கிறுக்கலிருந்து கவிதைக்கு.........


சில சமயங்களில் நான் எழுதியதை திரும்ப வாசிக்கும் போது என் எழுத்துக்களுக்கு பரிசாய் சிரிப்பைத் தவிர வெறொன்றும் கொடுத்துக்கொள்ள முடியாது. அப்படியிருக்கையில் பொறுமையாக இவ்வளவையும் சகித்து வாசித்து,தொடர்ந்து என்னை கைதட்டி, கைகொடுத்துவரும் என் பதிவுலக நண்பர்கள் அனைவரோடும் என் மகிழ்ச்சியை பங்கிட்டுக்கொள்கிறேன்.
            இன்னும் பெருகுமென்ற பேராசையுடன்.
                சுஜாதா, எஸ்.ரா, மதன், க.சீ.சிவகுமார் இப்படி யாரையெல்லாம் பார்த்து பார்த்து, அவர்களின் கரம் பிடித்து வாசிக்கவும் பின் எழுதவும் அடியெடுத்து வைத்தேனோ, அவர்கள் அனைவரும் எழுதிய புத்தகம், ஆனந்த விகடன். இன்று என்னுடைய இரு கிறுக்கல்கள், சொல்வனத்தில் கவிதையாய் அச்சேறியிருக்கிறது. இதை வெறுமனவே மகிழ்ச்சியாயிருக்கிறது என்று சொல்ல முடியாது. என்னைப் புரிந்து கொண்டவர்களால் என்னுடைய இந்த உணர்வையும் புரிந்துகொள்ள முடியுமெனெ நம்புகிறேன்.

             எனக்கும் கவிதைக்குமான இடைவெளி குறைந்து வருகிறதோ அன்றி நான், என்னால் கவிதைகள் எழுத முடியுமென்று ஒருபோது நினைத்ததில்லை. வண்ணதாசனின் கவிதைகளை படித்தது முதலே கவிதைகள் மீது எனக்கிருந்த தூரம் விலகியது. முதன்முதலில் கவிதை என்று ஒன்றை எழுதியபோது அது அந்த அந்தஸ்த்தை அடைய இன்னும் நிறைய பிரயத்தணப்பட வேண்டுமென்பது விளங்கியது. ஆகவே கிறுக்கல்கள் என்ற பெயரிலியே தொடர்ந்து கிறுக்கிக்கொண்டிருந்தேன். சில சமயங்களில் நண்பர்கள்  என்னடா இது? எங்களுக்கு கவிதைன்னா என்னன்னு தெரியாதுங்கிறதால நீ எழுதுறதையெல்லாம் கவிதைன்னுக்குவியா? என்று மனமுவந்து பாராட்டியிருக்கிறார்கள். (எவ்ளோ கேவலமா திட்டினாலும் நாங்க அதை பாராட்டாவே நினைச்சிப்போம், ஹி ஹி ஹி...நம்ம பாஸிட்டிவ் ஆட்டிடியூடுக்கு இதெல்லாம் உதாரணம்). இந்த பாராட்டுகள் என் கவிதை ஆசையை இன்னும் ஆழத்திற்கு கொண்டு போய்க்கொண்டேயிருக்கும்.


            ஆனாலும், அவ்வப்போது என்னையுமறியாமல் வந்துவிடுகிற சில நல்ல எழுத்துக்கள், அந்த கவிதை ஆசையை தூர் வாறிக்கொண்டே இருக்கிறது. அதுமாதிரியான ஒரு தூர்வாறல்தான், பதிவுலக அண்ணன்கள் நடத்திய உரையாடல் கவிதைப்போட்டியில் பரிசு பெற்றதும் இப்போது ஆனந்தவிகடனில் வந்திருப்பதும்.
     
     நான் மிகுந்த மகிழ்ச்சியோடிருக்கிறேன், உங்களுக்கும் சொந்தமானதுதான் இந்த சந்தோஷம், மகிழ்ச்சியே பங்கிடுவதில்தானே இருக்கிறது. :-)

விகடனில் வெளிவந்த இரு கிறுக்கல்கள்
1.பிரம்மச்சர்யம்
 வியாபாரம்,
அலுவல் நிமித்தமான சந்திப்புகள்,
அதன் பிந்தய எரிச்சல்,
ஆலோசனை,
அடுக்கடுக்காய்ப் பொய்கள்,
பணத்திற்காக சீரளியும் தன்மானம்
மானத்திற்காக விலைபோகும் லாபம்,
கழிவறைவரை துரத்தும் 
கடன்காரர்களின் கேள்விகள்
நேரம்கெட்ட சாப்பாடு,
ஆகாரத்திற்கு முன் பின்னென 
வேளைக்கு இரண்டு மணிநேர 
தொலைபேசி உரையாடல்கள்,
இவை அனைத்துக்குமிடையே
வரும் அம்மாவின் போன்.

