ஆரண்ய காண்டத்தில் சமூக விலங்குபாலகாண்டம், கிஸ்கிந்தா காண்டம் உட்பட ஏழுகாண்டங்கள் கொண்ட வால்மீகி ராமயணத்தில் ராமரின் வனவாசத்தை சொல்கிற ஆரண்யகாண்டம். இந்தப்படத்திற்கு மிகவும் பொருத்தமான தலைப்புதான். ஆரண்யம் என்றால் காடு. காடு அடர் இருளையும் கொடிய விலங்குகளையும் கொண்டது. வலியது வெல்லும் என்கிற ஒற்றை விதியைத்தவிர விலங்குகளுக்குள் எந்த பேதமும் கிடையாது. அதுபோன்ற மனிதவிலங்குகள் சுற்றியலையும் ஆரண்யத்தின் கதை இது. மொழி படம் பார்த்துவிட்டு வெளியே வந்து யோசித்தால் பட்த்தில் வரும் எல்லா கதாப்பாத்திரங்களும் நல்லவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். ஆரண்யகாண்டம் அதற்கு நேர் எதிர், இங்கு யாரும் நல்லவர்கள் கிடையாது. சமூகம் ஒரு காடு, மனிதர்கள் அதில் கொடிய விலங்குகள். அவ்வ்ளவுதான்.

படத்தின் முதல் காட்சியிலேயே புரிந்துவிடுகிறது இது வேற படம் என்று. கி.மு 400-ல் என்று ஒரு ஸ்லைடு வருகிறது. அடுத்ததாக ஏதோ அரைகுறை ஆடையுடன் மனிதர்களை காண்பிக்கபோகிறார்கள் என்று பார்த்தால், “எது தர்மம்? எது தேவையோ, அதுவே தர்மம் என்கிற அதர்வணவேதத்தின் வரிகளை ஸ்லைடாகப் போடுகிறார்கள். அடுத்த ஸ்லைடு என்ன்வாக இருக்கும் யோசிக்க முடிகிறதா? இன்று என படம் துவங்குகிறது...

மிகச்சாதாரண கதைதான். தற்காப்பிற்கும், பழிவாங்கும் வன்மத்திற்கும் இடையேயான மனிதர்களின் கதை. தாதா அய்யாவிடம் (ஜாக்கி ஹெராப்)  வேலை செய்பவர்கள் பசுபதி (சம்பத்) மற்றும் பலர். இவர்களைப்போலவே ஊரில் இருக்கும் இன்னொரு குரூப் கஜேந்திரன் & கோ. இதில் கஜேந்திரனுக்கு சொந்தமான சரக்கைக் கடத்திவரும் குருவிக்கு சரக்கின் மொத்தமதிப்பு தெரிந்துபோகிறது, மேலும் அதைக்கடத்தி வரும் தனக்கு கிடைக்கும் பணத்தையும் ஒப்பிடுகிறான். எனவே அதை கஜேந்திரனின் தொழில்முறை எதிரியான அய்யாவிடம் விலை பேசுகிறான். 

இதை செய்யலாம் என பசுபதியும், வேண்டாமென அய்யாவும் சொல்கின்றனர். பசுபதி உங்களுக்கு பயமா இருந்தா நான் செய்றேன், லாபத்துல பாதி என்கிறான். இதில் கடுப்பாகிறார் அய்யா, ஆனாலும் சிரித்தபடியே ஒத்துக்கொள்ளும் அவர், பசுபதியை முன்னே அனுப்பிவிட்டு அவனை வழியிலேயே தீர்த்துக்கட்டவும் கட்டளையிடுகிறார். இது பசுபதிக்கு தெரிந்து தப்பிக்கிறான், ஆனால் அவன் மனைவியை அய்யா ஆட்கள் பணயப்படுத்துகிறார்கள். மனைவியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் பசுபதிக்கு. 

