கொய்யாப்பூவும் காதல் நாட்களும்........


மார்ச் மாதம் என்ன ஸ்பெசல்? என்னை கேட்டா நிறைய சொல்வேன்.    விடுங்க, கொய்யாப்பூவைப் பார்த்திருக்கின்றீர்களா? மார்ச் மாதம்தான் அதன் சீசன். வேறு என்னென்னவோ ஸ்பெசலாக இருந்தாலும் ஏன் கொய்யாப்பூ?  எனக்கு ஸ்பெசலான அவளுக்கு கொய்யாப்பூன்னா ஸ்பெசல். 


வெள்ளை வெளேர்ன்னு,  பளிச்சின்னு ஐந்து இதழ்கள், பொசுபொசுவென பூத்திருக்கும் வெள்ளை மகரந்தப்புற்கள். ச்சே, இந்தக் கொய்யாப்பூதான் எவ்ளோ அழகா இருக்குல்ல? பார்த்தியா? என்பாள். அவ பேசுறதையே பாத்துக்கொண்டிருக்கும் நான் திடீரென நினைவிற்கு வந்தவனாய் “ஆங், ஆமா, ஆமா, பார்த்தேன்.... நல்லா இருக்குல்ல”ன்னு அசடு வழிவேன். அழகா இருக்குன்னு சொல்வற்கு முன் ஏன் ச்சேன்னு சொன்னான்னு யோசிச்சிட்டிருப்பேன். 


அந்த மாதத்தின் ஒரு அதிகாலை நேரம், அரைத்தூக்கத்துல புரண்டு படுத்துக்கொண்டிருந்த எனக்கு அப்பாவின் குரல் கேட்டது. யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார் “இந்த வருஷம்தான் கொய்யா நிறைய பூத்திருக்கு” என்று. நான் சிரித்துக் கொண்டு திரும்ப படுத்துக்கொண்டேன். கொய்யாப்பூவைப் பார்க்கிறதுங்கிறது ஒரு திறமைதான். கொய்யாப்பூவின் இதழ்கள் மேல்புறம் வெள்ளையாகவும், கீழே இளம்பச்சையும், சில மரக்கலரிலும் இருக்கும். அடிப்பகுதி கெட்டியாகவும் இருக்கும். காயாகனுமே. கீழே இருந்து பார்க்கும்போது பூக்கள் சரியா தெரியாது, வெறும் இலைகளாத்தான் தெரியும்.  கொய்யாப்பூவைப் பார்க்கணும்ன்னா அதுக்கு மேலேயோ அல்லது பக்கவாட்டிலோதான் பார்க்கணும். அப்பா அதுல கெட்டி.

அவளுக்கு கொய்யாப்பூ ரொம்பவே பிடிக்கும். குரூப் ஸ்டடிங்கிற பேர்ல ஒட்டுமொத்த நண்பர்களும் என் வீட்டு மொட்டைமாடியில் குழுமியிருக்கும், அற்புதமான அந்த நாட்களில், என் வீட்டின் மொட்டை மாடியில், கொய்யா மரம் ஓரமாய், கைப்பிடி சுவற்றில் உட்கார்ந்தபடி, அவளிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம் இலையையோ பூவைவோ பற்றியபடியே இருப்பாள். இலையைக் காட்டிலும் பூவை, அதன் காம்பை பற்றி, சுற்றியபடியே பேசிக்கொண்டிருப்பாள். எனக்குதான் தலையை சுற்றிக்கொண்டு வரும். 


