க்ளேமெண்ட் மேத்யூவும், ராம் சங்கர் நிக்கும்ப்த்தும்

 மழலைக் கனவின் ஆசிரியர்கள் : க்ளேமெண்ட் மேத்யூவும், ராம் சங்கர் நிக்கும்ப்த்தும் 

ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பே டவுன்லோட் செய்தும் பார்க்காமல் வைத்திருந்தேன் மேலும் அதிகம் கவனம் இல்லை இந்தப்படத்தில்.  ரொம்ப சிம்பிளா நம்ம உலக சினிமா பாஸ் சொல்லியிருந்தார், “இந்தப்படம் ஒரே ஸ்ட்ரோக்கில் உங்களை வீழ்த்தி விடும்.....ஆட்டோகிராப் மாதிரி இப்படி. இந்த ஆட்டோகிராப் மாதிரிங்கிற விட்டுறலாம். சரி பாஸ் வேற சொல்லியிருக்கார் பார்க்கலாம்ன்னு பார்த்தேன். உண்மைதான். ஒரு ஒண்ணரை மணிநேர திரைப்படம் என்ன செய்துவிட முடியும், என்று கேட்பவர்களுக்கான படம். என்னென்னவோ செய்தது. விபரம் தெரிந்த பள்ளி பருவத்திற்கு சென்று மீள்கிறது நினைவுகள். சசி, கல்யாணி டீச்சர், டிராயிங் மாஸ்டர் கோவிந்து, மாலா டீச்சர், கதிர்வேல் அய்யா, தர்மலிங்கம் மாஸ்டர் இப்படி ஆசிரியர்களும் சக வகுப்புத் தோழர்களின் முகம் முதலாய் நினைவில் வருகிறது. பீப்பீப்பூமரத்தில் மீண்டும் பூக்கள் பூக்கத்தொடங்கியிருக்கிறது.


 மிகப்பெரிய இசை நிகழ்ச்சிக்கு முன்பாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் ஒரு மேதையோடு ஆரம்பிக்கிறது படம். அவரது அம்மாவின் மரணம் குறித்து, பிரான்ஸிலிருந்து ஒரு போன் வருகிறது. நிகழ்ச்சி முடிந்து ஊருக்கு வருகிறார். அம்மாவின் சடங்குகள் முடிந்து வீட்டில் ஓய்வில் இருக்கும் அவரை, அவரோடு பள்ளியில் படித்த சக மாணவன் சந்திக்கிறான். கிட்டதட்ட 50 வருடங்கள் கழித்து. இதை அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு பொக்கிஷமாக வைத்திருந்தார். அவருக்குப் பிறகு இதை உனக்காக நான் இதை பாதுகாத்துக்கொண்டிருக்கிறேன் என்று இருவருக்கும் பொதுவான ஒரு ஆசிரியரின் நாட்குறிப்பைக் கொடுக்கிறார். அவர்தான் க்ளெமண்ட் மேத்யூ. பள்ளியின் நுழைவாயிலோடு ஆரம்பிக்கிறது அவரது நாட்குறிப்பு.

ஏழை மாணவர்களுக்காக சில பெரும்பணக்காரர்களால் நடத்தப்படும், கிட்டதட்ட சிறுவர் ஜெயில் மாதிரி ஒரு பள்ளி அது. மிகவும் கடுமையான தலைமை ஆசிரியர், எந்த தவறுக்கும் தகுந்த தண்டனை என்ற மேம்பட்ட குறிக்கோளோடு மாணவர்களை அடக்கி வைத்திருக்கிறார். அந்த பள்ளிக்கு ஆசிரியராக வருகிறார், மேத்யூ. முதல் நாளிலேயே, அவரது கண் முன்பாக சக ஆசிரியர் ஒருவரின் கண்ணில் பலமான அடி விழுகிறது. அவருக்கு முன்பாக அந்த பணியில் இருந்த ஆசிரியர் தனது கையில் ஏற்பட்ட காயத்தின் தழும்புகளை காட்டுகிறார். மாணவர்களின் அட்டகாசங்களை ஒருவர் மாறி ஒருவராக அடுக்குகின்றனர். மேத்யூ அதற்கான தண்டனைகளை கவனிக்கிறார். இப்படியான தண்டனைகள் அவர்களை எந்த விதத்திலும் திருத்தாதே, மேலும் அவர்களை இன்னுமல்லவா கெடுத்துவிடும் என தலைமை ஆசிரியரிடம் அது குறித்து பேசுகிறார். அவர், நீ இந்த இடத்திற்கு புதிது, விரைவிலேயே அவர்கள் நடத்தும் பாடங்கள் உனக்கு புரிய ஆரம்பிக்கும், அப்பொழுது, எனது Action- Reaction விதி உனக்கு பிடிபட ஆரம்பிக்கும், என்கிறார்.

