அதகளம்

ஆடுகளம் – எப்போ வரும் இந்த மாதிரி ஒரு தமிழ் சினிமா? என்கிற கேபிள் உட்பட பலருக்கும் மற்றுமொரு உதாரணம். சிம்பிளா சொன்னா ஆடுகளம் – அதகளம்.


படம் முடிந்ததும் பிலிமோகிராபி என்ற டைட்டிலின் கீழ் நிறைய பெயர்களை போடுகிறார்கள். எனக்கு டக்குன்னு கண்ணு பட்டது அமேரோஸ் பெரோஸ். அலைபாயுதே, ஆயுதஎழுத்து போன்ற படங்களுக்கான திரைக்கதையின் மூலமென சொல்லப்படும் படம். இந்த படத்தில் பிலிமோகிராபி என்ற டைட்டிலின் கீழ் அமேரோஸ் பெரோஸ் மற்றும் சில பெயர்களைப் பார்க்கும்போது டக்கென்று எழுந்து கைதட்ட தோன்றியது. அது ஏன்? என்றோ மற்ற விவாதங்களுக்கோ நான் வரவில்லை. ஆடுகளம் திரைக்கதையை எழுதும்போது உதவியாய் இருந்த, பாதித்த சம்பவங்களை, நாவல்களை, சினிமாக்களை ஃபிலிமோகிராபி என்கிற பெயரில் வெற்றிமாறன் நினைவு கூர்வதாகவே நான் நினைத்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் வெற்றிமாறன் மற்றும் பாரட்டுக்கள்

அமேரோஸ் பெரோஸ். வீதிகளில் நடக்கும் நாய் சண்டையை களமாகக் கொண்டபடம், நாய்சண்டையும் அதன் வீரியமும், அதன் விளைவுகளும் அதனையே பிரதானமாகக் கொண்ட மனிதர்களும் அவர்களின் பின்புலன்களுமென பின்னப்பட்ட கதை. ஆடுகளத்தில் சேவல் கட்டு அவ்வளவுதான், என்று எளிதாக சொல்லிவிடமுடியாது. ஏனென்றால் இதன் பின்னால் உள்ள உழைப்பு, அவ்வளவு. ஹேட்ஸ் ஆப் ஆடுகளம் டீம்.

ஆடுகளத்தில் சேவல் கட்டும் அதனைப் பிரதானமாக்க் கொண்ட மனிதர்களையும் சுற்றி வருகிறது கதை.

பேட்டைக்காரன் – ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், சேவல் சண்டையையே தன் மூச்சாகக் கொண்டிருக்கும் மூர்க்கமான மனிதன். அவரது அந்த முரட்டு தோற்றமும், அடர்த்தியான மீசைக்குள் புதைந்திருக்கும் முகமும், வெறியேறிய கண்களும், கறையேறிய பற்களுமாய் அசலாய் பரம்பரை பரம்பரையாக சேவல்கட்டு நடத்தும் மனிதரை கண்முன் நிறுத்துகிறார். இது இவருக்கு முதல் படமாம், சத்தியமா நம்ப முடியலை. மனுஷன் வாழ்ந்திருக்கார். கோவமும், நமுட்டு சிரிப்பும், வன்மமும் படரும் கண்களை நொடிக்கொரு முறை திரையில் மாற்றி மாற்றி கொண்டுவரும் இவர் கண்கள்தான் பிரதானம். குறிப்பாக கிளைமாக்ஸில் தனுஷை பார்க்கும்போதும், அதன் பின்னும் இவரது நடிப்பு. அசாத்தியம். வாழ்த்துகள் சார்.

தொரை – கிஷோர், பேட்டைக்காரனின் இருகரங்களில் ஒருவன், மற்றவன் கருப்பு தனுஷ். சேவல் கட்டுக்கு சேவலை பயிற்றுவிக்கும் பேட்டைக்காரனின் பிரத்யேகமான யுக்தியை அறிந்த அவரது இரு மாணவர்கள். தொரை ஒயின்ஷாப்பில் பார் வைத்து நடத்தி வருகிறான். கருப்பு வெட்டிப்பயல், அண்ணே, அண்ணே என பேட்டைக்காரனே உலகமென சுற்றித்திருபவன்.

