அறிமுகம்

தமிழ்மணம் ஸ்டாராக இந்த ஒரு வாரம் எழுதவிருக்கிறேன், என்னுடைய அறிமுகப்பதிவாக இதை எழுதுகிறேன்.பிறந்த சில நாட்களிலேயே கடுமையான காய்ச்சலினால் அவதிப்பட்டு, பிழைப்பது கடினம் என்கிற ஒரு நிலைக்கு வந்த பிறகு, அந்தக் குழந்தையின் அம்மாவும், பாட்டியும் கடவுளை மனமுருகி வேண்டிக் கொள்கின்றனர். கடவுளே! எங்கொழந்தைய காப்பாத்திக் கொடு, அதுக்கு உன் பேரையே வைக்கிறேன்னு, அம்மா முருகனிடமும், பாட்டி பெருமாளிடமும். பெருமாளும், முருகனும் சேர்ந்து காப்பாற்றி அவர்களின் பெயர்களையும் பாதிப் பாதியாக அருளிய குழந்தை தான் நான். முரளிகுமார். இந்த காம்பினேஷனில் பெயர்கள் மிகவும் குறைவு. சிறுவயதில் ஒரே பெயரில் வகுப்பில் நிறைய பேர் இருப்பார்கள், எனக்கு என் பெயரில் யாருமே இல்லையே? என்று கடுப்பா இருக்கும். அம்மாவிடம் வந்து சண்டையிடுவேன். அப்போது அம்மா சொன்ன பெயர்க்காரணம் தான், மேலே நான் சொன்னது. அதேபோல முரளிகுமார்.P என்று எழுதுவது எவ்வளவு அருவெறுப்பானது என்றால் Muralikumar.ப என்று எழுதுவதைப் போல, அதனால் முரளிகுமார் பத்மநாபன்.


அப்பாடா! இளங்கோ அழைத்திருந்த தொடர் பதிவுக்கு எழுதிய மாதிரியும் ஆச்சு, தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் ஆச்சு. (மேலும் விருப்பமிருப்பவர்கள் இந்த பெயர்க்காரணம் என்கிற தொடரை தொடரலாம்)

இரண்டு வருடங்களாக வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வலைப்பதிவிற்கு வரும் எந்த ஒரு புதியவரையும் போல வந்த முதல் வருடங்களில் திரட்டிகளின் அறிமுகமின்றி, பின்னூட்டங்களின் பலன் தெரியாது, நானே எழுதி நானே பாராட்டிக்கொண்டிருந்த காலம். அதுபோக நண்பர்களுக்கு மெயிலில் அனுப்பி படிக்கச் சொல்லி கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தேன். அவர்களும் எப்போதும் ஒரே பதிலாய் ஒரே பெட்டி பெட்டியாய்த்தான் தெரிகிறது, என்றே சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிறகு நிறைய நண்பர்களின் மூலமாக திரட்டிகளையும், திரட்டிகளின் மூலம் நிறைய நண்பர்களையும் பெற்றேன்.

படிப்பவர்களை சிலாகிக்கச் செய்யும்படியான அதீத எழுத்துத் திறமை என்னிடம் இல்லை, இருந்தாலும் எழுதுவது எனக்கு பிடித்தமானதாகவே இருக்கிறது. குறைந்த பட்சமாய் வாசிப்பவர்களுக்கு அயற்சி ஏற்படுத்தாத வகையில் எழுதவே முயன்று வருகிறேன்.

இசை, சினிமா, ஊர்சுற்றுதல், புகைப்படமெடுத்தல், புத்தக வாசிப்பு இவற்றின் மூலம் எனக்கு கிடைக்கும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் கிறுக்கல்களும், சிறுகதைகளும்(?) எழுதுவேன். இதுவரையிலும் தொடர்ந்து வாசித்தும் உற்சாகப்படுத்தியும் வரும் அனைத்து நண்பர்களுக்கும், மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்ள இந்த அறிமுகப்பதிவை பயன்படுத்துக்கொள்கிறேன்.
நன்றி நண்பர்களே!

தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு அல்ல, இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு என் பதிவுகளுக்கு புதிதாக வரவிருப்பவர்களுக்கு என்னைப்பற்றி இந்த அறிமுகம் தேவையானது என்றே நினைக்கிறேன். இனி என் பதிவுகளில் எனக்குப் பிடித்த, நிறைய வாசிக்கப்பட்ட சில பதிவுகளையும் கீழே குறிப்பிடுகிறேன்.


1. முதன்முதலாக எனக்கு என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம், உரையாடல் கவிதைப்போட்டியில் பரிசுபெற்ற கிறுக்கல் - அப்பாவும் ஆல் இந்தியா ரேடியோவும்

2. ஆனந்தவிகடனில் வெளியாகிய எனது இரு கிறுக்கல்கள்
3. தோழர் மாதவராஜ் அவர்கள் தொகுத்த பதிவர்களின் சிறுகதை தொகுப்பான  “மரப்பாச்சியின் சில ஆடைகள் தொகுப்பில் இடம்பெற்ற எனது சிறுகதை - பட்டாம்பூச்சி பார்த்தல்.
4. தமிழ்மணம் 2010 விருதுகளில் உலகசினிமா அறிமுகம் பிரிவில் இரண்டாவது பரிசு பெற்ற  உடான் விமானம் காத்தாடி ஒரு கனவு
5. யூஸ் & த்ரோ மனநிலையை மறுதலிக்கும் பார்வையுடன் எழுதிய பதிவு. யூஸ் & த்ரோ
7. இதுபோக தொடர்ந்து கிறுக்கிக் கொண்டிருக்கும் எனக்கு, எனது கிறுக்கல்களில் பிடித்தமான ஒன்று - கிறுக்கல்கள்

நாளை பீப்பீப்பூமரம்.................................

46 கருத்துரைகள்:

cheena (சீனா) said...

அன்பின் முரளி

நட்சத்திர நல்வாழ்த்துகள் முரளி - கலக்குக ஒரு வாரத்திற்கு - நட்புடன் சீனா

என். உலகநாதன் said...

நட்சத்திர வாழ்த்துகள் முரளி.

மோகன் குமார் said...

மிகுந்த மகிழ்ச்சி.

வாழ்த்துகள் முரளி. கலக்குங்க

எம்.எம்.அப்துல்லா said...

நட்சத்திர நல்வாழ்த்துகள்.

அப்புறம் உங்க எழுத்து பிடிச்ச யாரோ ஒரு பதிவர்கூட பிரமிள் புக்கு குடுத்தாருல்ல :))

வெறும்பய said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அன்பரே..

பூந்தளிர் said...

வாழ்த்துக்கள் முரளி !

☼ வெயிலான் said...

நட்சத்திரமானதற்கும் வாழ்த்துக்கள் முரளி! :)

ஷஹி said...

"பொறாம பிச்சு திங்குது"ன்னு எங்க ஊர் பக்கம் ஒரு சொலவடையுண்டு- அது எப்புடி பிச்சு திங்கும்னு இப்பதான் தெரியுது எனக்கு -iam jealous of you!congrats..

சந்தனமுல்லை said...

நட்சத்திர வாழ்த்துகள்!

சங்கவி said...

வாழ்த்துக்கள் முரளி....

sugirtha said...

முரளி,

உங்களைக் குறித்த நல்லதொரு அறிமுகம்.

நீங்கள் குறிப்பிட்டிருந்த உங்கள் பதிவுகளை எல்லாம் இப்போதுதான் வாசித்தேன். சுவாரஷ்யமான எழுத்து நடை.

1. அப்பாவும் ஆல் இந்தியா ரேடியோவும் - ஆல் இந்தியா ரேடியோவில் அப்பாவை கேட்கும் அடர்த்தியான நினைவுக் கவிதை. அருமை...

