வலியின் குரல் -ராகத் பதே அலி கான்


என்னுடைய பதிவுகளில் ஆங்காங்கே, இசை பற்றிய பதிவுகளில் ராகத் பதே அலிகான் பாடல்களைக் குறிப்பிட்டிருப்பேன். ஆனால், இவரைப் பற்றி  தனியாக ஒரு பதிவு எழுதவேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். திடீரென இப்பொழுது எழுதக்காரணம், சூப்பர் சிங்கர் – சந்தோஷ்.

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தைத் தழுவி அமைக்கப்பட்ட திரைக்கதை, மேலும் சைய்ஃபின் பிரம்மாண்டமான நடிப்பைப் பார்க்கவும் நீ அவசியம் இந்தப்படத்தைப் பார், மேலும் இது போஸ்பூரி ஹிந்திப்படம், புரியவில்லை என்றால் என்னிடம் கேள்என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு என் தோழி ஒருத்தி சொல்ல அறிமுகமான படம், ஓம்காரா.  அப்பொழுது இந்த்த் திரைப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன், சைய்ஃபை விட அஜய் தேவ்கன் மற்றும் விவேக் ஓப்ராயின் நடிப்பும் பிடித்திருந்தது. சிறுகதைகளும் நாவல்களும், நாடகங்களும் திரைவடிவம் பெறுவதை ஆச்சர்யமாக ரசித்துப்பார்த்த படம். ஓம்காரா பற்றி தனியாக அவசியம் ஒரு பதிவெழுத வேண்டும், இன்னொரு நாள்.

சமீபத்தில் விஜய் டீவியில் சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டிருந்த போது, சந்தோஷ் பாடிய பாடல் என்னவோ செயதது. அந்தப் பாடலில் ஒரு வலி இருப்பதை உணர முடிந்தது. எங்கேயோ கேட்டிருக்கிறேனே இந்தக்கதறலை? என்று தேடிக்கொண்டிருந்தேன். ஏற்கனவே சந்தோஷ் தும்சே மன்கி லகன் பாடலை அட்சர சுத்தமாக பாடிக்கேட்டிருக்கிறேன். அது ராகத் பதே அலிகானின் தனி ஆல்பங்களில் வரும் ஒரு பாடல். அந்தப்பாடலைப் போன்ற ஒரு தொனி இதில் இருப்பதால் இதுவும் ராகத்தின் பாடலாகவே இருக்கும் என்று நினைத்து தேடிக்கொண்டிருந்தேன். கடைசியில் பதிவர் சுரேஷ்கண்ணன் பஸ்ஸில் இந்தப்பாடலை ஷேர் செய்திருந்த்திலிருந்தே கண்டுபிடிக்க முடிந்தது. 
அந்தப்பாடல் “நேனா டகுலேங்கேபடம் ஓம்காரா. பாடியது ராகத் பதே அலிகான். ராகத்தின் பாடல்களை நிறைய தொகுத்து வைத்திருக்கிறேன், திரைப்பாடல்கள், ஆல்பங்கள் மற்றும் கவ்வாலி ஆல்பங்கள் என. என்னுடைய மொத்த சேமிப்பிலும் இந்தப்பாடல் இல்லாமல் போனது என் துரதிஸ்டம். வெகு நாட்களாக ராகத்தின் பாடல்களை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இனிமேல் அதை தாமதிக்க முடியாது என்பதால் இதோ,ராகத் பதே அலிகான், உங்களுக்காக.....

 ராகத் பதே அலிகான், பண்டிட் நஸ்ரத் பதே அலிகானின் மறுமகன். அவரிடம் இசை பயின்றவர். குருவை மிஞ்சிய சிஷ்யர்களில் ஒருவர். பாகிஸ்தானைச் சேர்ந்த இசைக்கலைஞராக இருந்தாலும், தற்கால இந்தி சினிமாவின் தவிர்க்கமுடியாத பின்னணிப்பாடகர். பேதாஸ் பாடல்களுக்கும், மென்சோகப் பாடல்களுக்கும் ஏற்ற குரல், இவருடையது. கவ்வாலி மற்றும் சூஃபீ இசையில் பாடுபவர்களுக்கே உரித்தான உச்சஸ்தாயில் வருகிற சங்கதிகளும் கமஹங்களும் அத்துப்படி. குரலை இவ்வளவு உயர்த்திபிடித்திருக்கும் பொழுது இப்படி நெளிவு சுழிவுகளைக் கொடுப்பது என்பது வரம் வாங்கிவந்தவர்களேலே மட்டும்தான் முடியும். இவர் அந்த வகையறா.....

