ஓட்டுப்போடுங்க இல்ல ஓ’ போடுங்க.


 எந்த ஒரு விஷயம்,  எப்பொழுது பார்த்தாலும்படித்தாலும்கேட்டாலும் ஒரே மனநிலையைத் தருகிறது? காதலைத் தவிர்த்து? யோசித்தால் ஆயிரம் விஷயங்கள் நினைவிற்கு வரலாம் ஆனால் யோசிக்காமல் சொல்லிவிடக் கூடிய ஒன்று. அரசியல். மே 13, 2009ல் நான் எழுதிய சில விஷயங்கள்  இன்றைய அரசியலுக்கும் பொருந்திப் போகிறதே!


இன்றைய அரசியல்

முன்பெல்லாம் கட்சிக்காககொள்கைகளுக்காகதலைவனுக்காக அல்லது நாட்டுப்பற்றின் காரணமாக அரசியலில் இருந்தவர்களை  காணலாம்இப்பொழுது பேர்பணம்புகழ் இவற்றை மையமாகக் கொண்டே அரசியல் நடக்கிறதுபுதிதாக அரசியலில் ஈடுபட நினைப்பவர்களும் கூடஇதே போன்றதொரு எண்ணங்களின் பிரதிபலிப்பாகத்தான் இருந்திருக்கிறார்கள்இருக்கிறார்கள்இளைஞர்களின் மத்தியில் கூட இதே போன்றதொரு பார்வை இருப்பது மிகவும் கேவலம்கூட்டணிஇந்த வார்த்தை அரசியல் உலகின் மிக கேவலமான ஒன்றாகிப் போயிருக்கிறதுகட்சிக்காககொள்கைகளுக்காக என்றிருந்த காலம் போய் எனக்கு இத்தனை சீட்டு கொடுக்கின்றாயாநாம் இருவரும் கூட்டணி. இல்லையென்றால், அவன் எனக்கு இன்னும் ஒரு சீட்டு சேர்த்துத் தருகிறேன் என்று சொல்கிறான் என்று பேரம் பேசி சீட்டுக்களுக்காக கூட்டணி என்ற நிலையில் வந்து நிற்கிறது.

ஒருவர் பிரதமராக வேண்டுமென்றால், பத்து சீட்டுக்களையாவது விலைக்கு வாங்க வேண்டியிருக்கிறதுஒருவர் முதலமைச்சராக வேண்டுமென்றால், அவசியம் பத்து கட்சிகளின் கூட்டணி தேவைப்படுகிறதுகூட்டணிக்கு இத்துணை கோடி என மொய் எழுதவேண்டியிருக்கிறதுமதவாதிகள்சாதிச்சங்கங்கள்பிற்படுத்தப்பட்டோர் என அனைவரோடும் நட்பு பாராட்ட வேண்டியிருக்கிறதுஅவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கவேண்டியுள்ளதுஇவை அனைத்திற்குமாக இவர்கள் தேர்தலுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கிறதுசொந்தப் பணம்மக்களின் வரிப்பணம்கோடீஸ்வரர்களின் அன்பளிப்பு மற்றும் பெரிய தொழிலதிபர்களிடமிருந்து கட்டாயமாக அல்லது உவந்தளிக்கக்கூடிய பணம் என்று சம்பாதித்த எல்லாப் பணத்தையும் தேர்தலில் முதலீடு செய்ய வேண்டியிருக்கிறதுவிட்டதைப் பிடிக்கஜெயிப்பவன் தன்னுடைய முதலீடை எடுக்கத்தானே முயற்சி பண்ணுவார்.

