ப்ளாஸ் பேக் @ நார்த் பேஸிங்

பீப்ளி லைவ் - இன்னும் இந்த படம் பார்க்கவில்லை, ஆனாலும் மிகுந்த எதிர்பார்ப்போடு தியேட்டரில் பார்க்கக் காத்திருக்கிறேன். அதுக்கு நிறைய காரணங்களும் இருக்கு,  இன்றைய இந்தியாவின்  நம்பத்தகுந்த ஒரு தயாரிப்பு, ஆமீர்கான். அவருடைய தயாரிப்பில் வருகிற படம்.  ஜீனி புகழ் இந்தியன் ஓசியன் குழுவினரின் இசை, இப்படி நிறைய காரணங்கள் உண்டு. இருந்தாலும் நண்பர் திருநாவுக்கரசு சமீபத்தில் எழுதிய இந்தப்படத்தின் திரைஅறிமுகமும் இந்த படம் பார்க்கும் ஆவலை இன்னும் அதிகமாக்கிவிட்டது.  "பீப்ளி-(லைவ்)" - இந்தியாவின் முகம் 


ப்ளாஸ் பேக் என்று சொல்லிவிட்டு எதேதோ எழுதிட்டிருக்கேன்னு கேட்காதிங்க, எனக்கே நான் இந்த பதிவை எழுதும்போது இந்த பீப்ளி பற்றி எழுதுவேனென்று தெரியாது. :-) ஆனால் இந்தியன் ஓசியன் பாடலை சொல்லும்போது தானாகவே அவர்கள் இசையமைத்த இந்த படமும் மனதில் ஒட்டிக்கொண்டது.சரி இனி ப்ளாஸ்பேக் பாடல்களை பார்க்கலாம்.

இண்டியன் ஓசியன் குழுவின் ஜீனி. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத ஒரு பாடல், ஒரு மாதிரியான துள்ளலான மனநிலைக்கு கொண்டு செல்லும் பக்குவமுடைய பாடல். கேளுங்க....
 

ரெமோ பெர்ணாண்டஸின் ஓ மேரி முன்னி  எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகர், கம்போஸர். இவரது பாடல்களில் வரும் ஜிமிக்ஸிற்கு நான் அடிமை. பம்பாயில் வரும் அரபிக்கடலோரம் பாடலில் இடையிடையே வருகிற தில்லாலங்கடி வேலைகளுக்கு சொந்தக்காரர். இவரோட கம்போஸிசனில் ஃப்லூட் சாங் கேட்டுப்பாருங்கள். புல்லாங்குழலையும் ட்ரம்ஸையும் வைத்துக்கொண்டு இவர்கள் காட்டுகிற இந்த மேஜிக்கை, அவசியம் அனுபவியுங்கள், இடம் மறந்து ஆட்டம் போட்டால் நான் பொறுப்பல்ல........


  ஹோ கயி ஹே மொகாபத் 90களில் வந்த ஒரு கலர்ஃபுல் ஆல்பம், அலிஷாவின் மேட் இன் இண்டியாவிற்கு பிறகு எங்களால் குடும்பத்தோடு  அதிகம் பார்க்கப்பட்ட ஒரு ஆல்பம் இதுவாகத்தானிருக்கும்.  சின்னசின்ன ஊடலோடு கூடிய ஒரு க்யூட் காதல், ஜாலியா இருக்கும் பாருங்க. இந்த பாட்டோட வீடியோவைப் பாருங்க, எவ்வளவு கலர்ஃபுல்லா.....  அனேகமா ராஜீவ்மேனன் கேமிராவா இருக்கலாம்.


