வாசகர் பர்வம் - எஸ்.ராவுடன் நான்

முன்னமே அறியப்பட்ட நிகழ்வுதான் என்றாலும் என்னுடைய புறப்பாடு குறித்து ஒரு முடிவிற்கு வர முடியாதவனாகவே இருந்தேன். எஸ்.ராவின் புத்தக வெளியீட்டு விழா. வெயிலானிடமிருந்து அழைப்பு வந்தது. என்னய்யா போலாமா? என்று. 99% போகலாம் தல என்று சொல்லி வைத்தேன். 1% - அன்று என் அக்கா மகளுக்கு சோறூட்டல். சரி என வழக்கம்போல வீட்டில் அம்மா, அப்பா திட்டி வழியனுப்பி வைக்க மதுரைக்கு பறந்தேன். ஆமா நிஜமாவே பறந்தேன். வேற என்ன சொல்லமுடியும் யாரைப் பார்க்கப்போகிறேன்.

எதுக்கு இப்படி இருக்கிற வேலைய விட்டுட்டு..... மதுரவரை போகணுமா? அங்க இங்கன்னு வரும்போது பார்த்துக்கிடக் கூடாதா? இப்படி நிறைய கேள்விகளையும் என்னமோ போ, நீ ஒரு மார்க்கமாத்தான் திரியிற என்கிறமாதிரியான நண்பர்களின் சர்ட்டிஃபிகேசனையும் தாண்டிதான் பறந்துகொண்டிருந்தேன். ()

வழி நெடுக, என்னை எப்படி அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது முதல் அவரிடம் எப்படி கை குலுக்க வேண்டும், எப்படி பேச வேண்டுமென்பதுவரை மனதிற்குள் சொல்லிப்பார்த்தபடியே வந்துகொண்டிருந்தேன். பயணம், அவருடைய எழுத்துக்களை மனதிற்குள் புரட்டியபடியும் இருந்தது. உண்மையில் எதற்காக இந்த பயணம், அவருடைய புத்தகங்களை படிப்பதோடு விட்டுவிடலாமே? எனும் கேள்விகளுக்கு முரளி எப்படி இருக்கிங்க? என்றோ, அவரிடம் ஒரு கையொப்பம் வாங்கிக்கொண்டுவரவோ, அவர் எழுத்துக்கள் திறந்த விட்ட கதவுகள் வழி நீண்ட பாதைகளில் அனுபவித்த காட்சிகளை அவரின் கரங்களைப் பற்றியபடி உரையாடிக்கொண்டிருக்கவோ, இப்படி என்னிடம் இன்னும் ஆயிரம் ஆசைகள் இருக்கிறது பதில்களாய். இந்த பதில்கள் கேட்கவோ, படிக்கவோ சிலருக்கு சிரிப்பாக இருக்கலாம்.

ஆனால், தொடர்ச்சியாய் ஏழு வருடங்களுக்கும் மேலாக அவரை வாசித்து வருகிறேன். அவரை மட்டுமல்ல. எப்படி வாசிக்க வேண்டும், எவரையெல்லாம் வாசிக்கவேண்டும் என்று அவர் சொல்லிக்கொடுத்தபடியே ஜி.நாகராஜனை, புதுமைப்பித்தனை, சம்பத்தை, பஷீரை, வண்ணதாசனை, எம்.எஸ்ஸை, நகுலனை, வண்ணநிலவனை, போர்ஹேவை, செகாவை இன்னும் பலரை. பாரதியார் கதைகள் கூட எழுதுவார் என்றோ வண்ணதாசன் என்று ஒரு ஆளுமை இருக்கின்றார் என்பதோ தெரியாத நான் இவர்களைப் வாசித்திருக்கிறேன் என்றால், அதற்கு காரணமான ஒரு மனிதரை நேரில் சந்தித்து ஒரு நன்றியாவது சொல்ல வேண்டாமா?

இப்போது நான் சந்திக்கும் பல நண்பர்கள் என்னிடம் முரளி நீ நிறைய படிக்கிற, அது உன் எழுத்துக்களில் சிறிய மாறுதலை ஏற்படுத்தியிருக்கிறது என் சொல்லியிருக்கின்றனர். ஒரு சிறுகதை அச்சேறியிருக்கிறது, கவிதை ஒன்று பரிசு வாங்கியிருக்கிறது. இவ்வளவு ஏன்? பொட்டி தட்டுறதே வேலையாயிருந்தும் பதிவுலகத்தைப் பற்றிய எந்த விவரமும் தெரியாமலிருந்த நான் ஒரு செய்தி சேனலில், எஸ்.ரா அவர்களின் ஒரு பேட்டியிலிருந்தே இந்த பதிவுலகை அறிந்தேன்.