இதுல, எப்போ பார்த்தாலும் அரசியல்வாதியையே குறை சொல்லிக் கொண்டிருப்பதில் தான் என்ன பயன்அரசியல்வாதிங்கறது யாரு சார்கடவுளாஇல்ல.... வானத்துல இருந்து நேரா மக்களின் குறைகளை மட்டுமே போக்க வந்த தேவ தூதனாஇல்லையே. அவனுக்கும் வீடுபசிதுக்கம்ன்னு எல்லாமே இருந்து தானே தொலைக்கிறதுஎல்லாருடைய காரணமும் இன்றைய அரசியல் சரியில்லைஅரசியல்வாதிகள் சரியில்லை என்பதாகவோதான் இருக்கிறதுஇப்படி சொல்பவர்களில் எத்தனை பேர் தாங்களே சொந்தமாக அரசியலில் ஈடுபட முன் வருவார்கள்ஒருவரும் இல்லைதவறி ஒருஅடி எடுத்து வைத்த ஒரு சிலரும் கூட கோரமான வன்முறைக்கு இரையாகி போயிருக்கின்றனர்.

ஒரு முறை, எனது நண்பனின் மாமா ஒருவர் கவுன்சிலர் பதவிக்காக தேர்தலில் சுயேட்சையாக நின்றார்அவருக்காக தேர்தல் பணிகளையும்ஓட்டு சேகரிப்புப் பணிகளையும் செய்து வந்தோம்அப்போது கூட ஒரு நண்பன் சொன்னான் " மச்சான்இவரு மட்டும் கவுன்சிலர் ஆயிட்டா நமக்கு பிரச்சனையே இல்லடாநமக்கு ஒரு காரியம்னா....என்று அவனுடைய தேவைகளை பட்டியலிட தொடங்கி விட்டான்ஆகஇப்படி ஒரு கவுன்சிலர் பதவிக்கே அவரை சுற்றியுள்ளவர்கள் ஒருவித சுயநல முனைப்புடனே உடனிருக்கின்றனர் என்றால்அரசியல் அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், இதே போன்று அவர்களின் அரசியல் செல்வாக்கை காட்ட வேண்டிய நிர்பந்தத்தை அவர்களின் உறவினர்களும்சுற்றியுள்ளவர்களும் கொடுத்துக் கொண்டேதான் இருப்பார்கள்.

அரசியல்வாதிகள் மட்டுமல்லஅதிகாரம் உள்ள எவருமே செய்யக் கூடியதுதான்செய்து கொண்டிருப்பதுதான்ஒரு தப்பையே தொடர்ந்து செய்வதால், அது தப்பு என்பதையே மறந்து யாராவது ஒருவர் அதைச் சரியாக செய்ய முற்படும்போது, அதுவே தவறாகத் தோன்றுமளவிற்கு தவறுகள் புளித்துப் போயிருக்கின்றனஅதிகாரம் உள்ளவரோ அல்லது அவரை சுற்றியுள்ளவரோ அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசிகொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு விஷயம், " சுமார் 100 குடும்பங்கள் வசிக்கக்கூடிய அவரது குடியிருப்போர் சங்கத்தில் ஒரு முடிவு செய்து வைத்திருப்பதாகவும்அதை வருகிற தேர்தலின்போது உபயோகப்படுத்த இருப்பதாகவும் சொன்னார்சுமார் 180 முதல் 200 வரை அவர்களின் குடியிருப்பில் ஓட்டுகள் இருப்பதாகவும் பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர்களிடம் தலா ஒரு ஓட்டுக்கு ரூ.1000/- கேட்க இருப்பதாகவும்எப்படியும் மூன்று நான்கு கட்சிகள் வரை இருப்பதால்ரூ.4000/- வரை வசூலிக்க இருப்பதாகவும்அதில் அவர்களுக்கு தேவையான சாலை வசதிதெருவிளக்குதண்ணீர் தொட்டி முதலிய வசதிகளை தாங்களே செய்துகொள்ள இருப்பதாகவும் சொன்னார்.  “இவர்களுக்கு ஓட்டையும் போட்டு நாலு வருஷம், அஞ்சு வருசம்னு ரோடு போட்டுக் குடுலைட்ட போட்டுக் குடுன்னு மனுவை கைல பிடிச்சிகிட்டு அலைவதற்கு பதிலாகஇப்போ இவனுங்க நம்மள தேடி வருபோதே பணத்தை கறந்துகொண்டுவேணும்கிறத நாங்களே செஞ்சிக்கிறதா இருக்கோம்ன்னு சொன்னார்.

