உலகக்கோப்பை ஸ்பெசல் பதிவு


    
      கிரிக்கெட் பார்ப்பது குறித்து எதிர்மறையான கருத்துக்கள் எப்பொழுதுமே உண்டு. முட்டாள்களுக்கென முட்டாள்கள் ஆடும் கூத்து என்றும்இன்னும் சிலரோ இந்திய அணி விளையாடும் போட்டிகளை விழுந்தடித்துக்கொண்டு பார்ப்பார்கள்தோற்றதும் இவனுக எருமை மேய்க்கத்தான் லாயக்கு என்பார்கள். ஜெயித்து விட்டால் எவ்வளவு ஈசியா ஜெயிச்சிட்டாணுக பாருங்கஒரு வேளை பிக்ஸ் பண்ணியிருப்பாங்களோ என்பார்கள். இப்போது இன்னொரு விஷயம் பூதாகரமாக கிளம்பியிருக்கிறது. அது அரசியல். விளையாட்டோடு கலந்த அரசியல்.


ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் தான் தேசமே ஒன்று கூடும். அதுவும், போர், மிகப்பெரிய இயற்கைச் சீற்றங்கள் வந்தால் தான். இதெல்லாம் எதிர்பார்த்து வருவதில்லை ஆனால் இதை அனைவரும் எதிர்பார்க்கலாம். இது நமது தேசத்திற்கான திருவிழா. அனைவரும் கொண்டாடுவோம்.

சொல்பவர்கள் ஆயிரம் சொல்வார்கள்.  அவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அதைப்பற்றிய எந்த கவலையும் எனக்கில்லை. என்னைப் பொறுத்த  வரை கிரிக்கெட் என்பது , இந்தியாவின் நான்காவது பெரிய மதம். அதில் சச்சின் போன்ற பெருந்தெய்வங்களும் தோனியுவராஜ் போன்ற குறுங்கடவுள்களும் அடக்கம். நான் நான்காம் மதம் பிடித்தவன். தீவிர ஆத்திகன். ஏனெனில் என் சிறுவயது முதலாகவே என் அப்பாவும்சித்தப்பாவும் எனக்கு இந்த கடவுள்களைக் காட்டியே  வளர்த்தனர். நானும் என் குழந்தைக்கு இத்தகைய கடவுள் நம்பிக்கையை ஊட்டியே வளர்க்க விரும்புகிறேன். நம்பாமல் நாத்திகம் பேசுபவர்கள் பற்றிய கவலை எனக்கில்லை.

கடவுள் இல்லை என்பது உண்மையானால் இருக்கிறார் என்பது நம்பிக்கை. பல நேரங்களில் உண்மையை விட நம்பிக்கையையே நான் அதிகம் விரும்புகிறேன். ஆனால் இப்பொழுது நம்பிக்கையையும் தாண்டிய விஷயம், ஆசை. அதுவும் மிகச்சிறிய ஆசைதான். தோத்தா பங்காளிகளிடமே தோற்றிருக்கணும். இன்று அல்ல. அதுவும் இன்று நடக்கப்போகும் போட்டியின் கடைசி ஐந்து ஓவர்களில் சச்சினைக் கேப்டனாக்கி, ஜெயித்தபின் அவர் கைகளில் உலகக்கோப்பையைக் கொடுத்து அரங்கு முழுவதும் சுற்று வருவதை பார்க்க வேண்டும். செமி பைனலில் பங்காளிகளுக்கு கொடுத்ததைவிட செமமையான அடியை பகையாளிகளுக்கு கொடுத்து இந்த வருட உலகக்கோப்பையை இந்தியா ஜெயிக்கட்டும். என்னைப்போல என் மதத்தைப் பின்பற்றும் அனைவரும், நமது கடவுளை பிராத்திப்போம். 
எங்க எல்லாரும் சொல்லுங்க,
இந்தியா....  இந்தியா....
இந்தியா...... இந்தியா...
இந்தியா...... இந்தியா...
இந்தியா...... இந்தியா...
************************************************************

