கோவா பாகம் - 2

வெல்கம் பேக் டு கோல்வா, கோவா.

இப்பதான் இந்த பதிவுக்கு வறிங்கன்னா இங்க போயி இதையும் படிச்சிட்டு வந்திடுங்க அப்பதான் முதல் வரி உங்களுக்கும் பொருத்தமா இருக்கும். ஹி ஹி..

கோவா டூர்-சில உபயோகமான குறிப்புகள்,
1. மிக்குறைவான ஆடைகள் போதுமானது.
2. அவசியம் தேவையான பணம் ரொக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்
3. கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) அனேக இடங்களில் செல்லுபடியாவதில்லை. வெளிநாட்டவர்களின் காலாவதியான கடன் அட்டைகளால் வந்த வினை.
4. மதுப்பிரியர்கள், நிச்சயம் பாட்டில்களாக வாங்கிக் கொள்ளுங்கள். பார்களில் குடிக்கும் பழக்கம் இருந்தால் அதிலொன்றும் பெரிய வித்தியாசமில்லை
5. நீச்சல் குளம் கொண்ட ஹோட்டல்களில் தங்குபவர்கள் பருத்தி அல்லாத (நான் காட்டன்) உடைகளோடு செல்லுங்கள்.
6. கண்டிப்பாக ரயில் பயணத்தை தேர்ந்தெடுங்கள். விமானப்பயணம் வேண்டாம். (காரணம் பின்னால் வரும்)
7. இருசக்கர, நாற்சக்கர வாகனங்கள் குறைந்த வாடகைக்கு கிடைக்கும். அசல் ஓட்டுநர் உரிமம் அல்லது பேன் கார்டை கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.காலை நேர நடைக்கு மிக அருமையான இடம் கோல்வாவில் பீச். மிக நீளமான கடற்கரை. நிறைய ரெஸ்ட்டாரண்ட்கள் வழி நெடுக இருக்கிறது. குடிக்க, சாப்பிட, ஓய்வெடுக்க எல்லா வசதிகளோடும். நாங்க அதிக நேரம் செலவழித்தது பெஞ்சமின்ஸ் ரெஸ்ட்டாரண்ட். உரிமையாளர் பெஞ்சமின் மற்றும் ஜேக். இருவரும் கோவாக்காரர்கள். மிக அருமையான வரவேற்பு, உபசரிப்பு ரெண்டு பேருமே ரொம்ப நல்ல பசங்க. எங்களுக்கும் அவர்களுக்குமான அலைவரிசை நன்றாக ஒத்துபோகவே அங்கேயே இரவு வரை செலவிட்டோம்.

அதிக கூட்டமில்லாத இடம், அவ்வப்போது கடந்துபோகும் சில வெளிநாட்டவர்களைத் தவிர நாங்கள் மட்டுமே என்பதால் ஆட்டம் பாட்டமென நல்லா கொண்டாட்டமாக இருக்க முடிந்தது. கோவா போனால் என்ன குடிக்கலாமென இணையத்தில் தேடி குறித்துக்கொண்டு போனேன் (இப்படி காற்றடிக்கும்போது தூற்றிக்கொள்ள வேண்டியதுதான்). டக்கீலா, ஆகா இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். இதனை ஷாட்ஸ் என்று சொல்கின்றனர். மெக்ஸிகன் ஷாட், டக்கீல சன்ரைஸ், டக்கீலா மார்ட்டினீ (இது காக்டெயில்) இப்படி வகை வகையான் என்னென்னவோ சொன்னார்கள். சரி எல்லாத்துலயும் ஒண்ணு ஒண்ணு குடுங்கன்னு எல்லாத்தையும் ட்ரை பண்ணிட்டேன். டக்கீலா குடிப்பது எனபது ஒரு ரசனையான விஷயம். முதலில் எலுமிச்சை பழசாற்றை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் தடவிக்கொண்டு அதன் மீது உப்பை தடவிக்கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் தரும் ஒரு ஷாட்டை ஒரே மிடறில் குடித்துவிட்டு விரலிடுக்கில் தடவிய உப்பை உறிஞ்சிக்கொள்ள வேண்டும். இதுவே எனக்கு மிகவும் ரசனையாகப்பட்டது. இதற்காகவே இரண்டு மூன்று ஷாட் சாப்பிட்டேன். இதை குடிப்பதால் உடல் உஷ்ணமேறிவிடுமாம், ஆகையால் அதிகம் குடிக்க வேண்டாம் என்று பெஞ்சமின் அட்வைஸ் செய்யவும் அதோடு நிறுத்திக்கொண்டேன். தேன் மாதிரியாக இனித்துக்கொண்டிருந்தது.