இசையமைப்பாளருக்காக, இயக்குனருக்காகவெனத் தேடித்தேடி உலகத்திரைப்படங்களை பார்க்கிறேன் என்றால் அதுவும் இந்த மனுஷனாலதான். மொத்ததில் பார்த்தல், படித்தல், எழுதுதல் என என் அனைத்துத்தளங்களின் கதவுகளும் அவராலேயே திறக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நான் அனுபவித்து வரும் அனைத்திற்காகவும், அவர் கரம் பற்றி சுற்றிய அந்த உலகத்தை அந்த அனுபவித்தமைக்கேனும் அவரை சந்தித்திட வேண்டும், ஒரு நன்றியாவது சொல்லிவிட வேண்டுமென்று கங்கனம் கட்டிக்கொண்டுதான் கிளம்பினேன்.

விழா தொடங்கிய பிறகே ஓட்டலுக்கு செல்ல முடிந்தது, அரங்கம் நிறைந்து வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். தட்டுதடுமாறி உள்ளே நுழைத்துகொண்டோம் எங்களை. திமிறி வழிந்த கூட்டம் எஸ்.ராவை சந்தித்து உரையாட வேண்டுமென்ற என் ஆசைகளை உள்வாங்கிக்கொண்டன. சரி நேரில் சந்தித்தவரையில் மகிழ்ச்சி என்று முடிவு செய்து கொண்டேன். ஒவ்வொரு புத்தகத்தையும் ஒவ்வொருவர் அறிமுகம் செய்து வைத்து வெளியிட்டார்கள். நாங்கள் போனபோது கலாப்ரியாவும், பாரதி கிருஷ்ணகுமாரும் அவரவர் உரைகளை முடித்திருந்தார்கள், (குறிப்பாக இவர்கள் இருவரின் உரையும் மிக நேர்த்தியாக இருந்த்தாக நண்பர்கள் சொன்னார்கள், மிஸ் பண்ணிட்டோம்) சாரு பேசிக்கொண்டிருந்தார். வழக்கம்போல. நான் சொன்னா நம்ப மாட்டிங்கன்னுதான் பேசவே ஆரம்பிச்சார்.. சிரிக்கசிரிக்க பேசினார்.

பின் என்றும் இளமை என்று புகழாரத்தோடு பிரஞ்சன் பேச வந்தார், பிரபஞ்சன் அவர்களின் எழுத்துக்களைவிடவும் அவரது அறிமுகங்களுக்கு நான் அடிமை. குறிப்பாக எதோவொரு தொலைக்காட்சியில் புத்தகங்களை அறிமுகம் செய்து அவர்பேசுவது. ஒரு கதையை சிலாகித்து பேசிக்கொண்டே வருவார் கடைசி வரியில் அந்த கதையின் சாரத்தை கேட்பவரது மனதில் இறக்கிவைத்துவிட்டு, கடைசியாய் சொல்லி முடிப்பார் கதையின் பெயரை. இன்னும் ஐந்து வருங்களுக்குமுன் அவர் சொன்ன அம்மிகொத்துகிறவன் கதை காதிலேயே இருக்கிறது. இங்கேயும் அப்படியே எஸ்.ராவின் சிறுகதைகளை வெகுவாய் பாராட்டி பேசினார், இரண்டு கதைகளும் சொன்னார். குறிப்பாக முயல்கதை. புத்தகம் வாங்கிவிட்டேன்.

பேராசிரியர் அருணன், அழகாக பேசினார். உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களின் வாழ்வை குறித்த திரைப்படங்களை, அதன் அனுபவங்களை, நிகழவுகளை சமகால எழுத்தாளர்களோடும், தன்னோடும் செய்துகொண்ட எஸ்.ராவின் ஒப்பீடுகளையும் பற்றி பேசினார். பேச்சினூடே அவ்வப்போது இல்லிங்களா? என்று எஸ்.ராவைப் பார்த்துக் கேட்டுக்கொண்டதும் ,அதற்கு எஸ்.ரா ஆமோதிப்பதாய் தலையை ஆட்டுவதும் அழகாக இருந்தது.

