சி  கேப்ரியோவின் நடிப்பிற்கு  சான்று, பயபுள்ள கண்ணுலேயே பேசுறான்யா..... முடியலை..             நான் சும்மா படத்தோட பாதிப்பை மட்டுமே சொல்லியிருக்கேன், இன்னும் சொல்லப்போன அந்த மனுஷன் காட்டிய கனவுலதான் இன்னும் இருக்கேன். தெளிவா படத்தை எல்லாருக்கும் புரியிற மாதிரி எழுத இன்னும் ஒரு முறை பார்க்கணும். அப்புறம் டயலாக்குகாக, ஸ்க்ரிப்ட்டுக்காக, காப்ரியோவின் நடிப்பிற்க்காக, நோலனுக்காகன்னு இன்னும் எத்தனை தடவை இந்த படத்தை பார்க்கபோறேன்னு தெரியலை. நண்பர் ஜெயின் பார்வையில் இன்செப்ஷன், இப்போதைக்கு படத்தை பத்தி ஒரு அவுட் லைன் தெரிய இங்கே போங்க, அணு அணுவா ரசிக்கணும்னா ஹாலிவுட் பாலாவின் பதிவுக்கோ இல்லை இதே மனுஷன் ஒரு தொடர்பதிவு எழுதுவார் அதுவரை வெயிட்பண்ணுங்க. 

            இது, இந்த படம் ஸ்க்ரீன் ப்ளேவில் ஒரு மாஸ்டர் பீஸ் - நான் படித்த ஒரு ரிவ்யு - ஜேம்ஸ்பாண்ட் மீட்ஸ் தி மேட்ரிக்ஸ்.இந்த படத்தைப் பற்றி எழுத நேரமில்லை, ஆனா விஷயம் இருக்கு வண்டி வண்டியா...... . சந்தோசம் இப்படி ஒரு படத்தை பார்த்துவிட்டேன் என்கிற மகிழ்ச்சி, எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான். ஆக பதிவு ஒரு மாதிரியா அரை குறையா இருந்தா மன்னிச்சிக்குங்க..

41 கருத்துரைகள்:

பேரரசன் said...

can we go on sunday murali....?

review superb..! but i may try..!

ஜெய் said...

// காக்கா வடைய தூக்கிட்டு போற கதையிலேயே லாஜிக்கை விடுற ஆளுகளுக்கு மத்தியில இப்படி ஒரு குழப்பமான திரைக்கதையை எந்த குழப்பமுமில்லாமல் கொடுத்திருக்கிறார் //
அதுதான் ஆச்சரியம்... திரைக்கதையின் உச்சகட்டம் இது...

ஆக்சுவலா, நம்மை ரொம்ப குழப்பாம, கொஞ்சம் தெளிவாதான் கதை சொல்லியிருக்கார் நோலன்... ஏன்னா மெமெண்டோ அளவுக்கு குழப்பினா படம் ஓடாது... அதை சரியா புரிஞ்சுகிட்ட நோலனின் வியாபார நுணுக்கமும் ஆச்சரியம்தான்...

கதையில இன்னும் புரியாதது ஏகப்பட்ட சின்ன விஷயங்கள்தான்... இன்னொரு தடவை பார்க்கணும்...

ஆனா, பார்க்காதவங்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்கறேன்... இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், இந்தப் படத்தை முதல் நாள் தியேட்டரில் பார்த்ததை சொல்லிக்கொள்ள பெருமையா இருக்கும்...

VELAN said...

உயிரை தேடி சிறுவர் மலரை டீ கடை தினமலரில் படித்திருக்கிறேன். என்னால் இன்றும் மறக்கமுடியாத தொடர். எனது நண்பர்கள் யாருக்கும் இதை பற்றி தெரியவில்லை. உங்கள் கட்டுரையில் அதை பற்றி படித்ததில் மகிழ்ச்சி.

முரளிகுமார் பத்மநாபன் said...

இந்த படத்தைப் பற்றி எழுத நேரமில்லை, ஆனா விஷயம் இருக்கு வண்டி வண்டியா...... . சந்தோசம் இப்படி ஒரு படத்தை பார்த்துவிட்டேன் என்கிற மகிழ்ச்சி, எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான். ஆக பதிவு ஒரு மாதிரியா அரை குறையா இருந்தா மன்னிச்சிக்குங்க..