முதலில் “நேனா டகுலேங்கே”. இந்தப்பாடலில் ஒரு சொல்ல முடியாத துயரம் இருக்கும். ஆரோமலே பாடலில் இருப்பதுபோல உடைந்த இதயத்தின் கதறலாய் இல்லாமல், ஏமாற்றத்தின் உச்சமாக, சுயபச்சாதாபத்தை வெளிப்படுத்தும் அல்லது இரண்டையும் கலந்து தருவதுபோல ஒரு பிரதிபளிப்பு. இதை குரலில் எப்படிக்கொண்டு வருவது. அவசியம் இந்தப்பாடலைக் கேளுங்கள். இன்னும் இதன் பொருள் புரிந்து கேட்கும்பொழுது அதை எளிதாக உணர முடியும். கிட்டதட்ட கீழே இருக்கும்படியான பொருள்தரும்படியாக இருக்கும் என்னுடைய மொழிபெயர்ப்பு தவறாகவும் இருக்கலாம்.

மனமே! எதற்காகவும் கண்களை மட்டும் நம்பிடாதே,
ஏனெனில் விழித்திருக்கும் பொழுதும்
கனவு போல காட்சிகள் விரிவது
கண்களால் மட்டுமே சாத்தியம்.
தூக்கத்தைக் கெடுத்து, மனதையும் கெடுக்கிற,
நண்பனுக்கும் வழிப்போக்கனுக்குமான பேதம் காட்டாத,
கண்கள் சொல்வதைக் கேட்டிறாதே!
ஏனெனில் கண்களின் வேலை ஏமாற்றுவதுதான்

இந்தப்பாடலை சூப்பர்சிங்கரில் சந்தோஷ் பாடும் பொழுது, கிட்டதட்ட அந்த பாவத்தைக் குரலில் கொண்டுவந்திருப்பார், குறிப்பாக அந்தப்பாடலை பாடி முடித்தபின்னர், உன்னி கிருஷ்ணன் அந்த குறிப்பிட்ட இட்த்தை சொல்லி அங்கே ஒரு கதறல் இருக்குமே அதை மறுபடியும் பாடுங்கள் என்று கேட்க, இசைக்கோர்ப்பின்றி அவ்வளவு அழகாக அதை மறுபடியும் பாடிய சந்தோஷிற்கு என் வாழ்த்துக்கள். தும்சே மன்கி லகன், நேனா இரு பாடல்களுக்கும் இரண்டு ஓட்டு சந்தோஷிற்கு போட்டிருக்கிறேன். இது சந்தோஷின் வெர்ஷன்  இந்த வீடியோவின் 5வது நிமிடத்திலிருந்து 5.20 நிமிடங்கள் வரைப் பாருங்கள், உங்களுக்கு சந்தோஷைப் பிடிக்கும், சூஃபி இசைப்பிடிக்கும், ராகத் பதே அலி கானைப் பிடிக்கும்.  இது ஒரிஜினல் ராகத்தின்வெர்ஷன் 
 
அடுத்ததாக ராகத் பாடிய பாடல்களில் எப்பொழுது என் விருப்பப் பட்டியலில் இருக்கும் இன்னுமொரு பாடல், அஜா நச்லே என்ற திரைப்படதில் வரும் ஒரே பியா..... நீண்ட நாட்களுக்குப்பிறகு பாலிவுட் டான்ஸ் குயின் மாதுரி தீக்‌ஷித் நடித்து வெளிவந்த திரைப்படம். இதில் முழுப்பாடல் கூட வேண்டாம். ஒரே பியா....... ஹாய் என்று சினுங்களோடு முடிக்கும் முதல் இரண்டு வரிகள் போதும் இந்தபாடலை ரசிப்பதற்கு. பார்த்திபன் இளையராஜாவை சொல்வது போல எனக்கு இந்தப்பாடலில் அந்த ஹாயைத்தாண்டி வர முடிந்ததே இல்லை. இதை மிகச்சரியாக இமிடேட் செய்து இதுவரை எந்தமேடை நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை. பாடலில் ராகத்தின் குரலோடு மாதுரியையும் அவரது நடனத்தையும் ரசிக்க விரும்பினால் இந்த வீடியோவையும், இசைப்பிரியர்கள் இந்த வீடியோவையும் பாருங்கள். கீழே இதே பாடலின் அன்ப்ளக்டு வெர்ஷன் ஒன்றும் கொடுத்திருக்கிறேன், பாடல் ஆரம்பிக்கும் முன்பாக மென்மையாக தொடங்கும் க்ளாரினெட்டின் இசை பாடல் முழுவதும் சன்னமாக தொடரும், நல்ல ஹெட்போனில் கேட்பவர்களுக்கு நான் உத்திரவாதம்.

