தனிமையின் இசை - லக்கி அலிலக்கி அலி. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பாடகர். பழைய ஆனால், மிகப்பிரபலமான ஹிந்தி நகைச்சுவை நடிகர் மெகமூத் அவர்களின் மகன். லக்கி அலி ஒரு பாடகர்இசையமைப்பாளர்தற்சமயம் ஒரு நடிகரும் கூட. லக்கி அலி இதுவரை ஆறு தனி ஆல்பங்கள் பாடியுள்ளார். எல்லா ஆல்பங்களும் பலத்த வரவேற்பிற்குள்ளானவை. லக்கி அலி என்றதுமே நினைவிற்கு வருவது அகோஸ்டிக் கிதாரும்அவருடைய கவர்ச்சியான அந்த ஹஸ்கியான குரலும் அவரது சோகம் படிந்த கண்களும் தான். ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளோனிக்குப் பிறகு நரைத்த தலையுடனே அதிகம் பேரைக் கவர்ந்தவர் லக்கி அலி.


இவரது தனிச்சிறப்பே இவரது குரலில் உள்ள சோகம்தான், அதுதான் இவரது பலமும் கூட. இவரது அனைத்து பாடல்களுமே மெலடி வகையிலேயே அமைந்திருக்கும். இவரது ஆல்பங்களில் வேகமான பீட்களுடன் அனேகமாய் பாடல்களே இல்லை. நான் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த காலம் முதலாகவே இவரது பாடல்களை எங்கு பார்த்தாலும் கேட்டாலும் நின்று முழுவதுமாய் ரசித்துவிட்டுதான் மறுவேலை.

இவரது எல்லாப் பாடல்களுமே ஒரேயொரு இசைக்கருவியின் மெல்லிய இசையில் தொடங்கியும் முடிவதையும் பார்க்கலாம். பாடல் ஆரம்பிப்பதற்கு முன்பும் சரி, பாடல் முடிந்த பின்னரும் சரி குறைந்தது 30வினாடிகளுக்காவது அந்த மெல்லிய இசை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். பாடலில் நம்மை உட்புகுத்திக் கொள்ளவும், மெல்ல வெளியே வரவும் இந்த இசை நம்க்கு உதவுகிறது. மிகச்சமீபத்தில் ரகுமான் ஓமணப்பெண்ணே பாடலில் இதனை கையாண்டிருப்பார். பாடல் முடிந்த 40வினாடிகளுக்கும் மேலாக அந்த நாதஸ்வர மெலடி சன்னமாய் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

     மெல்லிய கிதார் இசையோடோ அல்லது பேலட் டிரம்சோடோ இவரது ஹம்மிங் மெல்ல சேர ஆரம்பித்து, சீரான வேகத்தில் தொடங்கி அதே பேஸில் முடியும் இவரது பாடல்கள். இவரது பாடல்கள் கேட்பதற்கு இணையாக, பார்ப்பதுவும் ரசிக்கும்படியாக இருக்கும். ஒவ்வொரு பாடல்களிலும் ரசனையான ஒரு சிறுகதையோ அல்லது கவிதையோ இருக்கும். இவருடைய இசை மற்றும் பாடலகள் பொதுவாகவே வேறு யாருடையது போலவும் இல்லையே? ஒரு தனி ஸ்டைலாக இருக்கும் இவரது இசைஎன்ன வகை இசையாக இருக்கும்என்று யோசித்துக்கொண்டிருப்பேன். பேஸ்புக் தளத்தின் மூலம் லக்கிஅலியின் ரசிகர் வட்டத்தில் இணைந்தும் கொண்டேன். அதில் கிடைத்த நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது லக்கியின் ஸ்டைல் பேலட் எனப்படும் ஐரிஸ் ஸ்டைல் என்று சொன்னார்கள்.

பேலட் இசை என்பது, நாத்து நடும்போதும்களை பிடுங்கும்போதும்அறுவடையின்போதும் பாடும் நமது கிராமிய இசையினைப்போல, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின் கலப்பில் உருவான ஒரு பாரம்பரியமான இசை வடிவம். 19ம் நூற்றாண்டிற்கு முன்பு வரை, பொதுவாக போர் வீரர்களை உற்சாகப்படுத்தவும்தத்துவங்களைப் பாடவுமே இந்த வகை இசை அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதன் பிற்பாடு மெல்ல காதலையும், மென் சோகங்களை சொல்லவும் பயன்படுத்தப்பட்டது. உலகமயமாக்கலுக்குப் பிறகு ஒவ்வொரு நாட்டின் பாரம்பரிய இசைகளும் இசைக்கருவிகளும் எல்லை கடந்து பல தளங்களை அடைந்ததுபரவலாக அறியப்பட்டது. பேலட் ஸ்டைல் இசையின் அடிநாதமான மெலடி அனைவராலும் ரசிக்கக்கூடியதாக இருப்பதால், அது எளிதில் உலகம் எங்கும் பரவியது.

