விண்ட் ஸ்ட்ரக் - மறுபடியும் இன்னொரு கொரியப்படம். எல்லா தமிழ்படங்களையும்போல ஒரு அழகான பாடலோடு படம் ஆரம்பிக்கிறது, எழுத்துக்கள் மறைந்து காட்சி நீளும்போது ஹீரோயின் யூ ஒரு பெரிய கட்டிடத்தின் உச்சியில் நின்றுகொண்டிருக்கிறாள், மெல்ல அவளது கால்கள் விளிம்பை நோக்கி நகர்கிறது. மேலிருந்து கீழே விழும் அவளது நினைவுகளில் தொடங்குகிறது படம்.
அவள் ஒரு காவல் அதிகாரியாக இருக்கிறாள், தற்செயலாக ஒரு பிக்பாக்கெட் விவகாரத்தில் தவறுதலாக கதாநாயகனை கைது செய்கிறாள். அவன் தான் ஒரு இயற்பியல் ஆசிரியர் என்றும், நான் அந்த திருடனை துரத்திக்கொண்டிருந்தேன், நீங்கள் என்னை தவறுதலாக பிடித்துவிட்டீர்கள், வேண்டுமானால் அவனை வரைந்து தருகிறேன் என்கிறான். மற்ற அதிகாரிகள் ஒத்துகொண்டபோதிலும் அவளால் தான் தவறு செய்திருக்கமுடியாது என நினைக்கிறாள். அங்கிருந்து வெளியேறும் அவனை பின்தொடருகிறாள். வழியில் அந்த திருடன் விட்டுச்சென்ற பொருட்களை பார்க்கவே அங்கே நிற்கிறான். மீண்டும் அவள் அவனை கைது செய்கிறாள். எனக்கு தெரியும் நீ நேரா இங்கதான் வருவேன்னு, என் கணிப்பு என்னைக்குமே பொய்யானதில்லை, என்கிறாள்.
ஆனால் அவனை ஸ்டேசனுக்கு கொண்டுவரும்போது அங்கே நிஜ திருடன் பிடிபட்டிருக்கிறான். உடனே அவள் அவனை விட்டுவிட்டு வெளியேறுகிறாள். கடுப்பாகிப்போன அவன் “தப்புதான் பண்ணிட்ட ஒரு சாரி கூட கேட்கமுடியாதா? உன்னால” என்று கத்துகிறான். அவள் மிகவும் சாதாரணமாக “சாரி என்ற சொல்லுக்கு என் வாழ்க்கையில் இடமேயில்லை, வேண்டுமானால் உன் பெயரை சாரி என்று மாற்றிக்கொள். பிறகு வேண்டுமானால் முயற்சி செய்கிறேன்” என்கிறாள்.
கடினமான மனதுடன் வெளியேறும் அவனுக்கு அவனது பள்ளியில் மாணவிகளுக்கு பாதுகாப்புக்காக அவளையே நியமிக்கிறார்கள். ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டு வரும்போது சிலர் ரோட்டில் புகைப்பிடித்தவாறே வருகின்றனர். ஒரு காவல் அதிகாரியாக அவர்களை இது தவறு என்று சொல்கிறாள், அவர்கள் இதுகென்ன ஃபைனோ அதை சொல்லு வாங்கிட்டுப்போ என்று சொல்லி சிகரெட்டை எறிகிறார்கள். கோவமடையும் அவள் அவர்களை அடித்து அதை சுத்தம் செய்ய வைக்கிறாள். அடிபட்ட அவர்கள் இதுக்கு நீ எங்கப்பாவுக்கு பதில் சொல்லியே ஆகனும் என்கிறார்கள்.
இதேபோல ஒரு போதை மருந்து கும்பலிடம் தனியாக போராட வேண்டிய நிலைவருகிறது. என்னுடன் துணைக்கு வருகிறாயா? என்கிறாள். மறுக்கும் அவனை தன் கையோடு விலங்கால் கட்டிக்கொண்டு அழைத்து செல்கிறாள். அவனது வெகுளித்தனம் அவளுக்கு பிடித்திருக்கிறது. தன்னோடு அவன் இருப்பதை விரும்புகிறாள். ஒருவழியாக எல்லாம் முடிந்து வெளியே வருகிறார்கள். இப்பொழுதாவது என்னை இந்த விலங்கிலிருந்து விடுவிப்பாயா? என்கிறான். இல்லை என்னால் முடியாது சாவி அங்கே நடந்த களேபரத்தில் தொலைந்து போய்விட்டது என்கிறாள். வேறுவழியின்றி இருவரும் கரங்கள் பிணைக்கப்பட்ட நிலையிலேயே தொடர்கின்றனர். அன்றிரவு இருவரும் தனித்தனி கட்டிலில் படுத்திருக்கின்றனர். ஆனால் இருவரின் கரங்களும் இணைந்திருக்கின்றது, அதிலும் மங்வாவின் சுண்டுவிரல் அவளின் சுண்டு விரலை பற்றியிருக்கிறது. காலையில் முதலில் எழுந்துவிடும் யூ, அனிச்சையாய் தன் கைகளை விலங்கிலிருந்து விடுவித்து தன் தலைமுடியை சரிசெய்துகொண்டு மீண்டும் தன் கைகளை விலங்கிலேயே இணைத்துக்கொள்வாள். இருவருக்குள்ளும் காதல் வந்த விஷயத்தை வெகு அழகாக காட்டியிருப்பார்கள். அழகான இசையுடன் கவிதை போன்ற காட்சி இது.