ஜாக்கி சேகர் said...

மகிழ்ச்சியாய் பதிவை வெளியிட்டமைக்கு என் நன்றிகள்..

Saravana Kumar MSK said...

//காக்கா வடைய தூக்கிட்டு போற கதையிலேயே லாஜிக்கை விடுற ஆளுகளுக்கு மத்தியில//

ROTFL :)))))

மகிழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்..

பூந்தளிர் said...

//ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு உயிரைத்தேடின்னு ஒரு படக்கதை காமிக்ஸ் வடிவில் சிறுவர் மலரில் வெளிவந்தது யாருக்கும் நியாபகம் இருக்கிறதா?//

பத்து வருடம் இல்லை முரளி, சரியாக 21 வருட்ங்களுக்கு முன்பு....
பிங்கி & ஜானியை அவ்வளவு எளிதான மறக்க முடியுமா..?

Ben said...

உயிரைத் தேடி காமிக்ஸ் பற்றிய ஞாபகங்களை கொண்டு வந்ததற்காக நன்றி. தொண்ணூறுகளின் ஆரம்ப காலத்தில் வந்த இத்தொடரை மறக்க முடியுமா? இதன் ஒரிஜினல் ஆங்கில பதிவின் பெயர் தெரியுமா? இணையத்தில் இருந்து இறக்கியே தீருவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

"இன்செப்ஷன்" விமர்சனம் அருமை

கட்டாயம் பார்த்துவிடுகிறேன்

butterfly Surya said...

முரளி, நள்ளிரவில் குறுஞ்செய்தி பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

இன்ன்னும் படம் பார்க்கவில்லை. இந்த வாரம் பார்க்க வேண்டும்.

பதிவிற்கு நன்றி.

அன்புடன் அருணா said...

உயிரைத்தேடி படிச்சுருக்கேனே!!!!படம் பார்க்கணும் போலிருக்கு!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//"inseption" rocking movie..master piece of nolan. i cant dream this night, brilliant movie of the year//

முரளி எங்கயோ இத படிச்ச மாதிரி இருக்கா..நீங்க நைட் 1 மணிக்கு அனுப்பின குறுந்தகவல்தான்...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//"inseption" rocking movie..master piece of nolan. i cant dream this night, brilliant movie of the year//

முரளி எங்கயோ இத படிச்ச மாதிரி இருக்கா..நீங்க நைட் 1 மணிக்கு அனுப்பின குறுந்தகவல்தான்...

அன்பரசன் said...

பார்த்துடுவோம்.

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

முரளிகுமார் பத்மநாபன் said...

செந்தில் போலாமே? முடிவு பண்ணுங்க எப்போன்னு? :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ஜெய்
ஆனா, பார்க்காதவங்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்கறேன்... இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், இந்தப் படத்தை முதல் நாள் தியேட்டரில் பார்த்ததை சொல்லிக்கொள்ள பெருமையா இருக்கும்..// ஆமா ஆமா எனக்கும்தான்

முரளிகுமார் பத்மநாபன் said...

@ வேலன்
//உயிரை தேடி சிறுவர் மலரை டீ கடை தினமலரில் படித்திருக்கிறேன். என்னால் இன்றும் மறக்கமுடியாத தொடர். எனது நண்பர்கள் யாருக்கும் இதை பற்றி தெரியவில்லை. உங்கள் கட்டுரையில் அதை பற்றி படித்ததில் மகிழ்ச்சி//

:-) எனக்கும இதை எழுதும்போது சக நண்பர்களிடம் கேட்டேன் யாருக்கும் அது பற்றி தெரியாதது ஆச்சர்யமே..

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ஜாக்கி சேகர்
ண்ணா... அடுத்தவாட்டி பாக்கறிங்களா இல்லையா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@ பூந்தளிர்
//பத்து வருடம் இல்லை முரளி, சரியாக 21 வருட்ங்களுக்கு முன்பு....
பிங்கி & ஜானியை அவ்வளவு எளிதான மறக்க முடியுமா..?//

அதுக்குள்ளே 21 வருஷம் ஆச்சா...? அடக்கடவுளே :-(

முரளிகுமார் பத்மநாபன் said...