இது சரியாதவறாஎனக்குத் தெரியவில்லைஆனால் அவர்கள் உட்கார்ந்து பேசியிருக்கிறார்கள்ஒரு அசோசியேசன் மூலமாக இதற்கு தீர்வு காண நினைத்திருக்கிறார்கள்அதுதான் வேண்டும், அது சரியில்லைஇது சரியில்லை எவனுக்கு ஒட்டு போட்டாலும் நாடு நாறத்தான் போகுதுன்னு பேசாமநல்லதோ கெட்டதோஇப்படி அதற்கான மாறுதல்களை பற்றிப் பேசுங்கள்நாலு பேர் சேர்ந்தா நிச்சயம் முடியும்அதுவும் நல்லதாய் முடியும்இப்படிக் கூடி அரசியலைப் பற்றி பேசுவதே ஆரோக்கியமான ஆரம்பம் என நினைக்கிறேன்.ஆகவே ஓட்டுப் போடுங்கள்


நாலு பேர் சேர்ந்தால் எதுவுமே சாத்தியம்ஆகவே நீங்கள் செய்யாததை உங்கள் வாக்குகள் செய்யும். முடிந்தவரை நண்பர்களிடம் அரசியல் பேசுங்கள்அரசியல் ஒரு சாக்கடைஅரசியல்வாதிகள் அதில் பன்றிகள் என்று பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருக்காமல் நம்பிக்கையோடு வாக்களியுங்கள்.


     ரோடு சரியில்லை என்பதால் யாரும் அதை உபயோகப்படுத்தாமல் இல்லைசம்பளம் சரியாக கொடுக்காத கம்பெனிக்குக்  கூட ஆட்கள் வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்ஓட்டுப் போடுவது கூட அப்படித்தான்உங்கள் ஒரு ஓட்டு என்ன செய்துவிடப்போகிறது? என்று நினைக்காதீர்கள்நம் கடன் பணி செய்து கிடப்பதேநம்பிக்கை தான் வாழ்க்கைமுயன்றவர் நேரடி அரசியலில் ஈடுபடுங்கள்இல்லையென்றால் நம்பிக்கையோடு வாக்களியுங்கள்எல்லா அரசியல்வாதிகளும் கெட்டவர்கள் இல்லையோசித்து வாக்களியுங்கள் உங்களின் வாக்கு இந்த நாட்டின் தலை விதியை மாற்றலாம்.

அல்லது ‘ஓ’ போடுங்கள்


அவர் உங்களின் நம்பிக்கைக்குரியவராக இருக்கலாம்உங்களின் நபராக இருக்கலாம்நல்லவராக இருக்கலாம்கடந்த ஆட்சியில் நன்மை செய்தவராக இருக்கலாம்அல்லது கடந்த ஆட்சியின்போது நடந்த பிழைகளை தட்டிக் கேட்டவராக இருக்கலாம்புதியவராக இருக்கலாம்உங்களின் சமூகத்தவராக இருக்கலாம்இளைஞராக இருக்கலாம்படித்தவராக இருக்கலாம் இல்லை எப்படியோ ஒருவகையில் உங்களின் கவனத்தைப் பெற்றவராக இருக்கலாம்இப்படி யாராக வேண்டுமாலும் இருக்கலாம்ஆனால், அவர் நீங்கள் தேர்ந்தேடுத்தவர்களாக இருக்க வேண்டும்அப்படி தேர்தெடுப்பதற்கான நேரமும் வந்துவிட்டது.


