பீப்பீப்பூ மரம்


வீட்டிலிருந்து 8.20க்கெல்லாம் வெளியே வந்து நடக்க ஆரம்பிச்சிடுவோம். எங்க தெருவைத் தாண்டி மும்மூர்த்திகள் சபா வந்து கோவில் வீதிக்கு வரவே 8.30 ஆயிடும். சசியை கூப்பிடணும், கமலாலயக்குளத்தின் வடகரையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குப் போகணும், அப்படியே பேசிக்கிட்டே சுத்தினோமின்னா தென்கரையில் இருக்கும் எஸ்.எஸ்.மிடில் ஸ்கூலுக்கு போய்ச் சேர சரியா 9 மணியாகும்.

அம்மா டீச்சராச்சே, அவங்களோடதான் தினமும் ஸ்கூலுக்குப் போவேன். அம்மா பின்னாடியே வேடிக்கை பார்த்துக்கிட்டே நடக்கும் எனக்கு சசி வீடு மட்டும் சரியா தெரியும். அங்க நின்னுடுவேன். நான் வரவும்அவனும் பைய மாட்டிகிட்டு வரவும் சரியா இருக்கும். முன்னாடி நடந்துகிட்டிருக்கும் அம்மா அப்பப்போ திரும்பி பார்த்துக்குவாங்க.
அம்மா பார்க்காத பொழுதுகளில் ரவியண்ணனின் லாட்டரி கடையிலிருந்து கட்டு கட்டாய் சீட்டு வாங்கிகொண்டு வருவான். அதனை பர்.. பர்ன்னு விசிறிகிட்டே நடப்போம். புள்ளையார் கோவில்ல சாமி கும்பிட்டுட்டு, தெப்பகொளத்து கைப்புடி சுவர்கிட்ட நின்னு சீட்டுகளை கட்டோடு விசிறியடிப்போம். சீட்டேல்லாம் சிதறி பறக்கும். உள்ளே குளிச்சிட்டிருக்க யாரச்சும் பார்த்து டேய்!ன்னு ஒரு சத்தம் குடுப்பாங்க, நல்ல புள்ளையாட்டம் கையத்தொடச்சிக்கிட்டு அம்மாவிற்கு முன்னாடி ஓடி நின்னுப்போம்.
ஸ்கூல் பக்கத்துல வந்துட்டோம்னாலே தெரியும், ஒரே வாசமா இருக்கும். விதவிதமா செடிகளும், மரமும் ஸ்கூல கிரவுண்டு முழுக்க இருக்கும். அதுலயும் அலுமினியக்கலர் பெயிண்ட் அடிச்ச மெயின் கேட்டிலிருந்து வரிசையா காகிதப்பூ மரம் இருக்கும். நடக்கிற வழி முழுசும் வெள்ளையும், ரோஸ்கலருமா பூவாக்கெடக்கும். கேட் வரைக்கும்தான் நடந்து வருவோம், கேட்டைத்தாண்டியதும் ஓடுவோம். கிட்டத்தட்ட எல்லாப் பசங்களும், புள்ளைகளும் அப்படித்தான் ஓடுவாங்க. 
நேரா கிளாசுக்குப்போயி பையை வச்சிட்டு, கிரவுண்டுக்கு ஓடுவோம். சின்ன கிரவுண்டுதான், ஆனா நிறைய மரமா இருக்கும். அது மூணு மரம்தான் ஸ்பெசல், வேப்பமரம், பூவரசமரம், பீப்பீப்பூ மரம். எனக்கு பீப்பீப்பூ மரம்தான் பிடிக்கும். ஏன்னா, சசிக்கு அதுதான் பிடிக்கும். எங்களுக்கும் அந்த மரத்தடியில் இருக்கும் திண்டுதான் எல்லாமே, இண்டர்வெல்லுல, சாப்பிட, விளையாட என எல்லாத்துக்குமே பீப்பீப்பூ மரத்தடிதான். 
நாலே நாலு இதழ்தான் இருக்கும், வெள்ளவெளேர்ன்னு. இளம்பச்சையில நீளமான காம்பு. அனுபவிச்சதுமே ஐய்யோன்னு இருக்குமே அப்படி ஒரு வாசம். மரம் முழுக்கப் பூத்து தலைகீழாத் தொங்குமே, அதுதான் பீப்பீப்பூ. அதும் ஏன் பீப்பீப்பூ?


