ஒரு விளம்பரம்............

சமீபத்தில் நண்பர் செல்வமிடம் (கடலையூர்)  பேசிக்கொண்டிருந்த போது, எந்திரனின் வியாபார யுக்தியையும் விளம்பரங்களையும்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். வீட்டில் தேமேவென இருப்பவர்களையும் கூட விளம்பரம் என்கிற பெயரில் வீட்டைவிட்டு, தியேட்டர்களுக்குள் தள்ளுகிற ஒரு கார்ப்பொரேட் கொள்ளைதான். இந்த சினிமா விளம்பரங்கள். முன்பெல்லாம் போஸ்ர்களும், பாடல்களுமே திரைப்படங்களுக்கு ஒரு அடையாளத்தையும் முகவரியையும் கொடுத்துவந்தது. இப்பொழுது, இரண்டரை மணிநேர முழுநீள படத்தில் தேறும் இரண்டு மூன்று காட்சிகளை திரும்பத்திரும்ப போட்டுக்காட்டி கவருவது எந்த விஷயத்தில் புத்திசாலித்தனம் என்று புரியவில்லை. இது எந்திரனுக்கு மட்டுமல்ல.

செய்திகளுக்கு பாடல்களுக்கு படங்களுக்கு என ஆறு ஏழு சேனல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சேனலிலும் குறைந்தது அரை மணிநேரத்திற்கு ஒரு முறையாவது திரைப்பட விளம்பரங்கள் இடம்பெறுகிறது. எந்திரன் கூட பரவாயில்லை, சில மொக்கைப்படங்களையும் இதேபோல விளம்பரப்படுத்தி வருகின்றனர். சன் குழுமம் அறிமுகப்படுத்திய இந்த மோசமான விளம்பர யுக்தியை தற்சமயம் அனேகமாக அனைத்து சேனல்களும் கடைபிடிக்கின்றன. மிகுந்த அயற்சியை உண்டுபண்ணுகிற விஷயங்கள்.

சரி இவர்கள்தான் இப்படி என்றால், துணிக்கடை விளம்பரங்களும் நகைக்கடை விளம்பரங்களும் அடடடா...... அதுவும் தீபாவளி மற்றும் எதாவது பண்டிகை சமயங்கள் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம், அரைமணி நேரத்திற்குள்ளாக அரைடஜன் விளம்பரங்கள். தீபாவளி என்றாலே புத்தாடைகள் உடுத்துவதும் புதிய பொருட்களை வாங்குவதும்தான் என்றாகிவிடும்போல, இனிவரும் எதிர்காலங்களில்.

சரி கோடிகோடியாய் பணத்தை கொட்டி முதலீடு செய்த வியாபரம் இது, இதுபோல விளம்பரங்கள் இல்லையென்றால் என்ன செய்வது, இது ஒரு வகை வியாபரயுக்திதானே என்பவர்களுக்கு, நான் சொல்வது, முறைப்படுத்துதல். ஒரு வறையறை வகுத்துக்கொள்ளுங்கள் எனபதுதான். முறையற்ற எதுவும் மோசமான தீர்வுகளையே கொண்டிருக்கின்றன. 

 நீ படிச்சவந்தானே? நீயேன் விளம்பரங்களைப் பார்த்து ஏமாறுகிறாய், சரியான பொருட்களை நீயே கடையேறி தேர்வு செய்யவேண்டியதுதானே என்பத்தெல்லாம் வாதத்திற்கு சரியாக இருக்கலாம். நீங்கள் வேண்டாமென்றாலும் உங்கள் மனைவி சொல்லலாம், ஏங்க இந்த கடைக்கு போகலாம் என்று, இல்லை உங்கள் குழந்தை சொல்லலாம் இன்று அனேக விளம்பரங்கள் இந்த இருவரைத்தான் அதிகம் குறிவைக்கிறது. சத்தமாய் சொல்வது உண்மை, அதிகம் விற்பது நல்லது எனகிற ஒரு பொதுபுத்தியை இது மக்களுக்கு சொல்லிக்கொடுக்கிறது. வாடிக்கையாளர்களை, பார்வையாளர்களை அவர்களின் புத்தியை மழுங்கடிக்கச்செய்யும் ஒரு ஆயுதம்தான் இதுபோன்ற விளம்பரங்கள்.

