உள்மனம் கட்டவிழும் பொழுது....


 சைத்தான் : உள்மனம் கட்டவிழும் பொழுது, சாத்தான் பிறக்கிறான்.

அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு தன் தந்தை மற்றும் வளர்ப்புத் தாயோடு வரும் எமி, தன் தாயின் நினைவாகவே இருக்கிறாள், அவளுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்றுதான் இந்தியாவிற்கே வருகின்றனர். ஆனாலும் அவளது செயல்களும், பேச்சும் அவள் மனபிரள்வு கொண்டவளைப் போலவே இருப்பது அவளது தந்தைக்கு பெரும் கவலையாக இருக்கிறது. 

ஒரு சமயம் தனது வீட்டின் ஒரு நிகழ்ச்சியில் கேசியை சந்திக்கிறாள், ஏமி. கேசி ஒரு ப்ளேபாய், பெரும்பணக்கார அப்பாவின் காசை கரியாக்குவதுதான் அவனது முழு நேரத்தொழில். கேசியின் வசிகரமான பேச்சில் அவனுடன் சினேகிக்கிறாள்,ஏமி. கேசி தனது நண்பர்களை, ஹோலி பண்டிகையின் போது அறிமுகம் செய்கிறான். அவர்கள் டேஷ், சுபின், தான்யா. டேஷ் ஒரு ரெஸ்ட்டாரண்டில் வேலை செய்பவன், அப்படியே உபதொழிலாக கஞ்சா சப்ளை செய்து வருகிறான். சுபின், ஒரு வெட்டி ஆபிஸர். கம்ப்யூட்டரில் ஹேக்கிங் செய்வதும், வீடியோ கேம் விளையாடுவதுமாய் திரிபவன், நண்பர்களுக்காக எதையும் செய்பவன். தான்யா, ஒரு மாடல், அக்காவின் கட்டுப்பாட்டில் விளம்பர படங்களில் நடித்து வருபவள். ஹோலி அன்று கேசி தனது நண்பர்களை அறிமுகம் செய்ததோடு “பார்வார்டு மெயிலில் நட்பிற்கான விதிகள் என்று ஆறுவிதிகள் வந்திருக்கும், படித்திருப்பாய், ஆனால் எங்கள் நட்பிற்கு ஏழு விதிகள், அது என்னவென்றால் அந்த ஆறு விதிகளையும் மதிக்கக்கூடாது, மேலும் எங்களில் யாரும் யாரையும் எங்கும், எதற்காகவும், யாருக்காகவும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மாட்டோம், ஒருவரை ஒருவர் உறுதியாக நம்புவோம்என்பதுதான் என்கிறான். 

 (தான்யா, சுபின், ஏமி, கேசி மற்றும் டேஷ்)

ஏமியும் இணைய இந்த ஐவர் கூட்டணி, கண்டபடி திரிகிறது. குடியும், கூத்தும், போதையுமாய். நிறைய பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வதெனத் தெரியாமல் வாழும் உயர்தட்டு மனிதர்களின் பிள்ளைகளை அப்படியே கண்முன் நிறுத்துகின்றனர். ஒருநாள் இரவு குடிபோதையில் தங்களது இம்போர்ட்ட் காரில் சீறிக்கொண்டு செல்லும் இவர்களது கார் ஒரு திருப்பத்தில் ஒரு விபத்தை சந்திக்கிறது. ஸ்கூட்டரில் வந்த ஒரு இளைஞன் டயர்களுக்கு அடியில் நசுங்கி கிடக்கிறான். அடுத்த நாள் இதை சாமர்த்தியமாக கண்டுபிடிக்கும் ஒரு போலிஸ்காரன் இவர்களிடம் பேரம் பேசுகிறான். 25 லட்சம் கொடுத்தால் இது உங்க பிரச்சனை அல்ல என்கிறான்.