இன்று நூலகம் பற்றி எழுதுவதாகத்தான் இருந்தேன். ஆனால் எனக்கு இந்த தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இயங்க கிடைத்த இந்த முழுவாரத்திலும், என்னாலுமே தொடர்ந்து இயங்க முடியாத நிலை. வேலைப்பளு ஒருபுறம், கிரிக்கெட் போட்டிகள் ஒருபுறம். எழுதுற எனக்கே இவ்வளவு பிரச்சனை? படிக்கிற நீங்க எவ்ளோ பாவம்? எப்படியோ ஒருவாரம் தொடர்ந்து எழுதியாயிற்று. பொதுவாக ஞாயிறுகளில் மட்டுமே பதிவு எழுதும் எனக்கு இந்த அனுபவம், கிட்டத்தட்ட ஒருமாத காலம் எழுத வேண்டியதை ஒரு வாரத்தில் எழுதியது போல இருந்தது. அவசரகதியில் எழுதிய பதிவுகளில் ஏதும் தவறிருந்தாலோ யாரையும் புண்படுத்தியிருந்தாலோ, மன்னிக்கவும். 


இந்த ஒருவாரமும் பதிவிற்கு வந்து தொடர்ச்சியான பின்னூட்டங்களின் மூலம் உற்சாகப் படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். நாளையோடு எனது நட்சத்திரப் பதிவுகளை முடிக்கிறேன். அதுவும் ஒரு முக்கியமான பதிவுதான். வண்ணதாசன் மற்றும் நூலகம் பற்றிய ஒரு கட்டுரையைத்தான் நாளை எழுத இருக்கிறேன். அனைவரும் அவசியம் நாளையும்வந்து வாசித்துச் செல்லுங்கள்.

நம்ம ஷோ நாளை கடைசி

17 கருத்துரைகள்:

மதுரை சரவணன் said...

ethu eppadiyo ennai ponra kirikket paiththiyangkalukku inthiyaa verri pera ethuvendumaanalum seivom...perumaal thunaiyil jeippaarkal

ஆதிமூலகிருஷ்ணன் said...

அதுவும் மிகச்சிறிய ஆசைதான். தோத்தா பங்காளிகளிடமே தோற்றிருக்கனும். இன்று அல்ல. செமி பைனலில் பங்காளிகளுக்கு கொடுத்ததைவிட செம்மையான அடியை பகையாளிகளுக்கு கொடுத்து இந்த வருட உலகக்கோப்பையை இந்தியா ஜெயிக்கட்டும். // இந்த அர்த்தத்தில்தான் இன்று நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன். சேம் பிஞ்ச்.! :-))

அப்புறம் முரளி தமிழ்மணம் ஸ்டார், ஜாரிங்க.. இப்பதான் பாக்குறேன். பணி முடியப்போவதுக்கு வாழ்த்துகள். ஹிஹி..

மோகன் குமார் said...

//இன்று நடக்கப்போகும் போட்டியின் கடைசி ஐந்து ஓவர்களில் சச்சினைக் கேப்டனாக்கி, ஜெயித்தபின் அவர் கைகளில் உலகக்கோப்பையை கொடுத்து அரங்கு முழுவது சுற்று வருவதை பார்க்க வேண்டும்.//

அடடா கேட்கவே அருமையா இருக்கே நடந்தா எவ்ளோ நல்லாருக்கும்

Mythees said...

இந்தியா...... இந்தியா...

எண்ணத்துப்பூச்சி said...

நட்சத்திர வாழ்த்துகள்.

கருத்துப்படம் மிகவும் அருவெறுக்கத்தக்கது.
சச்சினை அவதாரமாய் சித்தரிப்பதும்,பாகிஸ்தான்
வீரர் விழுவது போல் இருப்பதும் நாகரீகமான செயல் அல்ல.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ மதுரை சரவணன்
:-) ஓம் சச்சினாய நமஹ.....

