சொந்த செலவில் சூனியம்

எந்த படம் வந்தாலும் வெள்ளிக்கிழமைகளில் அந்த படங்களைத் தவறவிட்டதே கிடையாது “நாங்கள்“. இந்த நாங்கள் என்பது ஒரு கூட்டணி. எதாவது ஒரு மொக்கைப் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது “நாங்களில்யாரவது ஒருத்தன் இப்படி ஆரம்பிப்பான். டேய், மாப்ள. இனி கொஞ்சம் வெயிட் பண்ணி படம் பார்க்கலாம்டா.... முடியலை கொலையா கொல்றானுங்க...கடைசியா ஒருத்தன் இப்படி முடிப்பான் “நாம யாருக்கு என்ன பாவம் செஞ்சோம், நமக்கு மட்டும் ஏன் இப்படின்னு.

ஆனா எல்லாருக்குமே தெரியும் நாங்க என்ன பாவம், பண்ணோம், பண்றோம், பன்ணப்போறோம்ன்னு. வெள்ளிக்கிழமைகளின் காலையிலேயே கேபிள்சங்கர் மாதிரியான புண்ணியவான்களின் விமர்சனங்களை படித்தவர்களோ, எங்களைப்போன்றே சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டவர்களோ எங்கள் மீதிருக்கும் மிகைப்பட்ட அன்பின் காரணமாக(?) எவ்வளவோ எடுத்துச் சொல்லுவார்கள். “போன படமாவது பரவாயில்லை, வெறும் கொலை மட்டும்தான் பண்ணாங்க, இந்த படத்துல கொடுமை படுத்தி கொலை பண்ணுறானுகடா, படம் மரண மொக்கைஅப்படின்னு எச்சரிக்கை கலந்த அறிவுரை சொல்வார்கள். 

ஊகும்... அதெல்லாம் எங்க மண்டையில ஏறியதே கிடையாது. டிக்கெட் செலவு, இடைவேளியில் பாப்கார்ன் உட்பட்ட நொறுகல்கள், போக வர பெட்ரொல் செலவு, இரவு காட்சி என்பதால், சப்பாடு,  இத்யாதி, இத்யாதி..... என அந்த  படத்தைப் பார்ப்பதற்கு ஒரு 500-600 ரூபாயை செலவு செய்துவிட்டு, அடுத்த நாள் காலைவரை கல் உடைப்பவனுக்கு மண்டையை வாடகைக்கு கொடுத்துவிட்டு, காலையில் அனாசின் மாத்திரைப் பொட்டுக்கொண்டு அட்வைஸ் பண்ணவன்கிட்ட சொல்லுவோம், “ஆமாண்டா மாப்ள, படம் மொக்கைதான்”, 

இது பாவம்தானங்க..... பாவம்ன்னு தெரிஞ்சும் ஏண்டா இதப்பண்றேன்னு கேட்குறிங்களா?

       எல்லா விசயத்திலும் எனக்கு ஒரு வெல்விஷரா, காட்பாதர் மாதிரி இருக்கிற இளங்கோவன் சார், செல்வராஜ் சார் இவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம் நான் செய்ற ஒரே பிரதி உதவி, இதுதான். சனிக்கிழமை காலைகளில் அவர்கள் போன் பண்ணி என்ன முரளி “என்ன படம் பார்க்கலாம்ன்னுகேட்கும்போது, எந்த படமும் வேண்டாம் சார், ஸ்டார் மூவிஸ்ல இன்னைக்கு கேஸ்ட் அவே  பொடறான் முடிஞ்சா அதைப்பாருங்கன்னு, அவங்களுக்கு ஒரு நல்ல வழியை காமிக்கவாவது, தெரிஞ்சே இந்த பாவத்தை செய்துட்டு வ்ரேன். எனக்கு இவங்க ரெண்டுபேர், அந்த மாதிரி “நாங்கள்“-ல ஒவ்வொருத்தருக்கும் சில பல ஆட்கள் இருப்பார்கள், அவர்களின் நலம் கருதி ஒரு பொதுத்தொண்டாகவே இதை செய்து வருகிறோம்.