ஆனால், அதையே தனது அடையாளமாக மாற்றிக் கொண்ட கலைஞன்லக்கி அலி. எனக்குத் தெரிந்து இவரது முதல் ஆல்பம்  அன்ஜானி ரஹோமேன் என்ற இந்தப் பாடல்

அதன் பிறகு சுனோ எனும் இவரது ஆல்பத்தில் வரும் ஓ சனம் என்ற பாடலில் பரவலாய் அறியப்பட்டார். எனக்கும் லக்கியின் ஆல்பங்களில் மிகவும் இரண்டு பாடல்களில் ஒன்று, ஓ சனம்.... மொஹோபத் ஜி கசம்....... மற்றும் தேக்கா ஹே அய்சே பி. இப்பொழுது மிக சமீபத்தில் இணையத்திலேயே வெளியிட்ட இவரது புதிய ஆல்பமான க்‌ஷுயீ. எனது இசை அனைவரையும் எளிதாக சென்றடைய வேண்டும். அதனாலேயே இணையத்தில் வெளியிடுகிறேன், என்கிறார்.

அனேகமாய் எனது பள்ளி பருவத்தில் கேட்ட பாடல் ஓ சனம்.... இன்னமும் என் விருப்பப் பட்டியலில் இருக்கின்றது. எகிப்தின் பிரமீடுகளை படித்திருக்கிறேன், இங்கு நடக்கும் எதாவது ஒரு கண்காட்சியில் அதன் மாதிரியை செய்து வைத்திருப்பார்கள், அப்படிப் பார்த்ததுதான், பிரமீடு. இந்தப் பாடலின் முடிவில் பிரமீடின் மீது அமர்ந்திருக்கும் லக்கியிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கேமிரா வெளியே வரும், வரும் வந்து கொண்டேயிருக்கும். ஆவ்வ் என வாயைப் பிளந்து பார்த்தேன். முதல்முறை இந்த வீடியோவைப் பார்க்கும்போது.
இவரது வீடியோக்களில் காதலால் நிராகரிக்கப்பட்ட, வாழ்க்கையில் தோற்ற, மணமுறிவு ஏற்பட்ட அல்லது துக்கம் பீடித்த ஏதாவது ஒரு இளைஞனோ இளைஞியோ  வந்துகொண்டேயிருப்பார்கள். காரணம் அவரது தனிப்பட்ட வாழ்கையிலும் நிறைய சோகங்களை உள்ளடக்கிய மனிதன்தான், லக்கி அலி. அது அவரது பாடல்களில் வெளிப்படுகிறது.

இன்றும் இவரது இசை தனிமையின் இசையாகவே உணப்படுகிறது. அவரது சில பாடல்களை இங்கே யூடியூப் சுட்டிகளாகக் கொடுத்திருக்கிறேன். என்ஜாய் மக்களே!பாத்சாலா என்ற புதிய படத்தில் ஒரு பாடல், பேக்கரா..... 52 வயது லக்கியின் குரல் இன்று ஷாகித்திற்கு எவ்வளவு அழகாகப் பொருந்திப்போகிறது, பாருங்கள். லவ் யூ லக்கி....


நாளை..... உலகக் கோப்பை ஸ்பெசல்  


ஓட்டுப்போடுங்க இல்ல ஓ’ போடுங்க.


 எந்த ஒரு விஷயம்,  எப்பொழுது பார்த்தாலும்படித்தாலும்கேட்டாலும் ஒரே மனநிலையைத் தருகிறது? காதலைத் தவிர்த்து? யோசித்தால் ஆயிரம் விஷயங்கள் நினைவிற்கு வரலாம் ஆனால் யோசிக்காமல் சொல்லிவிடக் கூடிய ஒன்று. அரசியல். மே 13, 2009ல் நான் எழுதிய சில விஷயங்கள்  இன்றைய அரசியலுக்கும் பொருந்திப் போகிறதே!


இன்றைய அரசியல்

முன்பெல்லாம் கட்சிக்காககொள்கைகளுக்காகதலைவனுக்காக அல்லது நாட்டுப்பற்றின் காரணமாக அரசியலில் இருந்தவர்களை  காணலாம்இப்பொழுது பேர்பணம்புகழ் இவற்றை மையமாகக் கொண்டே அரசியல் நடக்கிறதுபுதிதாக அரசியலில் ஈடுபட நினைப்பவர்களும் கூடஇதே போன்றதொரு எண்ணங்களின் பிரதிபலிப்பாகத்தான் இருந்திருக்கிறார்கள்இருக்கிறார்கள்இளைஞர்களின் மத்தியில் கூட இதே போன்றதொரு பார்வை இருப்பது மிகவும் கேவலம்கூட்டணிஇந்த வார்த்தை அரசியல் உலகின் மிக கேவலமான ஒன்றாகிப் போயிருக்கிறதுகட்சிக்காககொள்கைகளுக்காக என்றிருந்த காலம் போய் எனக்கு இத்தனை சீட்டு கொடுக்கின்றாயாநாம் இருவரும் கூட்டணி. இல்லையென்றால், அவன் எனக்கு இன்னும் ஒரு சீட்டு சேர்த்துத் தருகிறேன் என்று சொல்கிறான் என்று பேரம் பேசி சீட்டுக்களுக்காக கூட்டணி என்ற நிலையில் வந்து நிற்கிறது.