நம்ம ஊர்தாண்டா,
பார்க்கவும் லட்சணமா இருக்கா,
காலேஜ் படிச்சிருக்காளாம்.......
அம்மா முடிக்கும்முன்
இப்ப இது ஒண்ணுதான் குறைச்சல்,
போனை வைம்மா
எனும் கடுமையான வார்த்தைகளில்
தொடர்பற்றுப் போகும்
அம்மாவின் குரல்.

நித்திரையற்ற இரவில் 
புரண்டு படுக்கும் தனிமையில் 
இறுக பற்றிய தலையணையினூடே
லட்சமாண பெண் என்றால்
எப்படியிருப்பாளென
யோசிக்கத் தொடங்கியிருந்தேன்.


2.அர்த்தமற்றுப் போகும் அன்பு.

"வரும்போது அச்சு முறுக்கு வாங்கியாப்பா" 
என்ற மகளின் நினைப்புத்தட்ட
சட்டைப்பைகளில் 
துழாவியெடுத்த சில்லறைகளை 
உள்ளங்கையில் கொட்டி 
மூணுமூணரை என்று எண்ணும்
நேரம்பார்த்து வருகிறது 
"சாப்ட்டு ரெண்டு நாளாச்சுண்ணா"
என்கிற  ரோட்டோர சிறுமியின் குரல்.

காகித பொட்டலத்தைப் பிரித்து
இரண்டு முறுக்குகளையும் எடுத்துக்கொண்டு
நடுவாசலில் அமர்ந்துகொண்டு 
நாய்க்கு பலிப்பு காட்டியபடி 
தின்கிறதுகுழந்தை.

மனசு நிறைந்து 
மகிழ்ச்சி உதட்டில் பூக்கும்போது 
தற்செயலாய் வந்து போனது,
"இந்த நாளும் கடந்துபோனால் 
மூணு நாள் ஆகிப்போகும் அந்தச் சிறுமிக்கு"
என்கிற  நினைப்பு
அப்படியே அர்த்தமற்றுப் போகிறது 
என் அன்பு.

58 கருத்துரைகள்:

முரளிகுமார் பத்மநாபன் said...

மோகன்குமார் மற்றும் விக்கி அவர்களின் “முரளி, அம்மா, கல்யாணம், அண்ணி” தொடர்பான பின்னூட்டங்கள் மட்டறுக்கப்படுகின்றன.

Cable Sankar said...

murali.. நான் காலையிலே உங்களுக்கு போன் செய்யணும்னு நினைச்சேன். வாழ்த்துக்கள். அதுவும் ரெண்டு கவிதை.. சூப்பர்.. மேலும் பல படைப்புகள் வெளிவர வேண்டும் உங்களிடமிருந்து

இளங்கோ said...

வாழ்த்துக்கள் முரளி..
அடுத்த அழகான கவிதைகளுக்கு காத்திருக்கிறோம்..

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் முரளி

முதல் கவிதை அனுபவித்தவர்களுக்கு மிக பிடிக்கும் எனக்கு பிடித்தது

மோகன் குமார் said...

விகடனில் பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துக்கள் முரளி; கவிதைகளில் உங்கள் மனசு தெரிகிறது

மோகன் குமார் said...

தங்கள் பின்னூட்டமும் ரசித்தேன். அவ்ளோ பயமா??ம்ம்ம்...இருக்கட்டும்

க.பாலாசி said...

அருமையான இரு படைப்புகள். தாக்கம் தணிய கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டேன்.

நாமறிந்த பெயர்களை ஊடகத்தில் பார்க்கும்பொழுது வரும் மகிழ்ச்சி அலாதியானது. அதுபோல்தான் நேற்றும் உணர்ந்தேன்.

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள் முரளி

கார்க்கி said...

வாழ்த்துகள் சகா..

