இன்னுமொரு எலுமிச்சை மரம்

"இசையின் பயனே இறைவன்தானே?
காற்றில் வரும் கீதமே! 
என் கண்ணனை அறிவாயோ?"

எப்பொழுதும் இசையைக் கேட்கும் பொழுது,  மனதில் தோன்றும் பிம்பங்கள் அற்புதமானது. அந்த பிம்பங்கள் காதலையோ அல்லது மிக மெல்லிய உணர்வுகளையோ பிரதிபளிப்பதாகவே இருக்கிறது. அதனால், மனம் இயல்பாகவே நம்மை அமைதி கொள்ளச் செய்கிறது. நமது சந்திக்கும் விசயங்கள் அனுபவங்களாய் மனதில் தங்கிவிடுவதைப் போலவே, இசையும். கிணற்றில் ஆழத்தில் குளிர்ச்சியை தக்கவைத்துக் கொண்டு உறங்கிக்கிடக்கும் கூழாங்கற்களைப் போல, மனதில் ஏதாவது ஒரு மூலையில் இசையில் படிந்திருக்கிறது. இசை குறித்து ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு விதமான பிடிமானங்களும், அளவுகோல்களும் இருப்பதால் பொதுவான இசையை அறிந்துகொள்ள முடிவதில்லை. இருந்தும் இசை அனைவருக்கும் பொதுவானது. புரியாமலும் கேட்பது சுகம், புரிந்து கேட்பதில் பரம சுகம். அவ்வளவே. இதனாலேயே எங்கோ, என்றோ, எவராலோ உருவாக்கப்பட்ட இசை கடல் கடந்து, எல்லை கடந்து காதுகளில் விழுகிறது. 

 உலகமெங்கும் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு வெறுப்பு இருக்குமேயானால், அது அறிவுரைகள் .அப்படிப்பட்ட அறிவுரைகளைக் கூட இசை தடவி கொடுக்கும்போது இனித்தே இருக்கிறது. எதையும் இலகுவாக்கும் திறன் இசைக்கு மட்டும் இருப்பதை சொல்லவே இதை இங்கே சொல்கிறேன். சமீபத்தில் நீலத்தாமரா மற்றும் சைத்தான் படம் பார்த்ததிலிருந்து, (சித் நா கரோ, கோயா கோயா சாந்த்) பழைய ஹிந்தி பாடலகளில் கலெக்‌ஷன்சை தேடிக்கொண்டிருந்தேன், அப்போ ஒல்ட் கல்ட்ஸ் என்று நான் எழுதிவைத்திருந்த ஒரு பழைய சி.டி.ஒன்று கிடைத்தது. உண்மையிலேயே இப்போ அது ஒரு பொக்கிஷம் மாதிரிதான் இருக்கு. ஆர்.டி.பர்மன், ரஃபி, கிஷோர்குமார் இவர்களுடைய ஹிட்ஸும். தேர்ந்தெடுத்த ஆங்கிலப்பாடல்களுமாய் சி.டி. நிரம்பியிருந்தது. ஆனால் இந்த சி.டியை உபயோகித்ததாக சற்றும் எனக்குத் தோன்றவில்லை.

பாப் மெர்ளி, போனி எம், ப்ரையன் ஆடம்ஸ், ஸ்டிங், ராட் ஸ்டூவர்ட், ரோனன் கீட்டிங், டேரன் ஹேஸ், ஜெனிஃபர் லோபஸ், பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் இப்படி நிறைய அருமையான பாடல்கள், சொல்லப்போனா எல்லாப் பாட்டுமே அந்தந்த காலகட்டங்களில் கலங்கடித்த மற்றும் எவர் க்ரீன் பாடல்கள்தான். ஆனால் மிகப்பெரிய குறை அந்த சிடி ப்ளே ஆவதில்லை. கணினியில் பாடல்களில் பெயர்கள் தெரிகிறது. அதைவைத்துக்கொண்டு மறுபடியும் தேடித்தேடி டவுன்லோட் செய்து கொண்டிருக்கிறேன். சில பாடலகள் MP3 யாக கிடைக்கவில்லை. யூட்யூபில் வேண்டுமானால் விடியோக்கள் கிடைக்கின்றன.

கொஞ்சம் கொஞ்சமாக சில பாடல்களை ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்து கொண்டு இருக்கிறேன். இதுவரை கிடைத்த எல்லாவற்றையும் MP3 ப்ளேயரில் காப்பி செய்து வைத்துக்கொண்டு ஒரு வாரமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சத்தியமாக இசை என்ற ஒன்று இல்லையென்றால் இருக்கிற சூழ்நிலைக்கு, என்னவாகியிருப்பேனென தெரியவில்லை. இசையை ரசிக்கத் தெரிந்த ஒருவனால் கொலை செய்ய முடியாது என்ற பதம் நினைவிற்கு வருகிறது, மீண்டும்.

