அம்மாவின் நண்பர்


கிறுக்கல்கள் என்கிற தலைப்பில் இதுவரை 42 கிறுக்கல்களை எழுதியாகிவிட்டது. என்றாவது ஒரு நாள் நானும் ஒரு நல்ல கவிதையை எழுதுவேன் என்கிற நம்பிக்கையை தொடரச் செய்யவே எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் உற்சாக டானிக்தான், இந்த கிறுக்கல்கள். இதை படிக்கிற சில நண்பர்கள் நல்ல கவிதை, வாழ்த்துகள் என்கின்றனர். சிலர் எண்டர் தட்டி எழுதுவதெல்லாம் கவிதைகள் அல்ல. கவிதைக்கு என்று எப்பொழுதுமே ஒரு நயம் உண்டு. இலக்கணம் உண்டு, விதிமுறைகளும் உண்டு. நீ எழுதியது நன்றாகவே இருந்தாலும் இது கவிதை அல்ல. எப்போதும் கவிதை என்று இதற்கு தலைப்பிட்டு விடாதே என செல்லமாக கண்டித்துள்ளனர். 

கிறுக்கல்களை, கவிதை என்று பாராட்டும்போது அட சும்மாதாங்க அடி அடியா எழுதுயிருக்கேன், கவிதையெல்லாம் ஒண்ணுமில்லைன்னு மிக தன்னடக்கமாக சொல்லிக்கொள்வேன். அதேசமயம் இது கவிதை அல்ல என்று சொன்னால், ஆம் உண்மைதான் இது கவிதை அல்லவே என சுலபமாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை, ஏன்?

எனக்குத் கவிதை எழுதப் பிடிக்கும். சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லிவிடலாம். மனிதர்களின் பின்புலத்தை விவரிக்கத் தேவையில்லை. படிப்பவர்கள் இலகுவாக உள்ளே நுழைய முடியும். நான் கல்யாண்ஜி கவிதைகளிலும் கலாபிரியாவின் கவிதைகளிலும் நுழைந்தது போல. கதையைப்போல எடுப்பும், தொடுப்பும், முடிப்பும் தேவைப்படுவதில்லை. எடுத்த எடுப்பிலேயே கருவை தொடமுடியும், முடிவை படிப்பவர்களின் கையிலேயே கொடுத்துவிடவும் முடிகிறது. 

இந்தவருட புத்தகத்திருவிழாவில் பெரும்பாலும் கட்டுரைகளும் கவிதைகளையுமே தேர்ந்தெடுத்து வாங்கியிருக்கிறேன். இனியெப்போதும்போல படித்ததை பாதித்ததை உங்களிடம் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். அதன் ஆரம்பமாகத்தான் என் வலைப்பக்கத்தில் இடதுபுறத்தில் கவிதைபக்கம் என்று இடம் ஒதுக்கி பிடித்த கவிதைகளை அதில் கொடுத்து வருகிறேன். 

அங்கே கொடுப்பது இருக்கட்டும். நேற்று படித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் நா.முத்துகுமார் அவர்கள் எழுதிய ஒரு கவிதை படித்தேன். கொஞ்சமே பெரிய கவிதையாயிருந்தாலும் படித்துமுடித்தவுடன் நானும் அம்மாவின் நண்பரோடு ஆரம்ப பாடசாலையிலேயே தஙக நேர்ந்தது. சிறுவயதில் அம்மாவை இழந்த நண்பர்கள் எனக்கிருக்கிறார்கள். எனக்கு அவர்களையும் தெரியும் அவர்கள் மனதும் தெரியும். என் நண்பர்கள் மட்டுமல்லாது சிறுவயதிலேயே தாயை இழந்த அனவருக்குமான என் டெடிகேட்டிவ் வரிகள் இவை.....


அம்மாவின் நண்பர்

ஆரம்ப பாடசாலையில்
அம்மாவுடன் படித்தவரை
நேற்று ஒரு திருமணத்தில்
சந்திக்க நேர்ந்தது.

முப்பது வருடத்திற்குப்  பிறகு
சென்னைக்கு வருகிறாராம்.

கப்பலில் வேலையாம்
பர்மா மலேசியா சிங்கப்பூரென்று
கோபால் பல்பொடியைப் போல்
சென்று வந்த நாடுகளை
சிலாகித்துக்கொண்டிருந்தார்.

கடலோடிய களைப்பு
முன் வழுக்கையில் தெரிந்தது
அவரது பால்யத்தில் ஒளிந்திருந்த
அம்மாவின் பால்யத்தை
ஆர்வமுடன் விசாரித்தேன்

சிறுசிறு சண்டையில் தொடங்கி
பேனா முள்ளாய்
அம்மா கிழித்த்துவரை
சிரித்தபடி சொன்னார்.

அம்மாவின் கோபம்
அவரது வலது கையில்
தழும்பாக இருந்தது.