ஒரு டவுட்டு.. தப்பா நினைக்க மாட்டிங்கன்னு

//அனைத்துக்குமிடையேவரும் அம்மாவின் போன்.//

//தொடர்பற்றுப் போகும்அம்மாவின் குரல்//

வரும், போகும் என்ற வார்த்தைகளின் tenseம்

//யோசிக்கத் தொடங்கியிருந்தேன்.//
கடைசி வரியில் இந்த வார்த்தையும் ஒத்துவராதது போல் ஒரு ஃபீல்.

☼ வெயிலான் said...

மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்....... முரளி! ஆவியின் பக்கத்தையும் இணைக்கலாமே.

Arun Kumar. S said...

ரொம்ப சந்தோஷம் முரளி., எனது வாழ்த்துக்களும்!

Kayelen said...

பிரம்மச்சர்யம் முரளி

எங்களுக்கு சரியான நேரத்தில் பசிக்கு விருந்து போல கிறுக்கல்கள்.!
உங்களுக்கு இது விருது.!
அருமையான பிரம்மச்சர்யம்.!
கார்த்தி.

Anonymous said...

வாழ்த்துகள் அண்ணா

- அப்துல்லா.

அன்பரசன் said...

தல பிரமாதம் போங்க...
சொல்ல வார்த்தைகளே இல்ல...

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் தல ;-)))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கேபிள்
நன்றீ தலைவரே! கூப்பிடாட்டி என்ன, நீங்கதான் தொடர்ந்து வாசித்தும் விமர்சித்தும் வருகிறீர்களே!

அகல்விளக்கு said...

மிக்க மகிழ்ச்சி....

வாழ்த்துக்கள் நண்பா...

இன்னும் நிறைய படைப்புகளை எதிர்பார்க்கிறேன்... :)

முரளிகுமார் பத்மநாபன் said...

@இளங்கோ
தேங்க்ஸ் இளங்கோ, :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ப்ரியமுடன் வசந்த்
நன்றி நண்பா,
//முதல் கவிதை அனுபவித்தவர்களுக்கு மிக பிடிக்கும் எனக்கு பிடித்தது//

எது பிரம்மச்சரியமா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@மொகன்குமார்
ஹெ ஹே எப்புடி தலைவரே நாங்களே முந்திக்கிட்டம்ல.... :-)

விகடனில் வந்ததால் அம்மாவிற்கும் தெரிஞ்சிபோச்சு... :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ பாலாசி
உங்களைப் போன்ற நண்பர்களின் கரம்பிடித்துதான் இந்த உயரம் ஏறிவந்தேன். உங்கள் மகிழ்ச்சியே எனக்கும் :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@வானம்பாடிகள்
நன்றி சார்....
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்க்கி
//கடைசி வரியில் இந்த வார்த்தையும் ஒத்துவராதது போல் ஒரு ஃபீல்.//

சத்தியமா நான் இப்படியெல்லாம் யோசிக்கவேயில்லை சகா, ஒரு ஃப்லோல எழுதிட்டேன். :-))

தப்பா நினைக்க என்ன இருக்கு? நிறைகளைமட்டும் சொல்லுங்கன்னா பதிவுலகம் வேண்டாமே.. என்ன சகா?
:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@வெயிலான்
ஹே ஹே தல நாங்கதான் சொன்னம்ல...

முரளிகுமார் பத்மநாபன் said...

@அருண்
அருண், வெல்கம்.
புது பதிவு போட்டா லின்க் குடுங்க இல்லை ஃபாலோயர் விட்ஜெட்டை ஆட் பண்ணுங்க. இவ்ளோ எழுதியிருக்கிங்க, எனக்கு தெரியவேஇல்லை பாருங்க ..
:-(

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கார்த்தி
தேங்க்ஸ் கார்த்தி....
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ அப்துல்லா

அண்ணா வாங்கோ, படிச்சிங்களா?
:)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்பரசன்
மிக்க நன்றி அன்பரசன்....
:-) புத்தகத்தில் படித்தீர்களா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபிநாத்
தேங்க்ஸ் தல

பா.ராஜாராம் said...

ஆஹா!

முரளி, வாழ்த்துகள்!

இரண்டுமே ரொம்ப நல்லாருக்கு.

தலையணையினூடே//லட்சமாண// பெண்

திருத்திருங்க.

