ஹேப்பீ தீபாவளி........

புது வருட கேலண்டர் வாங்கியதும் எப்போ தீபாவளின்னு பார்க்கிற பழக்கம் உங்களுக்கு உண்டா? உண்டுன்னா மேல படிங்க, J

சென்ற வாரம் கூட ஆடம்பர தீபாவளியை புறக்கணிப்போம் என்று ஒரு மெயில் வந்தது, இன்னமும் விவாதங்களோடு பல குழுமங்களில் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. சமீபகாலமாய் தீபாவளி என்றதும் நினைவிற்கு வருவது போனஸ், புதுத்துணி, லீவ். அவ்ளோதான். தீபாவளிக்கு வீட்டில் பலகாரங்கள் செய்வது கிடையாது, அனைவரும் கடையில்தான் வாங்குகின்றனர், அதைப்பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு என்றபடி மைக்கைப் பிடித்தபடி செய்தி சேனலிலேயே இனிப்பு விற்க ஆரம்பித்து விட்டனர். தி.நகரில் மக்கள் வெள்ளம் என்று ஒரு சில குறிப்பிட்ட கடைகளில் மக்கள் நுழைவதையே திரும்ப திரும்ப காட்டிக்கொண்டு எல்லா ஊடகங்களும் விளம்பரதாரர்களுக்கு பணம் செய்யவே முனைகின்றனர். இவ்வளவுதானா தீபாவளி.
எனக்கு தெரிந்து யார் ஒருவருடைய இறந்த நாளையும் இவ்வளவு விமரிசையாக கொண்டாடுவது கிடையாது. தீபாவளி. கான்செப்ட் தப்பா இருந்தாலும் ரொம்ப கலர்புல் பண்டிகை. அனேகமாக இந்தியாவே ஒன்று சேர கொண்டாடும் பண்டிகை. முன்பு இந்துக்களின் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்த தீபாவளி, இன்று சாதி, சமய, மத வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
            தீபாவளி என்ற உடனே என் நினைவிற்கு வருவது கங்கா ஸ்நானம், புதுத்துணிகள், பட்டாசு. அதிலும் வெகு விஷேசம் கங்கா அதிலும் எங்கள் வீட்டில் பாட்டி இருந்தவரை அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுப்பி விட்டிருப்பார்கள். எல்லாரும் அழுங்க மழுங்க விழித்தபடி தலையில் பாட்டி வைத்து விட்ட எண்ணெய் வழிய பலகையில் அமர்ந்திருப்பார்கள். எனக்கு தலையில் எண்ணெய் வைத்து ஸ்லோகங்கள் சொல்லி சாமி கும்பிட்டு விட்டு முதல் பட்டாசை பாட்டி எடுத்து கொடுக்கும்வரை, எனது முழு கவனமும் தெருவிலேயே இருக்கும். எங்கள் ஊரில் ஒரு பழக்கம், யார் அந்த தெருவில் முதல் பட்டாசு போடுகிறார்களோ அவர்களே அந்த தெருவிற்கு தீபாவளியையே கொண்டு வந்து விட்டதாக சொல்லுவர். எனவே காலையில் எழுந்தவுடன் அந்த தெருவையே ஒரு சுற்று சுற்றி வந்து யாரும் இதுவரை பாட்டாசு வெடிக்கவில்லை என்று தெரிந்த பின்னரே நான் பூஜையறைக்கு வருவேன்.
            செம்பருத்தியிலை, வெந்தயம், கறிவேப்பிலை, வேப்பிலை மற்றும் இன்னபிற எனக்கு தெரியாத சில பூக்களும் இலைகளும் ஒன்றுசேர்த்து நல்லெண்ணையுடன் சேர்த்து கொதிக்க வைக்கப்பட்டு தீபாவளியின் ஒருசில நாட்களுக்கு முன்னராகவே கங்கா ஸ்நானத்திற்கு எண்ணெய் தயாராக இருக்கும். முறுக்கு, சீடை, ரவா லட்டு, முக்கியமாக மைசூர் பாகுபோன்ற இனிப்பு கார வகைகள் தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக அம்மாவும் பாட்டியும் செய்து கொண்டிருப்பார்கள். தீபாவளியன்று சாமிக்கு படைக்கப் பட்டு பின்னரே சாப்பிடவேண்டும் என்பது பாட்டியின் கட்டளை. அம்மா செய்யும் மைசூர் பாகு, கெட்டியாக விகடன் ஜோக்கில் வரும் சுத்தி வைத்து உடைக்கும் இனிப்புகள் போல இருக்கும். ஆனாலும் அது எனக்கு பிடித்த இனிப்பு. இன்னமும் எது மாறினாலும் மாறாத ஒன்று அம்மா செய்யும் மைசூர் பாகுவின் சுவை. பாகு கிண்டியபின்னர் நெய் தடவப்பட்ட அகண்ட தட்டில் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி வைப்பார். அதிலும் பாட்டிக்கு தெரியாமல் சிறு சிறு துண்டங்களை எனக்கு தரும் அம்மா செய்தது என்பதால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