       இப்படி நல்லா? போயிட்டிருந்த எங்க வாழ்க்கையில யார் கண்ணுபட்டதோ தெரியலை, ஒருத்தன் சொந்த ஊருக்கு போயிட்டான், இன்னொருத்தன் வேற ஒரு ஊருக்கு வேலைக்கு போயிட்டான், இன்னொருத்தன் மீள முடியாத தண்டனையாம் கல்யாணம் பண்ணிகிட்டாச்சு.. இன்னும் சிலர் விட்டாபோதும், பொழச்சிக்கலாம்ன்னு ஓடிட்டானுக... எது எப்படியோ முடிஞ்சா இன்னொரு “நாங்கள்“ கூட்டணி அமைப்பேன், அல்லது தனியாகவாவது என் பணியை தொடர்ந்து செய்வேன்.

       இத்தனை பில்டப் எதுக்குன்னா, அப்படி சமீபத்தில் இந்த திருப்பணியில் ஒரு உச்சகட்டமாய் கடந்த வெள்ளி, சனி இரண்டு நாட்களிலும் இரண்டு படங்களைப் பார்த்தோம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............

ஒண்ணு EXPANDABLES இன்னொண்ணு வம்சம். 

சில்வர்ஸ்டார் ஸ்டலோன், அர்னால்ட் இவங்களைப் பற்றிய ஒரு நல்ல பிம்பம் மனசுக்குள்ள இருக்குறவங்க இந்த படத்தை தயவு செய்து பார்த்திடாதிங்க, ரெண்டு கிழட்டு சிங்கமும் பாவமா இருக்கு படத்துல, அதுலயும் அர்னால்டை கூட சகிச்சிக்கலாம் ஏன்னா படத்துல எங்கயும் தன் உடலை, உடல் அழகை காட்ட முயற்ச்சிக்க வில்லை . ஆனா இந்த ஸ்டலோன், அடடடா... சிக்ஸ் பேக்கெல்லாம் காட்டுறேன்னுட்டு... தாங்க முடியலை. படத்துல பாதி ஸ்டண்ட்டு அனிமேஷன் மாதிரி இருக்கு, எதோ வீடியோ கேம் பாக்குற மாதிரி. கதையென்னன்னெலாம் கேள்வி கேட்டு மறுபடியும் டென்ஷன் ஆக்கிடாதிங்க.

அப்புறம் வம்சம்.. ஒரு நல்ல மவுத் டாக் இருக்கே, அதுவும் பசங்க பாண்டிராஜ் பசமாச்சேன்னு போனேன். அப்படியே ஒரு கிராமத்து திருவிழாவுக்குள்ள போன ஒரு பீலிங். என்னா நேட்டிவிட்டி, வட்டார வழக்கோடு வசனங்கள், இயல்பான ஜெய்பிரகாஷின் நடிப்பு, கேமிரா அப்படி பாராட்ட நிறைய இருந்தாலும் எனக்கு சத்தியமா புடிக்கலை. குறிப்பா அந்த கிராமிய திருவிழாவில் போடப்படும் பிட் பாடல்கள். படத்துல அதை மட்டும் தனியா தொகுத்தா 40 நிமிஷத்துக்கும் மேல வரும்போல.. அப்பப்பா என்னா சவுண்டு. நொந்து போற அளவுக்கு சவுண்ட குடுக்குறாங்க. திருவிழா பாக்கனும்ன்னா திருவிழாவுக்கே போயிக்குங்க, வம்சத்துக்கு வேண்டாம்ங்கிறதுதான் என் எண்ணம். படத்துல திருவிழாவில் எப்பாடு பட்டாலும் பிற்பாடு கெடாதவருக்கு முதல் மரியாதை செய்வாங்க, என்னோட முதல் மரியாதை “எப்பாடு பட்டேனும் இப்படம் பார்பவருக்குதான். அடுத்தமுறையாவது பசங்க மாதிரியான ஒரு நல்ல பேமிலி எண்டர்டெய்னரைக் கொடுக்க பாண்டிராஜ் அவர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள்.

இதில் முதல் படத்தைப்பற்றி அனேகமாக அனைவரும் ஒரே பார்வைதான் கொண்டுள்ளனர். இரண்டாவது படத்தைப் பற்றிய நிறைய மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்,  இது என் தனிப்பட்ட பார்வைதான், இது யாரோடும் ஒத்துப்போக வேண்டிய நிர்பந்தம் கிடையாது. ஆக விருப்பப்பட்டவர்கள் பாருங்கள், பார்த்துவிட்டு மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் பேசலாம். பின்னூட்டத்தில்......

