கிறுக்கல்கள் 50

நின்ற மழையை நினைத்தபடி பெய்யும்
கிளையும் இலையும் அழகு.
பெய்யும் பொழுது மழையே அழகு.
பெய்த பின்னர் ஊரே அழகு.
என கிறுக்கிக்கொண்டிருந்த என்னை
எல்லாம் சரிதான் இன்னும்
எத்தனை நாளைக்கு தான் மழையை
எழுதுவாய்?

என்னை எழுத மாட்டாயாவென,
கேட்ட உன்னைப் பற்றி
என்ன எழுதுவது?
மேலும்
நீ குடை மறந்த நேரமாய்
அழகான உன்னை
இன்னும் அழகாக்கி,
தூரிகைத் தூறல்களால்
எழுதி விட்டுப் போன
மழையை விட,
என்ன எழுதுவது?
உன்னைப் பற்றி.
அப்படியே உன்னைப் பற்றி
எழுதும் எதுவும்
மழையை எழுதியதாகவே
ஆகிப்போகிறதே?

இருந்தும் உனக்காய் எழுதுகிறேன்
நீயும் மழையும் ஒன்றுதான்
அல்லது நீயே மழைதான்
தேடும் பொழுதுகளிலெல்லாம்
எட்டியிருந்துவிட்டு,
விலகியிருக்கும் நேரங்களில் வந்து
கொட்டிவிட்டுப் போவதில்
நேரில் காணும் நேரத்தை விட
சன்னல் வழியாக பார்க்கும் பொழுதில்
அழகாய்த் தெரிவதில்
நீயும் மழையும் ஒன்று தான்.

உனைக் காணாத நாட்களில்
தேடிக் களைத்த மாலைப் பொழுதுகளில்
பெய்கிற மழையை கண்ட மனம்,
உனைக் கண்டதாகவே மலரும்
ஆக, நீயும் மழையும் ஒன்றுதானே?
எட்டியிருந்து ரசிப்பதைக் காட்டிலும்,
கலந்து அனுபவிப்பதிலேயே
அதிக சுகம் தரும் நீயும்,
மழையும் ஒன்றுதான்.

நீ தொடும் எந்த நேரமும்,
மழையில் நனைந்ததை
உணராமல் இருக்க முடியவில்லை.
சொல்! நீயும் மழையும் ஒன்றுதானே?


Post Comment

21 பின்னூட்டம்:

நிகழ்காலத்தில்... said...

மழையில் நனைகிறேன்....

இளங்கோ said...

நல்லா இருக்குங்க முரளி.
என்ன மழையைத் தான் காணோம் :)

அகல்விளக்கு said...

ஆனந்தமாய் நனைந்தது போல இருக்கிறது...

ஜீ... said...

//நீ தொடும் எந்த நேரமும்,
மழையில் நனைந்ததை
உணராமல் இருக்க முடியவில்லை//
VERY NICE!!

கும்க்கி said...

ம்...

அருமையான மழை.

shri Prajna said...

”நின்ற மழையை நினைத்தபடி பெய்யும்
கிளையும் இலையும் அழகு”
என்று அசத்தலாய்.. ஆரம்பித்து..
”நீ தொடும் எந்த நேரமும்,
மழையில் நனைந்ததை
உணராமல் இருக்க முடியவில்லை” முடியும் வரை காதல் மழை பொழிந்திருக்கிறீர்கள்..
நல்லாருக்கு முரளி..அழகாய்..படிக்கிறப்பவே மழை மேலே கொட்டுதே...

ராகவன் said...

அன்பு முரளி,

மழைப்பதிவுகள் எல்லாமே சுகம். உன் பேச்சை தண்ணில தான் டா எழுதணும் என்று சொல்பவர்களிடம் மழையில் எழுதிப்பாருங்க என்று சொல்ல வேண்டும்... அப்படி பதிகிறது ஒவ்வொன்றும்... மழையே ஓவியம், மழையே மூடுதிரை...

மழையில் நனைந்தபடி ஒரு ஆரஞ்சு கலர் தாவணியும், மயில்கழுத்து கலர் பாவாடையில் வந்தவள் மழை கொளுத்திய சுடராய் இருக்கிறாள்... ஆகுதியில் மழை எண்ணெய்யென விழ பற்றி எரிகிறது பிரபஞ்சம் முழுக்கவும்... நான் சுடருக்குள் ஒளிந்து கொள்கிறேன்...

