ஒன்று, இரண்டு, மூன்று


ஒரு படம்
அவன் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பள்ளி ஆசிரியர், ஒரு அழகான மகன், மனைவி என ஒரு குடும்பம். தினசரியான ஒரு நாளின் காலை சிற்றுண்டியின் போது திடீரென வீட்டில் நுழையும் போலீசாரால் அவன் மனைவி ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்படுகிறாள். அவளது மேலாடையில் உள்ள ரத்தக்கறை கொலை செய்யப்பட்டவருடன் ஒத்துப்போகிறது. மேலும் கொலை செய்ய உபயோகப்படுத்தப்பட்ட பொருளில் உள்ள கைரேகையும் அவளது கைரேகையும் ஒத்துப்போவதால் சிறையிலடைக்கப்படுகிறாள். ஐந்து வயது மகனுடன் வெளியே இருக்கும் அவன் தன் மனைவி நிச்சயம் இந்தக் கொலையை செய்திருக்கமாட்டாள் என நம்புகிறான். எப்படியாவது தன் மனைவியை வெளியே கொண்டு வந்துவிட வேண்டும் என்றுப் போராடுகிறான். ஆனால், சட்டத்தின் எல்லாக் கதவுகளும் அடைபட்ட நிலையில் இனி அவள் ஒருபோதும் விடுதலை ஆகப்போவதில்லை என்கிறது கோர்ட்.


ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர் என்ன செய்ய முடியும்? என்ன வேணும்னாலும் செய்யலாம். என்கிறது இந்தப்படம். சிறையிலிருந்து அதிகமுறை தப்பித்த ஒரு கைதியை சந்தித்து யோசனை கேட்கிறான். அதன் படியாக ஒரு திட்டம் தீட்டுகிறான். முதலில் சிறையிலிருந்து மனைவியை கடத்த வேண்டும். சிறையிலிருந்து தப்பித்த முதல் அரை மணி நேரத்தில் எப்படியும் நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும். அதற்கு நிறைய பணம் வேண்டும். ஆனால் சிறையிலிருந்து தப்பித்த சில நிமிடங்களிலேயே அவர்களது  வங்கிக்கணக்கு, பாஸ்போர்ட் முதலியவை முடக்கப்படும். எனவே திட்டத்தின் முதல் கட்டமாய் போதைப்பொருள் கடத்துபவர்களிடமிருந்து பெரிய தொகையை திருட வேண்டும். இப்படி சரியாக மூன்று வருடங்களாய் கொஞ்சம் கொஞ்சமாய் பட்டை தீட்டப்பட்ட திட்டத்தின் முதல் படியில் ஏற்படும் ஒரு தவறில் ஆரம்பிக்கிறது இந்த திரைப்படம். அடுத்த மூன்று நாட்கள்தான் மொத்தப்படமும்.

முதல் கால் மணிநேரம் படத்தை பார்த்துவிட்டீர்களானால் படம் முடியும் வரை இடையில் எழ முடியாதபடிக்கு பரபரவென்ற திரைக்கதையும் இசையும். அவசியம் பார்க்க வேண்டிய படம் அல்ல என்றாலும் ஜாலியா கில்லி மாதிரி டைம்பாஸ் பண்ணப் பார்க்கலாம். நான் ஏன் பார்த்தேன்னா? அவன் – ரஸல் க்ரோ (கிளாடியேட்டர், சிண்ரெல்லா மேன் மாதிரியான படங்களில் நடித்த ரஸலுக்கு இந்த படத்தில் என்ன வேலை? என்று நினைத்துதான் பார்த்தேன். ஆனா மனுசன் அண்டர்ப்ளேவில் வெளுத்துக் கட்டுகிறார். டாம் ஹேங்க்ஸிற்கு பிறகு நான் அதிகம் தவறவிடாமல் பார்க்கும் ஹீரோ ரஸல் க்ரோ).

