செலுத்த இயலாத காணிக்கை

ஓரிரு வாரங்களுக்கு முன் சேர்தளம் சார்பில் கவிஞர் மகுடேஷ்வரன் அவர்களோடு ஒரு சந்திப்பு நடந்தது, கார்த்திகையையும் மார்கழியையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே நினைவூட்டும் விதமாக இருந்தது அந்த சந்திப்பு. ஆம், கார்த்திகையும் மார்கழியும் வந்தால் யாரெல்லாம் நினைவிற்கு வருவார்களோ, அவர்கள் அனைவரும் நினைவில் வந்துபோயினர். குறிப்பாக எங்கள் தமிழ் அய்யா. கதிர்வேல் அய்யா. காரணம், பேச்சினூடே மகுடேஷ்வரனும் அய்யாவின் மாணவர்தான் என்பதை அறிந்ததுதான்.(இரு மாணவர்கள்)


சந்திப்பினிடையே ஒரு கட்டத்தில் திரு.மகுடேஷ்வரன் ஒரு கேள்வியெழுப்பினார். இங்கு வந்துள்ளவர்களில் யாரெல்லாம் கவிதை எழுதுவிங்க, என்று. ஒரு சிலர் என்னையும் நோக்கி கைகளை திருப்ப, வெகு அலட்சியமாய், மகுடேஷ்வரன் சொல்கிறார், இவர் எழுதுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை, இவர் என் ஆசிரியரின் மாணவன், வேறு யாரெல்லாம் எழுதிவிங்க என்று. அவர் இது என் மீது வைத்த நம்பிக்கை அல்ல இது, என் ஆசிரியர் மீதுகொண்ட நம்பிக்கை.

எழுதுற எல்லாருக்கும் பின்னாடி ஒரு ஆசிரியர் இருப்பார்கள், எனக்கு கதிர்வேலு அய்யாவைப்போல. இதற்கு முன் அவர் பற்றி எழுதிய எந்த பதிவிலும் அவர் நடத்திய அந்த செய்யுளை குறிப்பிட்டது இல்லை, அது குற்றால குறவஞ்சி என்பதாக மட்டும் நினைவிருந்தது. ஈரோடு புத்தகத் திருவிழாவில் தேடி குற்றால குறவஞ்சியைத் தேடிப்பிடித்தேன்.

கைக்கெட்டும் உயரத்தில் பழுத்து வெடித்த பலாக்களையும், அதைப் பிய்த்து விளையாடும் குரங்குகளையும், தேவலோக ரதி, ரம்பைகளைப் போன்ற அழகுப் பெண்கள் பந்து விளையாடிக்கொண்டிருக்கும் தெருக்களையும், நெய்விளக்கு ஏற்றப்பட்ட கோலங்களையும், அருவியின் சாறல் எப்போதும் மழையாய் நனைக்கும் அந்த தெருக்களெங்கும் நிறைந்த கோலங்களையும், தேனடைகளிலிருந்து ஒழுகும் தேன் வெடித்த பலாவில் வழிந்து, ஒருவித சுகந்த நறுமணத்தை கமழக் கொண்டிருக்கும் அந்த வீதிகளை உள்ளடக்கிய அந்தப் பாடலை, பக்கம்பக்கமாகத் தேடினேன்.

என் நினைவிற்கெட்டிய வரையில் எனக்கு பாடப்புத்தகத்தில் வந்த அந்த ஒற்றைச் செய்யுள் இதுதான்.

முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும்
முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்

கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்

செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்

வழங்குகொடை மகராசர் குறும்பலவில் ஈசர்
வளம்பெருகும் திரிகூட மலை எங்கள் மலையே.

இதில் நான் தேடியவற்றில் ஒன்று மட்டும்தான் கிடைத்தது.  மாறாக பந்தடிக்கும் பெண்களையும், தேன் சொட்டும் பலாவையும் வெவ்வேறு பாடல்களில்தான் கண்டுகொள்ள முடிந்தது. ஆனால் அவர் எங்களுக்கு காட்டிய, சொல்லிக்கொடுத்த குற்றாலத்தில் இவை அனைத்துமே இருந்தது. ஒற்றைச் செய்யுளை கற்பிக்க அவர் கிட்டத்தட்ட மொத்த குறவஞ்சியையுமே எங்களுக்கு சொல்லியிருக்கிறார்.