தனது முதல் வகுப்பிலேயே மாணவர்களின் அட்டகாசங்களுக்கு ஆளாகிறார். இருப்பினும் தனது அன்பால் மாணவர்களை மெல்ல திசைதிருப்ப முயற்சிக்கிறார். மெல்ல மாணவர்களைப் படிக்கிறார், அனைவருக்கும் பொதுவான ஒரு விசயத்தை மெல்ல மெல்ல ஒவ்வொரு மாணவர்களின் உள்ளத்திலும் பதியச் செய்கிறார். இசை, கோரஸ் எனும் குழுப்பாடலை பாடச் செய்கிறார். அதிலும் தொடர்ந்து தோல்விகளால் அவதிப்படும், சகமாணவர்களால் கிண்டல் செய்யப்படும் பிர்ரே மொரானே என்னும் மாணவனின் அசாத்தியமான குரலை, பிரத்யேகப்படுத்துகிறார். இந்த கோரஸ் பாடல். மெல்ல பள்ளியில் அமைதியைத் தருகிறது. மாணவர்கள் ஆசிரியர்கள் இடையே ஒரு மெல்லிய புரிதலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆசிரியரின் கண் காயத்துக்கு அதற்கு காரணமான மாணவனையே அவருக்கு உதவியாக அனுப்புவதும், அந்த ஆசிரியர் படும் சிரமம், அந்த மாணவனை மெல்ல திருத்துவதும, இப்படியாக மாணவர்கள் ஆசிரியர்களை அணுகும் முறையிலேயே மாற்றம் கிடைக்கிறது. எல்லாம் சரியாக செல்லும் பொழுது ஒரு தவறுக்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுகிறார், மேத்யூ. அவரால் உருவாக்கப்பட்ட அந்த சிறுவன்தான் பின்னாளில் மிகப்பெரிய இசைமேதையாக ஊருக்குத் திரும்பிவரும், மொரானே.

கண்கள் கலங்கி பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்கிறார், மொரானே. அதிலும் நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள், “நல்ல மாணவர்களை உருவாக்கி விட்டேன் என்கிற திருப்தியோடு இந்த பள்ளியை விட்டு வெளியேறுகிறேன், மீண்டும் தோல்வியடைந்த ஒரு இசைக்கலைஞனாக, வேலையற்ற ஆசிரியனாக என முடிகிறது. இப்போ அவர் என்ன ஆனார்? என்கிற கேள்விக்கு அழகான சந்தோசமாக ஒரு பதிலை கிளைமாக்ஸாக்கியிருப்பார்கள், படம் பார்க்காதவர்களுக்கான ஒரு சின்ன சஸ்பென்ஸ், இது.

மொரானேவும் இஷானும், மேத்யூவும் நிக்கும்த்தும்.