கடைசியாய், எஸ்.ரா. செகாவின்மீது பனி பெய்கிறது என்றும் ஆண்டன் செகாவைக்கொண்டாடுங்கள் என்பது பற்றியும் பேசினார். அவர் பேசிய அனைத்தையுமே அவரது தளத்திலும் எழுத்திலும் ஏற்கனவே படித்ததுதான் ஆனாலும் புதிதாய் இருந்தது, கேட்டது. இன்றுமுதல் அவர் பேச்சிற்கும் ரசிகனாகிப்போகிறேன். செகாவின் மீது பனி பெய்கிறது என்பதையும், நாயின் பசியை போக்க முடியாமல் தன் நிலையை குறிக்கும் செகாவின் மனநிலையை அரங்கிலிருந்த அனைவருக்கும் கொண்டுவந்து விட்டார். சிரித்துக்கொண்டேயிருப்பது போன்ற ஒரு முகம், எஸ்.ராவினுடையது. பனியில் நனைந்தபடி நிற்கும் ஒரு குதிரையைப் பார்த்து தன் நிலைமையை எண்ணும் செகாவ், தனது வருமையை தானே பகடி செய்துகொள்ளும் அந்த நிகழ்வைச் சொல்லும்போதும் அவர் சிரித்தபடியே சொன்னார், நாங்கள் கண்களில் நீர் நிறுத்தியபடி கேட்டுக்கொண்டிருந்தோம்.

அனைவருக்கும் நன்றி என்று முடித்தபின், அவரது புத்தகங்களோடு நிறையபேர் சூழ்ந்து கொண்டனர். சிரித்தபடியே அனைவருக்கும் கையெழுத்திட்டபடி இருந்தார். எங்கே கொஞ்சம் நேரம் அவர் தனியாக இருப்பாரோ, போய்ப் பேசிவிடலாமென்று அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். ஊகும்.. நேரம் கூடக்கூட கூட்டமும் கூடிக்கொண்டேயிருந்தது. இரவிற்குள் ஊர் திரும்ப வேண்டுமென்பதால் நானும் கூட்டத்தோடு கூட்டமாய் சேர்ந்து கொண்டேன்.

நண்பர் பெரியசாமி எஸ்.ராவைச் சந்தித்தால் அவர் கையெழுத்திட்ட ஒரு புத்தகம் வாங்கிவரச் சொல்லியிருந்தார். அவருக்கும் எனக்குமாய் இரண்டு புத்தகங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அவருக்கென நான் கொண்டுபோயிருந்த எம்.டி. வாசுதேவனின் காலம், நாவலை என் நினைவாக எஸ்.ராவிடம் கொடுத்தேன்.


“ஓ, காலம்..... ரொம்ப நாள் முன்னாடி வாசிச்சிருக்கேன், எனக்கா? நீங்க..?”

“முரளி, திருப்பூரிலிருந்து... சார்.

“உங்க கையெழுத்து போட்டுக்கொடுங்க........ ?”

“உள்ளே கடிதமே எழுதியிருக்கிறேன், சார்” என்றேன்

மேலும் எப்படியும் நீங்க படிச்சிருப்பீங்கன்னு தெரியும் இருந்தாலும் என் நினைவாக உங்கள் நூலகத்தில் உறங்கட்டுமே, என்றேன். சிரித்தார். ஒரு நிமிடம் அந்த கூடத்தில் நானும் அவரும் மட்டுமே இருந்திருக்கலாமென தோன்றியது.

வண்ணதாசனோடு வாய்த்ததுபோல ஒரு பத்து நிமிடங்கள் கிடைக்கவில்லை என்பதைத்தவிர மனம் நிரம்பிய சந்தோசம், இந்த பயணத்தில். என்னுடைய ஒவ்வொரு பதிவுகளையும் எஸ்.ராவை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளாய் உணர்கிறேன். மெல்லமெல்ல முன்னேறும் நதி என்றேனும் ஒருநாள் கடல் சேர்ந்துதான் ஆக வேண்டும், அதுதான் விதி.

இதர : இந்த வாரமும் எனது கிறுக்கல் ஆனந்தவிகடன் சொல்வனத்தில் வெளியாகியிருக்கிறது, பகிர்வதில் மகிழ்ச்சி.

38 கருத்துரைகள்:

cheena (சீனா) said...

அன்பின் முரளி

மதுரைக்குப் பறந்து வந்த போது சந்திக்க இயலவில்லை. அழகான நேரடி ஒளிபரப்பு போன்ற இடுகை.

//கை எழுத்து போட்டுக் கொடுங்க - கடிதமே எழுதி வைத்திருக்கிறேன். // - சூப்பர்

விகடனில் தொடர்ந்து வரவும், மேன் மேலும் புகழ் அடையவும் நல்வாழ்த்துகள்.

நட்புடன் சீனா

மோகன் குமார் said...