 Benjamin's Taquilla Martini  - Brasilian Breeze Cocktail - Chicken sour soup

பிறகு கடலில் விளையாடலாமென முடிவு செய்தோம், காரணம் இந்த கடையின் முன்பாக நல்ல உயர்ந்த அலைகள் அடிக்கடி வந்தவண்ணமிருந்தது. எனக்கு அலைகளில் சறுக்க மிகுந்த ஆசையாய் இருந்தது. வருகிற வழியெங்கும் வேவ் சர்ஃபிங் செய்ய தேவையான சர்ஃபிங் போட்டை தேடிக்கொண்டிருந்தேன். எங்கும் கிடைக்கவில்லை. சாப்பிடும்போது அதை ஒரு கவலையாக பெஞ்சமினிடம் சொல்ல தனது வீட்டிலிருந்து எடுத்துவந்து கொடுத்தான். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நான் மட்டும் அலைகளோடு விளையாடிக்கொண்டிருந்தேன். மார்பிலும் முழங்கால்களிலும் ஏகப்பட்ட சிராய்ப்பு வாங்கிக்கொண்டும் கடைசி வரை என்னால் முழுமையாக சறுக்கவே முடியவில்லையென்பது வேறு விஷயம். ஆனால் அதன் துணையோடு மிதக்கக் கற்றுக்கொண்டேன். கடைசி ஓரிரு முறைகளில் அதன்மீது லாவகமாய் மல்லாக்க படுத்துக்கொண்டிருக்கவும் கற்றுக்கொண்டேன். மனசுக்கு பிடிச்சமாதிரி, நிம்மதியா, அதுவும் கடலில் ரம்மியமான அலைகளின் இடையே வானம்பார்த்தபடி படுத்துக்கிடந்தது, இது ஒன்றிற்காகவே இன்னொரு முறை கோவா போகலாம். நிக்கோல ஸ்பார்க்ஸ் கதைகளில் வருகிற மாதிரி மென் சுபாவம் கொண்ட அழகான பெண்களோ, காதலோ, இசையோ கூட இருந்தால் கடலும் கடல் சார்ந்த இடங்களும் சொர்க்கம்தான்.

கடலில் இருந்து குளித்து வந்ததும் நல்ல தண்ணீரில் குளித்துக்கொள்ள ஷவர் வைத்திருந்தார்கள். குளித்துவிட்டு நிம்மதியாக சாப்பிட்டேன். இரண்டு மணிநேர விளையாட்டு சராசரிக்கும் அதிகமாகவே இறங்கியது. வெளியிலேயே குடையுடன் கூடிய சாய்வு நாற்காலிகள் உண்டு. மூன்று மணிநேரம் மயக்கதிற்கு பிறகுதான் விளிப்பு தட்டியது. அப்போது இருட்டியிருந்தது. ஹோட்ட்லிலும் எங்களைத் தவிர நிறைய வெளிநாட்டவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பெஞ்சமினிடம் அடுத்த முறை வரும்போதும் அவசியம் சந்திப்போம் என்று சொல்லி விட்டு ரூமிற்கு திரும்பினோம். கொஞ்ச தூரம் நடந்து வந்தபின் திரும்பி பார்த்தபோது பெஞ்சமின் மற்ற வாடிக்கையாளர்களோடு சிரிக்கசிரிக்க பேசிக்கொண்டிருந்தான். இங்கு மட்டுமல்ல கோவா முழுவதுமே மக்கள் சிரித்தபடியே இருக்கிறார்கள்.