இரண்டே நாள் அவகாசம், மிகப்பெரிய தொகை. ஏற்கனவே வெற்றிகரமாக செய்யப்பட்ட கடத்தல் நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்கின்றனர், இப்பொழுது ஏமி. அனைவரும் ஒருநாள் காரிலேயே சுற்றலாம், அல்லது தனது நண்பனில் லாட்ஜில் சென்று தங்கிக்கொள்ளலாம். பணம் வந்த பின்னர் ஏமி அவளாகவே வீடு செல்வதுமென திட்டமிடுகின்றனர். ஆட்டம் ஆரம்பமாமிகிறது, அவள் தந்தையிடம் 25 லட்சம் கேட்டும் போன் செய்கிறான், டேஷ். ஆனால் ஏமியின் தந்தை அரசு அதிகாரி, அவர் போலீஷிடம் போகிறார். இந்தக் கேஸ் ஒரு துடிப்பான போலிஸ் அதிகாரியான அரவிந்திடம் வருகிறது. காவல்துறையில் உள்ள ஒருவரால் இந்த செய்தி மீடியாவிற்கும் போகிறது. ஏமி கடத்தப்பட்ட செய்தி பூதாகரமாகிறது. ஏமியின் நண்பர்கள், ஓவ்வொருவராய்த் தேட அனைவரும் வீட்டில் இல்லாத்தால், இந்த ஐவரையும் கடத்தியிருபதாக செய்திகள் வெளியாகிறது. லாட்ஜில் தங்கியிருந்தபடி டீவியில் இந்த செய்தியைப் பார்க்கும் ஐவர் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். சரி அப்படியே போகட்டும், இனி ஒவ்வொருவர் வீட்டிற்கும் பணம் கேட்டு போன் செய்யலாம், 25 லட்சத்திற்கு மேல் வரும் அத்தனையும் ‘ப்ராபிட்என்கிறான் கேசி.

அதே லாட்ஜில் பெண்களைக் கடத்தி போதை மருந்துகளுக்கு பழக்கி வெளி நாட்டுக்கு சப்ளை செய்யும் ஒரு பெரிய கேங் இருக்கிறது. டேஷ் போன் செய்ய வெளியே செல்கிறான். ஒருவேளை கடத்தப்பட்டவர்களை இங்கே பதுக்கியிருக்கலாம் என்ற அனுமானத்தில் அங்கு தனது போலிஸ் சகாக்களோடு வருகிறான், அரவிந்த். இதே சமயம், லாட்ஜில் தனியாக சுற்றிக்கொண்டிருக்கும் தான்யாவை அங்கிருக்கும் ஒருவன் கற்பழிக்க முயல்கிறான். டேஷும், கேசியும் அவனை அடித்துத்துவைக்கின்றனர். மற்றவர்கள் துரத்த மொட்டை மாடியை நோக்கி ஓடுகின்றனர் நண்பர்கள். கீழே பெண்களை கடத்தும் ஒரு கும்பல் அதே இடத்தில கடத்தி வைத்திருக்கும் ஒரு ஜெர்மானிய பெண்ணைப் பார்க்கிறான், அரவிந்த். அடுத்த பத்து நிமிடம் ஒரு ஆக்‌ஷன் கவிதை. 'கோயா கோயா சாந்' பாடல் பிண்ணலியில் ஒலிக்க ஆரம்பிக்கிறது அந்த ஸ்லோ மோஷன் ஆக்‌ஷன் எப்பிஷோட். அந்த ஐவரும் மொட்டைமாடியின் கதவுகளை திறந்து கொண்டு ஓடி லாரியில் குதித்து தப்பிக்கின்றனர்,  ஒரு நீண்ட துப்பாக்கிசண்டைக்குப் பிறகு அரவிந்த அந்த் கடத்தல் கூட்டத்தைப் பிடிக்கிறான். மீண்டும் விஷயம், மீடியாவினால் ஆதிக்கம் பெறுகிறது. ஒரு ஜெர்மானிய பெண் கடத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிறது, ஆனால் கட்த்தப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஏமியின் கேஸிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, என மீடியாக்கள் கதறுகின்றன.

அங்கே, நண்பர்கள் தப்பி ஓடி, ஒரு தியேட்டருக்குள் தஞ்சமடைகின்றனர். ஏமியின் தந்தை பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட நேரம் வருகிறது. டேஷ் தான் சென்று அந்த பணத்தை பெற்றுவருவதாகவும், விரைவாக இந்தப் பிரச்சனையை முடித்துவிடலாமென்றும் சொல்லி கிளம்புகிறான். அந்த இடத்தை போலிஸ் கண்காணிப்பதை அறிந்து டேஷ் பணத்தை எடுக்காமலேயெ திரும்புகிறான். அதற்குள் இங்கே, தியேட்டரில் இவர்களின் இந்த தொடர்திட்டத்தால் பயந்து போயிருக்கும், தான்யாவும், சுபினும் தங்கள் வீட்டிற்கு உண்மையை சொல்ல முடிவெடுக்கின்றனர். சுபின் வெளியே சென்று டாக்சி ஏற்பாடு செய்ய கிளம்புகிறான். தான்யாவைக் காணாமல் வெளியே வரும் கேசி, அவளோடு வாக்கு வாதமிடுகிறான். கோபத்தில் அவளை அடிக்கிறான். சுவரில் மோதி கீழே விழும் தான்யாவின் தலையிலிருந்து தரையில் ரத்தம் பரவுகிறது. திரும்பி வரும் சுபின் இந்தக் காட்சியைப் பார்த்ததும், அங்கிருந்து ஓடிவிடுகிறான். இப்பொழுது டேஷ் வருகிறான். தான்யாவை காப்பாற்றுவது இயலாத காரியம், இங்கிருந்து கிளம்பலாம் என்கிறான். அங்கிருந்து வெளியேறி அதிக நடமாட்டம் இல்லாத ஒரு சர்ச்சில் தஞ்சம் அடைகின்றனர்.