பள்ளிவிடுமுறையின்போது தன் சொந்த ஊருக்கு அவளை அழைத்துசெல்கிறான். எங்கும் பச்சை விரிந்திருக்கும் அழகிய மலையுச்சியில் இருக்கும் அவனது பூர்வீகவீடு. மலையுச்சியில் நின்றுகொண்டு இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு நான் இப்போது பறப்பதைப்போல உணர்கிறேன், நிச்சயம் நான் என் முன் ஜென்மத்தில் காற்றாகத்தான் இருந்திருப்பேன். இனி இறந்தாலும் காற்றாகவே மாறி சுதந்திரமாய் இந்த உலகை சுற்றி சுற்றி வருவேன் என்கிறான். யூவும் அதை ஆமோதிக்கிறாள். பிறகு அன்றிரவு அவள் ஒரு கதை சொல்கிறாள். மங்வா நீயூம் அந்த கதையில் வரும் இளவரசி போல நான் இறந்தபிறகு இறந்துவிடுவாயா என்கிறான். இல்லை நான் சாக மாட்டேன் என்கிறாள். இதி சற்று வருத்தமடையும் அவன் காரை வேகமாக ஓட்டுகிறான். அப்போது ஏற்படும் விபத்திலிருந்து யூ, மங்வாவை காப்பாற்றுகிறாள்.
மருத்துவமனையில் இனி உன்னை எப்போதும் பிரிய மாட்டேன் என்கிறான். அதைத்தொடர்ந்து எப்போதும் அவளுடனே இருக்கிறான். அப்படி ஒரு சமயத்தில் ஒரு துப்பாக்கி சூட்டில் தவறுதலாக சுடப்பட்டு மங்வா இறந்துபோகிறான். அதில் மிகவும் மனமுடைந்துபோகும் அவள் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறாள். ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்படுகிறாள். ஒருமுறை மருத்துமனையில் இருக்கும் அவள் ஒரு காற்றாடி பறப்பதைப் பார்த்து அதை தொடருகிறாள். அதை பார்க்கும்போது அது முன்பொரு நாள் மங்வா செய்துகொடுத்ததைப்போலவே இருப்பதால், அதை வீட்டுக்கு கொண்டுவருகிறாள். அந்த காகிதம் அவன் செய்துகொடுத்த அதே காகிதமாக இருக்கிறது.
ஆக, மங்வா தான் முன் சொன்னதுபோல தன் இறப்பிற்கு பிறகு காற்றாக மாறி தன்னுடன் இருப்பதாகவே கருதுகிறாள். காற்றோடு பேசுகிறாள். தன் அறைமுழுவதும் காற்றாடிகளை செய்து வைதுக்கொண்டு மங்வாவின் வருகைக்காகவே காத்துகொண்டிருக்கிறாள். அவள் வாழ்வினை ஒவ்வொரு நொடியிலும் மங்வா கூடவே இருக்கிறான். அவளுக்கான புதிய துணையையும் அவனே சொல்கிறான்.
நிஜத்தில் இப்படி நடக்க முடியாது என்றாலும், தொய்வின்றி பார்க்கமுடிகிறது. படத்தின் பாதிக்குமேல் காற்று ஒரு கேரக்டராகவே வருகிறது. ரம்மியமான இசையும், காதலும் படம் நெடுக நிரம்பியிருக்கிறது. தொடர்ந்து கொரியத்திரைப்படங்களாக பார்ப்பதற்கு இதுவும் ஒரு காரணம். கொஞ்சம் நேரமிருக்கிறது, ஒரு ஃபீல் குட் மூவி பார்க்கணும்ங்கிற யோட்சனை இருப்பவர்களுக்கு என்னுடைய சாய்ஸ் இந்த படம். MY SAASY GIRL, 500 OF SUMMER இந்த இரண்டு படங்களும் இன்னும் மிச்சமிருக்கிறது, என்னுடைய 10 SENSATIONAL ROMANTIC MOVIES என்கிற லிஸ்டில். பார்த்துவிட்டு பதிவிடுகிறேன்.
படத்தின் ட்ரெய்லருக்கு இங்கே சுட்டவும்

.jpg)