பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்........... ஒரு தொடர்பதிவு1)வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
            அன்பேசிவம்

2)அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
            என் பெயர் முரளிகுமார், வலைப்பதிவிற்காக அன்பேசிவம் என்கிற பெயரில் எழுதுகிறேன். கடிதங்களிலோ மின்னஞ்சல்களிலோ கையெழுத்திடும் முன்பு அன்பேசிவம் என்று எழுதி கையெழுத்திடும் பழக்கம் பல வருடங்களாகவே எனக்கு இருந்து வரும் பழக்கம்தான். (குறிப்பு: இது அன்பேசிவம் படம் வருவதற்கு முன்பிருந்தே, தில் படம் பார்த்துட்டு ஜிம்முக்கு போகிற பழக்கமில்லை இது. :-)) ஆக வலைப்பதிவு ஆரம்பித்ததும் பெயர் ஒன்று வைக்க வேண்டும் என்றதும் என்னுடைய ஒரே சாய்ஸ் “அன்பேசிவம்”.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
     இதை பெரிய நிகழ்வாக சொல்ல எதுவுமில்லை, ஆரம்ப காலங்களில் என்னுடைய சொந்தமான நாட்குறிப்பு போல எழுத் தொடங்கியதுதான். தொடர்ந்து வந்த ஊக்கமும், நட்புமே இன்னமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன்.
  
4)உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
            தனியா எதுவும் செய்யவில்லை, தொடர்ந்து இயங்குவதும், இலகுவான நடையும் நிறைய பேரைச் சென்றடையும். அதுதான் பிரபலம்ன்னு நினைக்கிறேன்.
     மொழி படத்தில் ஒரு காட்சி, ஜோதிகா, ப்ரித்விராஜிடம் நீ கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு எப்படியிருக்கனும்ன்னு ஆசைப்படுறன்னு கேட்பாங்க, அதுக்கு ப்ரித்வி “நல்லா படிச்ச பொண்ணா இருக்கனும், தைரியமான பொண்ணா இருக்கனும், எதையும் சுயமா சிந்திக்க தெரிஞ்ச பொண்ணா இருக்கனும்ன்னு சொல்வார், மறுபடியும் அப்ப அழகா இருக்கனும்ங்கிறது அவசியமில்லையான்னு கேட்பாங்க. அதுக்கு “நான் சொல்ற இந்த மூணும் இருந்தா அந்த பொண்ணு நிச்சயம் அழகாத்தான் இருப்பான்னு சொல்வார்.
     அது மாதிரி யதார்த்தமான எழுத்து, சிறுதேனும் சுவாரஸ்யம், சுயமாக சிந்தித்து தொடர்ந்து எழுதுவது போன்ற அடிப்படை தகுதிகள் நிச்சயம் பிரலம் என்கிற அடைமொழிக்கு வழிவகுக்கும்.

5)வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
     ஆம், சினிமா அறிமுகம், புத்தக அறிமுகம் தவிர்த்து மற்ற அனைத்து விடயங்களுமே என சொந்த மற்றும் சார்ந்த விடயங்களே. ஏனெனில் சிந்தித்து கற்பனையான நிகழ்வுகளை சுவைபட எழுதுவது சிரமம். என்னைப் பொருத்தவரை. ஆகவே என் சார்ந்த சுவையான நிகழ்வுகளையே தொடர்ந்து சில கற்பனை கூட்டல்களோடு எழுதிவருகிறேன்.
     விளைவு : இதுக்கு என்ன பதில் சொல்வது. எல்லாம் நல்லதுக்குத்தான்.
  
6)நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
     நிச்சயமாக பொழுதுபோக்கிற்காக இல்லை, ஏனெனில் சிலபல நேரங்களில் தவறு என்று தெரிந்திருந்தும் வேலையை விட்டுவிட்டு எழுதியிருக்கிறேன். ஆக நிச்சயம் இது ஒரு பொழுதுபோக்கு இல்லை. பதிவெழுதுவதன் மூலம் சம்பாதிக்க எழுதவில்லை, ஆனால் சம்பாதிக்க முடிந்தால் அதுவும் மகிழ்சியே.


7)நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
     இரண்டு பதிவுகள், ஒன்று அன்பேசிவம் மற்றொன்று புகைப்படம், இரண்டுமே தமிழில்தான்.

 8)மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
     கோபம், இதுவரை இல்லை, என்னைவிட நல்லா எழுதுற எல்லோரையும், எப்படி இப்படியெல்லாம் எழுதுறாங்கன்னு நிறைய முறை ஆச்சர்யங்களோடு பார்த்திருக்கிறேன்.
     பொறாமை, அது வண்டி வண்டியா இருக்கு. குறிப்பா சொல்லனும்ன்னா, இன்னைக்கி எழுத ஒண்ணுமில்லைன்னு ஒரு வரி எழுதினா, ஏன்?ன்னு கேட்டு ஒரு நூறு பின்னூட்டம் வருமே அப்போவெல்லாம் கேபிள், ஆதிண்ணா, கார்க்கி, பரிசல் இன்னும் இப்படி நிறைய பேர் மேல பொறாமையா இருக்கும். :-)