சமீபத்தில் பார்த்துப் பிடித்திருந்தும் ஏற்றுக்கொள்ள முடியாத படம் தெய்வத்திருமகள். காரணம் அந்த காப்பி ஃபார்மட். அந்த அருமையான கருவை எடுத்துக்கொண்டு, சீன் மேக்கிங் எனப்படும் திரைக்கதையை நமக்கு ஏற்றாற்போல எழுதி இயக்குவது, ஒரு கலை. அதை வெகு அழகாக சில படங்களில் உணர முடியும். எனக்கு கோரஸ் படம் பார்த்தவுடன் மனதிற்கு தோன்றிய விஷயம், அமீர்கான் இயக்கத்தில் வெளிவந்த தாரே ஜமீன் பர் படம்தான். இந்த இரு படங்களுக்கும் ஒரே ஒற்றுமை வாழ்வில் தோல்விகளை மட்டுமே பெற்று வரும் சிறுவனுக்கு வெற்றியைப் பரிசளிக்கும் ஆசிரியரின் கதை எனும் படத்தின் மையக்கரு மட்டும்தான். இந்திய ரசிகர்களுக்கு ஏற்றபடியான சில மசாலாக்கள் இங்கும், பார்வையாளனை மட்டம் தட்டி அவனுக்கு புரியவேண்டும் என்கிற கட்டாயத்தின் பேரில் ஜஸ்டிஃபிகேஷன் செய்யாதிருத்தலுமென அங்கும் சூழலுக்கேற்றபடி இரு வேறு உலகங்களுக்கான பின்புலம் பின்னப்பட்டிருக்கும். முழுப்படத்தையும் பார்த்தால்தான் என்றில்லை, இன்னமும் தாரே ஜமீன் பர் படத்தில் இஷான் தனது ஓவியத்தை பார்க்கும்போதும், பரிசு வாங்கியபின்னர் தனது ஆசிரியரைக் கட்டிக்கொள்ளும் காட்சியை மட்டும் எப்பொழுது பார்த்தாலும் சரி, கண் கலங்காமல் இருந்ததில்லை.
     
கோரஸ், இன்னும் ஸ்பெசல். கண் கலங்க வேண்டிய அவசியம் கூட இல்லை, மிகவும் மகிழ்ச்சியாக அதை ஏற்றுக்கொள்ள முடிந்த்து. ஹேப்பி எண்டிங் என்றூ சொல்வார்களே, அது போல பக்கா ஹேப்பி எண்டிங் படம். அவசியம் குழந்தை பெற்றவர்கள், இந்த இரண்டு படங்களையும் பார்த்து வையுங்கள்.

மிகவும் சாதாரணமாக கதைதான், ஆனால் அருமையான திரைக்கதையும், ரம்மியமான இசையும், மிகையற்ற நடிப்புதான் இந்தப்படத்தை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்குகிறது. ஒவ்வொரு காட்சியும் சில சில விஷயங்களை நியாபகப்படுத்துகிறது. சதா திருடிக்கொண்டேயிருக்கும் ஒரு மாணவன், ஆசியர்களுக்கு தொடர்ச்சியாக தொந்தரவு செய்து கொண்டிருக்கும் மாணவன், எப்பொழுதும் தவறுகளையும் தண்டனைகளையும் தொடர்ந்து பெற்றுவரும் மாணவன் இப்படி பள்ளி முழுவதும் வித்தியாசமான மாணவர்கள் என இப்படியாக ஒவ்வொரு மாணவர்களையும் அறிமுகப்படுத்தியவிதமும், மெரானேவின் அம்மாவிடம் காதல் வயப்படும், மேத்யூவும், அதில் அவரது ஏமாற்றமும், ஒரு மென்சோகக் கவிதை. மொரானேவிற்கும் மேத்யூவிற்கும் இடையே மெல்ல வரும் விரிசலும் அதை அவர் கையாளும் விதமும் என படம் நெடுக சின்னச்சின்ன கவிதைகளும், ஹைக்கூக்களுமாய் கொட்டிக்கிடக்கிறது.

குறிப்பாக பாப்பினட். முதல் நாளிலேயே, பாப்பினட் எனும் சிறுவனை சந்திக்கிறார். நாசி படையினரால் தன் பெற்றோரை இழந்த மாணவனை, உனது பெற்றோர்கள் அடுத்தவாரம் வந்துவிடுவார்கள என்று சொல்லியே அங்கே தங்க வைத்திருக்கின்றனர். அவனும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பள்ளி நுழைவாயிலில் காத்திருக்கிறான். படத்தின் இறுதிக்காட்சியில் ஒருவழியாக பாப்பினட்டின் கனவு நிறைவேறியது, ஆம் அவன் பள்ளியைவிட்டு வெளியேறிய நாள் சனிக்கிழமை, எனும் பொழுது என்னால் தனிச்சையாக சிரிக்க முடிந்தது.