ஹாலிவுட்டின் மேட்மேக்ஸ் மெல் கிப்ஷனின் அபோகேலிப்டோ திரைப்படத்தின் பின்னணியில் ராகத்தின் சூஃபி இசைக்கோர்ப்பும் சேர்ந்திருக்கிறது. கிட்டதட்ட பெரிய வாத்திய இசை சேர்ப்புகள் இன்றி புல்லாங்குழலோடு இணைந்து உச்சஸ்தாயில் செய்யும் ஒரு பதினைந்து நிமிட ஆலாப். படத்தில் பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். இந்த இசைக்கான ஒலிப்பதிவு முடிந்து வரும் ராகத்திடம் இயக்குனர் மெல்கிப்ஷன், இவர் ஒரு ஒரு தனி மனித ஆர்கெஸ்ட்ரா என்று பாராட்டியிருக்கிறார். ஏனெனில் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒவ்வொரு திரைப்பத்திற்கும் தனியாக சவுண்ட்ட் ட்ராக் வெளியிடுவார்கள். மிகப்பெரிய ஆர்க்கஸ்ட்ரேஷன், சிம்பொனி, ஓபரா போன்ற கூட்டிசையே பிரதானமாக இருக்கும் ஹாலிவுட் படங்களில், இனப்பிரச்சனையை பிரதானமாக கொண்ட இந்தப்படத்தில் வலியைக் குறிப்பிட்டு வெளிப்படுத்த வேண்டிய இசை தேவைப்பட்டது, எனவே ராகத்தின் குரல் எங்களுக்கு தேவையானதாக இருந்தது என்று குறிப்பிடுகிறார், இந்தப்படத்தின் இசையமைப்பாளரான ஜேம்ஸ் ஹார்னர். இவர் டைட்டானிக் மற்றும் அவதார் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதே செய்தி குறித்த மேலும் வீடியோக்கள்

என்னுடைய ஃபேவரைட் என்கிற பட்டியலில் அடங்கும் ராஹத்தின் பாடல்களுக்கு இங்கே சுட்டி கொடுத்திருக்கிறேன்.  

ஜியா தடக், தடக்கு... Kalyug படத்திலிருந்து
பஹாரா பஹாரா... I HATE LUV STORIES படத்திலிருந்து
ஆஸ் பாஸ் ஹே ஹுதா...  anjaanaa anjaani படத்திலிருந்து
ஜகு சூனா சூனா ......  om santhi om படத்திலிருந்து
ஆஜ் தின்.... Love aaj kal படத்திலிருந்து
மே ஜஹான் ரஹோன்..... namastey londan படத்திலிருந்து
தும் ஜோ ஆயே  one upon a time in Mumbai படத்திலிருந்து
சஜுனா..... MY NAME IS KHAN படத்திலிருந்து

      மேலும் இன்.காமிலும் சாங்ஸ்.பிகேவிலும் இவரது மொத்தப் பாடல்களுக்கான கலெக்‌ஷனும் இருக்கிறது. அத்தனையையும் தரவிறக்கிக் கொள்ளுங்கள். இசையோடு கூடிய இனிய இரவிற்கு, இன்னுமொரு கலைஞன். 
 
இசையில் தொடங்குதம்மா.....

18 கருத்துரைகள்:

சேட்டைக்காரன் said...

இத்தனை தகவல்களுடனும் இவ்வளவு சுவாரசியமாக ஒரு இடுகையில் பகிர்ந்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பிரமாதம்!

KSGOA said...

சந்தோஷ் பாடிய “நேனா டகுலேங்கே”
பாடல் மனதிற்கு ரொம்ப பிடித்து,என்ன
படம் ,யார் பாடியது என்று சிலரை கேட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.நீங்கள்
குறிப்பிட்ட மற்ற பாடல்களில் “ஓம் சாந்தி ஓம்” பாடல் மட்டும் கேட்டிருக்கிறேன்.எனக்கும் பிடிக்கும்.மீண்டும் நன்றி.

Ravikumar Tirupur said...

பிரமாதமான பதிவு.
எவ்வளவோ வேலைகளுக்கிடையேயும் இந்த மகாசிந்தனை எப்படி தோன்றியது.
ஹிந்திபாடல்களை பொருத்தவரை நானொரு தற்க்குறி!
நீங்கள் எழுதியுள்ள இந்த பதிவை நான் படிப்பது "குருட்டுப்பூனை விட்டத்தைப்பார்த்ததை போல" இருக்கிறது.
ஹிந்திபாடல்களை கேட்க
இந்த பதிவை தொடக்கமாகவும் உங்களை என் ஹிந்தி!!! ஆசானாகவும் ஏற்றுக்கொள்கிறேன்

அன்புடன் அருணா said...