உங்களின் ஒவ்வொரு வாக்கும் தான் நம் தலை விதியை நிர்ணயம் செய்யப் போகிறதுநிச்சயம் ஓட்டுப் போடுங்கள். வெறும் 50-50% வாக்குப் பதிவே நடந்துநூறில் ஐம்பது பேர் மட்டுமே வாக்களித்து, அதில் முப்பது சதவிகிதம் வாக்கு பெற்று ஆட்சி அமைப்பவர் மீதமுள்ள எழுபது சதவிகிதம் பேரின் விருப்பத்திற்கு எதிரானவர் இல்லையாஅவர் எப்படி நம்மை ஆள முடியும்விருப்பமில்லாத எழுபது பேருக்கும் சேர்த்து அவர் தான் தலைவர்இது இன்னமும் தொடர்கிறதுநிச்சயம் இது மாற்றப்படவேண்டும்யாரும் சரியில்லை என்று வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள்உங்களுக்காகவே இருக்கிறது ஒரு வழி. 49- O. சரி 49 - போடுவதால் என்ன பயன்?

ஞானி " ஓட்டு போடாமல் இருப்பதை விட 49  போடுவது தான் சிறந்ததுஏனென்றால் எந்த வேட்பாளரையும் நமக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை அவர்களுக்கு உணர்த்தும் ஒரே வழி இது தான்." "ஒவ்வொரு தொகுதியிலும் 5000 பேர் 49  போடுவதால் அரசியல் கட்சிகளுக்கு ஒரு பயம் வரும்ஒவ்வொரு தொகுதியிலும் 5000 ஓட்டுக்கள் வைத்திருக்கும் சாதிக்கட்சிக்கு 20லிருந்து 30 சீட்டு வரை கொடுக்கத் தயாராயிருக்கும் அரசியல் கட்சிகள், அந்த அளவுக்கு 49  இருப்பது தெரிந்தால் முதல் வேலையாக அந்த தொகுதிக்கு நல்ல வேட்பாளரை நிறுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.""ஆனால்இவ்வளவு அகிம்சையான ஆயுதமாக 49  தங்கள் கையில் இருப்பதை மக்களே இன்னும் அறியாமல் இருக்கிறார்கள்என்கிறார்.

ஆகவே ஓட்டுப்போடுங்கள் அல்லது ஓ'வாவது போடுங்கள். எந்தக் காரணம் கொண்டும் நமது ஓட்டு செல்லாமல் போகக்கூடாது. தேர்தல் நாள் என்பது சம்பளத்தோடு கூடிய ஒரு விடுமுறை நாள் என்று ஊர் சுற்றக் கிளம்பாமல்தேர்தல் முடிவின் போது குடும்ப சகிதம் டீவி முன் அமர்ந்து, மொத்தக் கட்சியையும் குறை கூறிக் கொண்டிருக்காமல்சிந்தித்து வாக்களியுங்கள். படித்தவர்கள் ஓட்டுப்போடுவதில்லை என்ற நினைப்பை மாற்றுவோம்.


நாளை தனிமையின் இசை, ஓ... சனம் மொகாபத் கி கஸம்....

29 கருத்துரைகள்:

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

பொறுப்புள்ளவர் எழுதிய பொறுப்பான கருத்து. (ஓ போடு என்பது தான் புரியவில்லை :)

இக்பால் செல்வன் said...

நமக்கு அவர்கள் நாமம் போடாமல் இருந்தால் சரி !!!

மனம் திறந்து... (மதி) said...

On poll promises and freebies: "Every election is a sort of advance auction sale of stolen goods," said H. L. Mencken (1880-1956), an American Writer.

ராகவன் said...

அன்பு அப்பாதுரை,

ஓ! போடுங்க என்பது... இந்திய அரசிலமைப்பு சட்டத்தின் ஷரத்தான 49(o) வை குறிக்கிறது... எனக்கு யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லை என்பதை பதிவது.

போடாமலே விட்டா... கள்ள ஓட்டா போயிட வாய்ப்பு இருக்கிறது என்பதாலே!

நல்லாயிருக்கு முரளி... உன்னோட வெர்சடாலிட்டி... பப்ஸ் மடிப்பு மாதிரி ஆச்சரியம்.