அம்மாவின் கையெழுத்து
அழகாக இருக்குமாம்
அவரது மூத்த மகளும்
அம்மாவைப் போலவே
அழகாக எழுதுவாளாம்
அவருக்கும்
அம்மாவுக்கும்தான்
படிப்பில் போட்டியாம்.

கடிகாரங்கள் திருடிவிட்ட
ஐம்பது வருடங்களை
திரும்பவும் கொண்டு வந்து
கண்முன் கொண்டுவந்தவர்
கிளம்புமுன் கேட்டார்.
அம்மா வரலையா
தம்பி.

வழக்கம்போல் அழாமல்
வார்த்தைகள் சேகரித்து
மென்மையாகச் சொன்னேன்
எனக்கு ஐந்து வயது
இருக்கும்போதே
அம்மா இறந்துட்டாங்க

ஒலித்துகள் மூர்ச்சையாகி
மெளனம் எங்களை சூழ்ந்த பிறகு
ஆரம்ப பாடசாலையில்
அவரை அமர வைத்துவிட்டு
நான் வெளியேறினேன்.

                                        -நா.முத்துகுமார்24 கருத்துரைகள்:

இளங்கோ said...

இந்த மாதிரி கவிதைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகள் முரளி.

சி.கருணாகரசு said...

உங்க பகிர்வுக்கு மிக்க நன்றிங்க ... கவிதை மனதை நெகிழச்செய்தது.

இராஜராஜேஸ்வரி said...

உருக்கமான கவிதை.

மோகன் குமார் said...

கவிதை மனதை கனக்க வைக்கிறது

கோபிநாத் said...

தல ரொம்ப நன்றி - உங்கள் வரிகளும் நா.மு வரிகளும் சேர்த்து மிக அருமையான பதிவு இது ;)

சுசி said...

நல்ல பகிர்வு.

கலகலப்ரியா said...

:)

அப்பாதுரை said...

நல்ல முயற்சி. உங்கள் அறிமுகம் பிரமாதம். நாம் எழுதியக் கவிதையை கவிதையில்லையென்றால் ஏற்க மறுக்கிறது மனம். ஒருவேளை அது தான் கவிதை எனும் வெளிப்பாட்டு வடிவத்தின் சிறப்போ? எழுத்தில் வராத கவிதை என்று சிலர் சித்திரங்களைக் குறிப்பிடுவது நினைவுக்கு வருகிறது.

நகுலன் கவிதையும் முத்துக்குமார் கவிதையும் அந்த நிமிட வாசிப்புக்கு இதமாக இருக்கிறது - ஒரு மணி பொறுத்து நினைவில் தங்குமா தெரியவில்லையே?

கவிதைப் புத்தகத்தின் விவரம் கொடுங்களேன்?

முரளிகுமார் பத்மநாபன் said...

@இளங்கோ
யாம் பெற்ற இன்பம்.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சி.கருணாகரசு
நன்றி தலைவரே! உண்மைதான் அதனாலேயே பகிர்ந்தேன் :)

முரளிகுமார் பத்மநாபன் said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம்

முரளிகுமார் பத்மநாபன் said...

@மோகன் குமார்
தேங்க்ஸ் தல

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுசி
தேங்க்ஸ் மேடம்

முரளிகுமார் பத்மநாபன் said...

@கலகலப்ரியா
இங்க வந்துபோய் நெடு நாளாகிறது. மேடம் நல்லா இருக்கிங்களா?
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
//நகுலன் கவிதையும் முத்துக்குமார் கவிதையும் அந்த நிமிட வாசிப்புக்கு இதமாக இருக்கிறது - ஒரு மணி பொறுத்து நினைவில் தங்குமா தெரியவில்லையே?//
உண்மைதான் ஆனால் எப்போது வேண்டுமானாலும் நிமிடத்தில் நினைவிற்கும் வரும் இதுபோன்ற கவிதைகள். இல்லையா சார்?

நகுலன் கவிதை - நகுல கவிதை தொகுப்பு
முத்துகுமார் கவிதை - கவிஞர் அறிவுமதி அவர்களின் தை இதழிலிருந்து.

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபி
தல உங்களை விட்டுடேனே... :-)
என்னாச்சு ரொம்ப நாளா காணோமே?

ராகவன் said...

அன்பு முரளி,

படித்துக் கொண்டே வரும்போது இது உங்களின் கவிதை என்று நினைத்தேன்... நல்ல பகிர்வு... வைரமுத்துவுக்கு அடுத்து ஒரு நல்ல சினிமா கவிஞர். இலக்கிய பரிச்சயம் உள்ளவர். கவிதை புத்தகங்கள் வெளியிட்டவர். வைரமுத்துவை போல அதீத கற்பனைகள் இல்லாமல்... இயல்பான கவிதைகள் கொடுத்தவர். "காதுக்குள்ள ஆணி வச்சு அடிக்கலாமா" ன்னு இவர் எழுதியதில்லைன்னு நினைக்கிறேன்... பட்டாம்பூச்சி விற்பவன்... இன்னுமொரு கவிதைப்புத்தகம் இவருடையது படித்திருக்கிறேன்... கவிதை கொஞ்சம் நீளம் என்று தோன்றுகிறது... இது முத்துகுமாருக்கு... நல்ல அறிமுகம்... நல்ல கிறுக்கல்கள் ஓவியம் போல... அன்பும் வாழ்த்தும் முரளி.