அப்பாடா....ஒரு பதிவிற்காக எவ்வ்ளோ உழைப்பு....அவ்வ்ளவும் ஒரு இடத்தில் சேகரிக்க முடியாத ஒரு கலவையை ஒரே இடத்தில் தந்தமைக்கு பூங்கொத்துக்கள்!

gayathri said...

excellent post Murali. இதற்கு முன்பே Atif Aslam பற்றி ரொம்ப நல்லா எழுதி
இருந்திங்க, இப்ப Rahat fateh ali khan, உங்க ரசனை
class, நீங்க சொன்னா எல்லா பாட்டும் என் favourite.

நீங்க omkara movie பத்தியும் எழுதணும் , எனக்கும்
லங்கடா தியாகிய ( saif ) விட Ajay Devgan நடிப்பு
தான் ரொம்ப பிடிச்சது.

அப்பாதுரை said...

கேட்டதில்லை. அறிமுகத்துக்கு நன்றி.

அப்பாதுரை said...

பதிவில் உங்கள் உழைப்பு நன்றாகத் தெரிகிறது. பாராட்டுக்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@சேட்டைக்காரன்
மிக்க நன்றி நண்பா! இசையை பகிர்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@KSGOA
அவசியம் ஒரே பியாவையும், மனு பாவராவையும் இல்லையில்லை எல்லாத்தையும் கேளுங்க... ஐ லவ் ராஹத்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@KSGOA
அவசியம் ஒரே பியாவையும், மனு பாவராவையும் இல்லையில்லை எல்லாத்தையும் கேளுங்க... ஐ லவ் ராஹத்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ரவிகுமார்
அப்படியெல்லாம் இல்ல ரவி, நானும் குருட்டுப்பூனைதான், அதனால் இருட்டை ரசிக்கப் பழகிக்கொண்டேன் அவ்வளவுதான்.

நல்ல இசையைக் கேட்கும் ஆர்வம் இருந்தால் போதும். இது தன்னால் நடக்கும்....

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்புடன் அருணா
ரொம்ப நாள் கழிச்சி பூங்கொத்து வாங்கியிருக்கேன்னு நினைக்கிறேன் :-)
தேங்க்ஸ் மேம்.
அவ்சியம் பாடலகளைக் கேளுங்கள்

முரளிகுமார் பத்மநாபன் said...

@காயத்ரி
மிக்க நன்றி காயத்ரி, உங்கள் பின்னூட்டம் மூலம் என் பதிவுகளை தொடர்ந்து வாசித்துவருகிறீர்கள் அல்லது அனேக பதிவுகளை வாசித்திருப்பீர்கள் என அறிகிறேன். நன்றி

//நீங்க சொன்னா எல்லா பாட்டும் என் favourite//
ஒரேபியா ஹாய் பற்றி எதாவது சொல்லுங்கள். அதை அனுபவத்தவர்களால் மட்டுமே முடியும்


//நீங்க omkara movie பத்தியும் எழுதணும் , எனக்கும் லங்கடா தியாகிய ( saif ) விட Ajay Devgan நடிப்பு தான் ரொம்ப பிடிச்சது//

அவசியம் எழுத இருக்கிறேன்

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
உண்மைதான் சார், கிட்டதட்ட ஒருவாரமாக சுட்டிகளை நல்ல ஒலியுடன் தேடிக்கொண்டிருந்தேன். மேலும் அப்போகேலிப்டோ படத்தில் வரும் அந்த பின்னணி காட்சிகளை கட் செய்து போடலாமென நினைத்திருந்தேன். என் கணினி சுமைதாங்க முடியவில்லை.
:-)

அவசியம் கேளுங்கள். உங்களால் எளிதாக ரசிக்க முடியும், இவரது இசையை.

வெண் புரவி said...

சந்தோஷ் பாடலைக் கேட்டேன். மனசை என்னவோ செய்தது...
அருமை.. அருமை...

shri Prajna said...

இசையை இவ்ளோ ஆழமாய் பார்த்தது கிடையாது.song கேட்பதுவும் நல்லாஇருந்தா goodsongnu நகர்ந்து விடும் எனக்கு இந்த பதிவு just amazing. murli..Ragath ன் குரல் என்னவோ செய்கிறது.அவருடைய voice ல் ஒவ்வொரு பாடலும் அழகாக்கப்பட்டுள்ளது.நான் கேட்டேன் எனக்கு சந்தோஷ் பிடித்தது.சூஃபி இசை பிடித்தது.ராகத் பதே அலிகானை பிடித்தது.இதையெல்லாம் கேட்டு ரசிக்க வைத்த முரளியை...thanks pa.

சு.சிவக்குமார். said...

wonderful job..great.thanks.

SELVENTHIRAN said...

நேர்த்தியான எழுத்து

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.