ஒருவர் பிரதமராக வேண்டுமென்றால், பத்து சீட்டுக்களையாவது விலைக்கு வாங்க வேண்டியிருக்கிறதுஒருவர் முதலமைச்சராக வேண்டுமென்றால், அவசியம் பத்து கட்சிகளின் கூட்டணி தேவைப்படுகிறதுகூட்டணிக்கு இத்துணை கோடி என மொய் எழுதவேண்டியிருக்கிறதுமதவாதிகள்சாதிச்சங்கங்கள்பிற்படுத்தப்பட்டோர் என அனைவரோடும் நட்பு பாராட்ட வேண்டியிருக்கிறதுஅவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கவேண்டியுள்ளதுஇவை அனைத்திற்குமாக இவர்கள் தேர்தலுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கிறதுசொந்தப் பணம்மக்களின் வரிப்பணம்கோடீஸ்வரர்களின் அன்பளிப்பு மற்றும் பெரிய தொழிலதிபர்களிடமிருந்து கட்டாயமாக அல்லது உவந்தளிக்கக்கூடிய பணம் என்று சம்பாதித்த எல்லாப் பணத்தையும் தேர்தலில் முதலீடு செய்ய வேண்டியிருக்கிறதுவிட்டதைப் பிடிக்கஜெயிப்பவன் தன்னுடைய முதலீடை எடுக்கத்தானே முயற்சி பண்ணுவார்.

இதுல, எப்போ பார்த்தாலும் அரசியல்வாதியையே குறை சொல்லிக் கொண்டிருப்பதில் தான் என்ன பயன்அரசியல்வாதிங்கறது யாரு சார்கடவுளாஇல்ல.... வானத்துல இருந்து நேரா மக்களின் குறைகளை மட்டுமே போக்க வந்த தேவ தூதனாஇல்லையே. அவனுக்கும் வீடுபசிதுக்கம்ன்னு எல்லாமே இருந்து தானே தொலைக்கிறதுஎல்லாருடைய காரணமும் இன்றைய அரசியல் சரியில்லைஅரசியல்வாதிகள் சரியில்லை என்பதாகவோதான் இருக்கிறதுஇப்படி சொல்பவர்களில் எத்தனை பேர் தாங்களே சொந்தமாக அரசியலில் ஈடுபட முன் வருவார்கள்ஒருவரும் இல்லைதவறி ஒருஅடி எடுத்து வைத்த ஒரு சிலரும் கூட கோரமான வன்முறைக்கு இரையாகி போயிருக்கின்றனர்.

ஒரு முறை, எனது நண்பனின் மாமா ஒருவர் கவுன்சிலர் பதவிக்காக தேர்தலில் சுயேட்சையாக நின்றார்அவருக்காக தேர்தல் பணிகளையும்ஓட்டு சேகரிப்புப் பணிகளையும் செய்து வந்தோம்அப்போது கூட ஒரு நண்பன் சொன்னான் " மச்சான்இவரு மட்டும் கவுன்சிலர் ஆயிட்டா நமக்கு பிரச்சனையே இல்லடாநமக்கு ஒரு காரியம்னா....என்று அவனுடைய தேவைகளை பட்டியலிட தொடங்கி விட்டான்ஆகஇப்படி ஒரு கவுன்சிலர் பதவிக்கே அவரை சுற்றியுள்ளவர்கள் ஒருவித சுயநல முனைப்புடனே உடனிருக்கின்றனர் என்றால்அரசியல் அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், இதே போன்று அவர்களின் அரசியல் செல்வாக்கை காட்ட வேண்டிய நிர்பந்தத்தை அவர்களின் உறவினர்களும்சுற்றியுள்ளவர்களும் கொடுத்துக் கொண்டேதான் இருப்பார்கள்.

அரசியல்வாதிகள் மட்டுமல்லஅதிகாரம் உள்ள எவருமே செய்யக் கூடியதுதான்செய்து கொண்டிருப்பதுதான்ஒரு தப்பையே தொடர்ந்து செய்வதால், அது தப்பு என்பதையே மறந்து யாராவது ஒருவர் அதைச் சரியாக செய்ய முற்படும்போது, அதுவே தவறாகத் தோன்றுமளவிற்கு தவறுகள் புளித்துப் போயிருக்கின்றனஅதிகாரம் உள்ளவரோ அல்லது அவரை சுற்றியுள்ளவரோ அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசிகொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு விஷயம், " சுமார் 100 குடும்பங்கள் வசிக்கக்கூடிய அவரது குடியிருப்போர் சங்கத்தில் ஒரு முடிவு செய்து வைத்திருப்பதாகவும்அதை வருகிற தேர்தலின்போது உபயோகப்படுத்த இருப்பதாகவும் சொன்னார்சுமார் 180 முதல் 200 வரை அவர்களின் குடியிருப்பில் ஓட்டுகள் இருப்பதாகவும் பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர்களிடம் தலா ஒரு ஓட்டுக்கு ரூ.1000/- கேட்க இருப்பதாகவும்எப்படியும் மூன்று நான்கு கட்சிகள் வரை இருப்பதால்ரூ.4000/- வரை வசூலிக்க இருப்பதாகவும்அதில் அவர்களுக்கு தேவையான சாலை வசதிதெருவிளக்குதண்ணீர் தொட்டி முதலிய வசதிகளை தாங்களே செய்துகொள்ள இருப்பதாகவும் சொன்னார்.  “இவர்களுக்கு ஓட்டையும் போட்டு நாலு வருஷம், அஞ்சு வருசம்னு ரோடு போட்டுக் குடுலைட்ட போட்டுக் குடுன்னு மனுவை கைல பிடிச்சிகிட்டு அலைவதற்கு பதிலாகஇப்போ இவனுங்க நம்மள தேடி வருபோதே பணத்தை கறந்துகொண்டுவேணும்கிறத நாங்களே செஞ்சிக்கிறதா இருக்கோம்ன்னு சொன்னார்.