தன்மையாக பழகுகிறார்கள், எளிதில் நம்புகிறார்கள், தங்களையும் எளிதாக நம்பவேண்டுமென நினைக்கின்றனர், இல்லாவிடில் கோபப்படவும் செய்கின்றனர். குறிப்பாக அவர்களிடம் ஒரு அவசரத்தன்மையை பார்க்க முடியவில்லை. மிக நிதானமாய், எந்த வேலையையும் ரசித்து செய்வதை பார்க்க முடிந்தது. இங்கு திருப்பூரில் எப்போதும் அவசரகதியில் மக்களை சந்தித்தவனுக்கு இது வித்தியாசமான அனுபவமாய் இருந்தது.


பிறகு அடுத்த நாள் காலை நான்கு ஹோண்டா ஆக்டிவாக்களை (((ஒரு நாளைக்கு ஒரு வண்டிக்கு 850 என்று ஆரம்பித்து, இரண்டு நாட்களுக்கு 400 என்று பேசி))) வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். பல்லோலியம் பீச்சிற்கு (இங்குதான் Bourne Supremacy பட்த்தின் சேஸிங் சண்டைக்காட்சி எடுக்கப்பட்ட்தாம்) செல்வதாயிருந்த திட்டம் அதிக தூரம் வண்டியில் செல்ல வேண்டாம் என்ற அனைவரின் எண்ணத்தாலும் அருகிலுள்ள போக்மாலா பீச்சிற்கு செலவதாய் முடிவாகியது. வாஸ்கோடகாமா விமான நிலையத்தை தாண்டி பத்து நிமிட பயணத்தில் வருகிறது போக்மாலா. கோல்வாவோடு ஒப்பிட்டால் இது மிகவும் சின்ன பீச். ஆனால் அவ்வப்போது இறங்கியேறும் விமானங்கள், இரண்டு பக்கமும் மலைகள் இருப்பதால் ரம்மியமாக இருந்தது. இது அதிகமாக கவனம் பெறாத பீச், ஆகையால் வெளிநாட்டவர்களின் வருகை அதிகம் இருக்கிறது.

பிறகு இங்கிருந்து எங்கு போகலாம் என்பதில்தான் ஏகப்பட்ட குழப்பங்கள். அங்கிருந்து 15 கிலோமீட்டரில் பானாஜி, கோவாவின் தலைநகர். நகரம். கேளிக்கை விடுதிகளும், சூதாட்ட விடுதிகளும், ஹோட்டல்களும் பார்களுமாய் நிரம்பி வழிகிறது பனாஜி. ஒரு குட்டி லாஸ் வேகாஸ். பனாஜியிலிருந்து சமதூரத்தில் பாகா பீச் மற்றும் மிராமார் பீச். எட்டு பேரில் நாலு பேர் பாகா, நாலு பேர் மிராமார். நான் மிராமார் பக்கமிருந்த்தால் அங்கே செல்வதென முடிவாகியது. ஹி..ஹி..ஹி.. இரவு தங்குவதற்கு எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை. எட்டுமணிக்கு ஆரம்பமானது ஹோட்டல் தேடும் படலம்.