2. இரு கிறுக்கல்கள் - லக்ஷணமான பெண் எப்படி இருப்பாள் என்று முடிவது - எதார்த்தக் கவிதை
3. பட்டாம்பூச்சி பார்த்தல். - lovely அப்பா
4. உடான் – விமானம் – காத்தாடி – ஒரு கனவு -
உண்மை தான். ஒரு படத்தை ரிலேட் செய்ய முடிகையில் அதுவும் அனுபவம் ஆகி விடுகிறது.
எல்லோருக்கும் வாழ்க்கை எளிதாய் இருப்பதில்லை. மேல் சொன்னது போல குழந்தையின் ஆசையை கொண்டாடி வாழும் அப்பா எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.
5. ஒரு தந்தையும் மூவாயிரம் மரங்களும் - என்னை பொறுத்த வரை ஆடு மேய்பவர்கள் தியானிப்பவர்கள் போல, அந்த மோனம் காண அலாதியானது. ஆடு மேய்பவர்களை பார்த்துக் கொண்டிருப்பதே கவிதைதான். இவர் ஆடு மேய்த்துக் கொண்டே நட்டிருக்கும் மரத்தின் எண்ணிக்கையை பார்க்கையில், நம் ஊர்களில் சொல்வதைப் போல சின்னச் சோலி இல்ல! அவர் பேரன் பள்ளி சென்று படிப்பதைக் காட்டிலும் அவரிடம் கற்றுக் கொள்ள இருக்கிறது ஏராளம். அவரை நீங்கள் தேடிச் சென்று மரியாதை செய்தது மிக நல்ல செயல்.

வரப்போகும் உங்கள் தமிழ்மண பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள் முரளி. :)

கனிமொழி said...

:) Congrats nanba.....!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வாழ்த்துகள் முரளி

கோபிநாத் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தல ;) கலக்குங்க ;)

ஜோதிஜி said...

வாழ்த்துகள் முரளிகுமார் ப.

உங்களின் பல கவிதைகளுக்கு நானும் ஒரு ரசிகன். வாசகன்.

சுசி said...

நட்சத்திர வாழ்த்துகள் ஆசிரியரே.. :)

துளசி கோபால் said...

நட்சத்திரமே! எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

விஜி said...

வாழ்த்துக்கள் முரளி :)

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வாழ்த்துகள் முரளி.

கிருஷ்ண பிரபு said...

நீ ஏற்கனவே பிரகாசிக்கும் நட்சத்திரம் தானே முரளி... ஒ... மிலிட்டரிகாரன் மாதிரி புஜங்களில் விண்மீன்கள் ஏறுகிறது போலும்.

ஆதவா said...

வாழ்த்துக்கள் முரளி சார்.... ஒவ்வொரு வருஷமும் கியர் போட்டு ஏறிட்டே இருக்கீங்க...

விக்னேஷ்வரி said...

வாழ்த்துகள் தமிழ்மண நட்சத்திரமே. நல்ல அறிமுகப் பதிவுடன் கலக்கலா ஆரம்பிச்சிருக்கீங்க. தொடரட்டும்.

நிகழ்காலத்தில்... said...

மகிழ்ச்சி முரளி.. நன்கு பழகி இருந்தாலும் அறிமுகம் எனக்கும் புதிதே:))

இளங்கோ said...

Congrats Murali :)

மணிஜீ...... said...

முரளி..மிக்க மகிழ்ச்சி....வாழ்த்துக்கள்...

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள் முரளீ.

நாடோடி இலக்கியன் said...

வாழ்த்துகள் நண்பா.

முரளிகுமார் பத்மநாபன் said...

@சீனா சார்
நன்றி சீனா சார், உங்கள் ஆசி.....

@ என். உலகநாதன்
நன்றி ஐயா. :-)

@மோகன்குமார்
தலைவரே! பாருங்க உங்க பின்னாடியே வந்துட்டு இருக்கேன். கொஞ்சம் வெயிட் பண்ணா கூடவே வருவேன்... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்துல்லா
தேங்க்ஸ்ண்ணே! ஆமாண்ணே அந்தப் நிகழ்வையும் எழுதியிருக்கனும். ஆனா அந்தப் பதிவர் பிரமிள் புத்தகத்தை ஏன் குடுத்தார்ன்னு புக்கை படிச்சதுக்கு பிறகுதான் தெரிந்தது... :-)
நன்றிங்க உங்கள் அன்பிற்கு.....

முரளிகுமார் பத்மநாபன் said...