அப்புறமா என்னோட பழைய பதிவுகளில் அதிகம் முறை சொல்லியிருக்கலாம் இவரது பாடல்களை, பங்கஞ் உதாஸ். என் ஆல் டைம் பேவரைட் கஜல் பாடகர். இவரது பாட்ல்களில் மிகவும் பிடித்த ஒரு பாடல்   ஒரு அழகான காதல் கதை. சிண்ட்ரெல்லா கதை ஒன்றை படமாக்கியிருப்பார்கள், கவிதையாக. இந்த மாதிரியான ஆல்பங்கள் ஏன் தமிழில் வருவதேயில்லைன்னு நான் நிறைய புலம்பியிருக்கிறேன். படத்துக்கெல்லாம் வரதுக்கு முன்னாடி கார்ஜியஸ் கேர்ள் சமீரா ரெட்டியைப் பாருங்கள், இந்த ஆல்பத்தில்.


லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், கலோனியல் கஸின்ஸ், நம்ம ஹரியும் லெஸ்லியும். தமிழில் திரைப்படங்களுக்கு நல்ல இசையை கொடுக்கமுடியாவிட்டாலும் இவர்களது இந்த முதல ஆல்பம் பட்டிதொட்டிவரை ஹிட். அலுப்புதட்டாத அத்துனை பாடல்களிலும் எனக்கு பிடித்த இரண்டு பாடல். மகிழ்ச்சியான மனநிலைக்கு ச நி த ப ம க ம க ரி ச வும் அமைதியான ஒரு மனநிலைக்கு  கிருஷ்ணா நீ பேகனே வும் கேளுங்கள்.


என்னடா, எல்லாம் ஹிந்தி பாட்டா இருக்கேன்னு கேக்குறிங்களா? அடுத்த எழுதப்போற இரண்டு பதிவுமே ஹிந்தி திரைப்படங்கள்தான்.  இரண்டுமே  வலிகள் நிறைந்த படங்கள்தான். ஆகவே இங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க ஜாலியா சில நல்ல பாடல்களோடு ஒரு சின்ன முன்னோட்டமா நம்ம சேனலை நார்த் பேஸிங்கில் திருப்பியிருக்கிறேன். சிக்னல் ஸ்ட்ரெந்த்தைப் பார்த்துட்டு மத்ததை முடிவு பண்ணிக்கலாம்ன்னு, ஐடியா. :-) 

19 கருத்துரைகள்:

திருநாவுக்கரசு பழனிசாமி said...

எல்லாமே அருமையான பாடல்கள்..
பகிர்வுக்கு நன்றி..
wat about "NoteBook"?

karthik lekshmi narayanan said...

முரளி

ரொம்ப நாளைக்கு அப்புறம் இசை பத்தி ப்ளாக்.!
நானே கேக்கணும்னு நினச்சுட்டு இருந்தேன் இந்த மாதிரி ஒரு ப்ளாக் உங்க கிட்ட இருந்து..!
அடுத்த playlist ரெடி பண்ணியாச்சு.!!
நார்த் பேஸிங் சூப்பர்.!!
இசைக்கு என்னங்க மொழி.!!

☼ வெயிலான் said...

ப... பப...பபபப :)

வெண் புரவி said...

வெயிலான் அவர்களை நானும் வழி(வலி) மொழிகிறேன்.......பப் பப்பா பா ப்ப்பாஆ ....

இளங்கோ said...

என்னென்னமோ பேரு, பாட்டெல்லாம் சொல்லுறிங்க...
கேட்டுப் பார்க்க முயற்சி செய்யறேன். :)

சு.சிவக்குமார். said...

நல்ல விசயம் என்னிக்குமே ரீச்சாகறதுக்கு கொஞ்சம் நாளாகும்..ஆனா கண்டிப்பா ரீச் ஆகும்..
sms படத்தில் சந்தாணம் இதே மாதிரி ஒன்னு சொல்லியிருப்பார்....

இண்டியன் ஒசன்...ஹா..ஹா....சொன்னமல்ல...

கார்த்திகைப் பாண்டியன் said...

அடப்பாவி மக்கா.. நான் எழுத வச்சிருந்த பாட்டுல நாலு அவுட்டு... ஓவ்வ்வ்வ்வ் (கதறி கதறி அழுறேன்)..

callezee said...

peepli live is good and all the songs shared here is awesome..