அவர் பாடம் எடுத்ததில்லை. அதை அனுபவிக்கவே கற்றுக்கொடுத்திருந்தார். அவர் விவரிக்கும் அழகு எங்களை பாடத்தில் ஈர்ப்பு கொள்ளச் செய்யும். நான் கிறுக்கல்களில் பெரிய பெரியப் பத்திகளை எழுதும் போது நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள், இதற்கு இத்தனை விவரணைகள் தேவையா? என. இப்போது புரியலாம் தவறு என்னுடையதல்ல என்று. :-).  அது நான் என் ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட பாடம்,
வாழ்க்கையில நான் எடுக்கிற எல்லா முயற்சிகளும் அதற்கான திசையில் சரியான வேகத்தில் முன்னேறிக்கொண்டேதான் இருக்கிறது. மனம் நிறைவை உணர்கிறது. முதல் முறையாக, சின்ன வயசிலிருந்தேப் பார்த்துப்பார்த்து வளர்ந்த ஆனந்தவிகடனில் எனது இரு கவிதைகள் அச்சேறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் தொடர்ந்து படைப்புகளை அனுப்புங்கள் என்கிற அவர்களின் வார்த்தைகள் இன்னும் சில கிலோ நம்பிக்கையை மனதிற்குள் கொட்டிப்போயிருக்கிறது.

அய்யா, புரிதல்களை சுவரஸ்யமாக பகிரும் கலையை உங்களிடமிருந்தே கற்றுக்கொள்கிறேன். உங்களில் ஒரு சதவிகிதமேனும் எனக்கு வாய்க்கப்பட்டிருப்பதாய் பெருமையாய் உணர்கிறேன். இங்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அது உங்களிடமிருந்தே பெறப்பட்டது. நான் உங்கள் மாணவன், இது எனக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் என்று உங்கள் கரம் பிடித்து சொல்லிக்கொள்ள முடியவில்லை என்பதைத் தவிர நிறைவாய் உணர்கிறேன்.  பகிர்தலும் புரிதலுமே வாழ்க்கை.

*******************************

வேரிலே பழம்பழுத்துத் தூரிலே
சுளைவெடித்து வெடித்த தீந்தேன்
பாரிலே பாதாள கங்கைவந்த
தெனக் குதித்துப் பசுந்தேன் கங்கை
நீரிலே பெருகுகுறும் பலாவிலே
கொலுவிருக்கும் நிமல மூர்த்தி
பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே
நானுமொரு பெண் கண்டாயே

*******************************

இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வ
ரம்பையோ மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்திய தோகர
முந்திய தோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர்
சங்கணி வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்
யாரிபொற் பந்து கொண்டாடினளே!

*******************************
என் தேடலில் கிடைத்த அவரது நினைவுகள் சில

25 கருத்துரைகள்:

பூந்தளிர் said...

//முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும்முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்
கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்தேனலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்குகொடை மகராசர் குறும்பலவில் ஈசர்வளம்பெருகும் திரிகூட மலை எங்கள் மலையே//

1991 ம் வருடம் எட்டாம் வகுப்பில் படித்தது...

கண்டிப்பாக உயிர் உள்ளவரை மறக்காத விளக்கங்கள்...

சேர்தளம் மீட்டிங்கிற்கு கண்டிப்பாக ஐயாவை அழைத்து வந்து விடலாம் முரளி...

நாம் பெற்ற செவியின்பம் பெறுக இவ்வையகம்...

பூந்தளிர் said...

.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

முரளி...மாணவர்கள் வெற்றி பெறுவதை விட ஆசிரியருக்கு வேறு சிறப்பான காணிக்கை இருக்க முடியாது.
உங்கள் பங்கு செலுத்தப்பட்டதாவே நான் உணர்கிறேன்..வாழ்த்துகள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

அய்யா இப்ப இல்ல சாமி...
:-(
இருந்திருந்தா இந்நேரம் அவர் கால்லையே உழுந்திருப்பேன்....

☼ வெயிலான் said...

அதே வாத்தியார் / அதே குற்றாலம் - ம்.... :)

இளங்கோ said...

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். இறைவனுக்கு நமது அன்பைத் தவிர வேறு என்ன காணிக்கை இருக்க முடியும்.

மோகன் குமார் said...

Good teacher is always remembered with warmth & love.

வெண் புரவி said...

