டக்கர், நிரலி கார்த்திக் கொஞ்சம் இசை


பேஸ்புக்கில் தினமும் மனதுக்கு நெருக்கமான பாடல்களை ஒரு ரேடியோ ஜாக்கி அளவிற்கு ஒளிபரப்பி வருகிறேன். பாரதியார்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த ஒரு சமயம். நீ நினைந்தால் ஆகாதது உண்டோ என்ற ஒருபாடலின் வீடியோவைப் பார்த்தேன். ப்ரியாஐயர் சகோதரிகளின் அழகான குரலில், ஒரு புதுவிதமான ஒலியமைப்புடன் இசையமைக்கப்பட்ட அந்த ஒரு பாடல் கேட்டதும் என்னவோ செய்ய தொடர்ந்து அந்த வீடியோ பதிப்பிற்கு சந்தாதாரராக ஆக்கிக்கொண்டேன். அதிலிருந்து தொடர்ச்சியாக சில வீடியோக்கள் கிடைத்தன. அதில் ஸ்லம்டாக் மில்லியனர் ஆல்பத்தில் வரும் ஓ சய்யா, முன்பேவா என் அன்பேவா, லெமன்கிராஸ், நைட் மான்சூன், மொமண்ட்ஸ் அண்ட் செண்டர்ஸ் இப்படி நிறைய சொல்லலாம்.

அதிலும் குறிப்பாக நிரலி கார்த்திக் என்ற பெண்பாடிய ஜ்ஜாரே என்கிற பாடலில் வருகிற ரம்மியமான இசையும் அந்த பெண்ணின் குரலும் கட்டிப்போட்டு கேட்கச்செய்கிறது. தொடர்ச்சியாக அவரது இசைக்கச்சேரிகளை டவுன்லோட் செய்து கேட்டுவருகிறேன். மிகமுக்கியமாக வீடியோக்கள். ஓ.எஸ்.அருண் அவர்களின் கர்நாடக இசையை ஒலியாக கேட்பதைவிட விடியோவுடன் கேட்க அவ்வளவு ரசனையாக இருக்கும். அவரது நொடிக்கொரு தரம் மாறும் முகபாவங்களும், கைகளின் நடன அசைவுகளும் சேரகூடும் ஒரு அழகு. அதுபோல நிரலியின் பாடல்களிலும் அவரது நளினமான முகபாவங்களோடு கேளுங்கள், நிச்சயம் ஒருமுறையோடு நிறுத்திக்கொள்ளும் வகையாக இராது, இவரது பாடல்கள்.

அப்படி சமீப காலமாக அதிகம் கேட்டுக்கொண்டிருக்கின்ற இசை சங்கர் டக்கர் எனும்  அமெரிக்க இளைஞரின் ப்யூசன் இசைதான். ப்யூசன் (Fusion) அவரது பெயரிலிருந்தே ஆரம்பிக்கிறது. சங்கர் – டக்கர். அமிதான்ந்தமயி ஒவ்வொருமுறை அமெரிக்கா செல்லும்பொழுதும் இவரது குடும்பம் அவர்களை அங்கே சந்தித்து ஆசி பெருவது வழக்கமாம். அப்படி ஒருமுறை அமிர்தான்ந்தமயியை சந்திக்கும்பொழுது அவர்கள்தான் டக்கருக்கு சங்கர் என்று பெயரிட்டிருக்கிறார். அதுமிகவும் சிறுவயதில் என்பதால் அமெரிக்காவிலும் சரி இந்தியாவிலும் சரி நான் சங்கர் டக்கராகவே அறியப்படுகிறேன் என தனது ஃபுயூசன் பெயர்க் காரணத்தை சொல்கிறார்.


க்ளேரினெட். இது ஒரு சாக்ஸ்போன் போன்ற ஒரு இசைக்கருவி. இவர் க்ளேரினெட்டை பத்து வருடங்களுக்கும் மேலாக வாசித்து வருகிறார். பொதுவான வெஸ்டர்ன் இசைக்கோர்வைகள் 8 அல்லது 16 கார்டுகளை அடிப்படையாகக் கொண்டவை. இதில் இம்ப்ரூவைசேசன் என்பது கடினம். ஆனால் இந்திய பாரம்பரிய இசையானது ஸ்ருதியையும் ராகங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இதில் ஒரு ராகத்தில் அமைந்த பாடலை மேலும் சில நெளிவு, சுளிவுகளை சேர்ப்பதன் (கமகம்) மூலம் புத்தம்புது இசையை கொணரமுடிகிறது. இதில் லயித்துப்போன சங்கர் டக்கர், இந்திய இசையை கற்றுக்கொள்ளவும் அதில் புலமை பெறவும் முயற்சிகளை மேற்கொண்டார்.