சசி, அந்த நாலு இதழையும் பிச்சிப்போட்டுட்டு காம்பை வாயில வச்சி லாவகமா பீப்பீன்னு ஊதுவான். நான் அப்படி ஊத எவ்வளவோ முயற்சி பண்ணியிருக்கேன். ஊஹூம்! கடேசி வரைக்கும் எனக்கு ஊத வரலை. ஆனா, அவன் சும்மா அப்படின்னு ஊதுவான், எனக்கு கோவமா வரும். நான் சசி மேல அந்த ஒரு விஷயத்துல மட்டும்தான் கோவப்படுவேன்.
அரைப்பரீட்ச்சை முடிஞ்சி ரெண்டுவாரம் இருக்கும். மூணு நாளா சசி ஸ்கூலுக்கே வரலை. அவன் வீட்டிக்கு முன்னாடி நிப்பேன், அவன் அம்மா சசிக்கு அம்மை போட்டிருக்குப்பா, அவனுக்கு உடம்பு சரியானோன்ன வருவான்னு சொல்லுவாங்க. ஒரு பத்து நாள் இருக்கும், ஸ்கூல் ப்ரேயர்ல சசி செத்துப்போயிட்டான்னு சொல்லி எல்லாரையும் மெளனமா இருக்கச் சொன்னாங்க.
போனவாரம் அக்கா பையன், அப்பாகிட்ட தாத்தா, எனக்கு பைக் வாங்கிக்குடுங்கன்னு கேட்டான், அப்பா நீ பெரியவானாயி காலேஜுக்கு போகும்போது, தாத்தா பைக் வாங்கித் தரேன்னு கொழந்தை மாதிரி சொல்லிட்டிருந்தார். அவன் சாதாரணமா சொன்னா அதுக்குள்ள நீங்க செத்து போயிடுவீங்களே, தாத்தான்னு”.
நமக்கு அந்த வயசுல இவ்ளோவெல்லாம் தெரியாது, செத்துபோயிட்டான்னா, சாமிகிட்ட போயிட்டான், அவ்ளோதான். அம்மாகிட்ட கேட்டாலும் அதையேதான் சொல்லுவாங்க, அதுக்கு அப்புறமா என்னை சசி வீட்டு முன்னாடி நிக்கவும் விடுறதில்லை. 
எனக்கு, அவன் செத்துபோயிட்டான்றத விட, சசி ஸ்கூலுக்கு எங்கூட வர மாட்டேங்குறான்னு கோவமாத்தான் இருந்துச்சு. அந்த வருஷம் மிச்ச நாளெல்லாம் நான் மட்டும்தான் உக்காந்திருப்பேன், பீப்பீப்பூமரத்தடியில்.

அந்த வருஷத்தோட, அப்பாவுக்கு மாத்தலாகி இங்க வந்துட்டோம். புது ஸ்கூலு, புது ப்ரெண்ட்ஸ், புது கிரவுண்ட், எல்லாமே புதுசா இருந்துச்சு. சசி என் ஞாபகத்துலையே இல்லை. ஒருநாள், அம்மாச்சி செத்துட்டாங்கன்னு சொல்லி ஸ்கூல்லருந்து பாதியிலேயே கூட்டிப்போனாங்கஊருக்கு வந்தா, எல்லாரும் அழுதுட்டே இருந்தாங்க. ஏதோ புரியிறமாதிரி இருந்தது. சாவுன்னா என்னான்னு தெரியிறபோதுதான், சசிதான் நியாபகத்துக்கு வந்தான். அப்போ ரொம்ப வலிச்சது. நானும் அழுதேன்.
இன்று வரைக்கும், உண்மையிலேயே அது என்ன மரம்? அந்தப் பூவின் பெயர் என்ன? என்று தெரிஞ்சிக்க முயற்சி பண்ணவேயில்லை. சசி சொன்ன அந்த பீப்பீப்பூவே அழகா இருக்குன்னு விட்டுட்டேன். இப்பவும் எங்க பீப்பீப்பூ மரத்தைப் பார்த்தாலும், சட்டுன்னு பீப்பீன்னு ஊதிகிட்டே சசி இறங்கி ஓட ஆரம்பிச்சுடறான், நான் பார்த்துக்கிட்டே இருக்கேன்.