இது சரியாதவறாஎனக்குத் தெரியவில்லைஆனால் அவர்கள் உட்கார்ந்து பேசியிருக்கிறார்கள்ஒரு அசோசியேசன் மூலமாக இதற்கு தீர்வு காண நினைத்திருக்கிறார்கள்அதுதான் வேண்டும், அது சரியில்லைஇது சரியில்லை எவனுக்கு ஒட்டு போட்டாலும் நாடு நாறத்தான் போகுதுன்னு பேசாமநல்லதோ கெட்டதோஇப்படி அதற்கான மாறுதல்களை பற்றிப் பேசுங்கள்நாலு பேர் சேர்ந்தா நிச்சயம் முடியும்அதுவும் நல்லதாய் முடியும்இப்படிக் கூடி அரசியலைப் பற்றி பேசுவதே ஆரோக்கியமான ஆரம்பம் என நினைக்கிறேன்.ஆகவே ஓட்டுப் போடுங்கள்


நாலு பேர் சேர்ந்தால் எதுவுமே சாத்தியம்ஆகவே நீங்கள் செய்யாததை உங்கள் வாக்குகள் செய்யும். முடிந்தவரை நண்பர்களிடம் அரசியல் பேசுங்கள்அரசியல் ஒரு சாக்கடைஅரசியல்வாதிகள் அதில் பன்றிகள் என்று பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருக்காமல் நம்பிக்கையோடு வாக்களியுங்கள்.


     ரோடு சரியில்லை என்பதால் யாரும் அதை உபயோகப்படுத்தாமல் இல்லைசம்பளம் சரியாக கொடுக்காத கம்பெனிக்குக்  கூட ஆட்கள் வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்ஓட்டுப் போடுவது கூட அப்படித்தான்உங்கள் ஒரு ஓட்டு என்ன செய்துவிடப்போகிறது? என்று நினைக்காதீர்கள்நம் கடன் பணி செய்து கிடப்பதேநம்பிக்கை தான் வாழ்க்கைமுயன்றவர் நேரடி அரசியலில் ஈடுபடுங்கள்இல்லையென்றால் நம்பிக்கையோடு வாக்களியுங்கள்எல்லா அரசியல்வாதிகளும் கெட்டவர்கள் இல்லையோசித்து வாக்களியுங்கள் உங்களின் வாக்கு இந்த நாட்டின் தலை விதியை மாற்றலாம்.

அல்லது ‘ஓ’ போடுங்கள்


அவர் உங்களின் நம்பிக்கைக்குரியவராக இருக்கலாம்உங்களின் நபராக இருக்கலாம்நல்லவராக இருக்கலாம்கடந்த ஆட்சியில் நன்மை செய்தவராக இருக்கலாம்அல்லது கடந்த ஆட்சியின்போது நடந்த பிழைகளை தட்டிக் கேட்டவராக இருக்கலாம்புதியவராக இருக்கலாம்உங்களின் சமூகத்தவராக இருக்கலாம்இளைஞராக இருக்கலாம்படித்தவராக இருக்கலாம் இல்லை எப்படியோ ஒருவகையில் உங்களின் கவனத்தைப் பெற்றவராக இருக்கலாம்இப்படி யாராக வேண்டுமாலும் இருக்கலாம்ஆனால், அவர் நீங்கள் தேர்ந்தேடுத்தவர்களாக இருக்க வேண்டும்அப்படி தேர்தெடுப்பதற்கான நேரமும் வந்துவிட்டது.


உங்களின் ஒவ்வொரு வாக்கும் தான் நம் தலை விதியை நிர்ணயம் செய்யப் போகிறதுநிச்சயம் ஓட்டுப் போடுங்கள். வெறும் 50-50% வாக்குப் பதிவே நடந்துநூறில் ஐம்பது பேர் மட்டுமே வாக்களித்து, அதில் முப்பது சதவிகிதம் வாக்கு பெற்று ஆட்சி அமைப்பவர் மீதமுள்ள எழுபது சதவிகிதம் பேரின் விருப்பத்திற்கு எதிரானவர் இல்லையாஅவர் எப்படி நம்மை ஆள முடியும்விருப்பமில்லாத எழுபது பேருக்கும் சேர்த்து அவர் தான் தலைவர்இது இன்னமும் தொடர்கிறதுநிச்சயம் இது மாற்றப்படவேண்டும்யாரும் சரியில்லை என்று வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள்உங்களுக்காகவே இருக்கிறது ஒரு வழி. 49- O. சரி 49 - போடுவதால் என்ன பயன்?

ஞானி " ஓட்டு போடாமல் இருப்பதை விட 49  போடுவது தான் சிறந்ததுஏனென்றால் எந்த வேட்பாளரையும் நமக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை அவர்களுக்கு உணர்த்தும் ஒரே வழி இது தான்." "ஒவ்வொரு தொகுதியிலும் 5000 பேர் 49  போடுவதால் அரசியல் கட்சிகளுக்கு ஒரு பயம் வரும்ஒவ்வொரு தொகுதியிலும் 5000 ஓட்டுக்கள் வைத்திருக்கும் சாதிக்கட்சிக்கு 20லிருந்து 30 சீட்டு வரை கொடுக்கத் தயாராயிருக்கும் அரசியல் கட்சிகள், அந்த அளவுக்கு 49  இருப்பது தெரிந்தால் முதல் வேலையாக அந்த தொகுதிக்கு நல்ல வேட்பாளரை நிறுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.""ஆனால்இவ்வளவு அகிம்சையான ஆயுதமாக 49  தங்கள் கையில் இருப்பதை மக்களே இன்னும் அறியாமல் இருக்கிறார்கள்என்கிறார்.