@ பென்
//உயிரைத் தேடி காமிக்ஸ் பற்றிய ஞாபகங்களை கொண்டு வந்ததற்காக நன்றி. தொண்ணூறுகளின் ஆரம்ப காலத்தில் வந்த இத்தொடரை மறக்க முடியுமா? இதன் ஒரிஜினல் ஆங்கில பதிவின் பெயர் தெரியுமா? இணையத்தில் இருந்து இறக்கியே தீருவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.//

தலைவரே! அப்படியே ஆங்கிலப் படுத்திய மாதிரியே இருக்குமென்பது என் நினைவு, லைக் சர்ச்சிங் போர் லைவ்ஸ் இப்படி... சரியா நியாபகம இல்லை. :-(

முரளிகுமார் பத்மநாபன் said...

@உலவு
நன்றி உலவு, கட்டாயம் பாருங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

@வண்ணத்துபூச்சி
//முரளி, நள்ளிரவில் குறுஞ்செய்தி பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இன்ன்னும் படம் பார்க்கவில்லை. இந்த வாரம் பார்க்க வேண்டும்.//
அண்ணா....நல்லா இருக்கிங்களா? பாருங்க அப்புறம் பேசலாம்... :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ அன்புடன் அருணா
''உயிரைத்தேடி படிச்சுருக்கேனே!!!!படம் பார்க்கணும் போலிருக்கு!//
தயவுசெய்து பாருங்க
:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ திருநாவுக்கரசு பழனிசாமி
//"inseption" rocking movie..master piece of nolan. i cant dream this night, brilliant movie of the year//

முரளி எங்கயோ இத படிச்ச மாதிரி இருக்கா..நீங்க நைட் 1 மணிக்கு அனுப்பின குறுந்தகவல்தான்...//


என் பிட்டு எனக்கேவா? ரைட்டு. இன்னிக்கு போலாமா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@ அன்பரசன்
பாருங்க நண்பா... ரொம்ப நல்ல படம்.

கலகலப்ரியா said...

அசத்தல் ஆரம்பம் முரளி... ம்ம்... பார்த்துட்டு சொல்றேன்..

கோபிநாத் said...

ரைட்டு..தல நானும் ரோசையில் இருந்தேன்...முடிவு சொல்லிட்டிங்கல்ல பார்த்துடுவோம் ;)

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்கள் எக்ஸைட்மெண்ட் எழுத்தில் தெரிகிறது. என்ன பண்றது? எப்பவாவது நாம் முழுமையாக ரசித்திருக்கும்படியாகவும் இப்படி படத்தை எடுத்துத் தொலைத்துவிடுறான்கள்.!

அப்புறம் காக்கா கதைக்கு இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

@பூந்தளிர்,

உயிரைத்தேடி இரண்டாவது முறை வெளியிடப்பட்டதாகவும் ஒரு நினைவு. இவர் ரெண்டாவது பேட்ச்சாக இருப்பாரோ, முரளி நம் அளவுக்கு கிழபோல்டு இல்லையே.. என சொல்லவந்தேன். அதற்குள் அவரே மாட்டிக்கொண்டுவிட்டார்.

இளங்கோ said...

படம் பார்த்து விட்டு பிறகு வருகிறேன்... :)

Anonymous said...

படத்தின் துவக்கத்தில் நாம் பார்த்த வயதான மனிதர் யார்? காப்பின் மனைவி இறந்தது எப்படி?

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ஸ்வேதா
// ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும் :)//
மிக்க நன்றி ஸ்வேதா, நான் அந்த தளத்திற்கு சென்றுவந்தேன், ஒன்னும் புரியலை :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@கலகலப்ரியா
//அசத்தல் ஆரம்பம் முரளி... ம்ம்... பார்த்துட்டு சொல்றேன்..//

பாருங்க ப்ரியா உங்க சுவாரஸ்யத்துக்கு நான் பொறுப்பு. :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபிநாத்
//ரைட்டு..தல நானும் ரோசையில் இருந்தேன்...முடிவு சொல்லிட்டிங்கல்ல பார்த்துடுவோம் ;)//

எந்த தோக்கமும் யோசனையும் வேண்டாம், போயிட்டே இருங்க.... :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