****************************************************************************** 

நாளை எது உலக சினிமா?

40 கருத்துரைகள்:

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வான தொடக்கம் முரளி.

மரமும், செடியும், கொடியும், இலையும், பூவும் மனிதர்களோடு உரசும் போது / இழையும் போது அப்படித்தான் வருகிறது. இந்த அப்படித்தான் என்பதை எப்படித்தான் என்பதை சொல்லமுடியாது. இயலாது. சொல்லமுடியாத / இயலாத எவ்வளவு விஷயங்களை இந்த தாவரங்கள் கிளர்த்துகிறது. இல்லையா?

பீப்பிப் பூ மரம்!

எடுத்து, நானும் ஒரு தடவ ஊதிப் பார்த்துக் கொண்டேன் முரளி. (எப்பவும் போல காத்துதான் வருது) :-)

சுசி said...

எங்க ஊர்ல நான் இந்த மரம் பார்த்ததில்லை.

சசி :((((

அகல்விளக்கு said...

Amazing narration...

Gifted writer...

keep going...

shri Prajna said...

முரளி ...

நேத்து நீங்க அந்த மரம் பேரு என்னனு கேட்டப்போ, எவ்ளோ தடவை தோல் பைய மாட்டிட்டு schoolukku போய் வரப்போ பர்த்திறுகிறோமே பெயர் தெரிஞ்சுகலைன்னு யோசிச்சிட்டு இருந்தேன் ...அப்புறம் அறிமுகம் படிச்சிட்டு பீப்பீப்பூ மரம் எப்படி ஒரு பேரான்னு யோசிச்சிட்டு இருந்தேன் ..இப்போ இதைவிட சரியான பேர் இருக்கமுடியும்னு தோணலை ...

சின்ன வயசுல நான் ஸ்கூல் போயிட்டு வரப்போ செண்பகம் மரம் ஒன்னு கிராஸ் பண்ணுவேன் அதுல இருந்து விழுகிற இதழ் சேகரிப்பேன் நேரிய கெடச்சுதுன்ன அவ்ளோவ் சந்தோசமா இருக்கும் ...

சிறிய வயது சந்தோசத்தை இழந்து விட்டதை உணர்ந்தாலும் ...நினைச்சு பாக்கறது கூட நல்லாத்தான் இருக்கு ..

பீப்பீப்பூ மரம் "இழப்பின் வலி உணர்த்திய கனமான பதிவு ...

ஷஹி said...

ஐயோ இது தெரியாதா? இது தான் பன்னீர் புஷ்பம்! அப்புடி ஒரு வாசமா இருக்குமே..ஒரு தெருவுக்கு ஒரே மரம் போதும்..எங்க வீட்டு வாசல்ல நான் வச்சிருக்கேன்..மரம் ரொம்ப உயரமா வளருமே தவிர ரொம்ப பொக்கையா இருக்கும்(weak) கொஞ்சம் பெரிய காத்தடிச்சா போச்சு.."பொத்"..great story murali..

அன்புடன் அருணா said...

kuத்தில் அந்தக் கல் நிறைய நினைவு வட்டங்களை ஏற்படுத்தியது.எனக்கும் அந்த மரம் பீப்பீ மரம்தான்.
அந்தப் பூவை வாய்ல் வைத்து ஊதும் போது தேன் மாதிரி இனிக்கும்!
அந்தப் பூவின் பெயர் பன்னீர்ப்பூக்கள்னு நினைக்கிறேன்!பூங்கொத்து!

மோகன் குமார் said...

ஒவ்வொருவரும் இளமை காலத்தில் ஒரு நண்பனின் மரணத்தை சந்திக்கிறோம் தான் !! அந்த மரணம் மனதில் எழுப்பும் உணர்வுகளை எழுத்தில் கொண்ட வர முயன்றுள்ளீர்கள். அருமை

கார்த்திக் said...

நல்ல தொடக்கம் மாப்பி

நட்சத்திர வாழ்த்துக்கள் மாப்பு :-))

வல்லிசிம்ஹன் said...