ஆகவே ஓட்டுப்போடுங்கள் அல்லது ஓ'வாவது போடுங்கள். எந்தக் காரணம் கொண்டும் நமது ஓட்டு செல்லாமல் போகக்கூடாது. தேர்தல் நாள் என்பது சம்பளத்தோடு கூடிய ஒரு விடுமுறை நாள் என்று ஊர் சுற்றக் கிளம்பாமல்தேர்தல் முடிவின் போது குடும்ப சகிதம் டீவி முன் அமர்ந்து, மொத்தக் கட்சியையும் குறை கூறிக் கொண்டிருக்காமல்சிந்தித்து வாக்களியுங்கள். படித்தவர்கள் ஓட்டுப்போடுவதில்லை என்ற நினைப்பை மாற்றுவோம்.


நாளை தனிமையின் இசை, ஓ... சனம் மொகாபத் கி கஸம்....

காதில் விழாத கூக்குரல்எது உலக சினிமா?, அப்படி ஒன்றுமே இல்லை. இந்தியாவில் எடுக்கப்படும் எந்தப்படமும் அர்ஜெண்டினாவிலோசிலியிலோ உலகப்படம்தானே என்ற வாதத்தை நானே அதிகம் கேட்டிருக்கிறேன். இல்லைஉலகப்படமென்றுபடத்திற்கென்று ஒரு தரம் இருக்கிறதுஅவை பட்டவர்த்தனமான உடலுறவு காட்சிகளும்வித்தியாசமான கோணங்களையும் பொருத்து அமைவதல்ல. எந்த ஒரு படம் உலகம் முழுமைக்குமாக எடுக்கப்படுகிறதோஎந்த ஒரு படத்தை பல்வேறு நாட்டுப் பார்வையாளனும் ஒரே மனநிலையில் எதிர்கொள்கிறானோஅல்லது ஒரே மாதிரியான பாதிப்பை அடைகிறானோ அந்தப் படம்உலகத் திரைப்படம்

 அப்படி ஒரு திரைப்படம்தான் தி இன்னோசன்ட் வாய்ஸ்”. இது ஒரு திரைப்படம்என்னை மிகவும் பாதித்த திரைப்படம். இந்தப் படம் நெடுக ரசனையான நிறைய காட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன. கவிதை மாதிரியான காட்சிகள்இந்தக் காட்சிகள் முடிந்ததும் நிச்சயம் கண்களில் நீர் தளும்பும். சந்தோசம் அல்லது பெருஞ்சோகம் காரணமாய். அப்படி எனக்குப் பிடித்தமான காட்சிகளை அடைப்புக்குறிக்குள் எனக்குப் பிடித்த கவிதை என்று குறிப்பிட்டிருக்கிறேன். ஒருவேளை உங்களுக்குமாய் . . . . .

 பெருகும் புல்லாங்குழல் இசையினூடே, கடுமையான மழையில் கைகளை தலைக்குப் பின்னால் கட்டியபடி நடக்கும் ஐந்து சிறுவர்கள்துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். (முதல் முறை இந்த இசையைக் கேட்பவர்கள் ஒருமுறையாவது ரீவைண்ட் செய்து மறுபடியும் கேட்கப்போவது உறுதி) அவர்களில் ஒருவனான சிறுவன் ச்சாவேவின் குரலில் தொடங்குகிறது படம். எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது, என் ஷூவிற்குள் கற்கள் புகுந்திருக்கின்றனஅவை என் கால்களை ரணமாக்குகிறது. இவர்கள் எங்களை எப்படியும் கொல்லத்தான் போகிறார்கள்”. 


 அவனது குரல் வழியாகவே கதை சொல்லப்படுகிறதுபோர் தீவிரமானதுமே, அப்பா எங்கள் அனைவரையும் விட்டு ஓடிவிட்டார்எனக்கு குண்டா ஒரு அக்காவும்ஒரு குட்டி தம்பியும் இருக்காங்க, அப்போ அம்மா இனி நீதான் வீட்டிற்கு ஆம்பளைன்னு சொன்னாங்க. என் அக்காவுக்கு அது பிடிக்கலைன்னாலும் எனக்குப் பிடிச்சிருந்தது. அம்மா ரொம்ப சிரமத்தோட அருகிலுள்ள தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்து சம்பாதிக்கிறாங்க. இரவு நேரங்களில் திடீர் திடீரென போர் ஆரம்பமாகி விடும்துப்பாக்கிக் குண்டுகள் இடைவிடாது விழுந்துகொண்டேயிருக்கும். அம்மா சொன்னது போல, நாங்க கட்டிலுக்கு அடியில் படுத்துப்போம். தம்பி பயத்துல அழுதுட்டே இருப்பான். அதனால, எங்களுக்கு ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வந்தா தனியா இருக்க பயம். அம்மா இருக்கும்போது எங்களுக்கு போரே ஏதோ குறைந்துவிட்டது போல இருக்கும். 

 சொந்த நாட்டிற்குள்ளேயே நடக்கும் இனக்கலவரம்ராணுவத்தினருக்கும் கொரில்லாக்களுக்கும் இடையே நடக்கும் போர். ராணுவத்தினருக்குகொரில்லா வீரர்களுக்கு உதவி செய்வதாய் இருக்கும் சந்தேகத்தின் பேரில் ஊர்மக்களின் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர்.  பலன்ஊரில் ஒவ்வொரு தெருவிலும்பள்ளியிலும், வழிபாட்டுதலங்களிலும்கடைகளிலுமென மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் ராணுவத்தினர் துப்பாக்கியுடன் இருக்கின்றனர். பயம்ஒரு கரிய நிழலைப்போல அந்த ஊரையே ஆட்கொண்டிருக்கிறது. 