முந்தைய ஜேம்ஸ்பாண்ட் படமான குவாண்டம் ஆஃப் சோலஸ் படத்தின் திரைக்கதையை எழுதிய பாவ்ல் ஹ்கிஸ், எழுதி இயக்கிய இந்தத் திரைப்படம் “THE NEXT THREE DAYS” ***************************************************************
இரண்டு புத்தகங்கள்
            ஒன்று : ஜெயமோகன், என்னிடம் ஜெ.மோவின் இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த இரண்டைத் தவிர இன்னும் ஜெ.மோவை வாசிக்கத் தொடங்கவேயில்லை. நண்பர்களோடு பேசும்போது ஜெ.மோவின் எழுத்து பற்றி இரு மாதிரியான கருத்துக்கள் வந்துகொண்டேயிருக்கும். எனவே அவரை தொடர்ந்து வாசிப்பதில் ஒரு குழப்ப மனநிலையே இருந்து வந்தது. ஆனால் அவரது ஊமைச் செந்நாய் சிறுகதையையும், உலோகத்தின் சில பத்திகளையும் படிக்க நேர்ந்தது. நிச்சயம் வாசிப்பில் தவறவிடக் கூடாத ஒரு மனிதர், ஜெ.மோ என்று புரிந்து கொண்டேன். சரி எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசிக்கையில், திரைக்கதையாக ஓரளவிற்கு உத்தேச வடிவம் தெரிந்த ஏழாவது உலகமிலிருந்து தொடங்கலாமென நினைத்து வாங்கியிருக்கிறேன். இது வரை 86 பக்கங்கள்தான் முடித்திருக்கிறேன். நான் கடவுள் படத்தில் வரும் பூஜாவின் கதாப்பாத்திரம் கொடுத்த வலியைவிட அவரது முதல் நான்கு பக்கங்கள், பலமடங்கு வலியை உணர வைத்திருக்கிறது. இதற்கு முன்பாக எழுத்துக்களை, வரிகளை, பக்கங்களை இப்படி வலியோடு கடந்துபோனது இல்லை. வலி தொடரும், இன்னும் 120 பக்கங்களுக்கு மேல் இருக்கிறது......


     இரண்டு : கர்நாடக இசை, மேற்கத்திய இசை இப்படி நாம் நிறைய இசைகளைக் கேட்போம், ஆனால் ஒரு சில வகை இசையை கேட்கும் பொழுது, அது நமக்கு மிகவும் பரீட்சயமான ஒரு இசையைபோல தோன்றும், மெல்ல பாடலோடு முணுமுணுப்போம் அல்லது கால்களில் மெல்ல தாளமிடத் தொடங்குவோம் அல்லவா அதுபோல ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது தோன்றியது. அது அம்பையின் சிறகுகள் முறியும் சிறுகதைத் தொகுப்பு. அட ரொம்ப எளிதா இருக்கே! நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மனிதர்கள் வரும்போவதுமாய் இருக்கிறார்களே! என்று தோன்றியது. பொதுவாகவே நான் படிப்பதில் ஆமை வேகம்தான், 20 பக்கங்களைப் படித்துவிட்டு அதே நினைப்பில் ஒரிரு நாட்கள் இருப்பேன், பிறகுதான் அடுத்த பக்களுக்கே நகருவேன். அப்படிப்பட்ட நான், அனேகமாய் ஒரே நாளில் படித்து முடித்த முதல் புத்தகம் இதுதான் என்று நினைக்கிறேன். அவ்வளவு எளிமையான ஒரு நடை, ஆனால் சங்கதிகள் ஏராளம் உண்டு. இதுவரை அம்பையை வாசிக்காதவர்கள், அவசியம் வாசியுங்கள்.

*********************************
மூன்று பாடல்கள்
சோனு நிகம், அட்னன் சாமி மற்றும் ஜக்தீத் சிங்

சோனு நிகம், ஜீன்ஸ் படத்துல வரும் வாராயோ தோழி வாராயென் தோழின்னு ஒரு பாட்டு வருமே அந்த பாடலை பாடியவர் இவர்தான். அனேகமாக அதுதான் இவரது முதல் தமிழ்பாடல் இதுவாக தான் இருக்கும். இவர் எளிதாக திரைத்துறைக்கு வந்தவர் இல்லை, முதலில் திருமணங்களில் பாடிவந்தார் பிறகு தொலைகாட்சிகளில் இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளை  நடத்திவந்தார், இசையின் மீது இவருக்கிருந்த ஈடுபாடு தொடர்ந்து சினிமாவில் பாட முயற்சி செய்துகொண்டே இருக்கச்செய்தது. இன்று 300 திரைப்பாடல்களுக்கும் மேலாக பாடியிருக்கிறார். பத்துக்கும் மேற்ப்பட்ட தனி ஆல்பங்கள் வெளியிட்டிருக்கிறார். மிகவும் மென்மையான குரல் இவருடையது. இவரது பாடலகள் பொதுவாக மெலடியாகவே இருக்கும். 
பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்  
இணைப்பாக இன்னுமொரு முக்கியமான பாடல் எல்லோரும் கேட்டிருப்பீர்கள், கல் ஹோ நா ஹோ பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்,