இங்கே சில உங்களுக்காகவும்


ஸ்டிங்கின் பாலைவன ரோஜா மற்றும் தங்க வயல்
ப்ரையன் ஆடம்ஸ்ன் மன்னிப்பாயா?
போன் ஜோவியின் இதுஎன் வாழ்க்கை
என்ரிக்ன் ஹீரோ மற்றும் எஸ்கேப்

                அப்படி இப்போ அடிக்கடி கேட்கிற ஒரு பாடல், லெமன் ட்ரீ. அதிக இசைக்கருவிகள் இல்லாமல் மிதமான கம்போசிங்கில் பாடப்பட்ட பாடல். காதலின் மாயக்கரத்தின் பிடியின் தன் சுதந்திரத்தை இழந்த ஒரு ஆணின் பார்வையில் பாடப்பட்ட பாடலாகவே இருந்தாலும் இதை இருவருமாய் பொருந்திப் பார்த்துக்கொள்ள முடிவது இந்தப் பாடலின் சிறப்பு. 


ஒரு மழை நேர ஞாயிறு மதியத்தில்,
உனக்கெனக் காத்துக்கொண்டு,
ஒரு அறையில் அமர்ந்திருக்கிறேன் என்பதும்,
எதுவும் செய்யாமல், வெறுமையாய்
சுற்றித் திரிந்துகொண்டும் இருப்பது,
ஏனோ புதிராகவே இருக்கிறது.

உனக்கான பயணங்களிலும் தனித்தே இருக்கிறேன்,
இப்படி தனிமையில் காத்திருப்பதிலிருந்து        
விட்டு விலகி இங்கிருந்து வெகுதூரத்திற்கு,       
வேகமாக காரை ஓட்டிச்செல்ல விரும்புகிறேன்.   
இருந்தும், உனக்கெனக் காத்துக்கொண்டு,
ஒரு அறையில் அமர்ந்திருக்கிறேனென்பது
ஏனோ புதிராகவே இருக்கிறது.

இது எப்படி? ஏன் இப்படியென்பதும்
ஏனோ புதிராகவே இருக்கிறது.

நேற்று, நீ என்னிடம் சொன்னதெல்லாம் நீல வானை பற்றி,
நான் கண்டதெல்லாம் எலுமிச்சை மரம் மட்டுமே!
மேலே, கீழே மற்றும் சுற்றியும் பார்த்துவிட்டேன்,
நான் கண்டதெல்லாம்,
இன்னுமொரு மஞ்சள் எலுமிச்சை மரம் மட்டுமே!

குளித்துவிட்டு வெளியே செல்ல நினைக்கிறேன்,
ஆனால் ஒயாமல் மனதை சுற்றும் எண்ணங்கள்
என்னை ஒளியற்ற இந்த அறையிலேயே
அமரவைத்திருக்கிறது, இது ஆச்சர்யம்தானே?

தனிமையில் இருப்பதென்பது -அந்த
எலுமிச்சை மரத்தில் அமர்ந்திருப்பதைப்போல,
நான் அதை விரும்பவுமில்லை.
மேலும் இந்தத் தனிமை எனக்கானதல்ல.

மட்டுப்போன என் சந்தோசங்களில் எட்டிப்பார்த்தால்,
என்னால், எனக்கான இன்னொரு பொம்மையை
செய்து கொள்ள முடியுமென்றே தோன்றுகிறது.
இவை அனைத்தும் நடக்கும்போது, என் அன்பே!
உனக்குத்தான் புதிராக இருக்கும்.


இசையில் தொடங்குதம்மா .. ... 


13 கருத்துரைகள்:

கனிமொழி said...

Gud Translation!! :)

அப்பாதுரை said...

சில வரிகள் திடுக்கிட வைக்குதுங்க. (இருந்தும்.. silence of the lambs பாத்திருப்பீங்க. அதுல ஹேனிபல் கேரக்டரை இசைப்பிரியரா காட்டியிருப்பாங்க.. அதுவும் திடுக்கிட வச்சுது :)

அறிவுரைகள் பத்திச் சொன்னது சரி. பிறந்த குழந்தைக்குக்கூட எப்படியோ அறிவுரைனு புரிஞ்சு முகத்தை சுளிக்குது இப்பல்லாம்..

அன்புடன் அருணா said...

போனி எம், ப்ரையன் ஆடம்ஸ்,கோயா கோயா சாந்த்,ஆர்.டி.பர்மன், ரஃபி, கிஷோர்குமார் இவர்களுடைய ஹிட்ஸும்.....அட! இதெல்லாம் எப்போதும் நான் காரில் ஓடவிடும் பாடல்கள்!

சிவகுமாரன் said...