சரக்கோடிருக்கும் குருவி, தனது லாட்ஜ் அறையில் பக்கத்து ரூமில் இருக்கும் வாழ்ந்து கெட்ட ஜமீன்தாரோடு இரவு சரக்கடிக்கிறான். சரக்கு பற்றிய விபரங்களை போதையில் உளருகிறான். அதீத போதையில் காலை இறந்து போகிறான். இப்பொழுது சரக்கு ஜமீன் கையில், அவரது செம்ம ஸ்மார்ட் குட்டிப்பையன் அதை எப்படி காசக்குவது என சொல்கிறான். குருவி வைத்திருக்கும் சீட்டில் உள்ள நம்பருக்கு போன் போட்டு சரக்கு தங்களிடம் இருப்பதை சொல்கிறார்கள். அது கஜேந்திரனின் போன். இந்த களேபரத்தில் ஜமீனை அய்யாவின் ஆட்கள் தூக்குகிறார்கள். மகன் கையில் இருக்கும் துண்டு சீட்டில் இருக்கும் இன்னொரு நம்பர் பசுபதியினுடையது. இவ்வளவுதான் கதை.

இனி எது எப்படி நடந்திருக்கும் என்பதை உங்களால் எளிதாக சொல்லிவிட முடியும், ஆனால் எப்படி சொல்லியிருக்கிறார்கள் என்பதை தயவுசெய்து தியேட்டரில் பாருங்கள். இதுபோக படத்தில் செம இண்ட்ரஸ்டிங் கேரக்டர்ஸ் ரெண்டு இருக்கு, சுப்பு, சப்பை. இவர்களை அறிமுகம்கூட செய்ய மாட்டேன். படம்பாருங்கள். இனி படத்தின் சில சுவாரஸ்யங்கள்:

படத்தின் முதல் காட்சியிலேயே அய்யா தனது பேத்திவயதையொத்த சுப்புவிடம் உடலுறவு வைத்துக்கொள்ள முயன்று, தனது இயலாமையை நினைத்து அவளை அடிப்பதும், அதற்கு அவள் உங்களால  முடியலைன்னா என்னை ஏன் அடிக்கிறிங்க?என்று விசும்புவதும்,  அடுத்த ஷாட்டிலேயே பசுபதி ஏன்ய்யா நீங்க டொக்காயிட்டிங்களா? எனும்போது அய்யாவின் ரியாக்‌ஷனை எதிர்பார்க்கச் செய்யும் காட்சிகள்.

போலீஸ் ஜீப்பில் ஏறியபின் பசுபதி ஒரு திமிராக அய்யாவால என்ன ஒண்ணும் புடுங்க முடியாதுன்னு சொல்லு என்பான், அப்போது ரொம்ப ரிலாக்ஸ்டா.. நீ போ பசுபதி கஸ்தூரி வீட்லதான இருக்கும், நான் கூட்டிட்டுப்போறேன் எனும் அடியாளும், அதற்கு சம்பத்தின் எக்ஸ்ப்ரஸனும்.

சப்பையாக ரவிக்கிருஷ்ணா. (நம்ம 7ஜி ஹீரோ, அந்தப் பட்த்திலேயே இவன் ஏண்டா இப்படி சப்ப மாதிரி பேசுறான்னு சொல்லிக்குவோம்) ரவி,  இந்தப் படத்துக்கு அதுவும் சப்பை கேரக்டருக்கு மிகச் சரியான தேர்வு. அப்புறம் அந்தப்பொண்ணு சுப்பு. கடைசி ஐந்து நிமிஷத்தில இந்தபொண்ணு கேரக்டர் அவ்வளவு அழுத்தமான ஒண்ணா மாறுவது, சிறப்பு.