ராகவன்

sakthi said...

கவிதை என்று பாராட்டும்போது அட சும்மாதாங்க அடி அடியா எழுதுயிருக்கேன், கவிதையெல்லாம் ஒண்ணுமில்லைன்னு மிக தன்னடக்கமாக சொல்லிக்கொள்வேன்.

நான் தான் அப்படின்னு நினைச்சேன் நீங்களுமா :)

sakthi said...

முத்துக்குமார் கவிதை பகிர்விற்கு நன்றி

கலகலப்ரியா said...

||முரளிகுமார் பத்மநாபன் said...
@கலகலப்ரியா
இங்க வந்துபோய் நெடு நாளாகிறது. மேடம் நல்லா இருக்கிங்களா?
:-)||

ஆமாங்க சார்... :o)

my few drops said...

intha sirukathai eppadi irkukirathu?


ஆரம்ப பாடசாலையில் அம்மாவுடன் படித்தவரை நேற்று ஒரு திருமணத்தில்
சந்திக்க நேர்ந்தது. முப்பது வருடத்திற்குப் பிறகு சென்னைக்கு வருகிறாராம். கப்பலில் வேலையாம்.
பர்மா, மலேசியா, சிங்கப்பூரென்று கோபால் பல்பொடியைப் போல் சென்று வந்த நாடுகளை சிலாகித்துக்கொண்டிருந்தார். கடலோடிய களைப்புமுன் வழுக்கையில் தெரிந்தது
அவரது பால்யத்தில் ஒளிந்திருந்த
அம்மாவின் பால்யத்தை ஆர்வமுடன் விசாரித்தேன் சிறுசிறு சண்டையில் தொடங்கி பேனா முள்ளாய் அம்மா கிழித்த்துவரை சிரித்தபடி சொன்னார். அம்மாவின் கோபம் அவரது வலது கையில் தழும்பாக இருந்தது.
அம்மாவின் கையெழுத்து அழகாக இருக்குமாம் அவரது மூத்த மகளும்
அம்மாவைப் போலவே அழகாக எழுதுவாளாம் அவருக்கும்
அம்மாவுக்கும்தான் படிப்பில் போட்டியாம். கடிகாரங்கள் திருடிவிட்ட
ஐம்பது வருடங்களை திரும்பவும் கொண்டு வந்து கண்முன் கொண்டுவந்தவர் கிளம்புமுன் கேட்டார். அம்மா வரலையா தம்பி?
வழக்கம்போல் அழாமல் வார்த்தைகள் சேகரித்து மென்மையாகச் சொன்னேன்
எனக்கு ஐந்து வயது இருக்கும்போதே
அம்மா இறந்துட்டாங்க ஒலித்துகள் மூர்ச்சையாகி மெளனம் எங்களை சூழ்ந்த பிறகு ஆரம்ப பாடசாலையில்
அவரை அமர வைத்துவிட்டு நான் வெளியேறினேன்.


ithu en kavithai:-

enaku samaika
theriyathu
aanaal
rushika theriyum
yenna athigam
enna kuraivu
epadi irunthaal
nalla irkum
endru!!

-----------------------
oru varyil irandu
allathu moondru
vaarthaigal irunthal
kavithai enadral
en kavithai
eppadi irukirathu??!!

------------------------

kobam varukiratha?
apathithaan enakkum
irukirathu

------------------------

enaku therinathavarai
naalu variyil solla
vaeyindiyathai
naalu vaarthaiyil
solluvathuthan kavithai

------------------------


unngal kavithaiyai
sirukathaiyaga
maatrirukeraen
eppadi en
thiramai??!!

------------------------

eppadi irukirathu
enadhu aaru
kavithaigal?
ithayum
saerthu?!!

sugirtha said...

முதன் முறை வருகிறேன் முரளி.

நண்பருள்ளிருந்து உயிர்த்து வந்த அம்மா...

நல்ல பகிர்வு... :)

முரளிகுமார் பத்மநாபன் said...

@YP
இதே வழியில் நீங்கள் இன்னும் பயணப்பட வேண்டியிருக்கிறது, ஒருநாள் இந்த வடிவம் புரியக்கூடும்,

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுகிர்தா
நன்றி சுகிர்தா, தொடர்ந்து படிங்க, நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் போன்றவர்களின் பார்வையில் இன்னும் தெளிவடைய முடியும்..

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.