எனவே அமெரிக்க சிதார் இசைக்கலைஞரான பீட்டர் என்பவரிடம் ராகம், தாளம் குறித்த பாடங்களையும் இந்திய பாரம்பரிய இசையின் அடிப்படைகளையும் கற்றுத்தேர்ந்து பின்னர் இந்திய பாரம்பரிய இசை குறித்தான ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கவும், இந்திய இசையைக் கற்றுக்கொள்ளவும் இந்திய புல்லாங்குழல் இசைக்கலைஞர் மாஸ்ட்ரோ ஹரிபிரசாத் செளராஸ்யாவிடம் மாணவாரக இருந்து கற்றிருக்கிறார்.

நான் என்னுடைய பள்ளிப்படிப்பு முடியும்வரை இந்திய பாரம்பரிய இசையில் ஈடுபடவேயில்லை, அதன்பிறகே வாசிக்க தொடங்கினேன், மேலும் தன்னைத்தானே மெருகேற்றிக்கொள்ளும் அந்த யுக்தி (Improvisation) என்னை அதற்கு அடிமையாகவே ஆக்கிவிட்டது. முதலில் இந்திய இசையை க்ளேரினட்டில் வாசிக்க மிகவும் சவாலாக இருந்தது. அனேக வளைவுகளைக்கொண்ட கமகக் குறிப்புகளை வாசிக்கவே முடியாது என்கிற அளவிற்கு கடுமையாக இருந்தது. இருந்தாலும் க்ளேரினட் மீதிருக்கும் காதலும் பத்து வருடங்களுக்கும் மேலாக கற்றுக்கொண்ட ஒரு வாத்தியத்தை விடமுடியாமலும் மிகவும் சிரமப்பட்டுதான் இந்திய இசையை இதில் வாசிக்க ஆரம்பித்தேன்என்று ஆங்கில தினசரியில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இவர் க்ளேரினெட் தவிர கஞ்சிரா, தபேலா, பியானோ மற்றும் ஏனைய சில தாள இசைக்கருவிகளையும் வெகு அழகாக வாசிக்கிறார்.

மிக பிரபலமான, அழகான பாடல்களை புது இசைக்கருவிகளின் கலவையாக மெருகூட்டி இசைக்கப்படும் தனது வீடியோக்களை யூட்யூப் சேனலில் The Sruthi Box என்கிற பெயரில் வெளியிட்டு வருகிறார். இவை பெரும்பாலும் அவரது விருப்பமான இம்ப்ரூவைசேசன் வகை வீடியோக்களே. இதுவரை கடந்த இரண்டு மாதங்களில் இவரது இசை வீடியோக்கள் எட்டு லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. இவரது இசைவீடியோக்களில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொருவர் அமீத் மிஸ்ரா. இவரது அற்புதமான தபேலா இசையும் மிகவும் ரம்யமானது. விரல்களில் காட்டும் வித்தைகள் அற்புதம்.

ஐயர் சகோதரிகள், நிரலிகார்த்திக் மற்றும் சில இசை கலைஞர்களுடன் இணைந்து மேலும் நிறைய இசை நிகழ்ச்சிகளையும், நேரடி மேடை நிகழ்ச்சிகளையும் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். எங்களது இசை கர்னாடக, இந்துஸ்தானிய – வெஸ்டர்ன் இசைகளின் ஒரு கலவையாக இருக்கும் மேலும் சில புதிய பொலிவுமிக்க இணைவு ஒலிகள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என்பது இவர்களின் ஒட்டுமொத்தக்குரல்.