அன்புடன்
ராகவன்

PTR said...

Inthavara natchathirathirku valthukkal.

சுசி said...

இந்தப் பதிவுக்கு ஓட்டு போட்டுட்டேன் :)))

அப்பாதுரை said...

நன்றி ராகவன். nuance.

பப்ஸ் மடிப்பு - பிரமாதம். உங்கள் அனுமதியுடன் இதை என் எழுத்தில் பயன்படுத்திக் கொள்கிறேன் :)

அப்பாதுரை said...

அருமையான மேற்கோள் மதி. ஒருவேளை எல்லாமே awarenessன் பரிமாணமங்களோ? முதல் உலகப்போர் வரை அமெரிகாவிலும் தேர்தல் நேரத்தில் இலவசமாக நிறைய வழங்கினார்கள் - சட்டம் நிறுத்தாததை போர் நிறுத்தியதாகச் சொல்வார்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@கேபிள்சங்கர்
தேங்க்ஸ் தலைவரே! உலக சினிமா படிக்கலையா நீங்க?
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
//பொறுப்புள்ள//
ஓவ்வ்வ், தேங்கயூ சார்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@இக்பால் செல்வன்
அது யார் வந்தாலும் நடக்கப்போவதுதான் தலைவரே! 49ஓ போட்டோம்ன்னு வைங்க இந்த அசிங்கத்தில் என் பங்கு இல்லைன்னு ஒரு சின்ன மனநிறைவு கிடைக்கும் அவ்ளோதான்.. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@இக்பால் செல்வன்
அது யார் வந்தாலும் நடக்கப்போவதுதான் தலைவரே! 49ஓ போட்டோம்ன்னு வைங்க இந்த அசிங்கத்தில் என் பங்கு இல்லைன்னு ஒரு சின்ன மனநிறைவு கிடைக்கும் அவ்ளோதான்.. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@மனம் திறந்து.. மதி
செம்ம கோட் தல, எந்தக்காலத்துல சொன்னது இப்பவரைக்கும் ஒத்துப்போகுது பாருங்க?
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராகவன்
தேங்க்ஸ் ராகவன், உங்கள் விளக்கத்த்துக்கு.

//பப்ஸ் மடிப்பு//
அட, அட, நீங்க ஏன் என்னோட எல்லா பதிவுக்கும் ஒரு பின்னூட்டம் போடக்கூடாது? உங்க பின்னூட்டத்தைப் படிக்கும்போதெல்லாம் எதையோ சாதிச்சிட்ட மாதிரி சந்தோசமா இருக்கு. அதனால ராகவன்......
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@PTR
தேங்க்ஸ் தலைவரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுசி
மேடம், ஓட்டுதானே போட்டிங்க, இல்ல எனக்கும் 49,ஓ போட்டுடிங்களா?
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
தேங்க்யூ சார். உங்களுக்கு ராகவனின் பின்னூட்டம் உதவியிருக்குமென நம்புகிறேன்.
:-)

நிகழ்காலத்தில்... said...

நிச்சயம் ஓட்டுப்போடுவேன் முரளி..

boopathy perumal said...

http://jmdtamil.blogspot.com/2011/03/blog-post_31.html

இறுதி போட்டிக்கு வருகிறான்! இனவெறி பிடித்தவன்!

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி! மும்பையில் ஏப்ரல் 2 -ம் தேதி நடக்க இருக்கிறது!
இறுதி போட்டியில் இந்தியாவும், இலங்கையும் களம் காணுகின்றன.... பாதுகாப்பு பலபபடுத்தப்பட்டுள்ளது, போட்டியை காண பெரிய வி. வி.ஐ.பி. கள் வருகின்றனர்,

அது மட்டும் இல்லை, இன வெறி பிடித்த இலங்கை அதிபர் ராசபக்சே- வும் வருகிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் பந்துலா ஜெயசேகரா இதை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியை காண வந்த ராஜபக்சேவுக்கு எதிராக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தமிழின உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதைப்போல மும்பையில் நடைபெறும் இந்த போட்டியை காண வரும் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழின உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதைவைத்து தமிழக அரசியலும் அரங்கேருமாம்!..
இனத்தை அழித்தவனக்கு!
இன்முக வரவேற்ப்பா!

shri Prajna said...