சேவல்கட்டில் இவர்களின் பரம்பரை எதிரியான ரத்னவேல், ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர். ஒவ்வொரு முறையும் சேவல் சண்டை முடிந்து வீடு திரும்பும் ரத்தினத்தை, என்னப்பா ஜெயிச்சிட்டியா? என்று கேட்கும் வயதான கிழவி. இல்லையென்றதும் தன் குடும்ப மானமே போனதாக ஒப்பாரி வைத்து அழுமளவிற்கு சேவல் சண்டை என்பதை ரத்தத்தில் ஊறிப்போன விஷயமாய்க் கொண்ட இவர்கள்தான் பிரதான பாத்திரங்கள்.

கடைசியாய் நடந்த சண்டையில் தோற்றுவிட்டதால் அடுத்து நடக்கப்போகும் சண்டையை எதிர்நோக்கியபடி ரத்தினவேல், எப்படியாவது அடுத்த சேவல்கட்டை நட்த்திவிட வேண்டுமென்ற முனைப்புடன் அதற்காக எதையும் செய்யத்துணிந்தவனாயிருக்கிறான். தன்னுடைய அதிகாரத்தாலும் பணபலத்தாலும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட சேவல் சண்டையை நடத்த அனுமதி பெறுகிறான். இந்த சண்டையில் தோற்றால் மொட்டையடித்து மீசையை மழித்துக்கொண்டு சேவல் சணடையை விட்டே போய்விட வேண்டுமென்கிற கடினமான முடிவை எடுக்கவேண்டிய ஒரு அவமானமான சந்தர்ப்பத்தை சந்திக்கிறார், பேட்டைக்காரன்.

தனது உயிருக்கும், மரியாதைக்கும் சமமானதொரு பந்தயத்தில் கலந்துகொள்ளப்போகும் பேட்டைக்காரன் தனது சகாக்களான கருப்பையும், தொரையையுடனும் இணைந்து சேவல்களை தயார் செய்கின்றார். ஒருமுறை சண்டையில் தோற்றுவிட்ட சேவலை அறுத்துவிடுவது என்பது இந்த சண்டையில் எழுதாத விதி. அப்படி ஒருமுறை சண்டையில் தோற்ற கருப்புவின் சேவலை அறுத்துப்போட கட்டளையிடுகிறார், பேட்டைக்காரன். தன் சேவலின் மீது அதீத நம்பிக்கைக்கொண்ட கருப்பு அதனை கவனமாக தயார்செய்து வருகிறான். அந்த சேவலை இந்தபோட்டிக்கு கொண்டுவருகிறான்.

கடுமையான சேவல் சண்டை, பின்புலத்தில் தொடரும் பகை, எந்த நேரத்திலும் மனிதர்களுக்குள்ளும் பற்றிகொள்ளுமென்கிற வெறியோடு பரபரப்பாக காட்சிகள் நகரும் நேரத்தில் பேட்டைக்காரனுக்கும் அவரது சிஷ்யன் கருப்புவிற்கும் இடையில் விரிசல் விடுகிறது, அந்த சேவலின் காரணமாக. தன் சொல்லை கேட்க்காமல் அந்த சேவலை இன்னும் வைத்திருக்கும் கருப்பின்மீது வெறுப்பை வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் பேட்டைக்காரனின் கட்டளையையும் மீறி தன் சேவலை களத்தில் இறக்குகிறான் கருப்பு. தொடர்ச்சியாக மூன்று வெற்றியையும், மூன்று லட்சம் பரிசுத்தொகையையும் பெறுகிறான்.

அந்த சேவல் ஜெயிக்காது என்று சொன்ன தனது வார்த்தை பொய்யாகிவிட்ட ஏமாற்றம், கொஞ்சம் கொஞ்சமாக கருப்பின் மீது பொறாமையாக மாறுகிறது, பின் பகையாய், பின் கொடூர வன்மமாய், பழிவாங்குதலின் உச்சமாய் தொக்கி நிற்கிறது. தன் சிஷ்யன் வெற்றி பெற்றதில் சந்தோசம்தானே வர வேண்டும், இதில் கோபப்பட என்ன இருக்கிறது? என்கிற சாதாரணமான கேள்விக்கு அசாதாரணமான திரைக்கதையாலும், தனுஷ்-ஜெயபால் இருவரின் செமத்தியான நடிப்பாலும் பதில் சொல்லியிருக்கிறார், வெற்றிமாறன். அவ்வளவுதான் படம்.

