தனிமையின் இசை - லக்கி அலிலக்கி அலி. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பாடகர். பழைய ஆனால், மிகப்பிரபலமான ஹிந்தி நகைச்சுவை நடிகர் மெகமூத் அவர்களின் மகன். லக்கி அலி ஒரு பாடகர்இசையமைப்பாளர்தற்சமயம் ஒரு நடிகரும் கூட. லக்கி அலி இதுவரை ஆறு தனி ஆல்பங்கள் பாடியுள்ளார். எல்லா ஆல்பங்களும் பலத்த வரவேற்பிற்குள்ளானவை. லக்கி அலி என்றதுமே நினைவிற்கு வருவது அகோஸ்டிக் கிதாரும்அவருடைய கவர்ச்சியான அந்த ஹஸ்கியான குரலும் அவரது சோகம் படிந்த கண்களும் தான். ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளோனிக்குப் பிறகு நரைத்த தலையுடனே அதிகம் பேரைக் கவர்ந்தவர் லக்கி அலி.


இவரது தனிச்சிறப்பே இவரது குரலில் உள்ள சோகம்தான், அதுதான் இவரது பலமும் கூட. இவரது அனைத்து பாடல்களுமே மெலடி வகையிலேயே அமைந்திருக்கும். இவரது ஆல்பங்களில் வேகமான பீட்களுடன் அனேகமாய் பாடல்களே இல்லை. நான் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த காலம் முதலாகவே இவரது பாடல்களை எங்கு பார்த்தாலும் கேட்டாலும் நின்று முழுவதுமாய் ரசித்துவிட்டுதான் மறுவேலை.

இவரது எல்லாப் பாடல்களுமே ஒரேயொரு இசைக்கருவியின் மெல்லிய இசையில் தொடங்கியும் முடிவதையும் பார்க்கலாம். பாடல் ஆரம்பிப்பதற்கு முன்பும் சரி, பாடல் முடிந்த பின்னரும் சரி குறைந்தது 30வினாடிகளுக்காவது அந்த மெல்லிய இசை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். பாடலில் நம்மை உட்புகுத்திக் கொள்ளவும், மெல்ல வெளியே வரவும் இந்த இசை நம்க்கு உதவுகிறது. மிகச்சமீபத்தில் ரகுமான் ஓமணப்பெண்ணே பாடலில் இதனை கையாண்டிருப்பார். பாடல் முடிந்த 40வினாடிகளுக்கும் மேலாக அந்த நாதஸ்வர மெலடி சன்னமாய் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

     மெல்லிய கிதார் இசையோடோ அல்லது பேலட் டிரம்சோடோ இவரது ஹம்மிங் மெல்ல சேர ஆரம்பித்து, சீரான வேகத்தில் தொடங்கி அதே பேஸில் முடியும் இவரது பாடல்கள். இவரது பாடல்கள் கேட்பதற்கு இணையாக, பார்ப்பதுவும் ரசிக்கும்படியாக இருக்கும். ஒவ்வொரு பாடல்களிலும் ரசனையான ஒரு சிறுகதையோ அல்லது கவிதையோ இருக்கும். இவருடைய இசை மற்றும் பாடலகள் பொதுவாகவே வேறு யாருடையது போலவும் இல்லையே? ஒரு தனி ஸ்டைலாக இருக்கும் இவரது இசைஎன்ன வகை இசையாக இருக்கும்என்று யோசித்துக்கொண்டிருப்பேன். பேஸ்புக் தளத்தின் மூலம் லக்கிஅலியின் ரசிகர் வட்டத்தில் இணைந்தும் கொண்டேன். அதில் கிடைத்த நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது லக்கியின் ஸ்டைல் பேலட் எனப்படும் ஐரிஸ் ஸ்டைல் என்று சொன்னார்கள்.