இதேபோல தி கோக் ஸ்டூடியோ என்னும் யூட்யூப் சேனலையும் சப்ஸ்கிரைப் செய்து வைத்திருக்கிறேன். இது இன்னுமொரு இசை அமுத சுரபி. கர்நாடக இசை, ராஜஸ்தானிய இசை, இந்துஸ்தானிய இசை, பாகிஸ்தானிய பாரம்பரிய இசை, சூபி, கவ்வாலி இப்படி மிகவும் தொன்மையான இசையை ஆராதித்து வரும் அனேக பிரல்யப்படாத இசைக்கலைஞர்களை அழைத்து மிக நவீனமான தங்களது ஸ்டூடியோக்களில் மிகபிரம்மாண்டமான முறையில் ஒலிப்பதிவு செய்து அன்ப்ளக்டு வகை விடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் கலர்ஸ் சேனலிலும், எம்டீவியிலும் ஒளிபரப்பப்படுவதாக அறிகிறேன். அதிலும் குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர் அதீப் அஸ்லாமின் ஒரு நிகழ்ச்சியை இந்த சேனலில் பார்த்தேன். ஆஹா!!! இது குறித்து விரைவில் ஒரு தனிப்பதிவாகவே எழுதுகிறேன்.

சில வீடியோக்கள் ஓ சய்யா, 
மற்றும்
நிரலியின் ஜஜாரே ஜா மற்றும் ஒரு ஸ்பெசல் வீடியோ

இதுபோக நிரலிகார்த்திக்கிடம் இன்னும் சில வீடியோக்கள் கேட்டிருக்கிறேன். படிக்கும் உங்களுக்கும் பிடிக்கிறபட்சத்தில் உங்கள் விருப்பம் தெரிந்த பின்னர் அடுத்த பதிவில் அதற்கான சுட்டிகளைத் தருகிறேன். 
இசையைக் கொண்டாடுங்கள்.. இசையில் தொடங்குதம்மா....

11 கருத்துரைகள்:

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான அறிமுகங்கள் தல.. டக்கரோட ஒரு பாட்டு கேட்டுப் பார்த்தேன்.. தூள்.. நிரலியும் கேக்குறேன்.. நன்றிப்பா..:-)))

ஷஹி said...

நல்ல ரசிகர் முரளி நீங்கள்...அருமையான தொகுப்பு

karthik lekshmi narayanan said...

அல்டிமேட் முரளி..
ஷங்கர் டக்கர் உண்மையிலேயே டக்கர்.. க்ளேரினெட் கேட்கவே ரம்மியமா இருக்கு!! வீடியோ mixing and rendition பிரமாதம்!
வீடியோ நோட் பண்ணி பாத்தா he have handled all the instruments xcept tabla in one song.. iyer sisters:) yaapa aiyo:) xpecting coke studio nice songs collections like this..

சுசி said...

அருமையா எழுதி இருக்கிங்க. பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

Thanks, Please give more links to nice youtube talents.

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்த்திகைப் பாண்டியன்
நண்பா! நன்றி. இன்னும் ஒரு அருமையான கலைஞரை (அந்தாளில்லை) மனதில் வைத்திருக்கிறேன், அனேகமா உங்களுக்கும் பிடிக்கும் அவரை அடுத்த இசைப்பதிவில் அவரை எழுதுகிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஷஷி
மேடம், இன்னும் டீ வரலை. முதலில் டீ வரட்டும் அப்புறம்தான் உங்களுக்கு நன்றிகூட சொல்லுவேன்... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்த்திக்
கார்த்திக், வேற எந்த பதிவுக்கும் வரமாட்ட நீ. ம்யூசிக் போஸ்ட் எல்லாத்துக்கும் சரியா வந்து நின்னுடுவ.. பட் உன்னோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுசி
தேங்க்ஸ் சோ மச் மேம். நிரலி கேளுங்க ஸ்படிகமான குரல் அவளுக்கு..

முரளிகுமார் பத்மநாபன் said...

@அனானி,
நன்றி நண்பரே! நிச்சயம் மனதுக்கிசைவான இசையை மற்றவர்களுக்கும் அறிமுகமாக பகிர்ந்துகொண்டுதானிருப்பேன்.

sugirtha said...

முரளி,

நிரலி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அவங்களோட expressions amazing! மொழில prithvi jyotika க்கு இசையை அறிமுகப் படுத்தற scene பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். அந்த மாதிரி நிரலி யோட கை அசைவுகளையே follow பண்ணினா music எனக்கும் புரிஞ்சுரும்ன்னு நினைக்கிறேன் :)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.