ஒரு காட்சியில் உங்களுக்கு குழந்தைகள்? என்று கேட்கும் பெண்ணிடம் மேத்யூ, எனக்கு அறுபது குழந்தைகள் என்பார், அது எப்படி என அவளும் சரி, படம் பார்க்கு நாமும் சரி கேட்கப்போவதில்லை, ஏனெனில் அதை நாம் உணரத் தொடங்கியிருப்போம். இன்னொன்று இந்த விடியோவைப் பார்க்காமேலேயே மேலே உள்ள க்ரூப் போட்டோவில் யார் பாப்பினட், யார் மேத்யூ என்றெல்லாம் கண்டு பிடித்துவிட்டீர்களேயானால், நான் கொஞ்சமாவது சரியாத்தான் எக்போஸ் பண்ணியிருக்கேன்னு திருப்தியாயிடுவேன்.

25 கருத்துரைகள்:

ஷஹி said...

அழகா எழுதியிருக்கீங்க முரளி..இந்தக் கருவிலேயே எத்தனையோ கதைகளும் படங்களும் பாத்திருக்கோம்..ஆனாலும் தீராது..இப்புடியான மாணவர்களை திருத்தி மிகப் பெரிய மாற்றங்களை அவர்களிடமும் சமூகத்திலும் கொண்டு வரும் மனித,ஆசிரியர்கள் மத்தியில் பிரமாதமா வர வேண்டிய, வரக் கூடிய பிள்ளைகளை நாசம் பண்ணினவங்கள பாத்திருக்கீங்களா? என் வரையில, ஒரு +2 பொண்ணுக்கு, பரிட்ச முடிஞ்ச உடன கல்யாணம் பண்ணி வைக்க அவங்க பெற்றோர் முடிவு பண்ற அளவுக்கு படுத்தி வச்ச ஆசிரியைய தெரியும்..."மனிதம்" - இது தான் ஆசிரியர் பணிய தேர்வு செய்யிறவங்களுக்கான அடிப்படை தகுதி.

Ravikumar Tirupur said...

விமர்சனம் நன்று!
இதுபோல ஒருநல்ல ஆசிரியனுக்கும் மாணவர்களுக்குமான படங்கள் தமிழில் வந்திருக்கிறதா என்பது சந்தேகம்.
இதுபோலவே 'ராபின் வில்லியம்ஸ்' நடித்திருந்த "டெட் போயட் சொசைட்டி" படமும் ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான டச்,சிங்கான படம்.

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே!இந்தப்பதிவைத்தான் எனக்கு கிடைத்த வெகுமதியாக நினைக்கிறேன்.
என்னை திருட்டு டிவிடி விற்க்கும் பிராடு என்று ஒரு நபர் திட்டினார்.
அந்தக்காயத்துக்கு மிகச்சரியான மருந்திட்டுள்ளீர்கள்.
நன்றி.

சுசி said...

அழகான விமர்சனம்.

கோபிநாத் said...

தல வழக்கமான அருமையான பகிர்வு !

கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன்..நான் சொல்ல நினைத்த படத்தை பற்றி நண்பர் ரவிக்குமார் சொல்லியிருக்கிறார். கண்டிக்காக நேரம் கிடைக்கும் போது பாருங்கள் ;)

http://www.imdb.com/title/tt0097165/

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஷஹி
அக்கா, வெரி சாரி :-(
நீங்க ஏன் ஒரு டீச்சரா ஆகக்கூடாது :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ரவிக்குமார்
நன்றி ரவி. எல்லாம் கொடுமை, டெட்பொயட் சொடைட்டி எப்பவோ டவுன்லோடிட்டேன், ஆனா இன்னும் பார்க்கலை, எப்பவாவது எங்கயாவது நல்ல படம்ன்னு யாரும் சொன்னா, வாங்கியோ டவுன்லோடியோ வச்சிப்பேன். பொறுமையா பார்க்கலாம்ன்னு. அப்படி மிஸ்ஸான படங்கள் மட்டும் 50க்கு மேல தேரும். :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@உலகசினிமா ரசிகன்
விடுங்க பாஸ், எவ்ளோ அருமையான படங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறீர்கள்... :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுசி
வணக்கம் மேடம், நல்ல படமும்கூட, அவசியம் பாருங்க... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபி
தல வணக்கம், பாருங்க பாருங்க... ரவிக்கு சொன்ன பதிலை படிச்சிக்கோங்க.. :-)

shri Prajna said...