இவரை அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும், ஆய்த எழுத்தில்  நெஞ்சமெல்லாம் காதல் பாடல் உட்பட தமிழிலில் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார். வேகமாக கீபோர்ட் வாசிப்பதில் கில்லாடி, ஆசியாவின் ஃபார்ஸ்டஸ்ட் கீபோர்ட் ப்ளேயர் இவர் என்று விருதுகூட வாங்கியிருக்கிறாரென சொல்ல கேட்டிருக்கிறேன். இந்த பாடலில்கூட அவரது கீபோர்ட் பகுதி ஒன்றிருக்கிறது பாருங்கள், கேளுங்கள்.
பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்   


      ஹிந்துஸ்தானி பாடகர், கஜல் குரு, பாடலாசிரியர் இன்னும் நிறைய அறியப்பட்டவர். இவரது பாடல்கள் பற்றி ஒரு தனிப்பதிவே போடலாம். அவ்வளவு பாடல்கள் இருக்கிறது. இருந்தாலும் நேற்றும் கேட்ட அந்தப்பாடல் இங்கே. பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்  

15 கருத்துரைகள்:

கோபிநாத் said...

படம் ரஸலுக்காக பார்க்கனும் - அதை விட உங்க நீங்க எழுதியிருக்கிறதுக்காக கண்டிப்பாக பார்த்துடுவேன் ;)

\\\\நிச்சயம் வாசிப்பில் தவறவிடக் கூடாத ஒரு மனிதர், ஜெ.மோ என்று புரிந்து கொண்டேன்.\\\\

வந்துட்டிங்க நம்ம வழிக்கு சூப்பரு ;)

படிச்சிட்டு பதிவு போடுங்க தல ;)

கோபிநாத் said...

\\பொதுவாகவே நான் படிப்பதில் ஆமை வேகம்தான், 20 பக்கங்களைப் படித்துவிட்டு அதே நினைப்பில் ஒரிரு நாட்கள் இருப்பேன், பிறகுதான் அடுத்த பக்களுக்கே நகருவேன்.\\

சேம் பிளட் ;)

உலக சினிமா ரசிகன் said...

ஜெயமோகனின் ஏழாம் உலகம் தமிழில் வந்த இலக்கியம்.படித்துவிட்டு படாதபாடுபடுவீர்கள்.அதிலிருந்து வெளியேற எனக்கு ஒரு வாரம் ஆகியது.

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

அட எப்படிமிஸ் பண்ணேன் இந்தப் படத்தை?

ஆனாலும் நல்ல இசை ரசிகனய்யா நீர்.

சு.சிவக்குமார். said...

//பாய்ஸில் நெஞ்சமெல்லாம் காதல்// உண்மை சொன்னால் நேசிப்பாயா..மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா...நீங்க இந்தப் பாடல் பற்றி தானே சொல்றீங்க முர்ளீ! அப்படின்னா படம்: ஆயுத எழுத்து.

☼ வெயிலான் said...

// இதற்கு முன்பாக எழுத்துக்களை, வரிகளை, பக்கங்களை இப்படி வலியோடு கடந்துபோனது இல்லை //

ரைட்டு.... இன்னும் அழ ஆரம்பிக்கலியா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபி
அவசியம் பாருங்க தல, எட்ஜ் சீட் மூவிதான் இது.....

ஏழாவது உலகம் கண்டிப்பா தனிப்போஸ்ட் போட்டே ஆகனும் போல....
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@உலக சினிமா ரசிகன்
எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது, பாஸ்கரன் ஜீ......

முரளிகுமார் பத்மநாபன் said...

@கேபிள் சங்கர்
அப்பப்போ என் ப்ளாக் பக்கம் வந்துட்டு போயிட்டுதான் இருக்கீங்கன்னு நம்புறேன். கணிடிப்பா நல்ல இசையின் ரசிகன்தான் தல நான். ஐ லவ் ம்யூஜிக்

முரளிகுமார் பத்மநாபன் said...