மிராமார் முழுக்க ஒரு காஸ்ட்லி லுக். கடைகளும், வீதிகளும், திரையரங்குகளும் தெருவிளக்குகளும், நடைபாதை பெஞ்சுகளும், அதில் அமர்ந்தபடி புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கும் வயதான தம்பதிகள், ரோட்டோரங்களில் கட்டியணைத்தபடி நெருக்கமாக இளசுகள் (((அவர்களை பார்க்கும்போது எனக்கு வயசானதென்னவோ உண்மைதான் :- ( ))), அரைகுறை ஆடைகளோடு வெளிநாட்டினர் என மிராமார் முழுக்கவே மேற்கின் ஆதிக்கம்தான். ஏதோவொரு பெயரறியா நாட்டின் தெருக்களில் நடப்பதுபோலவே உணர்ந்தேன். இப்படியே பராக் பார்த்துக்கொண்டு போனதில் நிறைய ஹோட்டல்களை கவனிக்கத்தவறி மிராமாரிற்கு அடுத்தபடியாக உள்ள டோனாபோலா என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். கண்போன போக்கிலே வண்டி போய்க்கொண்டிருந்தது. கடைசியாய் அந்த பாதை டோனாபோலாவின் ஒரு பேவாட்ச் கார்னரில் போய் நின்றது. அதற்கு மேல் பாதையும் இல்லை.

நண்பன் அசோக்கிற்கு அடுத்த நாள் பிறந்தநாள், இரவு கேக் வெட்டி கொண்டாட திட்டமிட்டிருந்தோம், மணி பத்தைத் தாண்டியிருந்தது. இன்னும் இரவு தங்குவதற்கு ரூமும் கிடைக்கவில்லை, வண்டி நிறைய எங்களின் மூட்டைமுடிச்சுகள் என்ன செய்வது என்று தெரியாத நிலை. ஆனால் அதுதான் அனைவருக்கும் பிடித்தமானதாயிருந்தது. ஒரு சர்வைவல் மாதிரியான எக்ஸ்ப்ளோரிங் ட்ராவல். அடுத்து என்ன என்று யாருக்குமே தெரியாத பயணம். ரசனையான பயணம் இன்னும் தொடரும்.....

கோவாபோக திட்டமிருப்பவர்கள் நிச்சயம் ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுங்கள். குறீப்பாக சென்னை - கடப்பா - வாஸ்கோ வழியாக பயணியுங்கள்.ஏன்னா... அடுத்தபதிவுல சொல்றேன் (ஏன் என்று தெரிந்தவர்கள் தயவுசெய்து சஸ்பென்ஸை உடைத்துவிடாதீர்கள்.) 

19 கருத்துரைகள்:

திருநாவுக்கரசு பழனிசாமி said...

ம்ம்..போட்டோஸ்ல கோவா எஃபெக்ட் நல்லாவே இருக்கு

கனிமொழி said...

Hahaha... '6 pack coming soon' nu t-shirt la text irukum nu yethir parthen!!! :)

நிகழ்காலத்தில்... said...

முரளி இன்னிக்கித்தான் படிச்சேன்.

நடந்தத அப்படியே உணர முடியுது..

இங்கெல்லாம் நிறைய நண்பர்களோடுதான் போகனும்..

எழுதுங்க.. எழுதுங்க

கோபிநாத் said...

850ஐ 400ரூக்கு கொண்டுவந்திங்க பார்த்திங்களா அந்த திறமைக்கே தொடர்ந்து படிக்கனும் தல ;)

தல சஸ்பென்ஸ் வேறயா...சீக்கிரம் போடுங்க ;)

ஆதவா said...

குறிப்புகள் சூப்பர்!!
நல்லா அனுபவிச்சிருக்கீங்கன்னு தெரியுது!!
கோல்வாவில் காலை நேரத்தில் அலைகள் இருக்காது, நேரம் ஆக ஆக அலைகள் பெரிசாகும்.. அங்கிருந்த மூணு நாளும் கோல்வா பீச்சில் விளையாடினோம்.
பலொலெம் பீச்சை நீங்கள் மிஸ் பண்ணிவிட்டதாக நினைக்கிறேன்!

தொடருங்கள்...