இவர்களை அனைவரையும் விட, வாழ்ந்து கெட்ட ஜமீந்தாராக வருபவர், சோமு. கூத்துப்பட்டறைக்காரராம்.  மனுஷன் பிச்சி பின்னியெடுக்கிறார். நொடிக்கொருதரம் மாறும் இவரது முகபாவங்கள் சொல்ல முடியாது, பார்த்து அனுபவியுங்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் திரியும் ஊர்க்காரனை கண்முன் நிறுத்துகிறார். குறிப்பாக அய்யாவின் ஆட்கள் அவரை நைய்யப்புடைத்தபின்னர் தடுமாறி எழுந்துபோய் “மொதோ என்னோட சேவலை வெட்டுனீங்க, அதை மனசுல வச்சிக்கலை. ஆனா ஒரு ஜமின்தாருன்னுகூட பார்க்காம இந்த அடி அடிசீங்க, இதையும் மனசுல வச்சிகலை. இதோட நிறுத்திகிடுவோம், என்னன்னு அய்யா கிட்ட கைய குடுக்கும்போது சிரிப்பையும் மீறி ஒரு சோகம் தெரியும் பாருங்க, அதுதான் ப்ளாக் ஹ்யூமர்.இந்தப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தால் அதில் இவருக்கு ஒன்று நிச்சயம். கொடுக்காப்புளின்னு இவர் தன் மகனை அழைக்கும் அழகிற்காகவே இன்னொருமுறை படம் பார்க்கலாம்.

அவர் பையனாக வரும் சிறுவன், அவன் பங்குக்கு கலக்குறான். சம்பத் அவனிடம் என் பொண்டாட்டிய கடத்தினவன்தான் உங்க அப்பாவையும் கடத்தியிருக்கான். சரக்கை என்னிடம் கொடுத்துவிட்டால் உன் அப்பாவை நான் காப்பாற்றுகிறேன் என்று சொல்வார். அதற்கு “கட்டின பொண்டாட்டிய பத்திரமா பாத்துக்க துப்பில்லை, நீ எப்படி எங்கப்பாவை காப்பாத்துவ, போயா.. மயிறு என அழுதுகொண்டே திட்டும்போது கவனிக்கவைக்கிறான்.

சென்னை 68ல் சரக்கை நியாபகப்படுத்தினால் கை நடுக்கபேசுவானே, அஜய். அவருக்கு இதில் செம கேரக்டர் ஆண்டிகளை உஷார் செய்யும் ஒரு அடியாள். ரெண்டே ஸ்டெப்புல ஆண்டிய கரெக்ட் பண்ண ஐடியா தரேன்னு சொல்லிட்டு “உங்களுக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா?ன்னு கேக்கனும் மச்சி, ரஜினின்னு சொன்னுச்சுன்னு வைய்யேன் அப்டியே உட்ற்னும், கமல் சொன்ச்சுன்னு வைய்யேன், மடிஞ்சிருச்சு மச்சிநான் இதுவரைக்கும் 100 ஆண்டிகளை உஷார் பண்ணியிருக்கேன், அதுல 3 ஆண்டி என்ன கரெக்ட் பண்ணிடுச்சு மச்சி, என்பான். இதில் இந்த வரிகளை கிளைமேக்ஸில் ஒருமுறை உபயோகப்படுத்தியிருப்பார்கள். அருமை.

இப்படி ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு ஸ்பெசல், அதற்கு தகுந்த ஆட்கள் தேர்வு என இயக்குனரின் திறமை படம் நெடுக... அதே போல படம் முழுவதும் செம்ம ராவான டயலாக்ஸ். உனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்குமா?” எனும் பசுபதியிடம் சிறுவன் சொல்லும்அப்படியில்ல, ஆனா அவரு எங்க அப்பா”,  இவ்ளோ ரிஸ்க் எடுக்கனுமான்னு கேட்கும் ஒரு தரகு போலிஸிடம் பசுபதி சொல்லும் “கப்பு பாத்தா மப்பு கெடையாது சார்கிளைமேக்ஸில் அலட்சியமாக இரண்டு காரை கையால் தடுத்தபடி சுப்பு சொல்லும் என்னைப் பொறுத்தவரைக்கு ஆம்பளங்க எல்லாருமே சப்பைதான், மப்பில் செத்த குருவியைப் பார்த்து நீ மட்டும் என்கிட்ட உயிரோட மாட்டியிருந்த உன்னை கொன்னுருப்பேன் என்று சொல்லும் கஜேந்திரன் இப்படி படம் நெடுக சீரியஸாகவும், ராவாகவும், காமெடியாகவும் செமத்தியான டயலாக்ஸ்.