இளம் கொய்யா இலைகளை பறித்து , கொஞ்சமாய் புளியையும், கொஞ்சமாய் கல் உப்பையும் வைத்து பீடா கணக்கா மடிச்சி குடுப்பா, செம்மையா இருக்கும். ‘சூப்பரா இருக்கும்’ ஆண்ட்டின்னு பேசிப்பேசியே அம்மாவைக்கூட கொய்யாபீடா போட வச்சிருக்கா. என் அக்காவும் தங்கச்சியும் பரீட்சை சமயங்களில் கோவிலுக்குப் போய் நல்லா பரீட்சை எழுதனும்ன்னு லஞ்சமா கொடுக்க, கொல்லையில் முல்லையையும், முன்னாடியிருக்கிற செவ்வரளியையும் போட்டி போட்டு பறிச்சிட்டு இருப்பாங்க. நான் பொறுமையா கொய்யா மரத்தில ஏறிட்டிருப்பேன். கோவிலுக்குப்போனா அவகிட்ட ஒண்ணோ ரெண்டோன்னு கொய்யாப்பூவைக் கொடுத்துவிட்டு வருவேன், சிரித்துகொள்வாள். நான், எதோ வரம் கெடச்ச எபெக்ட்ல அப்டியே கிர்ன்னு வருவேன்.


அப்பா சொன்ன மாதிரியே அந்த வருஷம் கொய்யா நிறைய பூத்தது, ஆனா காய்க்கலை. அது ஏன்னு அம்மாவிற்க்கும் தெரியாது. ஏன்னா, எனக்கு அவளைப்பிடிக்கும்ன்னு அம்மாவிற்கு தெரியும், அவளுக்கு கொய்யாப்பூப் பிடிக்கும்ன்னு எனக்கு மட்டும்தானே தெரியும்.

லீவுக்கு சொந்த ஊருக்கு போறேன்னு சொன்னா, வீட்டுக்கு வந்து அம்மாவிடம், வரேன் ஆண்டின்னு சொல்லிட்டுப் போனவ அப்புறம் திரும்ப வரவேயில்லை. அப்பப்போ ஒண்ணு ரெண்டா சில கடிதங்கள் வரும், வந்துச்சு. வருட விடுமுறை நாட்கள், அல்லவா? எல்லாப் பசங்களும் வருவாங்க, எதேதோ விளையாடிட்டு இருப்போம். ஒரு மாசம் முன்னாடி வரைக்கும் அவளும் இருந்தா, இருக்கும்போது ஒண்ணும் ஸ்பெஷலாத் தெரியலை, ஆனா இல்லாதப்போ ஸ்பெஷலான ஏதோ ஒண்ணு இல்லாத மாதிரியே இருக்கும். ரொம்ப கஷ்டமா இருந்தது, அதிலும் மாடிக்கு மட்டும் போக முடியாது. கொய்யா மரம் தனியா இருக்கும். எனக்கும் வீட்ல இருக்கப்பிடிக்கலை. ரெண்டு மாசம், நெய்வேலியிலிருக்கும் பெரியப்பா வீட்டிற்கு போயிட்டேன்.

அவ்வப்போது நண்பன் போன் பண்ணுவான், லெட்டர் வந்துச்சு, உன்னை கேட்டிருந்தாம்பான். அப்புறம் ஒருவழியா லீவு முடிஞ்சி ஊருக்கு வரும்போது, வீட்ல கொய்யா மரம் இல்லை, வெட்டிட்டாங்க. ஏம்ப்பா? ன்னு கேட்டேன். அப்பா சொன்னார் “காய்க்கவும் மாட்டேங்குது, சடைசடையா கம்பளிப்பூச்சி வேற ஜாஸ்த்தியாயிடுச்சு, அதான்  “காய்க்கலைன்னா வெட்டீருவிங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கனும், எதுனா மருந்தடிச்சி பார்த்திருக்கலாமேப்பா?என்றேன். கொய்யா மரமும் இல்லாதது ஒரு மாதிரி அவஸ்தையாக இருந்தது. இன்னமும் கொய்யா மரமில்லாத மாடி வெறிச்சோடியேதான் இருக்கிறது, என் மனதைப்போல.

இது சமீபத்தில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது, உரையாடல் திசைமாறி கடந்த காலத்தைப் பற்றியும், காதல் நாட்களின் பக்கம் திரும்பியது. சில பாடல்கள், சில திரைப்படங்கள், சில இடங்கள், சில பொருட்கள், சில மனிதர்கள், ஏன் ஒரேயொரு ஒற்றை சுருள் முடி கட்டி இழுத்துவந்து விடுகிறது, கடந்த காலத்திற்கு. ஆனாலும் எனக்கு கடந்த நாட்களை மீட்பதிலோ, அதனை தொடர்வதிலோ எந்த விருப்பமும் இல்லை என்றாலும், இப்படி நினைவுகளை மீட்டிக்கொண்டிருப்பது அலாதியாக இருக்கிறது.  