Anbe Sivam said...

vaazhthukkal thala...
thodarattum ungal payanam...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வாழ்த்துக்கள் முரளி...

பிரியமுடன் ரமேஷ் said...

வாழ்த்துக்கள் முரளி...உங்களது இரண்டு கவிதைகள் பிரசுரமாயிருக்கா....அருமை..அப்ப இரட்டை சந்தோசம்..இல்லீங்களா...இரண்டு கவிதையுமே அருமை.....இரண்டாவது மிகவும் அருமை...

vasan said...

முர‌ளி,
பொதுவாய் நட‌ந்த‌தை,பார்த்த‌தைத்
ம‌ன‌தில் நிறுத்தி, திருத்தி க‌விஞ‌னாவ‌‌து
க‌ல்லை க‌லையாக்கும் க‌லைஞ‌ன் போல்
க‌டின‌மாந்து தான்.

ஆதவா said...

வாழ்த்துக்கள் முரளிகுமார் பத்மநாபன்!! நமது திருப்பூரிலிருந்து அடுத்த பிரபலம் ரெடியாயாச்சு.... பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது!!

கவிதைகளிரண்டில் பிரம்மச்சரியம் கவிதை அபாரம். கடைசி புன்னகையை ரசிப்பது போல.... ஆணின் மனநிலை அதுதாங்க!!! இரண்டாவது கவிதை என்னை அவ்வளவாக கவரவில்லை எனினும் அது நன்றாக எழுதப்பட்டிருக்கிறது.

அன்புடன்
ஆதவா

இராமசாமி கண்ணண் said...

வாழ்த்துகள் முரளி :)

ஈரோடு கதிர் said...

கவிதைகள் வெகு சிறப்பு

வாழ்த்துகள் முரளி

Perry said...

"அர்த்தமற்ற அன்பு" நல்லா இருக்கு.
அடிச்சு ஆடுங்க, வாழ்த்துக்கள் நண்பா!

கனிமொழி said...

wowwww!!

Im sooooo happy nanba!!

All the very best...

வெகு விரைவில் சிறுகதைகளும் வெளிவரும்...

:))

ஜோதிஜி said...

சீரளியும்........சீரழியும்


ரொம்பவே ரசிக்க வைத்தது.

சாமிநாதனுக்கும் நன்றி.

க.மு.சுரேஷ் said...

மிகவும் அருமை முரளி..
வாழ்த்துக்கள்..
நான் உங்கள் பதிவை வாசிக்க வாய்ப்பு கிடைத்து.
நான்றி...

பத்மா said...

ரொம்ப சந்தோஷம் முரளி ..... திறமை எப்பவும் ஜெயிக்கும்

வைகறை said...

வாழ்த்துக்கள்! இரண்டு கவிதைகளும் அருமை, அதிலும் இரண்டாம் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!!

கண்ணகி said...

வாழ்த்துக்கள் முரளி...பிரம்மச்சர்யம் வெகு இயல்பு...

முரளிகுமார் பத்மநாபன் said...

@ அகல்விளக்கு
நன்றி நண்பா!

முரளிகுமார் பத்மநாபன் said...

@ பா.ராஜாராம்
//முரளி, வாழ்த்துகள்!

இரண்டுமே ரொம்ப நல்லாருக்கு.

தலையணையினூடே//லட்சமாண// பெண்

திருத்திருங்க//
மகாப்பா, எத்தனை ஆசிரியர் வந்தபோது என்னை திருத்திக்க முடியலை. ஆனால் அவசியம் முயற்சி செய்கிறேன். விரைவில் பிழையின்றி தட்டச்சுவேன்
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ அன்பேசிவம்
நன்றீ நண்பா!

முரளிகுமார் பத்மநாபன் said...

@ திரு
திரு, மிக்க நன்றி 

@பிரியமுடன் ரமேஷ்
ஆமாங்க ரமேஷ், ரெண்டாவது லட்டு திங்க ஆசையான்னு கேட்காமலேயே.....

முரளிகுமார் பத்மநாபன் said...

@வாசன்
கவிஞன் என்றெல்லாம் சொல்லாதிங்க தல,
அதற்கெல்லாம் இன்னும் போக வேண்டும், முதல்படியில் இருக்கிறேன். அவ்வளவுதான். 