உங்கள் ஆதர்ச எழுத்தாளரை சந்தித்தது குறித்து மகிழ்ச்சி; விகடனில் மீண்டும்.. வாழ்த்துக்கள்...

மோகன் குமார் said...

உங்கள் ஆதர்ச எழுத்தாளரை சந்தித்தது குறித்து மகிழ்ச்சி; விகடனில் மீண்டும்.. வாழ்த்துக்கள்...

butterfly Surya said...

மெல்லமெல்ல முன்னேறும் நதி என்றேனும் ஒருநாள் கடல் சேர்ந்துதான் ஆக வேண்டும்////////

ஆஹா... தம்பி கலக்கல்.

விகடனுக்கும் வாழ்த்துகள்..

முரளிகுமார் பத்மநாபன் said...

மிக்க நன்றி சீனா சார்.
எனக்கும் உங்களை சந்திக்காததில் வருத்தமே, ரெண்டு வாத்தியாரையும் பார்த்துட்டேன் இன்னொரு வாத்தியாரை பார்க்க முடியலை.

முரளிகுமார் பத்மநாபன் said...

//உங்கள் ஆதர்ச எழுத்தாளரை சந்தித்தது குறித்து மகிழ்ச்சி; விகடனில் மீண்டும்.. வாழ்த்துக்கள்...//
இன்னும் கொஞ்சம் எனக்கு நேரம் கிடைத்திருக்கலாம்... :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

மெல்லமெல்ல முன்னேறும் நதி என்றேனும் ஒருநாள் கடல் சேர்ந்துதான் ஆக வேண்டும்////////

ஆஹா... தம்பி கலக்கல்.


அண்ணா எத்தனை நாளாச்சு உங்களை இங்க பார்த்து.... :)

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
இந்த பயணத்தில். என்னுடைய ஒவ்வொரு பதிவுகளையும் எஸ்.ராவை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளாய் உணர்கிறேன்
//
வாழ்த்துகள்....

கார்த்திகைப் பாண்டியன் said...

முரளி.. எஸ்ரா பத்தி என் மனசுல இருக்குறத நான் எழுதுன மாதிரித்தான் உணர்றேன்.. வாழ்த்துகள்..:-)))

இளங்கோ said...

வாழ்த்துக்கள் முரளி.
எஸ்.ரா. வை சந்திக்கத்தான் அன்று நான் செல்லியபோது (அதாங்க செல்போன்ல பேசுனப்போ :) ) மதுரை போவதாக சொன்னீர்களா?. நான் கூட சரி எதாவது நண்பர்கள் திருமணம், வேறு எதாவது விசேடம் என்று நினைத்தேன்.
வார வாரம் ஆனந்த விகடனில் வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

\\“உங்க கையெழுத்து போட்டுக்கொடுங்க........ ?”

“உள்ளே கடிதமே எழுதியிருக்கிறேன், சார்” என்றேன்
\\

கவிதைய்யா...கவிதைய்யா...;)) கலக்குறிரூ ஓய் ;))

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்

அகல்விளக்கு said...

மென்மேலும் உயர நல்வாழ்த்துக்கள் நண்பா....

செல்வராஜ் ஜெகதீசன் said...

வாழ்த்துகள்

விக்னேஷ்வரி said...

ரொம்ப ஆத்மார்த்தமான எழுத்து. வாழ்த்துகள் முரளி.

☼ வெயிலான் said...

இவ்வார சொல்வனம் கவிதை சுமார் தான்!

புகைப்படக்காரர் சரியாக எடுக்க வில்லையோ?

sivaaa said...

நீங்க எங்கியோ...யோ...போய்டீங்க... முர்ளீ..

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்களைப் போல ஒரு வாசகரை உருவாக்கியது எஸ்ராவின் வெற்றி. பயணம் தொடர்க..

முரளிகுமார் பத்மநாபன் said...

மிக்க நன்றி வழிப்போக்கன் :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கார்த்திகை பாண்டியன்
நாம் ரெண்டுபேருமே எஸ்.ரா எனும் குட்டையில் ஊறிய மட்டைகள்தானே நண்பா...

முரளிகுமார் பத்மநாபன் said...

@ இளங்கோ
//வாழ்த்துக்கள் முரளி.
எஸ்.ரா. வை சந்திக்கத்தான் அன்று நான் செல்லியபோது (அதாங்க செல்போன்ல பேசுனப்போ :) ) மதுரை போவதாக சொன்னீர்களா?. நான் கூட சரி எதாவது நண்பர்கள் திருமணம், வேறு எதாவது விசேடம் என்று நினைத்தேன்//

:-))இதுவே எனக்கு விஷேசம்தானே இளங்கோ...