சரி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நிறுத்திக்கொள்ள உங்களிடம்தான் ரிமோட் இருக்கிறதே. ஆம் அதைத்தான் சொல்லவந்தேன். செல்வம் அவருடைய அப்பாவின் ஆலோசனைப்படி அவர் தனது வீட்டில் இப்படி ஒரு முறையத்தான் கடைபிடித்து வருகிறாராம். அதாவது நிகழ்ச்சியின் இடையே வரும் விளம்பர இடைவேளையை ம்யூட் செய்துவிடுவது. அட்லீஸ்ட் அந்த நேரத்திலாவது வீட்டிற்குள் பேச நேரம் கிடைக்குமே. எட்டு வயது பிள்ளையை கற்பழித்து கொள்வதாகட்டும், நரமாமிசம் சாப்பிடும் அகோரிகளாகட்டும் நாம் சாப்பிட்டுக்கொண்டே ரிலாகஸ் செய்ய டீவி பார்க்கிற அந்த நேரத்தில் நமது அனுமதியின்றி  நமக்கு சரிசமமாக நம் வீட்டு வரவேற்பறைக்கே வந்துபோவதுபோல இந்த விளம்பரங்கள். ஆனால் எல்லா விளம்பரங்களும் அப்படியிருப்பதில்லை என்பது வரை மிகிழ்ச்சி. 

த்ரிஷா வருகிற போத்தீஸ் விளம்பரம், இருவத்தியஞ்சு வருஷமாச்சு இன்னும் பொண்ணோட மனச புரிஞ்சிக்கலை என்று சொல்லும் நகைக்கடை விளம்பரம், தீபாவளிக்கு மாமனார், மாமியாரைக்கூட்டிவரும் மாப்பிளையாக, ஒரு கேட்பரீஸ் சாக்லெட் விளம்பரம் இப்படி சில விளம்பரங்கள் அதன் மேக்கிங்கிற்காகவும், அதில் வருபவர்களுக்காகவும் திரும்பதிரும்ப பார்ர்க்கும்படியான சில விஷயங்கள் விளம்பரங்கள் வரத்தான் செய்கிறது. அதிகமாக இரண்டு நிமிடங்களில் பார்வையாளர்களைக்கவர அவர்களின் பிரயத்தனம் மிகவும அதிகம். என்னைப்பொருத்தவரை விளம்பரங்கள் ஒரு குறும்படங்கள். அவை தமது ப்ராடக்டை விற்க வலியுருத்தத் தேவையில்லை. அந்ததந்த பொருட்களை நியாபகப்படுத்தினாலே போதும். இன்றைய தேதியில் கிரியேடிவ் அர்வர்டைசிங் என்ற பிரிவில் பாடங்களே வருகின்றன. 

விளம்பரப்படுத்தவேண்டிய பொருளை விளம்பரத்தின் ஏதாவதொரு நொடியில் சொல்லிவிட்டுப்போவது, ஒரு கான்செப்ட் வைத்துக்கொண்டு அதன் படி விளபரப்படுத்துவது, சில நிறங்கள் போதும் அந்த கம்பெனியை நினைவில் கொண்டுவர, இப்படி விளம்பரத்துறையும் வளர்ந்து வரும்வேளையில் இதுபோன்ற மலிவான விளம்பரங்கள் அந்த முன்னேற்றத்தைத் தடுத்துவிடுகிறது என்பதுதான் கடினமாக இருக்கிறது.

ரொம்ப பிடிச்ச கேட்பரீஸின் இரண்டு விளம்பரங்கள்
33 கருத்துரைகள்:

ஆரூரன் விசுவநாதன் said...

நல்லதொரு அலசல்...சரியான நேரத்தில்...

வாழ்த்துக்கள்

S.Sudharshan said...