பேலட் இசை என்பது, நாத்து நடும்போதும்களை பிடுங்கும்போதும்அறுவடையின்போதும் பாடும் நமது கிராமிய இசையினைப்போல, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின் கலப்பில் உருவான ஒரு பாரம்பரியமான இசை வடிவம். 19ம் நூற்றாண்டிற்கு முன்பு வரை, பொதுவாக போர் வீரர்களை உற்சாகப்படுத்தவும்தத்துவங்களைப் பாடவுமே இந்த வகை இசை அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதன் பிற்பாடு மெல்ல காதலையும், மென் சோகங்களை சொல்லவும் பயன்படுத்தப்பட்டது. உலகமயமாக்கலுக்குப் பிறகு ஒவ்வொரு நாட்டின் பாரம்பரிய இசைகளும் இசைக்கருவிகளும் எல்லை கடந்து பல தளங்களை அடைந்ததுபரவலாக அறியப்பட்டது. பேலட் ஸ்டைல் இசையின் அடிநாதமான மெலடி அனைவராலும் ரசிக்கக்கூடியதாக இருப்பதால், அது எளிதில் உலகம் எங்கும் பரவியது.

ஆனால், அதையே தனது அடையாளமாக மாற்றிக் கொண்ட கலைஞன்லக்கி அலி. எனக்குத் தெரிந்து இவரது முதல் ஆல்பம்  அன்ஜானி ரஹோமேன் என்ற இந்தப் பாடல்

அதன் பிறகு சுனோ எனும் இவரது ஆல்பத்தில் வரும் ஓ சனம் என்ற பாடலில் பரவலாய் அறியப்பட்டார். எனக்கும் லக்கியின் ஆல்பங்களில் மிகவும் இரண்டு பாடல்களில் ஒன்று, ஓ சனம்.... மொஹோபத் ஜி கசம்....... மற்றும் தேக்கா ஹே அய்சே பி. இப்பொழுது மிக சமீபத்தில் இணையத்திலேயே வெளியிட்ட இவரது புதிய ஆல்பமான க்‌ஷுயீ. எனது இசை அனைவரையும் எளிதாக சென்றடைய வேண்டும். அதனாலேயே இணையத்தில் வெளியிடுகிறேன், என்கிறார்.

அனேகமாய் எனது பள்ளி பருவத்தில் கேட்ட பாடல் ஓ சனம்.... இன்னமும் என் விருப்பப் பட்டியலில் இருக்கின்றது. எகிப்தின் பிரமீடுகளை படித்திருக்கிறேன், இங்கு நடக்கும் எதாவது ஒரு கண்காட்சியில் அதன் மாதிரியை செய்து வைத்திருப்பார்கள், அப்படிப் பார்த்ததுதான், பிரமீடு. இந்தப் பாடலின் முடிவில் பிரமீடின் மீது அமர்ந்திருக்கும் லக்கியிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கேமிரா வெளியே வரும், வரும் வந்து கொண்டேயிருக்கும். ஆவ்வ் என வாயைப் பிளந்து பார்த்தேன். முதல்முறை இந்த வீடியோவைப் பார்க்கும்போது.
இவரது வீடியோக்களில் காதலால் நிராகரிக்கப்பட்ட, வாழ்க்கையில் தோற்ற, மணமுறிவு ஏற்பட்ட அல்லது துக்கம் பீடித்த ஏதாவது ஒரு இளைஞனோ இளைஞியோ  வந்துகொண்டேயிருப்பார்கள். காரணம் அவரது தனிப்பட்ட வாழ்கையிலும் நிறைய சோகங்களை உள்ளடக்கிய மனிதன்தான், லக்கி அலி. அது அவரது பாடல்களில் வெளிப்படுகிறது.

இன்றும் இவரது இசை தனிமையின் இசையாகவே உணப்படுகிறது. அவரது சில பாடல்களை இங்கே யூடியூப் சுட்டிகளாகக் கொடுத்திருக்கிறேன். என்ஜாய் மக்களே!பாத்சாலா என்ற புதிய படத்தில் ஒரு பாடல், பேக்கரா..... 52 வயது லக்கியின் குரல் இன்று ஷாகித்திற்கு எவ்வளவு அழகாகப் பொருந்திப்போகிறது, பாருங்கள். லவ் யூ லக்கி....


நாளை..... உலகக் கோப்பை ஸ்பெசல்  


16 கருத்துரைகள்:

ராகவன் said...

Dear Murali,

It is a nice article... good snaps of Lucky Ali... charmed the whole article.