நட்சத்திர வாழ்த்துகள் முரளி. இந்த மரங்கள் பூமியில் வாசம் தெளிக்கவே வந்தவை.
வாசம் தெளித்துவிட்டு மறைந்த உங்கள் நண்பனின் நினைவும் உங்களோடு வாசமாகத் தங்கி இருக்கட்டும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@மகாப்பா
:-) சந்தோசமா இருக்கு....

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுசி
எங்கிங்க நார்வேயிலயா? மியான்மார்ல தேடினாலும் கிடைக்கும். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அகல்விளக்கு
நண்பா! விஷயம் கேள்விப்பட்டேன், உங்களிடம் பேசுகிறேன்.

நிகழ்காலத்தில்... said...

நட்பின் இழப்பின் வலியை புரிந்தும் புரியாமல் உணர்ந்தவாறே எழுத்தில் கொண்டு வந்து இருக்கிறீர்கள் முரளி..

இளங்கோ said...

சின்ன வயது நினைவுகளைத் தூண்டி விட்டது இந்தப் பதிவு.
வாழ்த்துக்கள்

அறிவன்#11802717200764379909 said...

||வாயில வச்சி லாவகமா பீப்பீன்னு ஊதுவான்.||

வாழ்த்துக்கள் நட்சத்திர வாரத்திற்கு..

லாவகம் தவறான பிரயோகம்.
லாகவம் என்பதே சரி..

பதிலாக நேர்த்தியாக என்பது தூய தமிழ்ச் சொல்.

அமுதா கிருஷ்ணா said...

அருமையான பதிவு.இப்பவும் சில விஷயங்களை பார்க்கும் போது, கேட்கும் போது அதனுடன் சம்பந்தப்பட்ட சின்ன வயது நினைவுகளை அசை போட வைக்கும். இந்த பதிவினை படிக்கும் போது அந்த பூவின் வாசத்தை உணர முடிகிறது.

☼ வெயிலான் said...

@ அறிவன் - லாகவம் என்பது சரி தான். இருந்தும், லாவகம் என்ற சொல்லே பெரும்பாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் லாவகம் என்பதும் தவறல்ல.

லாகவம் X லாவகம்

raasu said...

romba nalla irukku murali..

கனிமொழி said...

Well written Murali...
Go on....
:)

விஜி said...

எங்க ஸ்கூல்ல இது 4 மரம் பெருசா இருக்கும், காலையில் வந்து பார்த்தா லேப் வாசல் முழுசும் பூக்கோலம் போட்டிருக்கும், அதோட வாசனை மழை வர மாதிரி இருக்கும் போது காத்தில வரும் போது எல்லாரும் மூச்சை இழுப்பாங்க. பெண்கள் பள்ளியில் இன்னொரு தோட்டம் தான் இந்த மரம்..

முரளி ரொம்ப நல்லா எழுதிருக்கே ...

கோபிநாத் said...

பதிவு முழுக்க பீப்பீப்பூ வாசம் தல..

வானம்பாடிகள் said...

அருமை முரளி.

அப்பாதுரை said...

பூவைத் தெரியுமென்று நினைக்கிறேன் - அன்புடன் அருணா கமென்ட் படித்ததும் நிச்சயம் தெரியும் என்றே தோன்றுகிறது. அரை டிரவுசர் காரைக்கால் நாட்கள் ஏனோ நினைவுக்கு வருகின்றன.

பிசைந்தாலும், நிறைவான பதிவு.

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்த வார நட்சத்திரத்திற்கு கவிதை வீதியின் வாழ்த்துக்கள்...

தங்கள் நினைவுகள் பகிர்வுக்கு நன்றி..

# கவிதை வீதி # சௌந்தர் said...

கவிதை வீதியில் இன்றைய பதிவு...

கோமாளி செல்வாவும் விண்டோசும்...!

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_29.html

அறிவன்#11802717200764379909 said...

வெயிலானுக்கு..

இலாகவம் பற்றி…
தவறாகப் பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் ஒன்றை சரியென ஒத்துக் கொள்ள முடியாது…

நீங்கள் குறிப்பிட்ட சுட்டியில் வாகு என்ற சொல்லை இலாகவ’த்துடன் இணைக்க முயற்சிக்கிறார் கட்டுரையாசிரியர்..அதுவே முதலில் தவறு..