எனக்கும் அந்த விளம்பரம் ரொம்ப பிடிச்சுதுங்க ... நல்ல யோசனை ....

சற்று சிந்திப்போம் இன்று என்ன நாள் ? வெட்கம் கொள்வோம்

http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

எஸ்.கே said...

சில விளம்பரங்கள் ரசிக்க வைக்கின்றன சில முகம் சுழிக்க வைக்கின்றன!

கனிமொழி said...

:) எனக்கும் கேட்பரீஸின் இரண்டு விளம்பரங்கள் பிடிக்கும்..
நல்ல அலசல் நண்பா..

கோபிநாத் said...

கலக்கல் பதிவு தல ;)

idea - விளம்பரம் கூட நல்லாயிருக்கும்..;))

Anonymous said...

உங்கள் மனைவி சொல்லலாம், ஏங்க இந்த கடைக்கு போகலாம் என்று, இல்லை உங்கள் குழந்தை சொல்லலாம் இன்று அனேக விளம்பரங்கள் இந்த இருவரைத்தான் அதிகம் குறிவைக்கிறது

Yen neenga mattum thaan buthisali madiri think panna mudiyuma? Pengala mattam thatratha yeppathan niruthuveengale...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நகைக்கடை விளம்பரத்துல நகையே போடாம இளையதளபதி புரட்சி பண்ணியிருக்காரே..அத பத்தி சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஆம்..இது ஒரு கார்ப்போரேட் கொள்ளை தான், சந்தேகமில்லாமல். அவ்வை இன்று இருந்தால், சொல்லியிருப்பாள்.
சாதி இரண்டொழிய வேறில்லை,ரோடில்
மோதி முகம் கிழிந்து கண் பெயர்ந்து,
எந்திரன் படம் பார்த்தோர் ஓர் ஜாதி,
அதனைப் பாராதார் மறு ஜாதியே!!

ஈரோடு கதிர் said...

அந்த அணில் குட்டிகள் காதல் செய்யும் விளம்பரமும் வெகு அருமையாக இருக்கும்

raman- Pages said...

nannaum oru vilambaram vidama paarpen oru nalla vilambarathukaga.. like the first one : amma sonnanga.

KANALI said...

தீபாவளி என்றாலே புத்தாடைகள் உடுத்துவதும் புதிய பொருட்களை வாங்குவதும்தான் என்றாகிவிடும்போல.
விரைவில் இது உண்மை ஆகிவிடும்.நல்ல கிரியேடிவ் விளம்பரங்கள் வருகின்றன.மீண்டும் பார்க்க தூண்டுகின்றன்.(உ.த)தீரிரோஸ் விளம்பரம்.
விளம்பர தனிக்கை ஏதாவது ஏற்படுத்த வேண்டும்.

நல்ல பதிவு நண்பரே!
சமகால நிகழ்வுகளை எழுதிகொண்டே
இருங்கள்.வாசிக்க தயாராக இருக்கிறோம்

KANALI said...

சமகால நிகழ்வு பதிவு.
நல்ல பதிவு நண்பரே!
தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொருவரின் எண்ணத்தில் ஓடும் கொந்தளிப்பு தான் என்ன செய்வது மனதிலே முனங்கி கொள்வதை தவிர வேறு வழியில்லை.
இதற்கு தணிக்கை வரவேண்டும்.

KANALI said...

சமகால நிகழ்வு பதிவு.
நல்ல பதிவு நண்பரே!
தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொருவரின் எண்ணத்தில் ஓடும் கொந்தளிப்பு தான் என்ன செய்வது மனதிலே முனங்கி கொள்வதை தவிர வேறு வழியில்லை.
இதற்கு தணிக்கை வரவேண்டும்.

KANALI said...

