வர்மாவும் வன்மமும் - எக்ஸ்படேஷன் ஆஃப் ரக்த சரித்ரா.

எப்போதும் ஒரு மென்மையான,மெசோக திரைப்படங்களையே நான் அதிகம் விரும்புவேன். வன்முறை பின்புலன் கொண்ட படங்கள் என்றால் சில செலக்டிவான இயக்குனர்களை, அவர்களின் படங்களை மட்டுமே தொடர்ந்து பார்த்துவருகிறேன். அதில் இந்திய இயக்குனர்களில் வர்மா மட்டும்தான் என் சாய்ஸ். ரொம்ப நாளாகவே இவரது படங்களைப்பற்றி எழுத வேண்டுமென நினைத்துகொண்டிருந்தேன். யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் நேரடியாக ஹாலிவுட் மற்றும் உலகத்திரைப்படங்களைப் படங்களைப்பார்த்தே இயக்குனராவர் ராம்கோபால் வர்மா. கதை, லாஜிக் மற்ற கந்தாயங்களை தவிர்த்து சம்பவஙகளை படமாக்கும் யுக்தி, வர்மாவினுடையது.

ரக்த சரித்ரம், ஆந்திராவைக் கலக்கிய ரெளடி பரிதாலா ரவி 2005-ல் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தையும் அதன் பின்புலன்களையும் மையமாகக் கொண்ட கதை. பொதுவாகவே வர்மா படங்களில் வன்முறை அதிகம் இருக்கும். அதுவும் இந்த படத்தில் பிரதான அம்சமே பழிவாங்கல்தான். படத்தின் முன்னோட்டமே பழிவாங்குதல் மனிதனின் உன்னதமான உணர்வுஎன்கிற மகாபாரத வரிகளோடு தொடங்குகிறது இந்தியாவின் மோஸ்ட வயலண்ட் மூவி – ரக்தசரித்ராவாகத்தான் இருக்கும் என்று ரிவ்யூ பார்த்த அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது. கொடூரம் கொப்பளிக்கும் கண்களோடு சூர்யா, மாறுபட்ட தோற்றம், உடல்மொழியோடு வன்மம் பேசும் கண்களோடு விவேக் ஓபராய், மணி சர்மாவின் மிரட்டலான இசை என முன்னோட்டமே பதபதைப்பைக் கூட்டுகிறது.

வன்முறை என்றால் சா (SAW) படங்களில் வருவது போல வயிற்றிற்குள் கையைவிட்டு குடைவது போல அறுவருப்பான வன்முறை அல்ல. காட்பாதர் மாதியான, ரிசர்வேயர் டாக் மாதியான அழகான வன்முறை. வன்முறை அழகியல். என்றுகூட சொல்லலாம். உதாரணமாக சர்கார் பட்த்தில் ஒரு காட்சி வரும். தாதா அமிதாப்பின் பெரிய மகனின் சாவுபற்றி,  அமிதாப் மற்றும் அபிஷேக்கின் கண்களின் உணர்ச்சிகளின் மூலமாகவே அவன் இறந்துவிட்டான் என்று பொருள்பட காட்சியெடுத்திருப்பார்கள். எவ்வளவு கொடூரமானது அவன் சாவு மற்றும் எவ்வளவு சோகம் அந்த சாவில் என்பதை துளி ரத்தமின்றி முழுவதுமாய் உணரும் படியான் காட்சி அது.  
     
காதலை கவிதையாய் சொல்ல ஆயிரம் பேர் உண்டு, வன்முறையையே கவிதை மாதிரி ஒரு அழகாய் சொல்பவர்தான் வர்மா. மிகச் சாதாரணமாண, மசாலாக் கதைகள்தான் இவருடையதும், ஆனால் அதை படமாக்கிய விதமும், பின்ணணி இசையும் ஒரு புது கலரைக்கொடுக்கும் இவரது படங்களில். உதயம் படத்தில் இளையராஜாவிற்கே பிண்ணனி பற்றி அலோசனைகள் வழங்கியிருக்கிறார் வர்மா என்று சொல்வார்கள். செல்வராகவனின் திரைப்படங்களுக்கு பிண்ணனி எவ்வளவு முக்கியமோ, மணிரத்னம் படங்களுக்கு வசனம் எவ்வளவு முக்கியமோ அதுபோல வர்மா படங்களில் இரண்டுமே அவ்வளவு முக்கியமாக இருக்கும். புதுப்பேட்டை – ஒரு வர்மா ஸ்டைல் ஆப் மூவிதான். சமீப தமிழ்த்திரைப்படங்களில் புதுப்பேட்டை அளவிற்கு பிண்ணனி இசையும் மேக்கிங்கும் வேறு எந்த படங்களிலும் மிரட்டியதாகத் தெரியவில்லை.