ஜென்ம பகையான பேட்டைக்காரனுக்கும் ரத்னவேலுக்கும் இடையே இருக்கும் பகை மறைந்து புதிதாக பற்றி எரியும் கருப்பின் மீதான பேட்டைக்காரன் வன்மம்தான், படத்தின் ஹைலைட். கருப்பை புரிந்துகொள்ள எவ்வளவோ சந்தர்ப்பங்களும், மனிதர்களும் அவருக்கு உதவி செய்கின்றனர். ஆனால் பழிவாங்குதலின் வெறி அவரை பிடித்து ஆட்டுகிறது. கருப்புவின் நியாயங்களை சொல்லும் காட்சியில், அட ஆமால்ல அவன் பாவம்யா என்று ஒரு எண்ணம் மனதில் படம் பார்க்கும் நமக்கு ஓடும், ஆனால் அடுத்த நொடியில் தன்னுடைய பாய்ண்ட் ஆஃப் வியூவில் ஒரு நியாயத்தை எடுத்துவைக்கும் பேட்டைக்காரனின் கேரக்டர். சான்ஸே இல்லை.

தனுஷ், ரொம்ப காரமான கடுகு. ஆடுகளம் இசை வெளியீட்டில் நடிகர் சூர்யா பேசும்போது ஒரு ஹீரோவை இப்படி காதலிக்கும் ஒரு டைரக்டரை நான் பார்த்த்தேயில்லை, இந்த விஷயத்தில் நான் தனுஷைப்பார்த்து மிகவும் பொறாமைப்படுகிறேன் என்று சொன்னார். நிச்சயம் எல்லா நடிகர்களும் பொறாமைப்படும்படியான ஒரு கெமிஸ்ட்ரிதான் வெற்றி-தனுஷ். இந்த கேரக்டரை தனுஷைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்கமுடியாது. இது நிச்சயம். மனுஷன் அப்படியே கருப்பாவே வாழ்ந்திருக்கான். தனுஷ் கேரியரில் இது நிச்சயமான மைல்ஸ்டோன். வாழ்த்துகள் தனுஷ்.


படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம் கிளைமேக்ஸ், படம் பார்த்தவர்களுடன் இது பற்றி பேசலாம் இப்போது வேண்டாமென நிடைக்கிறேன்.


டாப்ஸி, என்ன சொல்ல பட்டர்பிளை, சூரியன் எஃபெம் விளம்பரம் பார்தத்து முதலே இந்த பெண்ணை படத்தில் இம்மி இம்மியாய் ரசிக்கவேண்டுமென நினைத்திருந்தேன். சாரி டாப்ஸி, நீங்க வர காட்சியிலும் நான் தனுஷைத்தான் அதிகம் பார்த்துக்கொண்டிருந்தேன். தனுஷின் காதல் எப்பிஷோட் தேவையில்லையோ என நினைக்கும்படியான அழுத்தமற்ற பல காட்சிகள் இருக்கின்றது. அதைத் தவிர்த்திருக்கலாம். ஆனாலும் கிளைமேக்ஸில் தனுஷின் ஒற்றை வரி, கதையில் அவரது காதலை, அந்தப்பெண்ணின் இருப்பை நியாப்படுத்துகிறது.

எனக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கிறேன், விமர்சனமாய் அல்ல. ரத்னவேலு, கருப்புவின் நண்பன், ரத்னவேலின் அம்மாக்கிழவி, பேட்டைக்காரனின் இளம் மனைவி (வழக்கம்போல அவர் அழும் அந்த ஒரு காட்சி தவிர்த்து), அயூப், கான்ஸ்டபிள் என இன்னும் சொல்ல நிறைய விஷயங்கள உண்டு என்றாலும் பதிவின் நீளம் கருதி முடிக்கிறேன். தியேட்டரில் சரியான ஒலியமைப்பு இல்லையென நினைக்கிறேன், நிறைய இடங்களில் வசனங்கள் புரியவேயில்லை. இன்னொருமுறை படம் பார்க்கவேண்டும்.

24 கருத்துரைகள்:

டெனிம் said...

உங்கள் விமர்சனம் படத்தினை உடனே பார்க்க தூண்டுகிறது...... நல்ல விரிவான அலசல்...

மோகன் குமார் said...

//பிரிவு: உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான படைப்புகள்

உடான் - விமானம் - காத்தாடி - ஒரு கனவு - முரளிகுமார் பத்மநாபன்----இரண்டாம் பரிசு//

Congrats for winning prize in Tamil manam.

nellai ram said...

நல்லது பொங்கல் வாழ்த்துகள்

எஸ்.கே said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

ஆதவா said...

என்ன தியேட்டரில் பார்த்தீர்கள்!!???