என் போன்ற முதல் காதலின் நினைவில் திளைக்கும் அனைத்து காதலர்களுக்குமாய் இந்தப் பாடலை நினைவூட்டுகிறேன்... எனக்கும் கொஞ்சம் சத்தமா பாடணும் போல இருக்கு, அரோமலே..............

40 கருத்துரைகள்:

மதுரை சரவணன் said...

murali koiyaa malarkalai poola pathivum nalla irukku.. vaalththukkal..

இளங்கோ said...

கொய்யாப் பூ நினைவுகள்..
ரோஜா, மல்லி என்று சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் கொய்யாப் பூ காதலைப் பற்றி சொல்லி இருக்கிறீர்கள் முரளி.
இப்பொழுது வேப்பம் பூ பூக்க ஆரம்பிக்கிறது, அதையும் நீங்கள் ரசிப்பீர்கள் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

S.Sudharshan said...

கொய்யாப்பூ ..ரொம்ப வித்தியாசம் ..வாழ்த்துக்கள் :)

ராகவன் said...

அன்பு முரளி,

என்ன சொல்றது... பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

இறந்த காலங்களில் ஊரும்
அந்த எறும்பின் கால்களில்
சர்க்கரை பிசுக்கு

அவள் சேமித்து வைத்திருந்த
சீதாப்பழ கொட்டைகளின் சத்தத்தில்
ஜலதரங்க கிண்ணத்தின் உதடுகள்

வீசி எறிந்த கற்களை பிடித்து
சுழற்றும் விரல்களில் இருந்து
உதிரும் செங்கீற்று நிலாக்கள்

கயிறு தாண்டும் வித்தையில்
ஒரு புறம் ஏறிய பாவாடையில்
பதித்த கற்களின் மங்கிய ஒளிச்சிதறல்

காய்க்காது விரிந்த பூக்களின்
இதழ்களில் வண்ணங்களாய்
விரவியிருக்கும் உன் வெள்ளைப்பொய்கள்

தூரோடு இழந்த பின்னும் துளிர்த்துக் கொண்டிருக்கும் ஒரு கனவு உறங்கா விழிகளில்.

அட நல்லாயிருக்கே!...
பிறந்த நாள் பரிசு...முரளி கொஞ்சம் வித்யாசமா உங்களுக்கு பரிசு...

அன்புடன்
ராகவன்

ஷஹி said...

"காற்றில் கலந்தடிக்கும் மருதாணிப்பூ வாசம் அது காதல் நினைவு தரும் வசந்த வாசம்"ன்னு நானும் கூட எழுதியிருக்கேன் முரளி. பல நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள்..ரொம்ப அழகா இருக்கு பதிவு, வாழ்த்துக்கள்

balanayakar said...

வழக்கமா காதல்னா ரோஜாப்பூவும்,ஆப்பிளும் தானா! realy fendastic muraLi!கொய்யாபழத்துல நல்ல ஜீரணசக்தி இருக்குன்னு சொல்லுவாங்க. பழம் சாப்பிட்டதும் ஜீரணம் ஆயிடுச்சு.ஆனா,அந்த நினைவு{feeling}ஜீரணமாகலை.என்ன முரண் முரளி?!

ஆதவா said...

எனக்கு கொய்யா இலைகள் என்றால் இஷ்டம். அதைப் பறித்து கையில் நசுக்கி பின் அதன் வாசனையை நுகருவேன். அதேபோலத்தான் மாவிலையும். கொய்யாப் பூவையே நன்கு சிலாகித்து எழுதியிருக்கிறீர்களே.... கொய்யாப் பூ சிலாகித்தவரை?

இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோ என்று எண்ணினேன். அப்படியிருக்கிறது எழுத்தின் போக்கு!! (காதல் ல... அதான்..)

தமிழ் said...