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதிமூலகிருஷ்ணன்
அண்ணா, தேங்க்ஸ்ணா..
உங்க பதிவும் படிச்சேன் சேம் பிளட்
/

முரளிகுமார் பத்மநாபன் said...

@மோகன்குமார்
நடக்கும் ஜீ நம்புங்க.. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@மைத்தீஸ்
அப்டி சொல்லுங்க
இந்தியா.... இந்தியா...

முரளிகுமார் பத்மநாபன் said...

@எண்ணத்துப்பூச்சி
நன்றி தலைவரே! உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.

//கருத்துப்படம் மிகவும் அருவெறுக்கத்தக்கது.
சச்சினை அவதாரமாய் சித்தரிப்பதும்,பாகிஸ்தான்
வீரர் விழுவது போல் இருப்பதும் நாகரீகமான செயல் அல்ல//

புரிகிறது நண்பா, ஆனால் வகாப் ரியாசே பார்த்தாலும் சிரித்துவிட்டுப் போய்விடுவார், இது அந்த மாதிரியான படம்தான். யாரையும் புண்படுத்துவதற்காக போடவில்லை. என் மனநிலையை பிரதிபளிப்பது போல இருந்ததால் பிரசுரித்தேன். மன்னிக்கவும்.

அன்புடன் அருணா said...

இந்தியா...... இந்தியா...

சுசி said...

//கிரிக்கெட் என்பது , இந்தியாவின் நான்காவது பெரிய மதம். //

:)))))

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்புடன் அருணா
அப்டி சொல்லுங்க, :-)
இந்தியா.... இந்தியா...

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுசி
:-)
Isn't it?

shri Prajna said...

எதை சொல்வது நான்காவது மதம் நம் எல்லோரையும் இணைக்கும் ஒரே மதம் ...ஜெயிக்கும் வரை இருந்த அவஸ்தை சொல்லமுடியாது ...சச்சினை ரொம்ப பிடிக்கிறது .என் தேசம் மோதி மிதித்து விட்டது அவர்கள் (ஸ்ரீ லங்கன்) முகத்தில் உமிந்து விட்டது
.பாகிஸ்தான் வீரர் விழுந்து வணங்குவது போன்ற படம் ....ஏற்றுக்கொள்ள முடியவில்லை ...நாகரீகமாகவும் தோன்றவில்லை ..Sorry..

முரளிகுமார் பத்மநாபன் said...

@ப்ரஜ்னா
//பாகிஸ்தான் வீரர் விழுந்து வணங்குவது போன்ற படம்,ஏற்றுக்கொள்ள முடியவில்லை, நாகரீகமாகவும் தோன்றவில்லை ..Sorry//

இன்னும் ஒருவர் சொன்னால் அந்த படத்தை எடுத்துவிடலாமெனதான் நினைத்தேன். அந்த படத்தை இப்படிப் பார்த்திருக்க வேண்டாமென்று தோன்றுகிறது, சரி விடுங்க ஒப்பீனியன் டிபர்ஸ்....
நன்றி பிரஜ்னா, எண்ணத்துப்பூச்சி...

ஆதவா said...

சரியாகச் சொன்னீங்க பாஸ்.. நிறைய பேர் இந்த குற்றச்சாட்டுகளைக் கூறுவதுண்டு. ஒரு பணக்கார விளையாட்டு, இதைப் பார்த்தால் உனக்கு என்ன கிடைக்க்கும்? மேட்ச் ஃபிக்ஸிங் என்றெல்லாம்..... அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதே கிடையாது.

உங்களுடைய நிலையிலிருந்து துளியும் பிசகாமல் நானும்!!!!

கொஞ்சம் கிரிக்கெட் பார்த்ததில் நிறைய பதிவுகள் விட்டுப் போயிற்றூ.... ஒவ்வொன்றாகப் பார்த்துவருகீறேன்!!

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.