@சிவக்குமார்
சிவா, திருத்திட்டேன். நீங்க சொன்னதுதான் சரி.. :-)

ஷஹி said...

3 ஆவது தடவையா இதே காமெண்ட் டைப் பண்றேன்..முடியல..error வந்துகிட்டே இருக்கு..இது தான் லாஸ்ட்..
தீவிர வாசிப்பு என்றான பிறகு, ஜெமோ வை வாசிக்காமல் தீராது முரளி! வாசகனை ஒரே சமயத்தில் ரசிக்கவும் விமர்சிக்கவும் செய்ய அவரால் மட்டும் தான் முடியும்..
கதாவிலாசம் என்னை அயர்த்தின மாதிரி வேறெந்த புத்தகமும் செய்ததில்லை..மூன்றாம்கோணத்தில் பதிவிட்டு விட வேண்டும் என்று நானும் பல மாதங்களாய் நினைக்கிறேன்..மலைப்பில் முடிவதேயில்லை..
அம்பையை ஒரு ஆண் படிப்பதே ஆச்சர்யம்! இதில் நீங்கள் சிலாகிக்கிறீர்கள்..சந்தோஷம்..அம்மா ஒரு கொலை செய்தாள் படித்துவிட்டு தான் நான் முழுத் தொகுப்பையும் வாங்கினேன்..
வண்ணதாசனைப் பொறுத்தமட்டில் வாராந்திரிகளில் அவருடைய சில கதைகள் படித்ததோடு சரி..உங்களால் தான் ஒளியிலே தெரிவது, பெய்தலும் ஓய்தலும் இரண்டும் படித்தேன்..சான்ஸே இல்லை..no body can ever write so much in detail about a moment's happenings..நன்றி உங்களுக்கு..

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஷஹி
3 ஆவது தடவையா இதே காமெண்ட் டைப் பண்றேன்..முடியல..error வந்துகிட்டே இருக்கு..இது தான் லாஸ்ட்..//

இப்படி கோபப்பட்டா எப்படி, கடைக்கு மெயிலாவது போடனும்.....
:-)//அம்பையை ஒரு ஆண் படிப்பதே ஆச்சர்யம்! இதில் நீங்கள் சிலாகிக்கிறீர்கள்..சந்தோஷம்..அம்மா ஒரு கொலை செய்தாள் படித்துவிட்டு தான் நான் முழுத் தொகுப்பையும் வாங்கினேன்..//

அம்பையின் இன்னும் இரண்டு புத்தகங்கள் ஆர்டர் செய்திருக்கிறேன். படிக்கனும்.


//no body can ever write so much in detail about a moment's happenings..நன்றி உங்களுக்கு..//
மிக்க நன்றி ஷஹி, மகிழ்ச்சியை பங்கு போடுவதில் எனக்கு மகிழ்ச்சியே....

மனம் திறந்து... (மதி) said...

அட்னான் சாமியை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா என்ன...மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்கு? குன்னக்குடிக்கு வயலின், சாமிக்கு கீபோர்ட் அவ்வளவு தான் வித்தியாசம்....ரெண்டு பேரும் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்...கேட்டுக் கொண்டு! ஆனால், சாமிக்கு வாழ்க்கையில் நேர்ந்த சோகம் தான் நெருடுகிறது....என் செய்வது! நம்மாலாவது எதுவும் இல்லையே! பீகி பீகி ராத்தோமே... மழையுள்ளவரை...இல்லை, இல்லை... வானுள்ளவரை பொழியும், ஒலிக்கும், இனிக்கும், உய்விக்கும்!

முரளிகுமார் பத்மநாபன் said...

@மதி
நன்றி பாஸ், உங்க பேரை எங்கையுமே காணோமே? சரி விடுங்க மதின்னே கூப்பிடறேன்.... உங்க ரசனைக்கு நன்றி பாஸ். நிச்சயமா சாமி பாட்டு மழையிருக்கும் வரை நிக்கும்...

அப்பாதுரை said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

இந்த ரசல் படம் ரொம்ப சுமார் என்பது என் கருத்து. நிறைய பரிமாணங்களைக் காட்ட இயலாத சுமார் நடிகர் என்றும் நினைக்கிறேன். உங்கள் விமரிசனம் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது என்பது உண்மை.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.