9)உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாரட்டைப் பற்றி..
     முன்னமே சொன்னதுபோல ஒரு முறை அலுவல் நிமித்தமாய் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிய போது அதில் என் கையொப்பதின் மேலே என் வலைப்பதிவின் சுட்டி கொடுத்திருந்தேன். அதை பார்த்து, படித்து என்னை நேரிலும் சந்தித்து, பரவாயில்லையே முரளி நிறைய எழுதியிருக்கிங்க, உங்க எழுத்துல ஒரு மினிமம் ஸ்டேண்டர்ட் இருக்கு. தொடர்ந்து எழுதி வருவதன் முதிர்ச்சி எழுத்தில் தெரிகிறதுஎன்று பாராட்டிவிட்டு சென்றார். அவர்தான் என்னை முதன்முதலில் தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர், இன்றளவும் தொடர்ந்து வாசித்து நிறை குறைகளை சுட்டிக்காட்டியும் வருகிறார்.

10)கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
     கிடைக்கும் இடத்திலெல்லாம் தன்னை இட்டு நிரப்பிக்கொள்ளும் காற்றைப்போல, மனதில் இருக்கும் இடமெங்கும் அன்பை இட்டு நிறைக்க நினைக்கும், ஒரு சாதாரணமானவன்.
     

இது ஒரு தொடர்பதிவு, நண்பர் பாலாசியின் அழைப்பில் இதை எழுதியிருக்கிறேன், எத்தனை பேரை அழைக்கலாமென்று தெரியவில்லை, இவர்களின் பதிலை தெரிந்துகொள்ள ஆர்வமாயிருக்கிறேன், ஆகவே இதன் தொடர்ச்சியாய் நான் அழைக்கும் இருவர்.


19 கருத்துரைகள்:

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றீ... வாழ்த்துக்கள்

ஆதவா said...

இந்த மாதிரியான தொடர்பதிவுகள் மூலம் பதிவர்களின் உள்ளக்கிடங்கைத் திறந்து தெரிந்து கொள்ளலாம்!! உங்களைப்பற்றீயும்....

தொடரவைத்தமைக்கும் நன்றி!

மோகன் குமார் said...

இதிலும் பொண்ணு பாக்கிற சீன் வருது. முரளி அம்மா கவனிக்கவும்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

முரளி அழைப்பிற்கு நன்றி

கோபிநாத் said...

\\கிடைக்கும் இடத்திலெல்லாம் தன்னை இட்டு நிரப்பிக்கொள்ளும் காற்றைப்போல, மனதில் இருக்கும் இடமெங்கும் அன்பை இட்டு நிறைக்க நினைக்கும், ஒரு சாதாரணமானவன்\\

அட அட கலக்குறிங்க தல ;)

க.பாலாசி said...

காலமே கண்டேன் நண்பரே... பொறுமையா நிதானமான பதில்களை தந்திருக்கீங்க....

கலகலப்ரியா said...

ஓ... இதுக்கு இப்டி பொறுப்பா பதில் போடனுமோ... என் கிட்ட யாரும் சொல்லலை... அவ்வ்வ்...

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்று..:-))))))))

☼ வெயிலான் said...

கடைசி வரைக்கும் எப்படிப்பட்டவன்னு சொல்லவே இல்லியே.... முரளி!

முரளிகுமார் பத்மநாபன் said...

@மதுரை சரவணன்,
நன்றி நண்பரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதவா
ஆம்,ஆதவா அதை தெரிந்து கொள்ளத்தான் உங்களையும் இழுத்துவிட்டிருக்கிறேன். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@மோகன் குமார்
தலைவரே! ஏன் இப்புடி? :-)
அடுத்த கிறுக்கலும் கல்யாணம் சார்ந்த ஒன்றுதான், ஹி ஹி ஹி

முரளிகுமார் பத்மநாபன் said...

@ திரு
கமான் திரு கன்டினியு பண்ணுங்க
--

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபிநாத்
வர வர நீங்க பாரட்டுரிங்களா ? கலாயக்கிரிங்களான்னே தெரிய மாட்டேங்குது.. ஹும்ம்ம் என்னவோ போங்க ...:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ பாலாசி
ஆமா நண்பா, இரண்டு வாரங்களாக வேறொரு மனநிலையில் இருந்ததால் எதிலும் தொடர்பிலிருக்க முடியவில்லை. :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கலகலப்ரியா
//என் கிட்ட யாரும் சொல்லலை... அவ்வ்வ்..//
சொல்லிட்டாலும்....... இவங்க செஞ்சிட்டாலும் ....அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்த்திகை பாண்டியன்
தேங்க்ஸ் தலைவரே! நல்லா இருக்கியளா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@ வெயிலான்
தல, தலைப்பு வச்சா அனுபவிக்கனும் இப்படி ஆராயக்கூடாது.. சரியா...
ஆமால்ல இத்தனை கேள்விகளிலேயும் நான் எப்படின்னும் சொல்லவே இல்லை.
ஆமாவா? இல்லையான்னு அடுத்த கேள்வி கேக்காதிங்க... :-))

ஆதிமூலகிருஷ்ணன் said...

அழகிய பதில்கள்.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.