இதுபோக யுவனின் பின்னணி இசை பட்த்துக்கு மிகப்பெரிய ப்ளஸ். ரேடியோவில், காரில், டேப்பில், டிவியில் பாடும் பாடலகளையே பெரும்பாலான காட்சிகளில் பின்னணியாக உபயோகப்படுத்திய விதம் அருமை. அதிலும் அந்த ஸ்டண்ட் காட்சியில் கிடாரைக் கேட்கும்பொழுது எதோ வெஸ்டர்ன் மூவி பார்க்கிற ஒரு பீலிங். நமக்குன்னு இப்படி ஒரு ஸ்டைல் இல்லையேன்னு கவலையா இருக்கு. நிறைய புதுப்புது வாத்தியங்களை உபயோகித்திருக்கிறார்.


இரண்டு வருடங்களாக கிடப்பிலும், சென்சார் கையிலும் சிக்கி வெளிவந்திருக்கும் படம். குவாண்டின் ட்ராண்டினோவின் படங்களைப் போல தமிழில் படங்கள் வராதா என ஏங்குபவர்களுக்கான படம். லோ ஆங்கிள் ஷாட்ஸ், செபியா கலர் எபெக்ட், ஸ்லோமோஷன் ஸ்டண்ட்ஸ், இப்படி குவாண்டினின் படங்களில் வரும் வன்முறை அழகியல் இதிலும் உண்டு. படம் முடிந்து வெளியேவரும்போது எனக்கு தோன்றிய ஒரு விசயம், சிட்டி ஆப் காட் படம்தான். 2010ஆம் ஆண்டுக்கான தெற்காசியத் திரைப்படங்களுக்கான விழாவில் கிராண்ட் ஜூரி விருது பெற்றிருக்கின்றது என்பது கூடுதல் சிறப்பு. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். திரைக்கதையை எழுதி இயக்கியிருப்பவர் தியாகராஜன் குமாரராஜா. ((ஒரம்போ, குவாட்டர் கட்டிங் வசனகர்த்தா) கைய குடுங்க சார் முதலில். இது இவருக்கு முதல் படமென்றால் நம்பவே முடியாது. அவ்வளவு பர்பெக்ட் மேக்கிங், ஓவ்வொரு காட்சியிலும் அவ்வளவு ட்டெயிலிங். காஸ்டிங், மேக்கிங், இசை, திரைக்கதை, வசனம், லொக்கேஷன் இப்படி எல்லா இடங்களில் பர்பெக்‌ஷனுக்கான இவரது பிடிவாதம் தெரிகிறது.  இப்படி ஒண்ணுமே இல்லாத கதையையே இப்படி எடுத்திருக்கான்னா மனுஷனுக்கு ஆடுகளம் மாதிரி ஒரு கதை கிடைச்சிருந்ததுன்னா பிச்சி பெடலெடுத்திருப்பார்.

பார்த்த ஒரு படத்தையே இப்படி நீட்டி நிமித்தி சொல்ல வேண்டியிருக்கே , இந்த ட்ரெய்லரைப்பாருங்க, மொத்தப்படத்தையும் இரண்டு நிமிஷத்துல சொல்லியிருக்காங்க.  உண்மையிலேயே செம்ம டேலண்டான டீம் இது. இந்த ட்ரெய்லரில் வரும் குரலே அந்த ஜமீனாக வரும் சோமு அவர்கள்தான் பேசியிருக்கிறார். http://www.youtube.com/watch?v=qBJ_UpyQw_s  

இந்தியாகிளிட்ஸ் இணையத்தளத்தில் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் பேட்டியைப் பாருங்கள். படத்தைவிட சுவாரஸ்யம் இந்த மனிதன். இது விமர்சனம் அல்ல, நல்ல சினிமாவிற்கான என் அறிமுகக் கட்டுரை

19 கருத்துரைகள்:

முரளிகுமார் பத்மநாபன் said...