Denzil said...

எல்லாமே என்னோட favorites! ஹோ கயியோட ஒரிஜினல் தமிழ்ல வந்த அஸ்லாம் முஸ்தபாவோட(ஹிந்திலயும் அவர்தான்) ஆல்பம். fairy tales, மழையில் வீழும் மஞ்சள் பூக்கள்னு அட்டகாசமான தீம்கள்ல அதகளம் பண்ணியிருப்பார். ஆல்பங்களில உள்ள சுதந்திரம் சினிமா இசையில இல்லைங்கிறது எனது கருத்து. பழசையெல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்க. இந்த நேரத்துல என்னோட பழைய காசட் எல்லாத்தையும் சுட்டுட்டு போன கசின் மேல கடுப்பா வருது.

BHARATH BHARATHI said...

திருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,

நாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.

அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..

அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

முரளிகுமார் பத்மநாபன் said...

@திருநாவுக்கரசு
நோட்புக் பத்திரமா இருக்கு, மனசுக்குள்ள.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்திக்
ஆமா, கார்த்தி எனக்கே ரொம்ப நாளா இந்த ஏரியாவை டச் பண்ணாம இருக்கோமேன்னு தோணுச்சு.. :-)
இனி வரும் தொடர்ந்து

முரளிகுமார் பத்மநாபன் said...

@ வெயிலான்
ஏன் தல இப்படி?

ஜக்ஜீத்சிங்கின் ஹோஸு வாலோன் கேட்டுப்பாருங்க கஜல்ல என்னபோ இருக்குன்னு தெரியும்.....

முரளிகுமார் பத்மநாபன் said...

@வெண்புரவி
உங்களுக்கும் அதேதான் தலைவரே உங்களுக்கும் //ஜக்ஜீத்சிங்கின் ஹோஸு வாலோன் கேட்டுப்பாருங்க கஜல்ல என்னபோ இருக்குன்னு தெரியும்...//

முரளிகுமார் பத்மநாபன் said...

@இளங்கோ
முயற்சியில்லாம் வேண்டாம் அவசியம் கேளுங்க....
:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@சிவகுமார்
/இண்டியன்ஓசன்...ஹா..ஹா.. சொன்னமல்ல../


ஆமா சிவா நீங்க சொன்னமாதிரியே...
:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்த்திகைப்பாண்டியன்
//அடப்பாவி மக்கா.. நான் எழுத வச்சிருந்த பாட்டுல நாலு அவுட்டு... ஓவ்வ்வ்வ்வ் (கதறி கதறி அழுறேன்)..//

அதெல்லாம் சும்மா... நீங்க எழுதுங்க நண்பா, எனக்கும் புதுசா இருக்கும்ல...

முரளிகுமார் பத்மநாபன் said...

@ callezee
thanks dude, I like Indian ocean, they are very different in their genre.. peepli is a very different album for now a days..

Thank you for visiting and your comment too

முரளிகுமார் பத்மநாபன் said...

@ DENZIL
//எல்லாமே என்னோட favorites! ஹோ கயியோட ஒரிஜினல் தமிழ்ல வந்த அஸ்லாம் முஸ்தபாவோட(ஹிந்திலயும் அவர்தான்) ஆல்பம். fairy tales, மழையில் வீழும் மஞ்சள் பூக்கள்னு அட்டகாசமான தீம்கள்ல அதகளம் பண்ணியிருப்பார். ஆல்பங்களில உள்ள சுதந்திரம் சினிமா இசையில இல்லைங்கிறது எனது கருத்து. பழசையெல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்க. இந்த நேரத்துல என்னோட பழைய காசட் எல்லாத்தையும் சுட்டுட்டு போன கசின் மேல கடுப்பா வருது.///

மிக்க நன்றி நண்பா, என்னோட மெயில் ஐடி murli03@gmail.com. நேரம் கிடைக்கும்போது மெயில் பண்ணுங்க, i Think we have something to speak... :-)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.