@ஆதவா
// கவிதைகளிரண்டில் பிரம்மச்சரியம் கவிதை அபாரம். கடைசி புன்னகையை ரசிப்பது போல.... ஆணின் மனநிலை அதுதாங்க!!! இரண்டாவது கவிதை என்னை அவ்வளவாக கவரவில்லை எனினும் அது நன்றாக எழுதப்பட்டிருக்கிறது//

ஆதவா, நேரம் கிடைத்தால்விமர்சங்களை மெயிலிங்கள். உங்கள் அனுபவம் உதவும்.

kavin said...

அர்த்தமற்றுப் போகும் அன்பு நன்றாக இருக்கிறது. பிடித்திருக்கிறது.

முரளிகுமார் பத்மநாபன் said...

@இராமசாமி கண்ணன்
நன்றி தல

@ஈரோடு கதிர்
நன்றி தலைவரே!


@ பெரி
நன்றி நண்பா! நாம பேசலாம்.

@கனிமொழி
உங்கள் நம்பிக்கைக்கு நன்றி கனி

@ஜோதிஜி
வெல்கம், வெல்கம். திருத்திக்கிறேன்

@ க.மு.சுரேஷ்
நீங்க திருப்பூரா பாஸு, மெயில் பண்ணுங்க முதல் வேலையா....

@ பத்மா
பத்மா மேடம், :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ வைகறை
நன்றி நண்பரே!

@ கண்ணகி
நன்றி மேடம், இன்னைக்குதான் முதல் தடவை வறிங்களா?

@ கவின்
நன்றீ கவின் உடனடி வருகைக்கு

பிரியமுடன் பிரபு said...

கவிதை அருமை

♠ ராஜு ♠ said...

நல்லா இருந்தது முரளி.
வாழ்த்துகள்.

kavin said...

பட்டறை மிக பயனுள்ளதாக அமைந்திருந்தது . கலக்கல் தொடரட்டும்.- கவின்

வெண் புரவி said...

/இரவில் புரண்டு படுக்கும் தனிமையில் இறுக பற்றிய தலையணையினூடேலட்சமாண பெண் என்றால்எப்படியிருப்பாளெனயோசிக்கத் தொடங்கியிருந்தேன்/
நானும் இதே போன்றதொரு கணத்தை கடந்திருக்கிறேன்...
/இந்த நாளும் கடந்துபோனால் மூணு நாள் ஆகிப்போகும் அந்தச் சிறுமிக்கு"/-இதை படித்தவுடன் மனசு என்னவோ பண்ணுகிறது...

வாழ்த்துக்கள் முரளி...

இன்னும் நிறைய...
எங்கள் மனசு நிறைய..

cheena (சீனா) said...

அன்பின் முரளி - தாமதமான மறுமொழி
விகடன் செப்டம்பர் முதல் தேதியிட்ட இதழில் - கையில் கிடைத்த அன்றே படித்து விட்டேன். எழுத நேரமில்லை.

முரளி, அன்பு - கவிதை அருமை. தவிர்க்க இயலாமை. மகளா - கையேந்தும் சிறுமியா - மனத்தராசு மகள் பக்கம் சாய்கிறது. இயல்பு இது தான். சில்லறை எண்ணும் போது பற்றாக்குறை பாசத்தின் பக்கம் கை காட்டுகிறது. என்ன செய்வது.

சிந்தனை அருமை - பெரும்பாலானவர்கள் இப்படித்தான் தடுமாறுகிறார்கள்.

நல்வாழ்த்துகள் முரளி
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் முரளி

இரண்டாவது கவிதையான பிரம்மச்சர்யம்.

இதுதான் இண்றைய இளைஞனின் நிலை. வாழ்வினில் முன்னேற அவன் படும் பாடு - பெற்றோர்களிடம் பேசும் போது, மற்றவர்களிடம் காட்ட இயலாத எரிச்சல், கடுமை, மறுப்பு எல்லாம், உரிமையுடன் பெற்றோரிடம் அதுவும் அம்மாவிடம் காட்டப்படுகிறது. என்ன செய்வது.

பிறகு நல்ல மன நிலையில் இருக்கும் போது பெற்றோரின் சொற்கள் சிந்திக்க வைக்கின்ரண. ஆனால் காலம் கடந்து விடுகிறதே !

நல்ல சிந்தனையில் விளைந்த நற்கவிதை
நல்வாழ்த்துகள் முரளி
நட்புடன் சீனா

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.