உலகமெங்கும் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு வெறுப்பு இருக்குமேயானால், அது அறிவுரைகள் .அப்படிப்பட்ட அறிவுரைகளைக் கூட இசை தடவி கொடுக்கும்போது இனித்தே இருக்கிறது.///

உண்மை .நான் கூட என் மனைவிக்கும் பிள்ளைக்கும் கவிதையாய் சொல்லியிருக்கிறேன் - அவை அறிவுரை என்று அறிய முடியாத படி

sangeetha said...

முரளி,
உங்களது இசை குறித்த அனைத்துப் பதிவுகளும் எனக்கு ரொம்ப பிடித்தமானவை.இதில் இன்னும் சற்று ஆழமாக யோசித்து இருக்கிறீர்கள்.
'எப்பொழுதும் இசையைக் கேட்கும் பொழுது, மனதில் தோன்றும் பிம்பங்கள் அற்புதமானது. அந்த பிம்பங்கள் காதலையோ அல்லது மிக மெல்லிய உணர்வுகளையோ பிரதிபளிப்பதாகவே இருக்கிறது..'
-உண்மை ..நானும் எனக்கு பிடித்தமான இசையோ பாடலோ ஏதோ ஒரு வகையில் என் உணர்வுகளோடும் நினைவுகளோடும் இணைந்தே இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
எதிர்பாராத நேரத்தில் முடிந்துவிட்ட ஒரு இனிமையான பயணத்தை போல உங்கள் பதிவும் முடிந்துவிட்டதாக எண்ணுகிறேன்..இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துகள்.
'பிரதிபளிப்பதாகவே'என்பது 'பிரதிபலிப்பதாகவே' என்று வந்திருக்க வேண்டுமோ ?

முரளிகுமார் பத்மநாபன் said...

@கனிமொழி
நன்றி கனி, :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
சார் //சில வரிகள் திடுக்கிட வைக்குதுங்க//
இது எனக்கு புரியலை சார், பின்னுதாரணம் வேற கலக்குதே? ஒரு வேளை நல்லாயில்லைன்னு ஏதும் சொல்றிங்களா? :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்புடன் அருணா
மேடம், இன்னும் வரும். இரு நூறு பாடல்களுக்கும் மேல் வரும் அந்த சிடி ப்ளே ஆக மாட்டேங்குது. இப்போதான் ஒரு ஐம்பது பாடலகளைப் பிடித்திருக்கிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@சிவகுமாரன்
நன்றி, சிவகுமாரன். தொடர்ந்து படிங்க, கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சங்கீதா
//உங்களது இசை குறித்த அனைத்துப் பதிவுகளும் எனக்கு ரொம்ப பிடித்தமானவை.//
மிக்க மகிழ்ச்சி, பிடித்திருக்கிறது என்பதைவிட தொடர்ந்து படிக்கிறீர்கள் எனும்போது மிக்க மகிழ்ச்சி.

//எதிர்பாராத நேரத்தில் முடிந்துவிட்ட ஒரு இனிமையான பயணத்தை போல உங்கள் பதிவும் முடிந்துவிட்டதாக எண்ணுகிறேன்..இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் என்றே தோன்றுகிறது//

உண்மைதான் லெமன் ட்ரீயின் மொழிபெயர்ப்பை தனியாக எழுதிவிட்டு, இந்தப்பதிவை இன்னும் எழுதியிருக்கலாமோவென எனக்கும் பட்டது.

அந்த எழுத்துப்பிழையை ஆராய என நண்பர் வருவார் :-))


நன்றி சங்கீதா.

shri Prajna said...

/சத்தியமாக இசை என்ற ஒன்று இல்லையென்றால் இருக்கிற சூழ்நிலைக்கு, என்னவாகியிருப்பேனென தெரியவில்லை/
உண்மை தான்..அவ்வளவு அற்புதமானது இசை..சோகமோ சுகமோ அந்த சூழ்நிலைக்கு தக்கபடிக்கு மனதை இயங்க வைக்கும்...

/ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு விதமான பிடிமானங்களும், அளவுகோல்களும் இருப்பதால் பொதுவான இசையை அறிந்துகொள்ள முடிவதில்லை. இருந்தும் இசை அனைவருக்கும் பொதுவானது. புரியாமலும் கேட்பது சுகம்,புரிந்து கேட்பதில் பரம சுகம். அவ்வளவே./
வெவ்வேறான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் இசை மட்டும் அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ள்து

இசைக்கு எல்லைகளே இல்லை...ஆமாம்

ஷஹி said...

"கோயா கோயா" முன்பே கேட்டிருக்கிறேன் முரளி..desert rose தான் புதிது...விடியோவும் சரி இசையும் சரி ரொம்ப அருமை..எல்லாமே நன்றாக இருந்தாலும், மேற்குறிப்பிட்ட இரண்டும் தான் என் சாய்ஸ்..

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

அருமையான ரசனையின் மொழி பெயர்ப்பு . பகிர்ந்தமைக்கு நன்றி

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.