     புது துணிமணிகள் சரசரக்க அக்காவும் தங்கையும் அருகிலுள்ள வீடுகளுக்கு சென்று இனிப்புகளை கொடுத்து விட்டு வருவார்கள். பிறகு அவர்கள் வீட்லிருந்து எங்களுக்கு என்று ஒரு பண்டமாற்றமே நடந்து கொண்டு இருக்கும். எங்களை பொறுத்தவரை தீபாவளி, தீபாவளியன்று கொண்டாடப்படுவது கிடையாது. ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடும்,
எங்களுக்கென்று பட்டாசும் புதுத்துணியும் வாங்கப்பட்டு விட்டதோ அன்றிலிருந்தே தீபாவளிதான். பட்டாசு வாங்கியவுடன் அப்பா எனக்கு என் தங்கைக்கு அக்காவுக்கு என்று பங்கிட்டு கொடுத்துவிடுவார். யார் மனதும் கோணாதபடி பங்கிடுவதில், அப்பாவுக்கு நிகர் அப்பாதான். இதில் எது சரியாக இருந்தாலும் பட்டாசுகளை அதிகம் வைத்திருக்கும் எனக்கு நான்தான் அதிகம் வைத்திருப்பதாக நினைத்துக்கொள்வேன்.    ஒவ்வொருநாள் பள்ளி முடிந்து வந்தவுடன் அவரவர்க்கான பட்டாசுக்களை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்று காயவைப்பதும், சிலேட்டு, நோட்டு, பேப்பர் என எங்கு பார்த்தாலும் எதை பார்த்தாலும் அதில் பாட்டாசு, மத்தாப்பு வகைகளை வரைந்து அதற்கு மேலே பட்டாசு கடை என்று எழுதுவதும், கடை என்பதை அடித்து கடல் என்று எழுதுவதும், அதிலும் லட்சுமி வெடி வரையும்போது அதில் லட்சுமி படம் தெரிய வரைய நான் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன்,
            பின்னர் நண்பர்கள் ஒவ்வொருவராக சேர பட்டாசு வெடிக்க ஆரம்பித்தால் விதவிதமாக வெடித்துகொண்டிருப்போம். அதிலும் பரமசிவம் என்று ஒரு நண்பன் இருந்தான், அவனுக்கு மட்டும் எங்கு கிடைக்குமோ தெரியாது, கிலோ கணக்கில் வெங்காய வெடி கொண்டு வருவான். சாதாரண வெடியை கூட விதவிதமாக வெடிக்கும் பரமசிவத்திடம் நான் எனது குழந்தைகளுக்கு செய்துகாட்ட நிறைய சாகசங்கள் இருக்கிறது. இப்படி தீபாவளிக்கு முந்தய ஒவ்வொரு நாளும் தீபாவளியாகத்தான் இருந்திருக்கிறது.
            முன்பெலாம் டிவி கிடையாது, சிறப்பு நிகழ்ச்சிகள் கிடையாது. தீபாவளி தீபாவளியாகவே இருந்தது. இன்று தீபாவளி மற்றுமொரு விடுமுறை நாள். இப்பொழுது பாட்டி இறந்து விட்டார்கள், அக்காவும் தங்கையும் திருமணம் ஆகி சென்று விட்டார்கள், பரமசிவமும் இல்லை, ஆனாலும் தீபாவளி வரத்தான் செய்கிறது. ஒவ்வொரு தீபாவளியும் என்னுள் பலபல நியாபகங்களை விதைத்து சென்றவாறேதான் இருக்கிறது.
புது வருட கேலண்டர் வாங்கியதும் எப்போ தீபாவளின்னு பார்க்கிற பழக்கம் உங்களுக்கு உண்டா? அப்ப நீங்க என் பக்கம். இன்னமும் என் மனம் தீபாவளியை ஒரு குழந்தையைபோல எதிர்பார்க்கிறதே? அந்த பாலய வாசம் மறையும் வரை எதற்காகவும் தீபாவளி கொண்டாடுவதை விடுவதாய் இல்லை. இதோ நாளைக்கு, நம் எல்லோருக்குமாய் வந்துவிட்டது, தீபாவளி.

