அமீத் திரிவேதி

நம்ம சசிக்குமார் & கோ மாதிரி நார்த் சைடின் ஒரு உருப்படியான டீம்தான், அனுராக் காஸ்யப். ராஜ்குமார் குப்தா, விக்ரமாதித்யா மொட்வானி, மற்றும் அமீத் திரிவேதி இவர்களெல்லாம். ஒருவர் படம் இயக்கும்போது ஒருவர் தயாரிப்பார், இன்னொருவர் இசையமைப்பார், இன்னொருவர் அதற்கு திரைக்கதை எழுதுவார், இப்படி ஒரே படத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றுவார்கள். அனைவரும் இளைஞர்கள், புதுப்புது டெக்னாலஜியை உபயோகப்படுத்திப் பார்ப்பதிலும், மரபுகளை உடைத்து கதை சொல்வதிலும் கெட்டிக்காரர்கள். அதிகமாக இந்த கூட்டணி வெற்றிப்படங்களையும் , நல்ல படங்களையுமே கொடுத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.

போன பதிவில் உடான் திரைப்படம் பற்றி எழுதியிருந்தேன். அதே பதிவிலேயே உடானின் இசையமைப்பாளர் அமீத் பற்றியும் எழுத நினைத்திருந்தேன். அனால் கடந்த பதிவில் இசை பற்றி அதிகம் எழுத முடியவில்லை. காரணம் பதிவின் நீளம். கொஞ்சம் நீளமான பதிவென்றாலே படிப்பது சிரமமான ஒன்றாகிவிடுகிறது. சமீபத்தில் காத்திகைப்பாண்டியனிடம் பேசிக் கொண்டிருந்தபோது கூட இதப்பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம். தொடரும் என்று போட்டு இன்னொரு பதிவாக எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை, என்னால் அப்படியான பதிவுகளை படிக்கவே முடிவதில்லை. அதனால் கூடுமானவரை சற்று நீளமானாலும் ஒரே பதிவில் சொல்ல முயற்சி செய்கிறேன்.

சரி மேட்டருக்கு வருவோம். அமீத் திரிவேதி - திரை இசைக்கலைஞர் - இசையமைப்பாளர்.



முதலில் ஜிங்கில்ஸ் எனப்படும் விளம்பரப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தவர், ஆமிர் என்ற ஹிந்திப்படத்தின் மூலமாக திரைத்துறைக்குள் நுழைந்தார். இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் குப்தா. இவர் அனுராகிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான்.

இவரது இரண்டாவது படமான தேவ் டியிலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப்பெற்றிருக்கிறார். தேவ்தாஸ் கதை என்றாலே இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். மனுஷன் இந்தப்படத்தில் பூந்து விளையாடியிருப்பார். தேவ் டி-பற்றி நீண்ட நாட்களாகவே எழுதவேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் இயல்பாகவே உடான் முந்திக்கொண்டது. அவசியம் தேவ் டி படம் பாருங்கள் மாடர்ன் ராமாயணமான ராவணாவின் முன்னோடி, மாடர்ன் தேவதாஸ். படத்தோட மேக்கிங்கிற்காக, ஒளிப்பதிவு மற்றும் இசைக்காவாவது அவசியம் பார்க்கவேண்டிய படம்.

ஆமிர், தேவ் டி, வேக் அப் சித், உடான், ஆயிஷா என இதுவரை ஐந்து படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார், இவரது இசை வடிவம் பேண்ட் வகையை சேர்ந்தது. ராஜாவின், ரகுமானின் இசையை மேடையில் செய்ய ஆர்கெஸ்ட்ரா தேவைப்படும். இந்த பேண்ட் வகையில் ஒரு கிடாரிஸ்ட், ஒரு டிரம்மர், ஒரு பேஸ் கிடாரிஸ்ட் இருந்தால் போதும் அட்சரசுத்தமாக கேசட்டில் இருக்கிற இசையை கொடுத்துவிட முடியும். சிம்பிள் பட் காம்ளிகேட்டட், வகை.

மேலும் தேவ் டியில் இவரது இசை மிகவும் புதுமையாக இருக்கும், நிச்சயம் இது ரசிகர்களை சென்று சேருமா? என்கிற கேள்வி இசையமைக்கும்போதே அவருக்கு இருந்திருக்கும், ஆனால் ரசிகர்கள் அவரை தூக்கி வைத்ஹ்டு கொண்டாடுகிறார்கள். மாற்றம் மிக அவசியமான ஒன்றுதானே.. வேக் அப் சித் படத்தில் வரும் இக்குதாரா என்கிற பாடல் இந்த வருடத்தில் அதிகம் முனுமுனுக்கப்பட்ட பாடல் என்று சொல்லப்படுகிறது.

தேவ் டியின் இசைபற்றி சமீபத்தில் சாருநிவேதா அவர்கள் ஆனந்தவிகடனில் எழுதியிருந்தார். அவர் குறிப்பிட்ட பாடல் ஓ பர்ர்தேசி...... இந்த பாடலும் சரி மற்ற பாடல்களும் சரி எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்தான். புதுமையான இசை கேட்க விரும்புபவர்கள் தாராளமாக அமீத்தின் இசையைக் கேளுங்கள்.