சமகால நிகழ்வு பதிவு.
நல்ல பதிவு நண்பரே!
தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொருவரின் எண்ணத்தில் ஓடும் கொந்தளிப்பு தான் என்ன செய்வது மனதிலே முனங்கி கொள்வதை தவிர வேறு வழியில்லை.
இதற்கு தணிக்கை வரவேண்டும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ஆரூரன் விசுவநாதன்
தேங்க்ஸ் தல :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ சுதர்சன்
உங்க பதிவையும் படிச்சேன் நண்பரே, சோகம் அப்பிய பதிவு. :-(

முரளிகுமார் பத்மநாபன் said...

@எஸ்.கே
உண்மைதான் தலைவரே....

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கனிமொழி
யப்பா.... ரொம்ப நாளைக்கு பிறகு ஸ்மைலி தவிர ஒரு பின்னூட்டம்.. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபிநாத்
தல செளக்கியமா?

க.பாலாசி said...

என்னைப்பொருத்தவரை எல்லா நிகழ்ச்சிகளைவிடவும் எல்லா விளம்பரங்களும் நல்லாவே இருக்குங்க...

அப்பாதுரை said...

வியாபாரத்தில் கொள்ளையென்று தனியாக இருக்கிறதா என்ன? :)

வளர்ச்சியின் வலிகளில் இதுவும் ஒன்று.

விக்னேஷ்வரி said...

நீங்க எவ்ளோ கத்தினாலும் யாரும் கண்டுக்கப்போறதில்ல.

Siva said...

சார்! பதிவுலகிலும் இந்த விளம்பரம் மாதிரியான உத்தி இருக்கு...அத எப்ப?...
உங்களால் முடியும் சார்......கமான்...

முரளிகுமார் பத்மநாபன் said...

//en neenga mattum thaan buthisali madiri think panna mudiyuma? Pengala mattam thatratha yeppathan niruthuveengale...//

தெய்வமே ஏன் இப்டி? எனக்கு பிடித்த விஷயம் என் வீட்டில் பிடிபடாமல் போயிருக்கலாம், அவர்களுக்கு பிடிபட்ட விஷயம் எனக்கு புரியாமல் போயிருக்கலாம். என்பதுதான் மேட்டர்... மத்தபடி ஆதிக்கமெல்லாம் இல்லிங்க... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ திருநாவுக்கரசு
இப்பதான் ஒரு கண்டத்தைத் தாண்டி வந்திருக்கேன், நீங்க வேற ஏன் திரு... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
ஆகா ....
நன்றி தலைவரே.....

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஈரோடு கதிர்
தலைவரே, என்ன விளம்பரம் அது?

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராமன்
நன்றி ராமன்.. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கனலி
//நல்ல பதிவு நண்பரே!
சமகால நிகழ்வுகளை எழுதிகொண்டே
இருங்கள்.வாசிக்க தயாராக இருக்கிறோம்//

வேண்டாம்ன்னு சொன்னாலே எழுதுவோம், இது எழுதுங்கன்னு வேற சொல்றிங்க....அவ்வ்வ்வ் ரைட்டுண்ணா....

முரளிகுமார் பத்மநாபன் said...

@பாலாசி
//என்னைப்பொருத்தவரை எல்லா நிகழ்ச்சிகளைவிடவும் எல்லா விளம்பரங்களும் நல்லாவே இருக்குங்க.//
அப்டியா நண்பா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@ அப்பாதுரை
//வளர்ச்சியின் வலிகளில் இதுவும் ஒன்று//

ரொம்ப சரியாச் சொன்னிங்க....

முரளிகுமார் பத்மநாபன் said...

@விக்கி
//நீங்க எவ்ளோ கத்தினாலும் யாரும் கண்டுக்கப்போறதில்ல//

பார்ரா... கண்டுக்கப்போறதில்லன்னுட்டு வந்து பின்னூட்டமெல்லாம் போடறிங்க....
ஓ அவங்கள சொல்றிங்களா?
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சிவா
//சார்! பதிவுலகிலும் இந்த விளம்பரம் மாதிரியான உத்தி இருக்கு...அத எப்ப?...
உங்களால் முடியும் சார்......கமான்...///

எங்கடா இன்னும் ஆரம்பிக்கலையேன்னு நினைச்சேன்....ஆச்சு...
:-)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.