குளிர் படத்திற்கு பிறகு எந்த தமிழ்ப்படத்துக்கும் இப்படி முதல்நாள் விமர்சனமோ அறிமுகமோ செய்ய வேண்டாமென இருந்தேன். ஆடுகளத்திற்கு பிறகு ஆரண்யகாண்டம் படத்திற்குதான் ஒரு தவிப்புடன் அவசர அவசரமாக இப்படி எழுதத்தோன்றியிருக்கிறது. :-))

செல்வம் said...

முரளி...எனது தற்காலிக பேச்சிலர் வாழ்க்கை முடிவுக்கு வந்ததால் இப்படம் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. நீங்கள் சொல்வதை வைத்துப் பார்ர்க்கும் போது

I really missed it

:-((

Anonymous said...

"ராமரின் வனவாசத்தை சொல்கிற பாலகாண்டம்" pls check and correct

கோபிநாத் said...

ட்ரெயரை பார்த்தே பத்திக்கிட்டு எரியுது எப்படா போகவதுன்னு....இதுல உங்க விமர்சனம் வேற...ம்ஹூம் நாளைக்கு என்ன ஆனாலும் சரி பார்த்துட்டுதான் மறுவேலை ! ;)

\\சிட்டி ஆப் காட் படம்தான்.\\

தல படத்தோட ட்ரெயரை பார்த்துட்டு எனக்கு நினைவுக்கு வந்த படம் இதே தான் ;)))

Anonymous said...

why do you have tell everything from the movie..you are just excited..how can you let all the things from the movie..reviewing doesnt mean you have to give away all the contents

முரளிகுமார் பத்மநாபன் said...

@செல்வம்
உண்மையா சொல்றேன், நீங்க மிஸ்பண்ணிடாதிங்க செல்வம், 1.40ஹவர்ஸ் மூவிதான். எதாவது சொல்லிட்டு, ஆபீஸ் டயத்துலயாவது போயிடுங்க... நல்ல படம் அதிக நாள் ஓடியதில் தமிழ் வரலாற்றில்....

முரளிகுமார் பத்மநாபன் said...

@அனானி1
இல்லை நண்பா ஆரண்யம் என்றால் காடுதான். பாலகாண்டம் ராம லட்சுமணர்களின் இளம்பிராயத்தை சொல்ல்வதெனவே நினைக்கிறேன். உங்களால் உறுதிபடுத்த முடிந்தால் மாற்றிக்கொள்கிறேன். தப்புன்னா மாத்திதானே ஆகனும்.. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபி
சேம் ப்ளட்.... :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ அனானி2
//why do you have tell everything from the movie..you are just excited..how can you let all the things from the movie..reviewing doesnt mean you have to give away all the contents//

கரெக்ட்டுதான் நண்பா நீங்க சொல்றது.. ஆனா நான் எல்லாத்தையும் சொல்லிட்டேனா என்ன? நீங்க எதுக்கும் படம் பார்த்துட்டு வந்து சொல்லுங்க:-)

அப்படியே எக்ஸைட்மென்டோட எல்லாத்தையும் சொல்லிட்டாலும் கூட பரவாயில்லை நண்பா, என்மூலமா இந்த தீ இன்னும் நாலுபேருக்கு பத்திக்கும். சோ டோண்ட் ஒரி..

ஊதி எரிய வைக்கும் உதடாய் இரு - பாரதி

மணிஜி...... said...

சென்னை -28

சு.சிவக்குமார். said...

//கெட்ட ஜமீந்தாராக வருபவர், மன்னிக்கனும் இவர் யாருன்னு தெரியலை// இவரு வெயில் வசந்த் இல்லையா...அதுல பரத்க்கு எதிரியா வந்து பசுபதி கையாலே சாவாரே அவருதானே இவரு????

முரளிகுமார் பத்மநாபன் said...

@மணிஜி
எனக்கு புரியிறமாதிரி எழுதத்தான் மாட்டீங்க, கமெண்ட் கூடவா... ஒருவேளை லொக்கேஷன்னா நார்த் மெட்ராஸ், சென்னை 28.