இந்த மாதிரி இயல்பான சிம்பிளான படங்கள் இங்கே வராதா என்று ஏக்கம் வருகிறது..வழக்கம் போல் அருமையாக சொல்லி இருகீங்க..thank u..(படமும் கொடுத்திருக்கீங்க இனி கண்டிப்பாய் பார்க்கத் தோன்றும்)

KSGOA said...

நிறைவான விமர்சனம்.விஜய் பிரகாஷ் பற்றிய உங்கள் பதிவு படித்த பின்பே
“கள்ளிக்காட்டில்” பாடலை கவனித்து
கேட்டேன்.ரசித்தேன்.
அறிமுகபடுத்தியதற்கு நன்றி.

sugirtha said...

Murali - finally :-) By the way, excellent intro as always...

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஸ்ரீ
ம்க்கும் இன்னும் பார்க்கலையா நீங்க? சரி அதுவும் நல்லதுதான். படிச்சிட்டு பார்ப்பதுதான் என் டேஸ்ட். மேத்யூவைக் கண்டுபிடித்ததற்கு ஸ்பெசல் நன்றிஸ்... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@KSGOA
நன்றி நண்பா ! அவசியம் படத்தையும் பாருங்க....
விஜய் பிரகாஷ் பாடலை தொடர்ந்து கேளுங்கள் இன்னும் நிறைய இருக்கு...

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுகிர்தா
ஆசிரியர் தினத்தின் அன்று போஸ்ட் செய்யலாமென வைத்திருந்தேன். ஆனா வேற எதுவும் எழுதலை இந்தவாரம் அதான் :-)
இன்னொன்னு கூட இருக்கு ஜப்பானிஸ் ஒய்ப். இப்பவே சொல்லிடறேன் படத்தை பாத்து வச்சிக்கோங்க, அப்புறம் பதிவு போட்டதும் படம் பாத்துட்டுதான் படிப்பேன்னு அடம் பிடிக்க கூடாது....

வெண் புரவி said...

விமர்சனம் அருமை முரளி. படத்தைப் பார்க்கணும் போல இருக்கு.... கிடைக்குமா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@வெண்புரவி
அருண் சார், என்ன கேள்வி இது? எப்போ வறீங்கன்னு சொல்லுங்க, சிடி தரேன்... :-))

butterfly Surya said...

அருமை முரளி. கோரஸ் ,TZP இரண்டுமே என்னை கவர்ந்த படங்கள். Keep rocking. Cheers.

அகல்விளக்கு said...

அருமை நண்பா...

நான் செய்த கெஸ் சரியாக இருப்பது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது...

உண்மையில் உங்கள் எழுத்து அவர்கள் குணத்தையும், உருவத்தையும் வைத்து மிகச்சாதாரணமாகவே கண்டுபிடிக்க வைத்துவிட்டது... :)

மாலதி said...

அழகா எழுதியிருக்கீங்க....

முரளிகுமார் பத்மநாபன் said...

@Butterfly Surya
தேங்க்ஸ்ண்ணா, நீங்க சொன்ன ரெண்டும் டவுன்லோடியாச்சு, :-) நெக்ஸ்ட்......

முரளிகுமார் பத்மநாபன் said...

@அகல்விளக்கு
//நான் செய்த கெஸ் சரியாக இருப்பது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது//
தேங்க்ஸ் நண்பா! மூணு பேர் இதோட கண்டுபுடிச்சதா சொல்லியிருக்கிங்க... :-)) ஜாலி

முரளிகுமார் பத்மநாபன் said...

@மாலதி
நன்றி மாலதி மேடம்.. :-)

கார்த்திக் said...

மாப்பி ஸ்டேன்லி கா டப்பா பாத்தியா
தாரே ஜமீன் பர் படத்தோட மொத டைரக்டர் இயக்கிய படம்,அதுவும் செமையா இருக்கு,ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாதிரி காட்டுவாங்க(இதுலையும் வழக்கம் போல தமிழனா தயிர் சோறுன்னு காட்டிட்டானுங்க :-) )

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.