முன்னதாக ராம்கோபால் வர்மா அமிதாப்பச்சன், மோகன்லால், விவேக் ஓபராய், அஜய் தேவ்கன், ஆமிர்கான் மற்றும் நிறைய பெரிய பெரிய ஸ்டார் நடிகர்களை இயக்கியிருக்கிறார். இன்னமும் இவரது படங்களில் நடிப்பது என்றால் நெருக்கடிகளை தளர்த்திக்கொண்டு நடிக்க முன் வருவார்கள். முதன்முதலாக சூர்யா, ரக்தசரித்ராவின் மூலமாக ஹிந்திக்கும், வர்மாவின் படங்களிலும் எண்டர் ஆகிறார். முதலில் ஹிந்தியில் மட்டுமே எடுப்பதாக இருந்த இந்தப் படம், இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பைப் பார்த்து பிரமித்துப்போன வர்மா சூர்யாவை அமிதாப்பச்சனோடு ஒப்பிட்டு தனது பதிவில் எழுதியிருக்கிறார். குறிப்பாக சூர்யாவின் கண்களைப்பற்றி, நானும் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது சொல்லுவேன், சூர்யாவின் கண்கள் உயிருள்ளவை என்று.  அதுபோல, பச்சனின் கண்களில் ஒரு ஆழ்கடலின் அமைதியைக் காணமுடியும் மாறாக சூர்யாவின் கண்களில் அந்த கடலைக் கிழித்து வெளிவரும் எரிமலையின் குமுறலைக் காணமுடியும் என்றூ வர்மா சொல்கிறார். மேலும் தனது சினிமா வாழ்க்கையில் சூர்யாவைப்போல ஒரு நடிகனைப் பார்த்த்தில்லை என்கிறார்.


எனக்கு மிகவும் பிடித்த வர்மா படங்கள்எப்பொதுமே இளையராஜாவிடமிருந்து ஒரு ஸ்பெசல் இசையைப் பெற்றுத்தருவார் வர்மா, தமிழைக்காட்டிலும் இன்று ஹிந்தியில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் இசைப்புயலை ஹிந்தியில் ரங்கீலா மூலமாக நேரடிப்படம் செய்யவைத்தவர் வர்மாதான். ஹாலிவுட்டில் படம் இயக்கத்தகுதியான இயக்குனர் சங்கர் என்று ஒரு நிகழ்ச்சியில் நிறைய பேர் பேசிக்கொண்டிருந்தார்கள், என்னைப் பொருத்தவரை ஹாலிவுட் டெக்னாலஜியை வைத்துக்கொண்டு லோக்கலாக படம் பண்ணுபவர்தான் சங்கர், மேக்கிங்கைப் பொருத்தவரை ஹாலிவுட்டிற்கு இணையாக படம் பண்ணுபவர் வர்மாதான். மனவுணர்வுகளை படிக்கும்படியான நிறைய க்ளோசப் ஷாட்கள், ஷாக்கிங்கான பிண்ணனி இசை, செபியா டோனில் பிக்சரைஷேசன், இருள் சூழ்ந்த காட்சிகள் என மிரட்டலான மேகிங்தான் வர்மா ஸ்பெசல்.

வர்மா, மிகக் காண்ட்ரோவர்சியலான விஷயங்களை மிக தைரியமாக படமாக்குபவர். காட்பாதரைத் தழுவியே அதன் பாதிப்பிலேயே என்னுடைய மாஃபியா படங்களை இயக்குகிறேன் என்று வெளிப்படையாகவே சொல்கிறார். காட்பாதரில் பார்த்த மிரட்டலான திரைக்கதைகளும், அதில் பார்த்த மார்லன் பிரண்டோ, அல்பச்சினோவின் மிரட்டலான உடல்மொழிகளும், வாய்ஸ் மாடுலேஷன்களையும் பார்க்கும்போது இப்படி ஒரு படம் தமிழில் வராதா? என்ற ஏக்கம் வரும், தமிழில் இல்லாவிட்டாலும் இந்திய அளவில் இந்த ஏக்க்கங்களை ஒரளவேனும் சமாளித்து வருபவர் வர்மா, கம்பெனி பட்த்தில் வருகிற அஜய் தேவ்கன் அப்படியே அல்பச்சினோவைக் கண்முன் நிருத்தியிருப்பார். இப்படி வர்மாவின் படங்களின் மூல தனது திறமையைக் கண்டடைந்தவர்கள், ஜே.டி.சக்ரவர்த்தி, அமிதாப், அஜய் தேவ்கன், விவேக் ஓப்ராய், சுதீப் என இன்னும் பலரை சொல்லலாம்.