மேல்மனம் விரும்பாவிடினும் கடந்த காலத்தை மீட்டிப் பார்ப்பதில் ஆழ்மனதிற்கு விருப்பம் இருக்கும் போலும்..

கொய்யாப்பூ ! .. ம்ம்.. வித்தியாசமான ரசனை தான் அவங்களுக்கு !!

அன்புடன் அருணா said...

/சில இடங்கள், சில பொருட்கள், சில மனிதர்கள், ஏன் ஒரேயொரு ஒற்றை சுருள் முடி கட்டி இழுத்துவந்து விடுகிறது, கடந்த காலத்திற்கு. ஆனாலும் எனக்கு கடந்த நாட்களை மீட்பதிலோ, அதனை தொடர்வதிலோ எந்த விருப்பமும் இல்லை என்றாலும், இப்படி நினைவுகளை மீட்டிக்கொண்டிருப்பது அலாதியாக இருக்கிறது. /
கலக்குறீங்க!

அன்புடன் அருணா said...

ஓ! பிறந்தநாள் வாழ்த்து பூங்கொத்தோடு!

முரளிகுமார் பத்மநாபன் said...

@மதுரை சரவணன்
என்ன டைம் தலைவா? சிவரத்திரி அதுவுமா முழிச்சி என் கிறுக்கலை படிச்சிட்டிருக்கிங்க? அவ்வ்.....
மிக்க நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

@இளங்கோ
இன்னொரு பூ இருக்கு, இதை விட பிடிச்ச பூ....... :-(

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுதர்ஷன்
வணக்கம் சுதர்ஷன், நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், உங்களுடைய வலைப்பதிவிற்கும் இன்றுதான் முதலில் வருகிறேன். இனி வரேன்......

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராகவன்
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இன்று கொய்யாப்பூக்காரிக்குத்தான் பிறந்தநாள், எனக்கல்ல.

//தூரோடு இழந்த பின்னும் துளிர்த்துக் கொண்டிருக்கும் ஒரு கனவு உறங்கா விழிகளில்.//

எனக்கே எனக்கான வரிகள், வெறுமனவே நன்றி சொல்ல முடியாது. பதிலாக மெளனத்தை வைக்கிறேன்.

...

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஷஹி
வணக்கம் ஷஹி நீங்களும் முதல்முறை வறீங்கன்னு நினைக்கிறேன். நன்றீ தொடர்ந்து படிங்க.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@பாலா
உண்மைதான் பாலா, முரண்தான் வாழ்க்கை மிக்க நன்றி. வருகைக்கும் கருத்துக்கும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதவா
பூக்களையும் இலைகளை விரும்பக்கற்றுக்கொண்டது, இப்போது வண்ணதாசனிடம், அப்போது அவளிடம்.
//இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோ என்று எண்ணினேன். அப்படியிருக்கிறது எழுத்தின் போக்கு!! (காதல் ல... அதான்..)//

நன்றி ஆதவா.

முரளிகுமார் பத்மநாபன் said...

@தமிழ்
//மேல்மனம் விரும்பாவிடினும் கடந்த காலத்தை மீட்டிப் பார்ப்பதில் ஆழ்மனதிற்கு விருப்பம் இருக்கும் போலும்//

தமிழ், போலவெல்லாம் இல்லை, அப்படியேதான்.... :-)

ஷஹி said...

இல்லங்க முரளி..நான் தொடர்ந்து உங்க பதிவுகள படிச்சிட்டு தான் இருக்கேன்..நீங்க குடுத்த லிஸ்ட் படி பல புத்தகங்கள் தேடி வாங்கினேன் புத்தகக் கண்காட்சியில..அதுல பலதோட விமர்சனம் மூன்றாம்கோணத்துல எழுதியும் இருக்கேன்.குறிப்பா பால்ய கால சகி..அந்த விமர்சனத்துல உங்களுக்கு நன்றியும் தெரிவிச்சிருக்கேன்..ஆமா, பின்னூட்டம் இட்டிருந்தா தானே உங்களுக்கு தெரியும். http;//moonramkonam.inthiya.in/ ல , வாசிக்கலாம் வாங்க ன்னு புத்தக விமர்சனம் எழுதறேன்..இளங்கோ வுக்கு ஃப்ரெண்ட்...