இவர்களின் ஒவ்வொரு செயலும் அவர்களுக்கு எதிராகவே திரும்பிக்கொண்டிருப்பது தெரியாமால் ஒடிக்கொண்டே இருக்கும் இவர்களை சாதுர்யமாக நெருங்கிக்கொண்டே இருக்கிறது அரவிந்த் குழு. சர்ச்சிற்குள் மீண்டும் விவாதம் ஆரம்பிக்கிறது, டேஷ், பணத்தை தன் தந்தையிடமிருந்து வாங்கிக்கொண்டு தங்களிடம் மறைப்பதாக சந்தேகிக்கின்றனர். ஏமியும்,கேசியும். தொடந்து நிகழும் அடுத்தடுத்தக் கொலைகளும், பரபரப்புமாய் முடிகிறது படம்.

அரவிந்தின் மனைவியும், அவனது விவாரத்து முயற்சியும், பணம் கேட்கும் போலிஸின் குடும்பமும், ஏமியின் தாயும் என நிறைய ஹைக்கூக்கள் சிதறிக்கிடக்கின்றன. பொறுமையாக இன்னும் பலமுறை பார்த்து அனுபவிக்கவேண்டும்.

ஏமியாக வரும் கல்கியும்(தேவ்டி+கோக் விளம்பரப்புகழ் கல்கி), கேசியும், டேஷ்-ஆக வரும் ஷிவ்பண்டிட்டும்(தமிழில் இவர் அறிமுகமான லீலை ரிலீஸுக்காக வெயிட்டிங்), அரவிந்தாக வரும் ராஜீவும் (ஆமீர் புகழ் ராஜீவ்) இவர்கள் மூவரும் மிகவும் சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக கல்கி எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்கும் அவரது பார்வை இந்தப்படத்துக்கு ஆப்ட். மேலும் ராஜீவ் இவரைப்பற்றி அதிகம் எழுதவில்லை, அவசியம் ப்டம் பாருங்கள், இவரது நடிப்பிற்காக, நடிப்பு என்பது உடல்மொழி சார்ந்தது, அது எவ்வளவு முக்கியம் ஒரு திரைப்படத்திற்கு என்பதை தாராளமாக இவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

 படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சி, அந்த ஆக்ஸிடெண்ட் காட்சி. சுத்தமாக பின்னணி இசையேயில்லாமல் திக்கென்ற ஒரு மனநிலையை பார்வையாளர்களுக்கு கொண்டு வந்திருப்பார்கள், உண்மையிலேயே அந்த காருக்குள் இருப்பவர்களின் மன்நிலை உங்களுக்கு தொற்றிக்கொள்ளும். அதன் பின் அந்த ஐவரில் நீங்களும் ஒருவர். இந்த காட்சி வரை படத்திற்குள் உங்களை கொண்டு செல்ல எடுக்கும் முயற்சிகள் மட்டுமே, எப்பொழுது பார்வையாளன் படத்திற்குள் வந்துவிட்டானோ, அங்கே ஆரம்பிக்கிறது ஒரு அசூர வேகம். அது சாத்தானின் வேகம். இந்தப்படத்தின் அடிநாதமே, எந்த ஒரு மனிதனும் நல்லவனுமில்லை, கெட்டவனுமில்லை. எல்லோருக்குள்ளும் உறங்கும் சாத்தான் எப்போது வெளிப்படுகிறதோ, அப்பொழுது நடக்கும் விளைவுகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது எனபதுதான்.