@ வெறும்பய
நன்றி நண்பா! போன வாரம் நீங்கதான் போல, உங்களுக்கு என் வாழ்த்துகள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@பூந்தளிர்
தேங்க்ஸ் சாமி

@வெயிலான்
நட்சத்திரமானதற்கும்’ன்னா தல புரியலையே? :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ஷஹி
என்னைப் பார்த்து பொறாமைப் படக்கூட ஆள் இருக்காங்கன்னா கொஞ்சம் வெட்கப்படுமளவிற்கே பெருமையாக இருக்கிறது. நன்றி ஷஹி.. தொடர்ந்து வாங்க:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சந்தனமுல்லை
தேங்க்ஸ் மேம்... :-)

@சங்கவி
தேங்கஸ் நண்பா! :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சந்தனமுல்லை
தேங்க்ஸ் மேம்... :-)

@சங்கவி
தேங்கஸ் நண்பா! :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுகிர்தா
//நீங்கள் குறிப்பிட்டிருந்த உங்கள் பதிவுகளை எல்லாம் இப்போதுதான் வாசித்தேன் //

நன்றி சுகிர்தா, எனது பழைய பதிவுகளுக்குக் கிடைத்த உங்களின் புதிய பின்னூட்டங்கள், மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நானும் ஒரு முறை திரும்பப் படித்துக்கொண்டேன்.

வரப்போகும் உங்கள் தமிழ்மண பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள் முரளி. :)
தேங்க்யூ சுகிர்தா... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கனிமொழி
தேங்க்ஸ் கனி, ஸாரி காலையில ஆபீஸ்ல இல்லை. :-)


@T.V.ராதாகிருஷ்ணன்
தேங்க்யூ சார்


@கோபிநாத்
தேங்க்ஸ் கோபி, ஒரு வாரம் தொடர்ந்து இம்சைதான், சகிச்சிக்குங்க :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஜோதிஜி
//உங்களின் பல கவிதைகளுக்கு நானும் ஒரு ரசிகன். வாசகன்//
நன்றி தலைவரே! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது கேட்க.....

@சுசி
ஆசிரியரா? இல்லை நான் அவங்க பையன்....ஹி ஹி ஹி...

@துளசி கோபால்
தேங்க்ஸ் துளசி மேடம் :-)

@விஜி
தேங்க்ஸ் அண்ணி..... :-)

@திருநாவுக்கரசு பழனிசாமி
திரு மிக்க நன்றி, உங்க யோசனையைத்தான் பின்பற்றுகிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கிருஷ்ண பிரபு
//நீ ஏற்கனவே பிரகாசிக்கும் நட்சத்திரம் தானே முரளி... ///
சத்தியமா இதை என்னால் காம்ப்ளிமெண்டா எடுத்துக்க முடியாது, இது கிண்டல்தான்...

//ஒ... மிலிட்டரிகாரன் மாதிரி புஜங்களில் விண்மீன்கள் ஏறுகிறது போலும்.//

ம்ம்ம், ஆமா கிருஷ்ணா, பாப்பாய் ஷோவில் ஸ்பினாச் தின்றவுடன் தெம்பு வருமே அதுமாதிரி.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதவா
சாரெல்லாம் வேண்டாம் ஆதவா, யாருக்கோ போட்ட பின்னூட்டம் மாதிரி இருக்கு..... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ விக்னேஷ்வரி
//வாழ்த்துகள் தமிழ்மண நட்சத்திரமே. நல்ல அறிமுகப் பதிவுடன் கலக்கலா ஆரம்பிச்சிருக்கீங்க. தொடரட்டும்//

தேங்க்யூ சிஸ், :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@நிகழ்காலத்தில் சிவா
தேங்க்ஸ் சிவா அண்ணா.. :-)

@நாடோடி இலக்கியன்
நன்றி நண்பா! :-)

உலக சினிமா ரசிகன் said...

கலக்குங்க முரளி.வாழ்த்துக்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@உலகசினிமா ரசிகன்
தேங்க்ஸ் தலைவரே! நாளை மறுநாள் அவசியம் வாங்க

பா.ராஜாராம் said...

முரளியா இந்த வாரம்? verygood! :-)

கலக்குங்க..

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்!
குறிப்பிட்டிருக்கும் சுட்டிகளைப் படிக்கிறேன்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்துடன் வாழ்த்துகள் முரளி!

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.