என்னுடைய தமிழ் ஆசானை நினைவு படுத்திவிட்டீர்கள்....
இலக்கியம் விரும்பும் எல்லோருமே தமிழ் வாத்தியாருக்கென்று இதயத்தில் ஒரு இடம் வைத்திருக்கிறார்கள்தான்.
/இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வரம்பையோ மோகினியோ/-
-என்னாச்சு தெரியுதா ......
கனவில் (ஆ.வி-ல் வந்த கவிதையில்)வந்த பொண்ணு ரொம்ப இம்சை பண்ணுவா போலிருக்கு!

வெண் புரவி said...

என்னுடைய தமிழ் ஆசானை நினைவு படுத்திவிட்டீர்கள்....
இலக்கியம் விரும்பும் எல்லோருமே தமிழ் வாத்தியாருக்கென்று இதயத்தில் ஒரு இடம் வைத்திருக்கிறார்கள்தான்.
/இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வரம்பையோ மோகினியோ/-
-என்னாச்சு தெரியுதா ......
கனவில் (ஆ.வி-ல் வந்த கவிதையில்)வந்த பொண்ணு ரொம்ப இம்சை பண்ணுவா போலிருக்கு!

பரிசல்காரன் said...

அற்புதமான எழுத்து முரளி.

ஒரு நாலுநாள் பொறுத்துப் போட்டிருக்கலாமோ..?

கிருஷ்ண பிரபு said...

I certainly regain my schooling and college days murali, especially classes have been taken by our tamil teachers. I am walking down the memory lanes. wonderful days murali.

Vel Kannan said...

நல்லாயிருக்கு முரளி. பகிர்வுக்கு நன்றியும் அன்பும்.'இரு மாணவர்கள்' என்ற தலைப்பும் புகைப்படமும் மிக அருமை.

Thiru said...

nice poem sir....

அன்புடன் அருணா said...

பூங்கொத்துப் பதிவு!

Anonymous said...

நல்ல ஆசிரியர் தின பதிவு

"பகிர்தலும் புரிதலுமே வாழ்க்கை"
மு.கார்த்தி

முரளிகுமார் பத்மநாபன் said...

@திருநாவுக்கரசு
நன்றி திரு. இன்னும் அவரது மாணவர்களை சந்திக்க வேண்டும். பார்க்கலாம்.....

முரளிகுமார் பத்மநாபன் said...

@ வெயிலான்

அதே பீலிங்க்ஸ்.... அதேதான் தல
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ இளங்கோ
//இறைவனுக்கு நமது அன்பைத் தவிர வேறு என்ன காணிக்கை இருக்க முடியும்//

மிகச்சரியாக சொல்லிடிங்க...

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி மோகன் ஜீ

முரளிகுமார் பத்மநாபன் said...

@ வெண்புரவி

///இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வரம்பையோ மோகினியோ/-
-என்னாச்சு தெரியுதா ......
கனவில் (ஆ.வி-ல் வந்த கவிதையில்)வந்த பொண்ணு ரொம்ப இம்சை பண்ணுவா போலிருக்கு!//

ம்ம்ம்க்க்கும்... சரியாப்ப்போச்சு, நீங்களும் கூட சேர்ந்துக்கிட்டிங்களா?
ரைட்டு...
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ பரிசல்காரன்
அற்புதமான எழுத்து முரளி.///
மோதிரகுட்டு... :-)

ஒரு நாலுநாள் பொறுத்துப் போட்டிருக்கலாமோ..?//
யோசிக்கவேயில்லை தல... :-)இருந்தாலும் கிட்டத்தட்ட ஒரு கோ இன்சிடென்சா பக்கத்துல வந்துருச்சு.....

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கிருஷ்ணபிரபு
உன்னோட ப்திவையும் படிச்சேன் நண்பா! உன் நினைவலைகளைக் கிளறியதில் மகிழ்ச்சியே...
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@வேல்கண்ணன்
//இரு மாணவர்கள்' என்ற தலைப்பும் புகைப்படமும் மிக அருமை//

தேங்க்ஸ் த்லைவரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

@திரு
கவிதை மாதிரி இருக்குங்கிறிங்களா?
:-)

butterfly Surya said...

So sweet முரளி...

மகுடேஸ்வரனின் கவிதைகள் சில வாசித்திருக்கிறேன்..

முடிக்கவே முடியாத ஒன்றை
முடிக்கத் தெரியவில்லை
முடிவற்று நீளும்
முடிவற்றவைகளால்
முடியப்பட்டிருக்கின்றன
முற்றும்.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.