பலரது விமர்சனத்தைப் பார்க்கும் பொழுது ஒரு மிக நல்ல சினிமா இது என்றூ தெரிகிறது!!!

மிக அருமையான விமர்சனம்!!

தர்ஷன் said...

வெகு சிறப்பான ஒரு விமர்சனம்
அப்படியே தமிழ் மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

தல வரிக்கு வரி அப்படியே ரீப்பிட்டிக்கிறேன் ;)))

நீங்க சொல்லுவது போல ஒலியமைப்பு சரியில்லை தான் ;(

மீண்டும் இந்த வாரம் சொல்லவேண்டும் ;)

கோபிநாத் said...

விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;)

விக்னேஷ்வரி said...

படத்துக்கு PRO ஆகிட்டீங்களா ப்ரோ. சூப்பர். நானும் பார்க்க முயற்சிக்கிறேன்.

வெயிலான் said...

முதலில் உடானுக்கு வாழ்த்துக்கள் பாஸ்!

ஆடுகளம் எங்க ஊரில் வெளியாக வில்லை. அங்கு வந்து தான்....

முரளிகுமார் பத்மநாபன் said...

@ டெனிம்
நன்றி நண்பா, தொடர்ந்து’ வாசிப்பதற்கும் உங்களது பின்னூட்டத்திற்கும்.
:-)
உங்களின் லீப் இயரையும் படித்தேன், அழகு

முரளிகுமார் பத்மநாபன் said...

@மோகன்குமார்
நன்றி தலைவரே! உங்க பேச்சு நல்லாயிருந்தது, நிகழ்ச்சியில்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@நெல்லைராம்
நன்றீ நண்பரே

முரளிகுமார் பத்மநாபன் said...

@எஸ்.கே
நன்றி தலைவரே! உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதவா
யுனிவர்சல் தியேட்டரில்தான் பார்த்தேன்.
உங்களின் பார்வையும் அழகு...

முரளிகுமார் பத்மநாபன் said...

@தர்ஷன்
நன்றி நண்பா, ஓட்டுப்போட்ட அத்தனைபேருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபிநாத்
உண்மைதான் தல, படத்திலுள்ள ஒலி அமைப்பின் கோளாறுதான் அது, அனைவரும் சொல்லிவிட்டனர். இது ஒரு குறைதான். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@விக்கி
ஆமா விக்கி, புடிச்ச படங்களுக்கு கிட்டதட்ட P.R.O வேலைதான் பார்க்கிறேன். யாம் பெற்ற இன்பம்.......

முரளிகுமார் பத்மநாபன் said...

@ வெயிலான்
தல முதல் நன்றி உங்களுக்குத்தான். எனது எல்லா வெற்றிகளிலும் உங்கள் பங்கு நிச்சயம் இருக்கிறது என்பது உங்களுக்கும் தெரியும்.

நன்றீ தல
(இது எழுத்துப்பிழை அல்ல, பெரிய நன்றி)

அப்பாதுரை said...

உங்கள் பதிவு விருது பெற்றது நிறைவாக இருக்கிறது.

cheena (சீனா) said...

அன்பின் முரளி - முதலில் தமிழ் மணத்தில் வெற்ரி பெற்றதற்கு நல்வாழ்த்துகள் - பாராட்டுகள். ஆடுகளம் விமர்சனம் அருமை - இயல்பாக இருக்கிறது - எங்கள் வீடின் அருகில் ஓடுகிறது. இன்றே பார்த்துவிடுகிறோம். நல்வாழ்த்துகள் முரளி - நட்புடன் சீனா

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து ஊக்கம் கொடுத்ஹ்டுவரும் உங்களைப்போன்ற நண்பர்களால்தான் இவையனைத்தும் சாத்தியப்படுகிறது. நன்றி

முரளிகுமார் பத்மநாபன் said...

@சீனா
ஐயா வணக்கம், மிக்க நன்றி. அவசியம் பாருங்க, வெற்றிமாறனின் திரைமொழி, எளிதில் புரிந்துகொள்ளும் படியாகவும் வியக்கதக்க வகையிலும் இருக்கிறது. முடிந்தால் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

மோகன் குமார் said...

//@மோகன்குமார்
நன்றி தலைவரே! உங்க பேச்சு நல்லாயிருந்தது, நிகழ்ச்சியில்//

நன்றி! இப்போ தான் பாக்கிறேன். இங்கே தான் சொல்றதா? :))

உங்க தலைவர் பேசினதால் கடைசி வரை பாத்திருப்பீங்க :))

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.