சிங்கம் டிக்கெட் கிடைக்காம கற்றது களவு படத்திற்கு போனேன். கிருஷ்ணா வின் இதற்கு முந்தைய படமும் எதிர்பார்ப்பில்லாமல் போனதால் ரசிக்க முடிந்தது. படத்தில் வரும் முன்று பாடல்களையும் கட் பண்ணி அந்த நகைச்சுவை என்கிற பெயரில் போட்ட மொக்கையை தவிர்த்திருந்தால் இன்னும் விருவிருப்பாக இருந்திருக்கும். முதல் பாதி கதைக்குள்ள போகமுடியாத அளவிற்கு தூக்கியடிக்குது, நீரவ் ஷா கேமரா. மனுஷன் பூந்து விளையாடியிருக்கார். இரண்டாவது பாதி கேமரா உட்பட எதையும் கவனிக்க முடியாத படி வேகமாய் இருக்கிறது படம், தவறுகள் மறையுமளவிற்கு. ஓரளவுக்கு பரவயில்லைன்னு சொல்லக்கூடிய படத்தை நல்லா இருக்குன்ன் சொல்லவச்சிருக்கு இதற்கு முன் பார்த்தப்டங்கள். :-)
கிருஷ்ணா, பார்க்க எஸ்.ஜே.சூர்யா மாதிரி இருக்கார். நல்லா சண்டை போடறார், டேன்ஸ் ஆடறார். நல்ல பேனர், நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்தால் ஒரு மினிமம் கியாரண்டி நடிகர் கிடைப்பார், தமிழ் திரையுலகிற்கு.
பெட்டர் லக் கிருஷ்ணா. அந்த டைட்டில் பச்சோந்தி நல்ல கிரியேட்டிவிட்டி, அதைசெய்த கிராபிக் நிபுணர்களுக்கு வாழ்த்துக்கள்.
கிருஷ்ணா, பார்க்க எஸ்.ஜே.சூர்யா மாதிரி இருக்கார். நல்லா சண்டை போடறார், டேன்ஸ் ஆடறார். நல்ல பேனர், நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்தால் ஒரு மினிமம் கியாரண்டி நடிகர் கிடைப்பார், தமிழ் திரையுலகிற்கு.
பெட்டர் லக் கிருஷ்ணா. அந்த டைட்டில் பச்சோந்தி நல்ல கிரியேட்டிவிட்டி, அதைசெய்த கிராபிக் நிபுணர்களுக்கு வாழ்த்துக்கள்.
--------------------------------------------------------------------
நல்ல ஒரு படம் பார்த்தேன், அ குட் இயர்-ன்னு. ரிட்லி ஸ்காட் (:-)) அவரோட பேவரைட்(என்னுடைய பேவரைட்டும் கூட) ரஸல் க்ரோ, ம்,ஈண்டும் இணைந்த படம். ரேப்பிட் ஷேரில் ஒருவாரமாய் கஸ்ட்டப்பட்டு டவுன்லோடி பார்த்தேன். ஒரு பதிவு போடலாம்ன்னா நம்ம கருந்தேள் முந்திகிட்டாரு. அவருடைய விமர்சனமே நல்லா இருந்ததால நான் எழுதல, இங்க படிங்க படம் பாருங்க, டிவிடி வாங்குங்க இல்லை டவுன்லோட் பண்ணிக்குங்க, நல்ல மழை நாளில் பாருங்கள் இன்னும் அழகாய் இருக்கும் மழை.
--------------------------------------------------------------------
சட்டென நனைந்தது நெஞ்சம்,
சர்க்கரையானது கண்ணீர்
இன்னும் இன்பம் ஒரு துன்பம்,
துன்பம் எத்தனை பேரின்பம்
உடலுக்குள் மல்லிகை தூறல்,
உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு,
உயிரை மட்டும் விட்டுவிடு.
எந்தன் வாசல் வழி
காதல் நடந்துவரும் என்று
காத்துக்கிடந்தேன் - அது
வானில் பறந்துவந்து
கூரை திறந்துவரும் என்று
இன்று நானும் தெளிந்தேன்.
தாவி வந்து எனை அணைத்தபோது
எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன்.
சாவின் எல்லைவரை சென்று மீண்டும்
இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்.
துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைத்திடும் ஆதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை.
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு,
உயிரை மட்டும் விட்டு விடு
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்வரும் இந்த பாடல், அதிகம் கவனம் பெறாத பாடல் அல்லது முக்கியத்துவம் இல்லாத பாடல். இதிலேயே காட்சிக்கு பொருந்தகூடிய அருமையான வரிகள் மற்றும் ரம்மியமான இசையை கொடுத்திருக்கும் கவிஞரையும் இசையமைப்பாளரையும்.... ம்ம்ம். எனக்கு ரொம்ப பிடிச்சிடுக்கு.
ஒரு நாள் ஒரு பொழுது
உன்மூஞ்சக் காங்காம
உசிரு அல்லாடுதே
மறுநாள் வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாமல்
மனசு தள்ளாடுதே
அந்திமந்தாரை படத்தில் வரும் இந்த பாடலும் ரகுமான் ஆல்பங்களில் அதிகம் கவனிக்கப் படாமல் போன பாடல்களில் ஒன்று. கேட்டுப்பாருங்க. ரம்மியமா இருக்கும். இது போல படத்தில், கேசட்டில் வராத அல்லது அதிகம் கவனம் பெறாமல் போன நல்ல பாடல்கள் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்க நண்பர்களே!
--------------------------------------------------------------------
ஒரு பதிவை எழுதிமுடித்து அதை போஸ்ட் செய்வதற்க்குள் ஒரு மூன்று முறையாவது படித்து பார்த்துவிட வேண்டியிருக்கிறது. எங்கே இதில் எந்த வரியாவது யாரையாவது குறிப்பிடும்படியாக இருக்கிறதா? என்று. ஒருபுறம் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது.
மோதல்கள் இல்லாமல் பயணிக்கவே முடியாதா? வெறும் நண்பர்களையும் மட்டும் பெற இயலாதா, நாலு நண்பர்கள் கிடைத்தால் ஒரு எதிரி இலவசமா, என்ன? யாருடைய செயல்களுக்கும் நான் நியாயம் கற்பிக்கவுமில்லை, வாதிடவுமில்லை. எல்லா நல்லவனுக்குள்ளாகவும் ஒரு கெட்டவன் இருக்கிறான். அவனை வெளிக்கொண்டுவராத வரைக்குமே, நல்லவன். முடிந்தவரை அவனை உள்ளேயே பூட்டிவையுங்கள். நாம் நண்பர்களாகவே இருப்போம். கூடித்தேர் இழுப்போம்.
ஊதி எரியவைக்கும் உதடாய் இரு
கற்றவை, பற்றவை
தீயவை, தீயை வை.
என்ற பாரதியின் வார்த்தைகளை கொண்டு வளம் சேர்ப்போம்
வழிகின்ற கண்ணீரில் நிறமில்லையே!
உதிரத்தின் நிறமிங்கு வேறில்லையே!
காற்றுக்கு திசையில்லை, தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்.
மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும்போது
மனதோடு மனதிங்கு பகை கொள்வதேனோ?
மனமெங்கும் மதம் ஓயட்டும் - தேசம்