இலா என்பதை வாகு என்பதுடன் சேர்க்க முடியுமா என்ன? அப்படி எனில் வாகு இல்லாத என்று பொருள் வரும்..அதுவும் இலாகவம் என்ற சொல் குறிப்பிடும் பொருளுக்கு எதிரான பொருள் தருவது..

எனவே… ))

கெக்கே பிக்குணி said...

நட்சத்திர வாழ்த்துகள்!

பன்னீர் பூக்கள் தெளிக்கிற பதிவு நல்லா இருந்தது, படிக்கிற எல்லாருக்குமே சின்ன வயசு ஞாபகம் வரும்...

லகு என்கிற சொல் லாகவம் என்பதின் மூலம்னு தோணுது. எனவே லாகவமே.

☼ வெயிலான் said...

@ அறிவன்

லாகவம் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், லாகவமாக என்ற சொல்லை உபயோகிக்காமல், லாவகமாக என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

லாகவம்

லாவகமாக

sugirtha said...

முரளி,

//இன்று வரைக்கும், உண்மையிலேயே அது என்ன மரம்? அந்தப் பூவின் பெயர் என்ன? என்று தெரிஞ்சிக்க முயற்சி பண்ணவேயில்லை. சசி சொன்ன அந்த பீப்பீப்பூவே அழகா இருக்குன்னு விட்டுட்டேன்// ம்ம்.. வெகு அழகாத்தான் இருக்கு...

//சாவுன்னா என்னான்னு தெரியிறபோதுதான், சசிதான் நியாபகத்துக்கு வந்தான். அப்போ ரொம்ப வலிச்சது. நானும் அழுதேன்// சாவு அல்லது பிரிவு நாம் அடையாளம் கண்டுகொள்ளாமல் கடந்து விட முயன்றாலும், எப்போதாவது இறுக்கிப் பிடித்து நமக்கு அதன் முழு வீரியத்தையும் உணர்த்திவிடுகிறது.

"வண்ணதாசன் அவர்கள் சொன்னது போல, எழுத்தாளனுக்கு ஞாபகங்கள் பெரும் சம்பத்து, எழுத்தாளனுக்கு அவஸ்தை தரக்கூடியதும் ஞாபகங்கள்தான்"

பாருங்கள் உங்களுக்கு ஒவ்வொரு பூவுக்கு ஒவ்வொருவர் நினைவில் வருகிறார்கள் . கொய்யாப்பூவுக்கு ஒருவர், இப்போது சசி..

எத்தனை நினைவுகளை வைத்திருக்கிறீர்கள்? தொடர்ந்து எழுதுங்கள் முரளி...

ஆயில்யன் said...

சூப்பர் பாஸ் :) சில விசயங்கள் ரொம்ப நெருக்கமானதாக இருந்து பிறகு நினைவடுக்குகளில் எங்கோ போயி படிந்துகிடக்கும், இது போன்ற நினைவூட்டலிலோ அல்லது யாரோடாவது பழைய கதைகள் பேசிக்கொண்டிருக்கும்போது மெல்ல வெளிப்படும் நினைவுகள் ம்ஹும் இதுக்கு மேல எப்படி சொல்றதுன்னு தெரில பாஸ் இப்டியே நான் ஃபீல் பண்ணிக்கிடறேன் :)

நட்சத்திர வாரத்தில் கலக்குங்க :)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஸ்ரீ பிரஜ்னா
// படிச்சிட்டு பீப்பீப்பூ மரம் எப்படி ஒரு பேரான்னு யோசிச்சிட்டு இருந்தேன் ..இப்போ இதைவிட சரியான பேர் இருக்கமுடியும்னு தோணலை ...//
நன்றி பிரஜ்னா....
//பீப்பீப்பூ மரம் "இழப்பின் வலி உணர்த்திய கனமான பதிவு ... //
உண்மைதான், வலியோடு கூடிய இழப்புதான் இது...