இதர: வம்சம் படத்தில் பாடல்கள் எழுதியிருக்கும் ஏக்நாத் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

29 கருத்துரைகள்:

கார்த்திகைப் பாண்டியன் said...

தல.. இப்பதான் “எக்ஸ்பெண்டிபிள்ஸ்” பார்த்துட்டு வரேன்.. எனக்கு ஓகேதான்.. பழைய 80களின் படம் மாதிரி ஒரு பீலிங்க்..

அப்புறம் வம்சம், இனிமேல்தான் பார்க்கணும்..

கனிமொழி said...

நற்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா..!! ;)

பரிசல்காரன் said...

தப்பிச்சேண்டா சாமி!

கோபிநாத் said...

தல..நாங்கள் கூட்டணியின் கிளை கழகம் சென்னையில கூட இருக்கு தல ;))

\\எப்பாடு பட்டேனும் இப்படம் பார்பவருக்குதான்\\

இந்த மரியாதையை உங்க்கிட்ட எப்படியாச்சும் நாளைக்குள்ள வாங்கிடுவேன் தல ;)))

பரிசல்காரன் said...

தப்பிச்சேண்டா சாமீ!

அன்பரசன் said...

நாங்களும் உங்க கூட்டணிதான் தல

Cable Sankar said...

எப்பாடு படுத்தினாலும் எக்பாண்டபில்ஸ் பார்க்காதவர் நாங்களெலலாம்..:)

முன்னமே தெரியும். ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கே கதை பண்றதுக்கு முழி பிதுங்கும் இது இத்தனை பேர் இருந்தா ஆளாளுக்கு அவங்களோட அறிமுக காட்சி முடியறதுக்குள்ளே இண்டர்வெல் வந்திராது..

ர‌கு said...

The Expendables பார்த்தேன். ஒரு சில‌ ஆக்ஷ‌ன் காட்சிக‌ள் த‌விர்த்து..ப‌ட‌ம் சுமார்தான்.

அகல்விளக்கு said...

நற்பணியைத் தொடருங்கள் நண்பா....
:)

நானும் அதில் ஒரு பயளானியாக இருக்கிறேன்....

இளங்கோ said...

நல்ல வேளை.. ரெண்டு படமும் நான் பாக்கலை :)

திருநாவுக்கரசு பழனிசாமி said...

இந்த முறை " நாங்கள் " கூட்டணியில நல்ல வேலையா "நான்" இல்ல..(ஆனா சென்னை போய் அங்க ஒரு புது கூட்டணியில சேர்ந்து "நொந்துட்டேன்" ஆனா சென்னை நண்பர்கள் ரொம்ப நல்லவங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாங்க, டெய்லீ செகண்ட்ஷோதான்)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரசனைகள் மாறுபடலாம். ஹிஹி.. எனக்கு ரெண்டு படங்களுமே பிடித்திருந்தது.

வம்சம் பற்றி எழுதிவிட்டேன். எக்ஸ்பெண்டபிள்ஸ் நாளைக்கு எழுதறேன்.

அப்துல்காதர் said...

இந்த வாரம் எக்ஸ்பெண்டிபிள்ஸ் பார்க்கணும்னு பிளான்ல இருந்தேன்.. இப்ப யோசிக்கறேன்.. நல்லா எழுதியிருக்கீங்க..

நேரமிருக்கும் போது எனது பதிவையும் சென்று வாசியுங்கள்..
http://abdulkadher.blogspot.com

Kayelen said...

// மீள முடியாத தண்டனையாம் கல்யாணம்//
நமக்கும் தண்டனை உண்டு முரளி.!!
அதுலயும் தண்டனைக்கு அப்புறம் ரெண்டு பேறும் சேர்ந்து போய் சொந்த செலவில் சூனியம் வெச்சா எப்டி இருக்கும்..!!
எப்டியோ அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!!

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கார்த்திகை பாண்டியன்
//பழைய 80களின் படம் மாதிரி ஒரு பீலிங்கை டிவிடியில பார்த்துக்கலாமே.....ஓய தியேட்டர்?
வம்சம் பாருங்க பார்த்துட்டு சொல்லுங்க.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கனிமொழி

முரளிகுமார் பத்மநாபன் said...