இந்தி சினிமாவில் அனுராக் காஷ்யப்பின் பள்ளியிலிருந்து வெளிவந்திருக்கும் ஒரு அதியற்புதமான படம், சைத்தான். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப், பிஜோய் நம்பியார் எனும் சேட்டன் இயக்கிய படம், இதில் நம்பியாருக்கு ஒரு கிரியேட்டருக்கான எல்லா சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயக்குனருக்கு. மனுஷன் பிச்சி உதறிட்டான். இது ஒரு முதல் படம் என்று சொல்லவே முடியாத அளவிற்கு அற்புதமான ஆளுமை மனுஷனுக்கு. பாத்திரத்தேர்விலிருந்து வசனங்கள் வரை பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள். அதிலும் பத்துவருடங்களாக தனது கனவுப்படம் என்று சொல்லிவரும் பாஞ்ச் என்ற படத்தின் ஸ்க்ரிப்ட்தானோ இது என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. அனுராக் காஷ்யப் நம்ம சசிக்குமாரின் நண்பர், ஒருமுறை இவர்களது சந்திப்பின்போது சுப்ரமணியபுரம் தன்னை மிகவும் பாதித்ததாகவும் அதை இந்தியில் தன்பாணியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் ஒரு செய்தியைப் படித்தேன். இது ஈசனின் ரீமேக் என்று சொல்லலாம். ஈசன் பார்க்கும்பொழுது ஒரு நண்பனிடம் சொல்லியிருந்தேன். இது காஷ்யப் கைண்ட் ஆஃப் மூவி ஆனா சசி இதை சரியாப்பண்ணலை என்று. இப்போ பக்காவா அவரோட தயாரிப்பிலேயே, அவருடைய சிஷ்யப் புள்ளையாலேயே எடுக்கப்பட்டிருக்கிறது, சைத்தான். பிஜோய் நம்பியார், மணிரத்தினத்திடம் அசோசியேட் டைரக்டராக இருந்தவர், இங்கே படித்து அங்கே பட்டம் பெற்றிருக்கிறார். வாழ்த்துக்கள், பிஜோய்.

சொல்ல மறந்தபோன விஷயம், இந்தப்படத்தின் டெக்னிக்கல் க்ரூ. அமேசிங்க் ஒர்க் இந்தப்படத்துக்கு. செட்டாகாட்டும், லோகேசனாகட்டும் கேமிரா, எஃபெர்ட்லெஸ்ஸாக சுத்தியடிக்குது. கேமிராமேன் நம்ம நான் மகான் அல்ல, மதி. இங்கு தியேட்டரில் இந்தப்படம் ரிலீஸ் இல்லை. டவுண்லோடிப் பார்த்தால் ப்ரிண்ட் மகா மட்டமா இருக்கு. ஆனால் முதல் பத்து நிமிடங்களைப் பார்க்கும்போதே முடிவு செய்துவிட்டேன், இது இப்படிப்பட்ட ப்ரிண்டில் பார்க்க வேண்டிய படம் அல்ல என்பதை. கிட்டதட்ட 40 நாட்கள் தேடி இரண்டுநாட்கள் முன்புதான் நல்ல ப்ரிண்ட் கிடைத்தது. மூணுதடவை பார்த்துட்டேன். இதை எதுக்காக சொல்றேன்னா, அந்த முதல் பத்து நிமிட கேமிரா ஒர்க்தான் என்னை 40 நாள் வெயிட் பண்ண வச்சது.

நல்லபடம் பார்க்கவேண்டும் என்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். சமீபத்தில் இங்கே ஆரண்யகாண்டம் செய்ததை அங்கே சாத்தான் செய்து முடித்திருக்கிறது.

9 கருத்துரைகள்:

கோபிநாத் said...

சூப்பரு ;-)

பத்மா said...

if compiled and published u have a very big chance of getting a big recognition like jeeva.

avaroda thirai cheelai padikum pothu ungal nyapagam thaan vanthathu .

all the best murali
u rock

அப்பாதுரை said...

பார்க்கிறேன்.
படத்தை விட உங்கள் பரிந்துரைகளைப் படிப்பது சுகமாக இருக்கும் போலிருக்கிறது.

நிரூபன் said...

கடத்தல் நாடகத்தை மையப்படுத்தி நகரும் வித்தியாசமான ஒரு படத்தின் விமர்சனத்தைப் பகிர்ந்திருக்கிறீங்க. நேரம் இருக்கும் போது கண்டிப்பாக இப் படத்தினைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

விமர்சனப் பகிர்விற்கு நன்றி சகோதரா.

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபி
அவசியம் பாருங்க தல.... ப்ரில்லியண்ட் மூவி

முரளிகுமார் பத்மநாபன் said...

@பத்மா
இங்கேயும் சொல்கிறேன். உங்களுடைய பாரட்டு என்மேல் உங்களுக்கு இருக்கும் ப்ரியத்தைக் காட்டுவதாகவே நினைக்கிறேன். கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதாகவும், வெட்கப்படவும் வைக்கிறது உங்கள் பாராட்டு. தேங்க்யூ பத்மா மேடம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை.
உங்களுடைய தொடர் பின்னூட்டங்களும் வாசிப்புகளும் இன்னும் நிறைய எழுத வேணுமென்கிற உத்வேகத்தைக்கொடுக்கிறது. :-) நன்றீ சார்

முரளிகுமார் பத்மநாபன் said...

@நிரூபன்
அவசியம் பாருங்க சகோ, பார்த்தபின் ஒரு பின்னூட்டமிடுங்கள். :-)

ஆதவா said...

பாஸ்.. இந்த படத்தை பார்த்துட்டு பிறகு படிக்கிறேன்!!! சுவாரசியம் போய்டகூடாதுல்ல..

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.