எனக்குப் பிடித்த அவரது சில பாடல்கள் இங்கே,
அமீர் படத்திலிருந்து ஹாரகம் ஹாரகம்
தேவ்டியிலிருந்து ஓ பர்தேசி..... ஓ பர்தேசி.....
வேக் அப் சித் படத்திலிருந்து இக்குதரா இக்குதரா 

 உடானிலிருந்து
ஆசாதி       உடான் பாடல்            நாவ் ஹே தேரி             கீத்              மற்றும் உடான் ட்ரெய்லர்

இவரது இசையில் அதிகம் பாடியிருக்கும் டோச்சி ரெய்னா பற்றி ஒரு தனிபதிவிடவேண்டும். அப்படியே கைலாஸ்கெரின் குரல் மனுசனுக்கு, எவ்வளவு உச்சஸ்தாயிலும் பிசிரடிக்காமல் சுவரம் பிசகாமல் பின்னியெடுக்கிறார், டோச்சி. பர்தேசி, இக்குதரா இரண்டு பாடலையுமே பாடியிருப்பது இவர்தான்.


7 கருத்துரைகள்:

இளங்கோ said...

innum neraya songs introduction pannunga. Thanks

திருநாவுக்கரசு பழனிசாமி said...

nice review..try vishal bharadwaj music

கே.ரவிஷங்கர் said...

முன்னமே கேட்டதுதான்.

"Paayalia" "Ranjhana" "Pardesi' பாடல்கள் பிடித்தது.ஷில்பா ராவின் குரல்(Ranjhana) எப்போதும் போல் அருமை.வித்தியாசமான அருமை.

"Pardesi' தூச்சி ரெய்னா குரல்தான் மெயின் இசையை விட.

நம்மைக் கவரக் காரணம் முக்கியமாக புது பிரஷ் குரல்கள்.மிக முக்கியமாக எல்லாவற்றிலும் ஒரு கிளாசிகல் டச் இருக்கிறது.

"Paayalia" காபி ராகம் ”மாஹி மென்னு” சிவரஞ்சனி என்று யூகம்.
அடுத்து புதுக் குரல்கள்.இவர்கள் ரகுமான் படபாப் கல்சரில் பாடாமல் கிளாசிகல் டச்சில் பாடுகிறார்கள்.

இசையில் புதுமை இருக்கிறார் போல் தெரியவில்லை.அந்தகால பழைய இசையை பாலிஷ் செய்த மாதிரி இருக்கிறது.

நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

@இளங்கோ
தேங்க்ஸ் இளங்கோ, கண்டிப்பா நான் தேடிப்படிச்ச, கேட்ட, பார்த்ததை இங்க இண்ட்ரோ கொடுத்துட்டேதான் இருப்பேன். விதி வலியது இல்லையா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@திரு
விஷால் பரத்வாஜ், ம்ம்ம் அந்தாளுக்கு தனியா ஒரு பதிவே எழுதலாம். டட்டடேன்ன்னு கலக்குனவராச்சே....

முரளிகுமார் பத்மநாபன் said...

@கே.ரவிஷங்கர்
தலைவரே! வருகைக்கு நன்றி,

//"Paayalia" "Ranjhana" "Pardesi' பாடல்கள் பிடித்தது.ஷில்பா ராவின் குரல்(Ranjhana) எப்போதும் போல் அருமை.வித்தியாசமான அருமை.
"Pardesi' தூச்சி ரெய்னா குரல்தான் மெயின் இசையை விட//

ஒத்துக்குறேன்......

//நம்மைக் கவரக் காரணம் முக்கியமாக புது பிரஷ் குரல்கள்.மிக முக்கியமாக எல்லாவற்றிலும் ஒரு கிளாசிகல் டச் இருக்கிறது.
இவர்கள் ரகுமான் படபாப் கல்சரில் பாடாமல் கிளாசிகல் டச்சில் பாடுகிறார்கள்///

இதையும் ஒத்துக்குறேன்....

// "Paayalia" காபி ராகம் ”மாஹி மென்னு” சிவரஞ்சனி என்று யூகம்//
இந்தளவுக்கு ஞானம் இல்லை, வெறும் கேள்வி ஞானம்தான்.

//இசையில் புதுமை இருக்கிறார் போல் தெரியவில்லை.அந்தகால பழைய இசையை பாலிஷ் செய்த மாதிரி இருக்கிறது.//

இதில் ஒரு சின்ன மாறுதல், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை கவனியுங்கள், அவரது பெரும்பாலான பாடல்கள் ஒரே அலவரிசையில் இருக்கும், மக்களுக்கு எது பிடிக்கும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார். அதை தொடர்ந்து வெவ்வேறு பரிமாணங்களில் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அதிலிருந்து வெளிவர ஒரு தயக்கம் இருப்பதாகவே தெரிகிறது.....

பெரும்பாலானவர்களும் அப்படியே தனக்கென ஒரு தனிபாணி அமைத்துக்கொண்டு அதை மீறாமல் இருக்கின்றனர்.

அந்த வகையில் அமீத், மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ புதிய முயற்சி எடுத்துவிட வேண்டும் என்கிற இவரது புதுமையைத்தான் நான் சொல்ல வந்தேன்.

மிக்க நன்றி தலைவரே!
என்னுடைய மெயில் ஐடி
murli03@gmail.com
நல்ல இசையை அறிமுகம் செய்யுங்கள்....

மதுரை சரவணன் said...

thanks for sharing. nice writing. vaalththukkal.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.