பரிசல், தல இந்த அப்பாடா மொதலுக்கா? கடேசிக்கா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கோபி
//தல..நாங்கள் கூட்டணியின் கிளை கழகம் சென்னையில கூட இருக்கு தல ;)) //
இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
//இந்த மரியாதையை உங்க்கிட்ட எப்படியாச்சும் நாளைக்குள்ள வாங்கிடுவேன் தல ;)))//
கோபி, சூப்பர் உங்க கடமை உணர்ச்சியை நான் பெரிதும் மதிக்கிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கேபிள் சங்கர்
//முன்னமே தெரியும்.இது இத்தனை பேர் இருந்தா ஆளாளுக்கு அவங்களோட அறிமுக காட்சி முடியறதுக்குள்ளே இண்டர்வெல் வந்திராது.//

இல்லை தல கிட்டத்தட்ட எல்லாரையும் ஒரே காட்சியிலேயே அறிமுகம் செய்யிறாங்க, ஆனாலும்படம் மொக்கைதான் :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்பரசன்
இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ரகு
//The Expendables பார்த்தேன். ஒரு சில‌ ஆக்ஷ‌ன் காட்சிக‌ள் த‌விர்த்து..ப‌ட‌ம் சுமார்தான்.//
ஏன் தல சுமார்தான்னு கதை உடுறிங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

@அகல்விளக்கு
//நற்பணியைத் தொடருங்கள் நண்பா....நானும் அதில் ஒரு பயளானியாக இருக்கிறேன்....Delete
ம்ம்ம் ரைட்டு ராஜா

முரளிகுமார் பத்மநாபன் said...

@ இளங்கோ
//நல்ல வேளை.. ரெண்டு படமும் நான் பாக்கலை //
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை யாளங்கோ படம் பாருங்க பார்த்துட்டு சொல்லுங்க, யாம் பெற்ற இன்பம் :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

Blogger@ திருநாவுக்கரசு பழனிசாமி
/இந்த முறை " நாங்கள் " கூட்டணியில நல்ல வேலையா "நான்" இல்ல..(ஆனா சென்னை போய் அங்க ஒரு புது கூட்டணியில சேர்ந்து "நொந்துட்டேன்" ஆனா சென்னை நண்பர்கள் ரொம்ப நல்லவங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாங்க, டெய்லீ செகண்ட்ஷோதான்)//
டெய்லீயுமா......... ?? சுத்தம் ..:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

Delete

Blogger ஆதிமூலகிருஷ்ணன்
ரசனைகள் மாறுபடலாம். ஹிஹி.. எனக்கு ரெண்டு படங்களுமே பிடித்திருந்தது. வம்சம் பற்றி எழுதிவிட்டேன். எக்ஸ்பெண்டபிள்ஸ் நாளைக்கு எழுதறேன்.
//அண்ணா, ரைட்டு வர வர மனசாட்சியை கழட்டி வச்சிட்டு எழுத உட்காறிங்கன்னு நினைக்கிறேன். ஹி ஹி ஹி ...:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@Blogger அப்துல்காதர்
இந்த வாரம் எக்ஸ்பெண்டிபிள்ஸ் பார்க்கணும்னு பிளான்ல இருந்தேன்.. இப்ப யோசிக்கறேன்.. நல்லா எழுதியிருக்கீங்க..நேரமிருக்கும் போது எனது பதிவையும் சென்று வாசியுங்கள்..http://abdulkadher.blogspot.கம
// நன்றி காதற், அவசியம் வாசிக்கிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

Blogger@ Kayelen
// மீள முடியாத தண்டனையாம் கல்யாணம்//நமக்கும் தண்டனை உண்டு முரளி.!!அதுலயும் தண்டனைக்கு அப்புறம் ரெண்டு பேறும் சேர்ந்து போய் சொந்த செலவில் சூனியம் வெச்சா எப்டி இருக்கும்..!!எப்டியோ அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!!

//நமக்கும் தண்டனை உண்டு// நமக்குமா. ?
ஹே ஹே அதெல்லாம் உங்களை மாதிரி ஆளுகளுக்கு நடக்கும், நாங்கல்லாம் வரம் வாங்கி வந்தவர்கள்...:-)

எம்.எம்.அப்துல்லா said...

//வம்சம் படத்தில் பாடல்கள் எழுதியிருக்கும் ஏக்நாத் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

//

அந்த ஏக்நாத் வேறு யாரும் இல்லை, நம்ம பதிவர் ஆடுமாடுதான் அவர் :)

butterfly Surya said...

பகிர்வுக்கு நன்றி.|| தப்பிச்சேன்.

வம்சம் பார்க்கணும்.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.