இப்போ இருக்கிற கூட்டனிய பார்த்தாலே அவங்களோட கொள்கைய நாம ஈஸியா புருஞ்சுக்கலாம்..

ஒரு நோய் வந்து டாக்டர் கிட்ட போனா அது எந்த stagenu பொறுத்து மருந்து தருவாங்க நோய் முற்றி போச்சுனா எந்த மருந்தும் வேலை செய்யாது..இன்றைய அரசியல் வியாதியும் அப்படி பட்டது தான். ..

அப்புறம் 4000rs நாம வாங்கிட்டோம்னா 400000/- எடுத்துக்க indirect ஆ அனுமதிக்கிறோம் ..நம்ம வீட்ல திருடபோறதுல நாம பங்குகேகிறமாதிரி. ..

சுபாஷ் சந்திர போஸ் சொன்னாராம் விடுதலை அடைத்தவுடன் என் இந்தியமக்களை வெளி உலக தொடர்பில்லாமல் 20 வருடங்கள் வைதிருக்கபோகிறேன் என்று ..கட்டுபாடான ஜனநாயகத்தை தான் அவர் அப்படி mean பண்ணி இருக்க வேண்டும் ...நமக்கும் மிகவும் கட்டுபாடான ஒரு நேர்மையான மனிதன் வேண்டும் ..சர்வ பலம் பொருந்தியவன் ..

அப்புறம் boss நீங்க இங்க 49-O போட முடியுமானு கேட்டு பாருங்க அங்க booth லையே பயங்கரமா அட்வைஸ் சம் மிரட்டலும் அதற்கான வழியே போன election la இல்லையின்னு கேள்வி பட்டேன் ...போகாத ஊருக்கு வழி சொன்ன மாதிரி இவங்க சில வச்சிருப்பாங்க ..அதுல இந்த 49O இருக்குதோன்னு சந்தேகப்பட்றேன் ..நேர்மையா ஒட்டுபோடனும்னு நெனைக்கிற பாதி பேர் பேரு லிஸ்ட் லையே வராது..

சிவன் சொத்து குல நாசம் மாதிரி ஊரான் சொத்து இது கை தொடகூடாது..யார் கிட்டயும் சம்பளத்துக்கும் மேல ஒரு பைசாவும் வாங்க கூடாது ..நேர்மையான வாழ்க்கை வாழனும் நு ஒவ்வொருவரும் நினைக்கணும் ..எப்படியாவது ஆடம்பரமா வாழணும்னு நினைகிறதையும் தவிர்க்கணும் .போகும் போது எதையும் எடுத்து செல்லமுடியாது ..பாவத்தை மூட்டை கட்டி சந்ததியின் தலையில் கட்டி விட நினைக்ககூடாது ..ஒவ்வொரு வரும் திருந்தனும். .

முரளிகுமார் பத்மநாபன் said...

@நிகழ்காலத்தில் சிவா
சிவாண்ணா, நிச்சயமா.. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@பூபதி பெருமாள்
தலைவரே! நீங்க சொல்றது சரிதான், ஆனாலும் இந்த பதிவிற்கு பொருந்தாத பின்னூட்டமால்ல இருக்கு, வேணும்ன்னா நாளைக்கு இதே பின்னூட்டம் போடுங்க. நாளை உலகக்கோப்பை ஸ்பெசல்.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஸ்ரீ பிரஜ்னா
முதலில் பதிவளவிலான பின்னூட்டத்திற்கு நன்றி, :-)

//அப்புறம் 4000rs நாம வாங்கிட்டோம்னா 400000/- எடுத்துக்க indirect ஆ அனுமதிக்கிறோம் ..நம்ம வீட்ல திருடபோறதுல நாம பங்குகேகிறமாதிரி//
இல்லைன்னா மட்டும் எடுக்க மாட்டாங்களா என்ன? விடுங்க....