கொல்ற முரளி... என்னுடைய பதின் நினைவுகளை திரும்ப திரும்ப கொண்டு வருகிறது சிலசமயம் அங்கேயே தங்க வைக்கிறது உன் கவிதை ஒரு மீள்கவிதை...

அன்புடன்
ராகவன்

முரளிகுமார் பத்மநாபன் said...

@நிகழ்காலத்தில்
சிவாண்ணா தேங்க்ஸ்ணா, நனைந்த பிறகுதான் எழுதுனேன். என்னமோ தெரியலைண்ணா, வரவர டபுள் மீனிங்லயே பேசுறேன்... :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@இளங்கோ
மழை வந்துடுச்சு இளங்கோ, ஆகா இங்க நீங்க டபுள் மீனிங்ல பேசுறிங்களோ? ரைட்டு.....
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அகல்விளக்கு
ஆமா ராஜா, காதல் எல்லோருக்குமான மழை, மழை எல்லோருக்குமான காதல்.
ஆனந்தமா நனைங்க... என்ஜாய்

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஜீ
மிக்க நன்றி நண்பா!

முரளிகுமார் பத்மநாபன் said...

@கும்க்கி
ண்ணா, வாங்க. நன்றி.:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ப்ரஜ்னா
தேங்க்ஸ் ஸ்ரீ.
இன்னொரு முறை சொல்றேன்..
காதல் எல்லோருக்குமான மழை, மழை எல்லோருக்குமான காதல்.
பீ ஹேப்பீ... :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராகவன்
//மழையில் நனைந்தபடி ஒரு ஆரஞ்சு கலர் தாவணியும், மயில்கழுத்து கலர் பாவாடையில் வந்தவள் மழை கொளுத்திய சுடராய் இருக்கிறாள்... ஆகுதியில் மழை எண்ணெய்யென விழ பற்றி எரிகிறது பிரபஞ்சம் முழுக்கவும்... நான் சுடருக்குள் ஒளிந்து கொள்கிறேன்...//
குரு... இது செம்மத்தியா இருக்கு.

//கொல்ற முரளி... என்னுடைய பதின் நினைவுகளை திரும்ப திரும்ப கொண்டு வருகிறது சிலசமயம் அங்கேயே தங்க வைக்கிறது உன் கவிதை ஒரு மீள்கவிதை...//

அப்பாடா, நீங்கதான் சரியா புரிஞ்சிடிங்க, இன்னும் ஏண்டா கல்யாணம் பண்ணாம இருக்கேன்னு கேக்குறவங்களுக்கு எல்லாம் இதுதான் பதில்.. பத்து பதிமூணு வயசிலயெல்லாம் கல்யாணம் பண்ணாம், அது பால்ய விவாகம், மிகப்பெரிய தவறு. :-))

ஜோக்ஸ் அப்பார்ட்... பெரிய அங்கீகாரம் கிடைத்த மாதிரி இருக்குண்ணா, உங்க கமெண்ட். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் முரளின்னு கேட்டுக்கிட்டிருக்கேன். அயாம் ஹேப்பீ.... :-))

வெறும்பய said...

எழுத்துக்களாய் பெய்த மழை மயக்குகிறது...

ஷஹி said...

mmmmmmmmmm....very romantic...!

வெண் புரவி said...

போன வாரத்தில் மழை பெய்யும்போதே நினைத்தேன்...

மழையில் நனைவதைவிட
இந்த மாதிரி நல்ல கவிதை மழையில் நனைவதும் சுகம்தான்... ஏன்னா சளி பிடிக்காது பாருங்க...

முரளிகுமார் பத்மநாபன் said...

@வெறும்பய
நன்றி நண்பா! :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஷஹி
க்கா, கவிதை உபயம் மழை :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@வெண்புரவி
இந்த வாரத்துல ரெண்டு நாள் மழை, என்ன செய்ய்ப்போறிங்க? :-)
செத்திங்க எல்லாரும்...... ஹிஹ்ஹிஹிஹிஹிஹிஹி

Ravikumar Tirupur said...

உள்ளம் நனைத்த மழை!