 இப்படி தினமும் போரின் நடுவில் அல்லாட வேண்டுமா என்னபேசாமல் பக்கத்து நாடுகளுக்கு சென்று விடலாமேஅகதிகள் முகாம் போலஎன்கிறாள் ச்சாவாவின் பாட்டி. மேல் படிப்பிற்காக வெளிநாடு சென்றிருக்கும் தன் சகோதரன் திரும்ப வரும்போது தங்களை கண்டுபிடிக்க முடியாமல் போய் விடும். அவன்தான் தங்களது ஒரே நம்பிக்கை என்றும் சொல்கிறாள் ச்சாவாவின் அம்மா. வேறு வழியில்லாமல் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், சாவிற்கும் இடையே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வீட்டிலிருந்தபடியே அம்மா தைத்துத் தரும் துணிகளை கடைகளுக்கு கொண்டுபோய் கொடுப்பதும்பணம் பெற்று வருவதையும் தினமும் செய்து வருகிறான்.  நகரில் ஒரு பேருந்து ஓட்டுனரிடம் பழக்கம் ஏற்படுகிறது. அவர், பேருந்தில் இடங்களின் பெயரை கூவி அழைக்க  எனக்கு உதவியாய் இருந்தால் உனக்கு பணம் தருகிறேன் என்கிறார். ச்சாவா மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறான். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் தான் வேலை செய்து சம்பாதித்ததைப் பற்றி பெருமையாய்ச் சொல்கிறான். அவனது செய்கையில் பெருமிதமடையும் அவள்இருட்டுவதற்கு முன் வந்துவிட வேண்டும். மேலும், நீ பத்திரமாக இருப்பாயேயானால்செய் என்கிறாள். (எனக்குப் பிடித்த ஒரு கவிதை)

 ஒருநாள் பள்ளியில் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கும்போது ராணுவத்தினர் வருகின்றனர். சில மாணவர்களின் பெயரை குறிப்பிட்டு அழைத்து செல்கின்றனர். அனைவரும் 12 வயதினை அடைந்தவர்கள். கதறி அழும் அவர்களை வேனில் அடைத்து செல்கின்றனர். வீட்டிற்கு வந்து என் நண்பன் டிமோவை இன்று இழுத்துப்போய் விட்டார்கள் என்று சொல்லி அழுகிறான். (சிறுவர்களுக்கு எப்போது 12 வயது ஆகிறதோ அப்போது ராணுவத்தினர் அவர்களை ராணுவ பயிற்சிக்கு என்கிற பெயரில் வலிய அழைத்துச் சென்று விடுகின்றனர். இனியெப்போதும் அவர்கள் திரும்ப வரப்போவதில்லை. தங்கள் இனத்தினருக்கு எதிராக போராட அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும்). என்ன செய்வது? என்று தெரியாமல் தவிக்கிறாள், அம்மா. தன் சகோதரன் வந்துவிட்டால் இவற்றிற்கெல்லாம் ஒரு முடிவு கிடைத்துவிடுமென நினைக்கிறாள்.

 பள்ளியில் தன்னுடன் படிக்கும் சிறுமியை விரும்புகிறான். அவளோடு மிகவும் நட்புடன் பழகுகிறான். ஒரு நாள் அவளை தங்களோடு விளையாட அழைத்துச் செல்கிறான். காகிதத்தில் செய்த பட்டங்களில் மெழுகுகளை ஏற்றி பறக்கவிடுகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்ட ஆன்ச்சோ என்பவனும் அவர்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறான். (எனக்குப் பிடித்த இன்னொரு கவிதை) இருட்டுகிறது. விளையாட்டில் கவனமாயிருந்த அவர்கள் நேரத்தை தவறவிடுகின்றனர். ராணுவத்தினர் வருகின்றனர். அங்கிருந்து தப்பியோடும் ச்சாவாஅவளை பத்திரமாக வீட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு வருகிறான். மிகுந்த கவலையோடும், கோபத்தோடும் காத்திருக்கும் கெல்லாஇருட்டுவதற்குள் வீடு வரவேண்டும் என்பதை மீறிய ச்சாவாவை அடிக்கிறாள். பின் இறுக்கமாக இருக்கும் அம்மாவை குழந்தைகள் மகிழ்விக்கின்றனர். (எனக்குப் பிடித்த இன்னொரு கவிதை)

 அப்போது பீட்டோ (அம்மாவின் சகோதரன்) வருகிறான். அனைவரும் மகிழ்ச்சியோடிருக்கின்றனர். குட்டிப்பையன் வீட்டிற்கு வரும் எந்த ஒருவரையும் அப்பா என்று அழைக்கிறான். ச்சாவா, தன் மாமாவிடம் அம்மா தைத்த துணிகளை விற்றுவருவதைப் பற்றியும்பேருந்தில் வேலை செய்வது பற்றியும் பெருமையாக சொல்லிக்கொள்கிறான். திடுமென அருகில் குண்டு வெடிக்க, மீண்டும் அனைவரும் கட்டிலுக்கு அடியில் தஞ்சம் அடைகின்றனர். அருகிலுள்ள வீட்டில் அலறல் சத்தம் கேட்கிறது. பீட்டோ தன்னுடைய கிதார் பெட்டியில் ஒளித்து வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அங்கே போகிறான். அம்மா தடுக்க தடுக்க ச்சாவாவும் பின்னாலேயே ஓடுகிறான். ஒரு பாட்டியும் பேத்தியும் மட்டுமே இருக்கும் அந்த வீட்டில் சிறுமியின் வயிற்றில் குண்டு பாய்ந்திருக்கிறது. முதலுதவி செய்கின்றனர். அடிபட்ட இடத்தில் கைகளால் அழுத்திப் பிடித்தபடியிருக்கும் ச்சாவாவின் கண்முன்னேயே அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாள். மெல்ல விடிகிறது. 