கோபிநாத் said...

வார்த்தைகள் விளையாடுது தல...! ;)

sugirtha said...

முரளி,

கொய்யாப்பூ அழகைப்/அழகி பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

நான் பூவரசம்பூவை அப்படி வியந்திருக்கிறேன்... அதை ஒட்டி எழுதிய என் பிரசுரிக்கப் படாத கதையின் சில வரிகளை இங்கே எழுதத் தோன்றுகிறது... உங்கள் கொய்யாப்பூ நினைவுபடுத்திவிட்டது :)

//ஒற்றைப் பருத்திப்பூவுக்கு நடுவில் சிவந்த ரோஜாவின் ஐந்து இதழ்களை ஒட்டி இருப்பது போல எத்தனை வசீகரம் இந்த மலரில். இரு விரல்களால் காம்பை பற்றி எடுத்தான். பூவை தலை கீழாகப்பிடித்து முன்னும் பின்னுமாய் காம்பைத் தேய்க்க, முன் பின்னாய் செல்லும் ராட்டினத்தில் ஏறினாற்போல் பூ இட வலமாய் சுற்றியது. தலையை ஒரு பக்கமாய் சாய்த்துக் கொண்டு கையை இன்னும் மேல் உயர்த்தி பிடித்து காம்பை வேகமாய் தேய்க்க பூ முன் செல்வதை உணரும் முன்னாகவே பின் சென்று, பின் செல்வதை உணரும் முன்னேயே முன் சென்றது. அந்த அசைவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தலை சுற்றி கிறுகிறுத்து கலங்கிய மஞ்சளாய் சிரித்தது.//

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்புடன் அருணா
மேடம், வெரி சாரி, என்னுடைய பிறந்தநாள் நவம்பரில்தான் வரும், இருந்தாலும் உங்கள் வாழ்த்துக்களை தேக்கிவைத்துக்கொள்கிறேன். நன்றி.

அவ்வ்வ்வ் ராகவன்.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஷஹி
//இல்லங்க முரளி..நான் தொடர்ந்து உங்க பதிவுகள படிச்சிட்டு தான் இருக்கேன்..நீங்க குடுத்த லிஸ்ட் படி பல புத்தகங்கள் தேடி வாங்கினேன் புத்தகக் கண்காட்சியில..அதுல பலதோட விமர்சனம் மூன்றாம்கோணத்துல எழுதியும் இருக்கேன்.குறிப்பா பால்ய கால சகி..அந்த விமர்சனத்துல உங்களுக்கு நன்றியும் தெரிவிச்சிருக்கேன்..ஆமா, பின்னூட்டம் இட்டிருந்தா தானே உங்களுக்கு தெரியும். //

ஆமா பின்னூட்டம் இட்டிருந்தாத்தானே எனக்குத் தெரியும்.... :-)

//இளங்கோவுக்கு ஃப்ரெண்ட்..//
அப்போ எனக்கும் ப்ரெண்ட்.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபிநாத்
ஆகா, :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுகிர்தா
//நான் பூவரசம்பூவை அப்படி வியந்திருக்கிறேன்... அதை ஒட்டி எழுதிய என் பிரசுரிக்கப் படாத கதையின் சில வரிகளை இங்கே எழுதத் தோன்றுகிறது... உங்கள் கொய்யாப்பூ நினைவுபடுத்திவிட்டது :)//

எனக்கு கொய்யாப்பூவை நினைவு படுத்தியதே நீங்களும், ராகவனும்தான்... :-)


கதைகளும் எழுதுறிங்களா? எல்லா ஃபார்மிலும் விளையாடுவிங்க போல? இன்னும் முடிக்கலை உங்க பதிவை. முடிக்கிறேன். :-)

நன்றி சுகிர்தா.

shri Prajna said...