ஆதிமூலகிருஷ்ணன்
//உங்கள் எக்ஸைட்மெண்ட் எழுத்தில் தெரிகிறது. என்ன பண்றது? எப்பவாவது நாம் முழுமையாக ரசித்திருக்கும்படியாகவும் இப்படி படத்தை எடுத்துத் தொலைத்துவிடுறான்கள்.!
அப்புறம் காக்கா கதைக்கு இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.//

அவசியம் படம் பாருங்கண்ணா, கலக்கிட்டான் பயபுள்ள

//@பூந்தளிர்,

உயிரைத்தேடி இரண்டாவது முறை வெளியிடப்பட்டதாகவும் ஒரு நினைவு. இவர் ரெண்டாவது பேட்ச்சாக இருப்பாரோ, முரளி நம் அளவுக்கு கிழபோல்டு இல்லையே.. என சொல்லவந்தேன். அதற்குள் அவரே மாட்டிக்கொண்டுவிட்டார்.//

போன பதிவுல ஆதியண்ணா காப்பாத்துங்கன்னு சொன்னா இந்த பதிவுக்கு லேட்டா வந்ததுமிலாம என்னையே கும்முறிங்களா? ரைட்டு அட்டாக் பண்ணிட்டிங்கள்ள போயிட்டே இருங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

@ இளங்கோ
//படம் பார்த்து விட்டு பிறகு வருகிறேன்... :)//
இளங்கோ படம் பார்த்துட்டு கூப்பிடுங்க பேசலாம். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

Anonymous said...
//படத்தின் துவக்கத்தில் நாம் பார்த்த வயதான மனிதர் யார்? காப்பின் மனைவி இறந்தது எப்படி?//
ஸைடோ தான் அந்த வயதான மனிதர், காபின் மூளையில் ஐடியாவை பதிக்கும் திட்டத்தில் பாதிக்கப்பட்ட அவன் மனைவி நிஜ உலகையும் கனவென்று நினைத்து தற்கொலை செய்து கொள்வதன் மூலம் உண்மையான நிஜமான உலகை அடைய முடியும், கணவன் குழந்தைகளோடு வழ முடியுமென நினைக்கிறாள், அதன் விளைவாக தற்கொலையும் செய்து கொண்டு இறந்துபோகிறாள்.
மெயில ஐடியை மெயில் பண்ணுங்க தேவைஎன்றால் பேசலாம். :-)
இதை புரியிற மாதிரி எழுதுவது கடினம், அதுதான் ஆச்சரியமும் கூட, எப்படி இந்த மனிதன் இந்த ஸ்கிரிப்ட்டை எழுதியிருப்பார் என்று? :-))

☼ வெயிலான் said...

2 தடவை படம் பார்த்துட்டு அன்றிரவே எல்லோருக்கும் குறுஞ்செய்தி / விமர்சனம்.

இது உனக்கே நியாயமாத் தெரியுதாய்யா?

ஹாலிவுட் பாலா said...

//இல்லை இதே மனுஷன் ஒரு தொடர்பதிவு எழுதுவார்//

இன்னும் எம்புட்டு பேர் கிளம்பியிருக்கீங்க??? :) :)

தல.. வீடு மாறிகிட்டு இருக்கறனால.. இன்னும் 1 வாரம் பார்க்க வழியில்லை. பார்த்தாலும்.. ‘அவதார்’ மாதிரி.. எல்லோரும் இன்ச் இன்ச்சா எழுதி தள்ளிட்டாங்க. இந்த முறை எக்ஸ்ட்ராவா ஜெய் வேற சேர்ந்துகிட்டாரு.

இனிமே என்னத்தை எழுதி..... ???

=====

ஷண்முகப்ரியன் சாரோட அருந்ததி பதிவு மாதிரியே உங்களோட இந்தப் பதிவும் பிடிச்சிருந்தது தல!!

கார்க்கி said...

ம்..

நோலன் கூட இம்புட்டு குஷியாயிருப்பாரான்னு தெரில

SurveySan said...

///இன்னொன்னு எப்படி இதை நடிகர்களுக்கு புரியவைத்து அவர்களிடம் அந்த நடிப்பை வாங்கியிருப்பார்?///

leonardoவுக்கே கதை புரியலையாம் ஷூட்டிங் முடிந்து ரஷ் பார்க்கும் வரை. :)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.