@ஷஹி
//ஐயோ இது தெரியாதா? இது தான் பன்னீர் புஷ்பம்! அப்புடி ஒரு வாசமா இருக்குமே..ஒரு தெருவுக்கு ஒரே மரம் போதும்..எங்க வீட்டு வாசல்ல நான் வச்சிருக்கேன்..மரம் ரொம்ப உயரமா வளருமே தவிர ரொம்ப பொக்கையா இருக்கும்(weak) கொஞ்சம் பெரிய காத்தடிச்சா போச்சு.."பொத்"..great story murali.. //

ஷஹி, இது மரமல்லியாம். அப்படித்தேடித்தான் படங்களைப் பிடித்தேன்.. இதை பதிவிடுவதற்கு முன்பு இரவு ஒரு பத்து பேரையாவது தூங்க விடாமல் தொந்தரவு செய்தேன்.. ஹி ஹி ....
http://www.flowersofindia.net/catalog/slides/Indian%20Cork%20Tree.html

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்புடன் அருணா
//குளத்தில் அந்தக் கல் நிறைய நினைவு வட்டங்களை ஏற்படுத்தியது.எனக்கும் அந்த மரம் பீப்பீ மரம்தான். அந்தப் பூவை வாய்ல் வைத்து ஊதும் போது தேன் மாதிரி இனிக்கும்! அந்தப் பூவின் பெயர் பன்னீர்ப்பூக்கள்னு நினைக்கிறேன்!பூங்கொத்து! //

So thanks of you mam, அந்தப் பூ மரமல்லி என்று சொல்கிறார்கள்.
http://nbranaikatti.blogspot.com/2011/02/blog-post_13.html
http://www.flowersofindia.net/catalog/slides/Indian%20Cork%20Tree.html

@மோகன் குமார்
//ஒவ்வொருவரும் இளமை காலத்தில் ஒரு நண்பனின் மரணத்தை சந்திக்கிறோம் தான் !! அந்த மரணம் மனதில் எழுப்பும் உணர்வுகளை எழுத்தில் கொண்ட வர முயன்றுள்ளீர்கள். அருமை //
மோகன் ஜீ, தேங்க்யூ

@கார்த்திக்
//நல்ல தொடக்கம் மாப்பி, நட்சத்திர வாழ்த்துக்கள் மாப்பு :-)) //
தேங்க்ஸ் மாப்பி

@வல்லிசிம்ஹன்
//நட்சத்திர வாழ்த்துகள் முரளி. இந்த மரங்கள் பூமியில் வாசம் தெளிக்கவே வந்தவை. வாசம் தெளித்துவிட்டு மறைந்த உங்கள் நண்பனின் நினைவும் உங்களோடு வாசமாகத் தங்கி இருக்கட்டும். //

நன்றி சார், வாங்க, ரொம்ப நாளைக்குப் பிறகு வறீங்க, இல்லையா?

@நிகழ்காலத்தில்...
//நட்பின் இழப்பின் வலியை புரிந்தும் புரியாமல் உணர்ந்தவாறே எழுத்தில் கொண்டு வந்து இருக்கிறீர்கள் முரளி//
ஆமாண்ணா, அப்போ எப்படி இருந்துச்சோ அப்படியே எழுதனும்ன்னு நினைச்சேன்..

முரளிகுமார் பத்மநாபன் said...

@ இளங்கோ
நன்றி இளங்கோ, உங்க தொடர் பதிவை முடிச்சிட்டேன் கவனிச்சிங்களா? ஹி ஹி

@அமுதா கிருஷ்ணா
//இந்த பதிவினை படிக்கும் போது அந்த பூவின் வாசத்தை உணர முடிகிறது. //
மிக்க நன்றிங்க மேடம்.. சந்தோசமா இருக்கும் இது போன்ற பின்னூட்டங்களைப் பார்க்கும்போது....

@ராஜா
// romba nalla irukku murali.. //
ராஜா, நீ இன்னும் படிச்சிட்டுதான் இருக்கியா? ரைட்டு...

@கனிமொழி
தேங்க்ஸ் கனி.....

முரளிகுமார் பத்மநாபன் said...

@விஜி
//எங்க ஸ்கூல்ல இது 4 மரம் பெருசா இருக்கும், காலையில் வந்து பார்த்தா லேப் வாசல் முழுசும் பூக்கோலம் போட்டிருக்கும், அதோட வாசனை மழை வர மாதிரி இருக்கும் போது காத்தில வரும் போது எல்லாரும் மூச்சை இழுப்பாங்க. பெண்கள் பள்ளியில் இன்னொரு தோட்டம் தான் இந்த மரம்.. //
அதேதான் அண்ணி, அதே பூதான்.. பூவின் படத்தைப் போடாமலேயே அனைவருக்கும் புரிய வைக்க முடியுமா? என்று யோசனையிலேயேதான் படத்தோடு போட்டேன். அனைவரின் பின்னூட்டங்களையும் பார்க்கும் போது படம் தேவையில்லையோ என்றிருக்கிறது. தேங்க்ஸ் அண்ணி
:-)