//அப்புறம் boss நீங்க இங்க 49-O போட முடியுமானு கேட்டு பாருங்க அங்க booth லையே பயங்கரமா அட்வைஸ் சம் மிரட்டலும் அதற்கான வழியே போன election la இல்லையின்னு கேள்வி பட்டேன்//

சில இடங்களில் நீங்க சொல்ற மாதிரி உண்டுதான். எனக்கும் கடந்தமுறை அப்படி நடந்ததுதான். ஆனால் என்ன எலக்‌ஷன் பீப்பிள்ஸ்க்கே அப்படி ஒரு விஷயம் இருப்பது தெரியவில்லை. உள்ளேயே இருந்த மீடியா ஆட்களிடமும் மற்றவர்களிடமும் பேசி விட்டு 49’ஓ படிவத்தை எடுத்துக்கொடுத்தார்கள். பொறுமையாக உங்கள் கருத்தை சொன்னால் வழி உண்டு.

//நேர்மையான வாழ்க்கை வாழனும்னு ஒவ்வொருவரும் நினைக்கணும், எப்படியாவது ஆடம்பரமா வாழணும்னு நினைகிறதையும் தவிர்க்கணும். போகும் போது எதையும் எடுத்து செல்லமுடியாது.ஒவ்வொரு வரும் திருந்தனும்//
ஆசை இருக்கவேண்டியதுதான், இது பேராசைங்க பிரஜ்னா, ஆசையே துன்பத்திற்கு வழின்னு புத்தர் சும்மாவா சொன்னாரு? :-)

ராமலக்ஷ்மி said...

//ஆகவே ஓட்டுப்போடுங்கள் அல்லது ஓ'வாவது போடுங்கள். எந்தக் காரணம் கொண்டும் நமது ஓட்டு செல்லாமல் போகக்கூடாது. தேர்தல் நாள் என்பது சம்பளத்தோடு கூடிய ஒரு விடுமுறை நாள் என்று ஊர் சுற்றக் கிளம்பாமல், தேர்தல் முடிவின் போது குடும்ப சகிதம் டீவி முன் அமர்ந்து, மொத்தக் கட்சியையும் குறை கூறிக் கொண்டிருக்காமல், சிந்தித்து வாக்களியுங்கள். படித்தவர்கள் ஓட்டுப்போடுவதில்லை என்ற நினைப்பை மாற்றுவோம்.//

மிக அவசியமான பதிவு.

கர்நாடகாவில் கடந்த முறை பிற இடங்களை விட பெங்களூரில் 40 சதவிகிதமே வாக்குப் பதிவாகி இருந்தது. படித்தவர்கள்தாம் பெரும்பாலும் ஓட்டுப் போடுவதை அலட்சியம் செய்கிறார்கள்:(!

ராமலக்ஷ்மி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்:)!

பரிசல்காரன் said...

தெளிவான பதிவு!

ராகவனோட ’பப்ஸ் மடிப்பு’ சமீபத்துல நான் படிச்சதுல த பெஸ்ட் உவமை!

CA Saravanan said...

In a ward, if a candidate wins, say by 123 votes, and that particular ward has received "49-O" votes more than 123, then that polling will be cancelled and will have to be re-polled. Not only that, but the candidature of the contestants will be removed and they cannot contest the re-polling, since people had already expressed their decision on them. This would bring fear into parties and hence look for genuine candidates for their parties for election. This would change the way,of our whole political system... it is seemingly surprising why the
election commission has not revealed such a feature to the public....

Meenatchi said...

Ur posts are well impressed. I wish to share ur post on facebook [Atleast LIKE on facebook ]. If u k, Try to provide an option.

Keep Up Ur wonderful Postings

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.