பீட்டோ படிக்க செல்லவில்லைகொரில்லா யுத்தத்திற்கான பயிற்சியில்தான் இருந்திருக்கிறான் என்பதை அறிகிறாள் கெல்லா. அவன் நமது விடுதலைக்கு நாம் போராடியே ஆக வேண்டும் என்கிறான். மேலும், ச்சாவாவிற்கும் 12 வயது வரும்போது பயிற்சி அளிக்க இருப்பதாகவும் சொல்கிறான். அவன் ரொம்ப சின்னப் பையன். அவன் வேண்டாம் அவனுக்கு என்ன வேண்டுமோ அதை நான் செய்கிறேன்என்கிறாள் கெல்லா. ச்சாவா அனைத்தையும் கேட்டபடியே படுத்திருக்கிறான். போகும்போது பீட்டோபுரட்சிப்பாடல் அடங்கிய ஒரு ரேடியோவை கொடுத்துச் செல்கிறான். ச்சாவா எப்போதும் அந்த பாடலைக் கேட்டபடியே இருக்கிறான். அது தடை செய்யப்பட்ட பாடல். ஒருநாள் வீதியில் அந்த பாடலை கேட்டபடியே வரும் அவனை சர்ச்சின் ஃபாதர் எச்சரிக்கிறார். இதை ராணுவத்தினர் கேட்டால் உன்னை மன்னிக்கமாட்டார்கள் என்கிறார். ஆனால், விடாப்பிடியாக இன்னும் சப்தமாக வைத்துக்கொண்டு நடக்கிறான். ராணுவத்தினர் ச்சாவாவை கவனிக்கின்றனர். ஃபாதரும் கவனிக்கிறார். உடனே சர்ச்சின் ஒலிபெருக்கியில் அதிக சப்தத்துடன் பாடலை போடுகிறார். ராணுவத்தினரின் பார்வை அங்கே திரும்புகிறது. ச்சாவா படிக்கும் பள்ளியிலிருந்து ஒரு முறை கொரில்லாக்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நட்த்துகின்றனர். தங்களுக்கு எதிராக மக்கள் பலமடைவதை உணரும் ராணுவத்தினர் பள்ளியையும்சர்ச்சையும் மொத்தமாய் அழிக்கின்றனர். மேலும் பல்முனை தாக்குதல் மூலமாக ஊரையே அழிக்கவும் நினைக்கின்றனர். 

 வேறு வழியின்றி கெல்லாஅவள் அம்மா சொன்னபடியே குழந்தைகளுடன் அருகிலுள்ள ஊருக்கு செல்கிறாள். குழந்தைகளும் பாட்டியோடு இருப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். பீட்டோவின் மூலம் ச்சாவாவிற்கு ஒரு செய்தி வருகிறது. நாளை ராணுவத்திலிருந்து சிறுவர்களை பிடிக்க வருகின்றனர்அனைவரும் பத்திரம் என்று. ச்சாவா சிறுவர்களை திரட்டி துண்டு சீட்டில் எழுதி அனைவருக்கும் வினியோகிக்கிறான். வீட்டில் மேலே கூரையில் பதுங்கி தப்பிக்கின்றனர்பலரும். அனைவரும் ச்சாவாவை பாராட்டுகின்றனர். இதற்கிடையில், தனது பிறந்த நாளுக்கு வந்த தோழிக்கு பரிசுப் பொருட்களை கொடுக்க வரும் ச்சாவாஅவளது வீடு முற்றிலுமாக அழிந்து போயிருப்பதைப் பார்க்கிறான். அவளது பாவாடையில் ஒரு சிறு பகுதி மட்டுமே அவனுக்குக் கிடைக்கிறது. விரக்தியடையும் அவன் தன் சகாக்களுடன் தனது மாமாவிடம் போக முடிவெடுக்கிறான். 

இரவில் அனைவரும் உறங்கியபின்னர் வேண்டிய துணிகளுடன் வெளியேறுகிறான். ஐந்து சிறுவர்கள் பீட்டோ சொன்ன இடத்திற்கு வருகின்றனர். அங்கிருந்து ஒரு கொரில்லாக்களின் தளவாடத்திற்கு வருகின்றனர். அங்கு ஏற்கனவே வந்திருக்கும் தனது நண்பர்களைப் பார்த்து குதூகலமடைகின்றனர். வெடிபொருட்களும், துப்பாக்கிகளும் நிறைந்த இடத்தில் சிறுவர்கள் உறங்குகின்றனர். ஆனால், அவர்களைப் பின்தொடர்ந்து வரும் ராணுவத்தினர் அவர்களைக் கண்டடைகின்றனர். மீண்டும் சண்டை துவங்குகிறது. அதில் வெல்லும் ராணுவத்தினர் சிறுவர்களை கைது செய்கின்றனர்.