@கோபிநாத்
//பதிவு முழுக்க பீப்பீப்பூ வாசம் தல.. //
தேங்க்ஸ் கோபி, டெய்லி வரணும்...... :-)

@வானம்பாடிகள்
நன்றீ சார் :-)

@அப்பாதுரை
//பூவைத் தெரியுமென்று நினைக்கிறேன் - அன்புடன் அருணா கமென்ட் படித்ததும் நிச்சயம் தெரியும் என்றே தோன்றுகிறது. அரை டிரவுசர் காரைக்கால் நாட்கள் ஏனோ நினைவுக்கு வருகின்றன. பிசைந்தாலும், நிறைவான பதிவு. //
மிக்க நன்றி, சார். ரஸலைப் பற்றிய உங்கள் கருத்துடன் முரண்படுகிறேன்
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ # கவிதை வீதி # சௌந்தர்
// இந்த வார நட்சத்திரத்திற்கு கவிதை வீதியின் வாழ்த்துக்கள்...தங்கள் நினைவுகள் பகிர்வுக்கு நன்றி.. //

நன்றி செளந்தர்...


@ கெக்கே பிக்குணி
// நட்சத்திர வாழ்த்துகள்! பன்னீர் பூக்கள் தெளிக்கிற பதிவு நல்லா இருந்தது, படிக்கிற எல்லாருக்குமே சின்ன வயசு ஞாபகம் வரும்...லகு என்கிற சொல் லாகவம் என்பதின் மூலம்னு தோணுது. எனவே லாகவமே. //

நன்றி தலைவரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுகிர்தா

//"வண்ணதாசன் அவர்கள் சொன்னது போல, எழுத்தாளனுக்கு ஞாபகங்கள் பெரும் சம்பத்து, எழுத்தாளனுக்கு அவஸ்தை தரக்கூடியதும் ஞாபகங்கள்தான்"//
சத்தியமான உண்மை

//பாருங்கள் உங்களுக்கு ஒவ்வொரு பூவுக்கு ஒவ்வொருவர் நினைவில் வருகிறார்கள் . கொய்யாப்பூவுக்கு ஒருவர், இப்போது சசி.. எத்தனை நினைவுகளை வைத்திருக்கிறீர்கள்? தொடர்ந்து எழுதுங்கள் முரளி... //
நிச்சயமா சுகிர்தா, மனதின் அடுக்களில் இருக்கும் மனிதர்களை நிறங்களைக் கொண்டும் பூக்களைக் கொண்டும், இன்னபிற விஷயங்களோடு தொடர்பு படுத்தியுமே நியாபகத்தில் வைத்திருக்கிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

ஆயில்யன்
// சூப்பர் பாஸ் :) சில விசயங்கள் ரொம்ப நெருக்கமானதாக இருந்து பிறகு நினைவடுக்குகளில் எங்கோ போயி படிந்துகிடக்கும், இது போன்ற நினைவூட்டலிலோ அல்லது யாரோடாவது பழைய கதைகள் பேசிக்கொண்டிருக்கும்போது மெல்ல வெளிப்படும் நினைவுகள் ம்ஹும் இதுக்கு மேல எப்படி சொல்றதுன்னு தெரில பாஸ் இப்டியே நான் ஃபீல் பண்ணிக்கிடறேன் :) நட்சத்திர வாரத்தில் கலக்குங்க :) //

தேங்க்ஸ் தலைவரே! முதல்முறை வறீங்கன்னு நினைக்கிறேன்.
:)

க.பாலாசி said...

நண்பா... இன்னைக்குதான் பார்க்கிறேன்... நட்சத்திரம் ஆனதில் மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்களும்.

இடுகையைப்பற்றி நான் என்னத்த சொல்லப்போறேன்.. அசத்தலய்யா...

Josephine Baba said...

இதயத்தை தொடும் எழுத்து நடை!நானும் சசியின் மறைவை என்ணி வருந்தினேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எளிமையா அழகா இருக்கு பதிவு.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.