ஆதவா said...

நாங்களும் கிரடிட் கார்ட் தேவைப்படுமோ என்று நினைத்தோம்... ஆனால் அதற்கு அவசியமில்லாமல் போய்விட்டது!

karthik lekshmi narayanan said...

//நிக்கோல ஸ்பார்க்ஸ் கதைகளில் வருகிற மாதிரி மென் சுபாவம் கொண்ட அழகான பெண்களோ, காதலோ, இசையோ கூட இருந்தால் கடலும் கடல் சார்ந்த இடங்களும் சொர்க்கம்தான்.//

சூப்பர் !ஸ்பார்க்ஸ் டச் இங்கேயும் வருதா.!!
நல்ல அனுபவிச்சு சுத்தி இருக்கீங்க போல இருக்கே.!! பொறாமையா இருக்கே.!!:(
இருக்கட்டும் பரவ இல்ல.!!
இன்னும் பல பதிவு வந்த நல்ல இருக்கும்!!!

karthik lekshmi narayanan said...

//நிக்கோல ஸ்பார்க்ஸ் கதைகளில் வருகிற மாதிரி மென் சுபாவம் கொண்ட அழகான பெண்களோ, காதலோ, இசையோ கூட இருந்தால் கடலும் கடல் சார்ந்த இடங்களும் சொர்க்கம்தான்.//

சூப்பர் !ஸ்பார்க்ஸ் டச் இங்கேயும் வருதா.!!
நல்ல அனுபவிச்சு சுத்தி இருக்கீங்க போல இருக்கே.!! பொறாமையா இருக்கே.!!:(
இருக்கட்டும் பரவ இல்ல.!!
இன்னும் பல பதிவு வந்த நல்ல இருக்கும்!!!

முரளிகுமார் பத்மநாபன் said...

@ thiru
Thank u thiru, next version paarunga

முரளிகுமார் பத்மநாபன் said...

@kani
Thanks kani, body art pottom 6pack maathiriye... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ Shivaannaa
Thanks na, i think first time enakku comment pottirukinga... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@Gopi
Thala, peram pesurathu illanna viyapaarathula oru intrest irukkathe.. hi hi hi

Suspense onnum illai, goa ponavangalukku.... will see my next post

முரளிகுமார் பத்மநாபன் said...

@ Aadav
Yes Really we missed Paloeam... enga plan la athuthaan first place but kadaisi varai anga pokave illai.. ithu eppdi irukku....

முரளிகுமார் பத்மநாபன் said...

@karthik
ha ha karthik, neenga nalla kavanichinganna theriyum sparks in ellaa kathaikalilume kadal oru characterve varum... interesting la?

விக்னேஷ்வரி said...

ம், நல்லா ஆடிருக்கீங்க போல தெரியுது. சீக்கிரம் எழுதுங்க மீதி பாகத்தையும். ரொம்ப இன்ஃபமேடிவா இருக்கு.

வெண் புரவி said...

கோவாவிலிருந்து 50 கிமீ பயணத்தில் தூத் சாகர் அருவி உள்ளது...சென்றீர்களா? காட்டுப் பயணம்.... பால் போல அருவி... நீச்சல் குளம்போல அருவிக்குள் குளியல்... அருவியின் மேல புறம் புகை விட்டுச் செல்லும் ரயிலின் காட்சி.... கவிதையாய் இருக்கும்.

பதிவு அருமை. போட்டோக்கள் பிண்ணுறீங்க...

karthik lekshmi narayanan said...

@Murli
yaa tat s true.. Every lines in his story has divined love..!
ippo recent a walk to the remember padichen..abaram..nalla story murli.:)

karthik lekshmi narayanan said...

@Murli
yaa tat s true.. Every lines in his story has divined love..!
ippo recent a walk to the remember padichen..abaram..nalla story murli.:)

கார்த்திக் said...

கலக்க்குங்க :-))

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.