// பின்குறிப்பு : இது சின்னச்சின்ன மாற்றங்களோடு கூடிய ஒரு இது மீள்பதிவுதான். ஆக தொடர்ந்து படிப்பவர்கள் மன்னிக்கவும்.  //


கோ என்பது துன்பங்களை, வா என்பது இன்பங்களை, என்பது எனக்கு மட்டுமில்லாம உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அமைய எனது வாழ்த்துகள், ஹேப்பி தீபாவளி...

16 கருத்துரைகள்:

ஸ்ரீ.... said...

முரளிக்குமார்,

கண்டிப்பாக நான் உங்கள் பக்கம்தான். நினைவு தெரிந்த நாள் முதல் காலண்டரில் தீபாவளி தேடும் பழக்கம் இன்னும் மாறவில்லை. உங்களுக்கு மனமர்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். (கோவா
பயணத்திற்கும்!)

ஸ்ரீ....

கோபிநாத் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தல ;)

மதுரை சரவணன் said...

முரளி அரசு ஊழியர்கள் அதுவும் ஆசிரியர்கள் எந்த எந்த மாதம் எத்தனை நாள் என விடுமுறை பார்ப்பது பழக்கம், அதுவும் தீபாவளி சனி , ஞாயிறு வருகிறதா என பார்ப்போம் பாருங்க... சரி .. தீபாவளி நல் வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

முரளி அரசு ஊழியர்கள் அதுவும் ஆசிரியர்கள் எந்த எந்த மாதம் எத்தனை நாள் என விடுமுறை பார்ப்பது பழக்கம், அதுவும் தீபாவளி சனி , ஞாயிறு வருகிறதா என பார்ப்போம் பாருங்க... சரி .. தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Balaji saravana said...

தீபாவளி வாழ்த்துக்கள் :)

இளங்கோ said...

//கோ என்பது துன்பங்களை, வா என்பது இன்பங்களை//

எப்படி எல்லாம் கண்டுபிடிக்கறிங்க.. !!
ஹாப்பி தீபாவளி

மோகன் குமார் said...

முரளி நானும் கேலண்டர் வந்ததும் என்னிக்கு தீபாவளி என பார்க்கிற டைப் தான்; கோவாவா? ம்ம்ம் என்ஜாய்

எஸ்.கே said...

//நினைவு தெரிந்த நாள் முதல் காலண்டரில் தீபாவளி தேடும் பழக்கம் இன்னும் மாறவில்லை. //உண்மைதான்.
தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! பயணம் இனிமையாக அமையட்டும்!

அன்புடன் அருணா said...

/எங்கள் ஊரில் ஒரு பழக்கம், யார் அந்த தெருவில் முதல் பட்டாசு போடுகிறார்களோ அவர்களே அந்த தெருவிற்கு தீபாவளியையே கொண்டு வந்து விட்டதாக சொல்லுவர்./
எங்க ஊரிலும்தான்!...நிறைய விஷயங்கள் எங்க வீட்டிலும்தான்னு சொல்லத் தோணுது!
தீபாவளின்னே ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் சொல்லத் தெரியும் அதுவரைக்கும் தீவாளிதான்!
இனிய தீவாளி வாழ்த்துக்கள்!

butterfly Surya said...

அன்பின் முரளி, இன்னும் புது வருட காலண்டர் வந்ததும் தீபாவளி தேடும் ரகம் தான் நானும்.

கோவா பயணம் இனிது அமைய வாழ்த்துகள்.

கோவாவில் இந்த மாத கடைசியில் உலக திரைப்பட விழா ஆரம்பம். நானும் கோவா போகிறேன்.

அப்பாதுரை said...

enjoy!

கனிமொழி said...

GOA vaaaaaaaaaaaaaaaa...........

Enjoyyyyyyyyyyyyyngooooo!!!!!!!!
:)

வெண் புரவி said...

enjoy goa

வெண் புரவி said...

enjoy goa

madhu said...

நன்றி முரளி,

நிகழ்வுகளின் சாரத்தை,
நிகழ்வுகளின் நினைவுகளில் உணர்த்தியமைக்கு..,

madhu said...

நன்றி முரளி,
(பழைய)நிகழ்வுகளின் இனிமையை,
(புதிய)நினைவுகளின் பதிவுகளில் உணர்த்தியமைக்கு...

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.