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபிநாத்
//கவிதைய்யா...கவிதைய்யா...;)) கலக்குறிரூ ஓய் ;))//

ம்ம்க்கும் இதுலையே நீங்க ஓட்டுறிங்கன்னு புரிஞ்சிபோச்சு தல, ரைட்டு, அட்டாக் பண்ணிடிங்கல்ல கிளம்புங்க...
:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ நேசமித்ரன்
மிக்க நன்றி திருப்பூருக்கு வராமலேயே கிளம்பிவிட்டீர்களே?
:-(

முரளிகுமார் பத்மநாபன் said...

@அகல்விளக்கு
நன்றி நண்பா....

முரளிகுமார் பத்மநாபன் said...

செல்வராஜ் ஜெகதீசன்
நன்றி நண்பரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

@ விக்னேஷ்வரி
//திருப்பூர் வராமலேயே போயிட்டிங்க? //உங்களுக்கும்தான்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@வெயிலான்
அத ஏன் தல கேக்குறிங்க...
:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ சிவா
// நீங்க எங்கியோ... யோ... போய்டீங்க... முர்ளீ..//

எங்கயும்போகலை பக்கத்து பில்டிங்தான். :-) ஆபீஸ் மாத்தியாச்சு தெரியும்ல சிவா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ஆதிமூலகிருஷ்ணன்
அண்ணா, என் எழுத்துக்களில் கவனம் கொண்டு மெல்ல செதுக்கி வரும் அரிய நண்பர்களில் நீங்களும் ஒருவர். ரொம்ப நன்றிண்ணா..

துளிகளால் ஆனதுதான் கடல்.

இராமசாமி கண்ணண் said...

வாழ்த்துகள் முரளி..

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். தனக்கு பயன் கொடுத்த ஒரு எழுத்தாளரை/மனிதரை போற்றும் உங்களின் பண்பிற்கு என் வணக்கங்கள்.
சம காலத்தில் பல இளைஞர்/இளைஞிகளுக்கு தமிழ், எழுத்து, வாசித்தல் மீது ஆர்வம் ஏற்படுத்தியவர் எஸ் ரா என்பது நூறு சதம் உண்மை.

வெண் புரவி said...

//மெல்லமெல்ல முன்னேறும் நதி என்றேனும் ஒருநாள் கடல் சேர்ந்துதான் ஆக வேண்டும், அதுதான் விதி.
கூடிய விரைவில் நதி கடலோடு கலக்க வாழ்த்துக்கள்...

பத்மா said...

இதை எஸ் ரா படிக்க வேண்டும் முரளி ..தன் மீது இத்தனை காதல் கொண்ட வாசகனை பெற அவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ..அவர் எழுத்தை நாம் படிக்க கொடுத்து வைத்திருப்பதை போல ...அருமை முரளி

Anonymous said...

நல்வாழ்த்துகள்.

karthi.m

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க முரளி.

raman- Pages said...

வாசகர் பாவம்????

Anonymous said...

முரளி ,சேர்தளம் நடத்திய வலைபதிவு குறித்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பின் http://palangarai.blogspot.com/என்ற வலைப்பூவை ஆரம்பித்துள்ள நண்பர் சண்முகமூர்த்தி, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் மிக நெருங்கிய நண்பராவார் என்ற தகவலை அறியப்படுத்துகிறேன் .

மேலும் உங்கள்
பல கவிதைகள் ஆனந்த விகடனில் வர வாழ்த்துகிறேன் .
மு.கார்த்தி
அவினாசி

துளசி கோபால் said...

அருமையாச் சொல்லி இருக்கீங்க முரளி.

பண்பான மனிதர். என்ன ஒரு எழுத்தாளுமைன்னு பிரமிச்சுருக்கேன்.

ஒரு சமயம் எஸ் ராவை 'திக்கெட்டும்'விழாவில் சந்திச்சபோது, அவரிடம் வணக்கம் கூறி, என் பெயரைச் சொல்லி அறிமுகம் செஞ்சுக்கிட்டப்ப, 'தெரியும். நீங்க வலைஉலக டீச்சர்' னு சொல்லி ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துட்டார்.

நம்ம இடுகைகளையும் வாசிக்கிறார்னு தெரிஞ்சப்போ, ரொம்பக் கூச்சமாவும் அதே சமயம் மனசுக்குள்ளே ஒரு விம்மிதமும் ஏற்பட்டதென்னவோ உண்மை.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.