More than me, my wife likes Lucky Ali and his songs very much. Especially the two songs, whch you have mentioned.

Quality of the writing is concerned, it is little dry... Some points are repetitive... kaiyil kidaiththathai enna seikirom endru theriyadha maadhiri... irundhadhu... ithu ennudaiya ennam maaththirame...

innum konjam veru maadhiri ezhuthi paaren... dont mistake me...

Peranbudan
Ragavan...

A thank you note from my wife too... i read the article for her.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராகவன்
நன்றி ராகவன். :-)
//கையில் கிடைத்ததை என்ன செய்கிறோம் என்று தெரியாதது மாதிரி//
ஹலோ, இது மிஸ்டேக் பண்ணிக்க என்ன இருக்கு? ஆக்ட்சுவலா சொல்லப்போனா இது என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

உண்மையை சொன்னா, நேரம் இல்லை. இரண்டாவது முறை படிக்கும்போது எனக்கே பதிவை முடிக்கனும்ங்கிற அவசரத்தில எழுதியது தெரியுது..

அவசியம் மாத்திக்கிறேன், ராகவன்.
நன்றீ மறுபடியும். உங்கள் மனைவியிடமும் சொல்லுங்கள். நான் லக்கியின் பரமவிசிறி.

:-)

my few drops said...
This comment has been removed by the author.
மனம் திறந்து... (மதி) said...

"O' sanam" எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத உருக்கும், உலுக்கும், உள்ளேயே தங்கிவிடும் சோக காவியம்! மெல்லிசை நம்முடன் அடிக்கடி செய்யும் வல்லினப் போராட்டத்துக்கு இந்தப் பாடல் ஒரு நல்ல உதாரணம்!

அப்பாதுரை said...

கேள்விப் பட்டதில்லை. அறிமுகத்துக்கு நன்றி.

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி முரளி.

பரிசல்காரன் said...

நட்சத்திர வாழ்த்துகள் முரளி!

லேட்டுக்கு சாரி. சிஸ்டம் கொஞ்சம் ப்ராப்ளம். இன்னைக்குதான் வீட்டுக்கு வந்துச்சு. மொத பின்னூட்டம் உங்களுக்குதான்!

பதிவு பற்றி..

இசை பற்றின உங்க பதிவுன்னா கண்ணை மூடிட்டு படிச்சு, நீங்க குறிப்பிடற இசையை காதை மூடீட்டு கேட்கலாம்!

மதுரை சரவணன் said...

thanks for sharing.

கார்த்திகைப் பாண்டியன் said...

நட்சத்திர வாழ்த்துகள் தலைவரே.. லக்கி நாயகனா நடிச்ச சுர் படத்துல பாட்டெல்லாம் கேட்டுப் பாருங்க.. பட்டாசா இருக்கும்.. லக்கி.. ப்யார் சிர்ஃப் தும்சே.. மேய்ன் ப்யார் கர்த்தா ஹூம்:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ மனம் திறந்து மதி
//O' sanam" எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத உருக்கும், உலுக்கும், உள்ளேயே தங்கிவிடும் சோக காவியம்! மெல்லிசை நம்முடன் அடிக்கடி செய்யும் வல்லினப் போராட்டத்துக்கு இந்தப் பாடல் ஒரு நல்ல உதாரணம்!//

அருமை தலைவரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
சார், அருமையான பாடகன் லக்கி அலி. அவசியம் கேட்டுப்பாருங்க.. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@செ.சரவனக்குமார்
தேங்க்ஸ் பாஸ்.. கேட்டிங்களா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@பரிசல்காரன்
//இசை பற்றின உங்க பதிவுன்னா கண்ணை மூடிட்டு படிச்சு, நீங்க குறிப்பிடற இசையை காதை மூடீட்டு கேட்கலாம்//

பாசு, இது எதோ நக்கலா சொல்றமாதிரியே இருக்கே, எனி உள்குத்து?
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@மதுரை சரவணன்
நன்றி வாத்தியாரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்த்திகை பாண்டியன்
நண்பா, கேட்டிருக்கேன், ஆமா ஹிந்தியில வேற கமெண்ட்ட்டுறீங்க? தெரியுமா?

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி முரளி.

KARTHI
AVINASHI

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.