 அங்கே வீட்டில் கெல்லாவின் அம்மாராணுவத்தினர் நெருங்கி விட்டனர். இந்த ஊரையும் மொத்தமாக அழிக்க முடிவெடுத்துவிட்டனர். நாம் உடனடியாக இங்கிருந்து புறப்பட வேண்டும். பிறப்பு சான்றிதழ்களை மறக்காமல் எடுத்துக்கொள்அடுத்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்கிறாள். அவசர அவசரமாக புறப்படும் அவர்களுக்கு ச்சாவா இல்லாதது அப்போதுதான் தெரிகிறது. ஊரே கிளம்பி வெளியேறுகிறது. வழியில் தென்படும் ராணுவத்திரையெல்லாம் சபித்தபடியே நடக்கின்றனர். கெல்லா ச்சாவாச்சாவா என கத்திக்கொண்டு அவனைத் தேடியபடியே மீண்டும் ஊருக்குள் வருகிறாள்.

 படம் மீண்டும் முதல் காட்சிக்கு வருகிறது. பெருகும் புல்லாங்குழல் இசையினூடே கடுமையான மழையில் கைகளைத் தலைக்கு பின்னால் கட்டியபடி நடக்கும் ஐந்து சிறுவர்கள்துப்பாக்கி முனையில் அழைத்து செல்லப்படுகின்றனர். (எனக்குப் பிடித்த இன்னுமொரு கவிதை) அவர்கள் செல்லும் வழியெங்கும் பிணங்கள்சிறுவர்கள், வீரர்கள்ஒருபுறம் மனநலம் குன்றிய ஆன்ச்சோவும் கூட. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து ஒவ்வொரு சிறுவர்களாக பிடறியில் சுட்டுக்கொல்கின்றனர். பிடித்து செல்லப்பட்ட சிறுவர்களை மீட்க வரும் கொரில்லாக்கள் மீண்டும் சண்டையிடுகின்றனர். அதில் ச்சாவாவும் இன்னொரு சிறுவனும் தப்பிக்கின்றனர். அங்கிருந்து தப்பியோடி வீட்டிற்கு வருகிறான். ஆனால் வீடு முற்றிலுமாய் எரிந்து கிடக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுகிறான். ச்சாவாவை விட்டு செல்ல மனமில்லாமல் கெல்லாவும் தேடி மீண்டும் அங்கு வருகிறாள். இருவரும் சந்திக்கின்றனர்அகதிகள் முகாமிலிருந்து ச்சாவாவை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறாள்கெல்லா.

எனக்கு அமெரிக்கா போக விருப்பமில்லைஆனால் நான் இங்கிருந்தால் நிச்சயம் என்னை கொன்று விடுவார்கள். ஆனா நான் திரும்பி வருவேன். என் தம்பிக்கு 12 வயது ஆவதற்குள் இங்கு வந்து அவனை அனுப்பி வைப்பேன் என என் அம்மாவிற்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். இது என் தோழி கிருஸ்டினா மரியாமற்றும் என் நண்பர்கள் பிடோச்சேலே இவர்களுடைய கதையும்தான்ஆனால், இதைச் சொல்ல நான் மட்டும்தான் இருக்கிறேன். இது அவர்களுக்காகவும் தான்....... என்று ச்சாவாவின் குரல் ஒலிக்கிறதுகார் ஓட்டுவதுபோல கைகளை வைத்துக்கொண்டு கூரைகளின் மேல் ஓடிக்கொண்டிருக்கிறான் ச்சாவா......

 சல்வதோர் சிவில் வார் என்ற இந்த பதிமூன்று வருட போரின் கொடூரமான நினைவுகளும்75000 உயிரிழப்பும்30,000 பேர் அகதிகளாக நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்த முகவரியற்ற மனிதர்களும் தான் இந்தத் திரைப்படம். கடைசிவரை இந்தக் கதை எங்கு நடக்கிறது என்று எழுத வேண்டியது அவசியம் இல்லை. ஏனெனில், இது எங்கு நடந்தாலும் விளைவுகள் ஒன்றுதான். நமக்கு 30 மைல் தொலைவிலேயே இந்த கொடுமைகள் அறிமுகமென்பதால்மனம் தலைகுனிந்து அறுந்து தொங்குகிறது. இந்த திரைப்படத்தில் ஏதேனும் ஒரு காட்சியில் வருகிற யாராவது ஒருவர், உங்களுக்கு தெரிந்த ஒருவரை நினைவுபடுத்தலாம். அவர் இது போன்ற ஒரு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துமிருக்கலாம். படம் பார்த்து முடிக்கும்போது எழுத்தாளர் அம்பை எழுதிய ஒரு  சிறுகதையின் கடைசி பத்தி நினைவில் வந்து தொலைக்கிறது. ஒருவேளை ரத்தம் குழைந்த மண்ணில் மண்டியிட்டு தன் குழந்தையைப் பற்றி அழும் அந்த தாய் தானோ இவள்சூரியனைப்பார்த்து அது என்னம்மான்னு கேட்கும் அந்த சிறுவன் தான் ச்சாவாவோ

மேலும் இரண்டு தொடர்புடைய சுட்டிகள்,    1.ஒன்று      மற்றும்      2.இரண்டு
உலகக் கோப்பையின் அலைக்கு சரியான போட்டியாக நம்ம உள்ளூர் அரசியல் அலை,  நாளை. . . . . . . . .