முரளிகுமார் பத்மநாபன் said...

@சிவக்குமார்
சிவா, வெயில் வசந்த்ங்கிறது அந்த சிறுவன். வெயில் படத்தில் சின்ன பரத்தா வருவான்னு நினைக்கிறேன். இவர் கூத்துப்பட்டறையின் மூத்த கலைஞன். இதுவரை இவர் எந்தப்படத்திலும் நடிக்காதிருந்தது அவருக்கு வேண்டுமானால் துரதிஸ்டம், எனக்கு அதிர்ஸ்டம் என்று சொல்லியிருக்கிறார், இயக்குனர்.

மணிஜி...... said...

//சென்னை 68ல் சரக்கை நியாபகப்படுத்தினால் கை நடுக்கபேசுவானே, அஜய்///

அப்பாதுரை said...

என்னவோ தெரியவில்லை - இந்த முறை உங்கள் பதிவைப் படித்தும் படம் பார்க்கும் எண்ணம் வரவில்லை :)

அனானியை போல் நானும் குழம்பினேன் - உங்கள் பதில் இன்னும் குழப்பிட்டுதே? காலையில் இன்னும் சொட்டுத் தண்ணி (எச்சுடூஓ) கூட குடிக்கலிங்க..:))

"ராமரின் வனவாசத்தை சொல்கிற பாலகாண்டம்"னு எழுதியிருக்கீங்க. அது ஆரண்யகாண்டம்னு இருக்கணும்னு அனானி சொல்லியிருக்காருனு தோணுது. நீங்க சொன்ன பதிலில் வேறே ஏதாவது subtlety இருக்குங்களா?

அப்பாதுரை said...

ஊதி எரிய வைக்கும் உதடாயிரு - பாரதி வரியா? பிரமாதம். எடுத்துக் காட்டுக்கு நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை & அனானி1
சத்தியமா என்னோட தப்புதான் மன்னிச்சிக்கோங்க.... :-) மாத்திட்டேன்

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
//என்னவோ தெரியவில்லை - இந்த முறை உங்கள் பதிவைப் படித்தும் படம் பார்க்கும் எண்ணம் வரவில்லை :)
அனானியை போல் நானும் குழம்பினேன் - உங்கள் பதில் இன்னும் குழப்பிட்டுதே? காலையில் இன்னும் சொட்டுத் தண்ணி (எச்சுடூஓ) கூட குடிக்கலிங்க..:))//
சார் என்ன குழப்பம் இருந்தாலும் சரி, படத்தை அவசியம், பாருங்க. இப்ப இல்லைன்னாலும் எப்பவாவது, ஒரு நல்லபடம் மிஸ் பண்ணிடக்கூடாதேன்னு ஒரு எக்ஸைட்மெண்ட்ல எழுதியிருக்கேன்.

ராகவன் said...

அன்பு முரளி,

ரொம்பவே நல்லா எழுதியிருக்க... கடைசி வரில... இது விமர்சனம் இல்லன்னு சொல்லி தப்பிச்சுட்ட...

வியப்பு மேலிட பாராட்ட முடியற உன்னால, இன்னும் கொஞ்சம் நுணுக்கமா போயி... விமர்சனம் பண்ணவும் முடியும்...

நல்ல படம் கிடைக்காதான்னு ஏங்கிட்டு கிடக்கிறவன், இதப்பாத்தவுடனே... அதுல இருக்கிற நல்ல விஷ்யங்களை மட்டும் பேசமுற்படுவது அழகு தான்... குவாண்டின் டொராண்டினோ வின் படங்களுக்கு ஒப்பாய் சொல்லியிருப்பதால், பாக்க வேண்டும்போலுள்ளது...

படம் பார்த்து வெளியே வந்தவுடன் உண்டான உன்னுடைய சந்தோஷம், மலர்ச்சி... எழுத்தில் அப்படியே இருக்கு... எச்சி வழிய வழிய துடைத்துக் கொண்டு கதை சொல்லும் பாங்கு அழகுடா... நிறைய எழுது...

அன்புடன்
ராகவன்

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.