இனி கொய்யப்புவை இன்னும் உத்து பாக்கதோணும்..நானும் வாசல்ல வச்சிருக்கேன் பூ ஸ்டார்ட் ஆயிடுச்சு ..உதிர்த்தது போக பழம் வரும் நாளுக்காக waitting ..கொஞ்சம் பறவைகளும் அணில்களும் உறவாட வரும் என்ற ஆவலுடன்..இப்போ "கொய்யபூவும் காதல் நாட்களும் " இன்னும் அதிகமா கவனிக்க வைக்கிறது..வெயிட் பண்ணிருக்கலாம்..(மரத்தை வெட்டாமல்) சில(பல) சமயங்களில் தொடர முடியாத உறவுகளே, தொடர்ந்து வருகிறது நினைவுகளாய்...தலைப்பு அருமை ..

விஜி said...

ம்ம்ம்ம்ம், பின்றியே முரளி :)))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ப்ரஜ்னா
//வெயிட் பண்ணிருக்கலாம்..(மரத்தை வெட்டாமல்) சில(பல) சமயங்களில் தொடர முடியாத உறவுகளே, தொடர்ந்து வருகிறது நினைவுகளாய்...தலைப்பு அருமை .//

நன்றி, உண்மைதான் நீங்கள் சொல்வது. மரம் வேணும்னா இன்னோன்னு வெச்சிக்கலாம், ஆனா.... அவ் (சிவாஜி ஸ்டைலில் அல்லது பூவே உனக்காக விஜய் ஸ்டைலில் படிக்கவும்)
:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@விஜி
அண்ணி, ஓட்றிங்களா?
:)

பூந்தளிர் said...

Superb Murali...

விஜி said...

இல்ல முரளி, நிஜமாவே நல்லாருக்கு:)

பத்மா said...

சில பூக்கள் exotic தான் ..
வாசனையில் ,நினைவுகளை கிளர்விப்பதில் ....
அடுத்த மார்ச்3 க்குள் கொய்யாப்பூவின் வாசம் உங்கள் மனம் வந்து சேர்ந்து,நீங்களும் மணம் காண வாழ்த்துக்கள் .

மேலும் பல பூக்கள் நிறைந்தது தான் வாழ்வு முரளி !

அப்பாதுரை said...

பிரமாதம்! சில நினைவுகள் அப்படியே வைக்க வேண்டியவை - ஆராயாமல் இருக்கும் வரை சுகம்.
'கொய்யா பீடா' புதிது. கொய்யா மரத்துக்கு எங்கே போவது? ஹ்ம்ம்ம்.

அப்பாதுரை said...

ராகவன்.. ஆகா!
எனக்கும் இது போல் ஒன்று எழுதித் தாருங்களேன்.. சுவரில் இடம் இருக்கிறது, பொன்முலாம் பூசிய சட்டம் இருக்கிறது.

முரளிகுமார் பத்மநாபன் said...

@பூந்தளிர்
தேங்க்ஸ் சாமி.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@விஜி
அப்போ தேங்க்ஸ் அண்ணி

முரளிகுமார் பத்மநாபன் said...

@ பத்மா
//சில பூக்கள் exotic தான் ..
வாசனையில் ,நினைவுகளை கிளர்விப்பதில் ....//
:-))
//அடுத்த மார்ச்3 க்குள் கொய்யாப்பூவின் வாசம் உங்கள் மனம் வந்து சேர்ந்து,நீங்களும் மணம் காண வாழ்த்துக்கள்//
தேங்க்யூ மேடம் தேங்க்யூ

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
//பிரமாதம்! சில நினைவுகள் அப்படியே வைக்க வேண்டியவை - ஆராயாமல் இருக்கும் வரை சுகம்.
'கொய்யா பீடா' புதிது. கொய்யா மரத்துக்கு எங்கே போவது? ஹ்ம்ம்ம்.//


உண்மைதான் சார் நீங்க சொறது. அப்புறம் பீடாவை கிடைக்கும்போது ட்ரை பண்ணுங்க,சார். நல்லா இருக்கும்.

கனிமொழி said...

Aromaleyyyyyyyy..........!!!!!!!!
:)

க.பாலாசி said...

நண்பா நடத்துங்க... எப்டியோ ஒத்துபோரோமய்யா... பூ மட்டும் வித்யாசப்படுது..

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.