இன்னும் இப்படி வர்மா பற்றி எழுத நிறைய இருக்கிறது என்னிடம். பதிவின் நீளம் கருதி முடிக்கிறேன். சத்யா அல்லது சர்க்கார் பற்றிய முழு விமர்சனத்தோடு இல்லை அனுபவத்தோடு என்பதே சரியாக இருக்கும். அனுபவத்தோடு வேறு பதிவில் சந்திப்போம். நன்றி.......

16 கருத்துரைகள்:

நேசமித்ரன் said...

நல்லா எழுதி இருக்கீங்க முரளி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வர்மா படங்கள் வன்முறை இருந்தாலும் ஹீரோக்களின் உருவாக்கம் பிரம்மிக்க வைக்கும்.ஆண் சிங்கமாகத்தான் அந்த ஹீரோக்கள் இருப்பார்கள்

எஸ்.கே said...

இந்த படத்திற்காக காத்திருக்கிறேன். முன்னோட்டமே மிரட்டலாக உள்ளது. நீங்கள் எழுதியுள்ள கருத்துக்கள் மிகவும் நன்றாக உள்ளது.

கார்த்திகைப் பாண்டியன் said...

நிறைய மாற்றுக்கருத்துகள் எனக்குண்டு முரளி.. ஆனா ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க:-)))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ நேசமித்ரன்
தேங்க்ஸ் தல...:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ஆர்.கே.சதீஸ் குமார்
ஹீரோயிசம் ஆம் சரிதான். இவரது ஹீரோக்கள் மார்ட்டின் ஸ்கோர்ஸியின் ஹீரோக்களை பிரதிபலிப்பதையும் பார்க்கலாம்

முரளிகுமார் பத்மநாபன் said...

@ எஸ்.கே
மிக்க நன்றி,எஸ்.கே....

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கார்த்திகைப் பாண்டியன்
//நிறைய மாற்றுக்கருத்துகள் எனக்குண்டு முரளி..//
நண்பேண்டா.... நண்பா நமக்குள்ள மாற்றுக்கருத்தா? அவ்வ்வ்வ்வ்வ்

ஆதிமூலகிருஷ்ணன் said...

பொதுவாக ஹிந்திப்படங்கள் மீது ஆர்வம் இருப்பதில்லை. இதில் சிறிய ஆர்வத்தை உண்டுபண்ணியிருக்கிறீர்கள். ஹிந்தி அறிவீர்களா?

அன்பரசன் said...

பதிவு நல்லா இருக்கு.

நந்தா ஆண்டாள்மகன் said...

நல்ல அறிமுகம்.வர்மாவின் படங்களை பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள் நண்பரே.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதிமூலகிருஷ்ணன்

அண்ணா சத்யா பாருங்க, வர்மாவைப் பிடிக்கும், விஷால் பரத்வாஜ், சஞ்சய்லீலா பன்சாலி, மதூர் பண்டாகர் படம பாருங்க ஹிந்தி படமும் பிடிக்கும்.

ரகு தாத்தா அளவுக்கு கூட ஹிந்தி தெரியாது.. சப்டைட்டிலை வச்சி ஓட்டிட்டு இருக்கேண்ணா.. ஹி ஹி ஹி

முரளிகுமார் பத்மநாபன் said...

@ நன்றீ அன்பரசன்
படத்தையும் பாருங்க குறிப்பா சத்யா, வர்மாவின் மாஸ்டர் பீஸ் அது

முரளிகுமார் பத்மநாபன் said...

@ நந்தா ஆண்டாள்
மிக்க நன்றி நண்பா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். நிச்சயம் வர்மாவை பற்றி எழுத இன்னமும் இருக்கிறது, நிச்சயம் எதாவது ஒரு படத்தைபற்றி எழுதுவேன்.

உங்க ப்ரொஃபைலில் பாப் மெர்லியின் இசைக்கோர்ப்பைப் பார்த்தேன், எனக்கும் மிகவும் பிடித்த இசைக்கலைஞன்.

butterfly Surya said...

முரளி, வன்முறை படங்களில் உன்னை போலவே அதிகம் நாட்டமில்லை. ஆனாலும் எழுத்து அருமை.

அப்பாதுரை said...

வர்மா படங்கள் பார்த்ததில்லை.
வன்முறையை வன்முறைக்காகப் படமாக்கும் இயக்குனர்கள் வரிசையில் ஒருவரா, இல்லை வன்முறையைச் செய்தியாக, alternative society என்ற பார்வையில், பழைய வங்காள மலையாளப் படங்கள் போல் கதை சொல்பவரா?
அறிமுகப் படங்கள் ஒன்றிரண்டு சொல்லுங்களேன்... நேரம் கிடைக்கும் பொழுது பார்க்க ஆசை.
நன்றி.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.