காதல் வரும் காலம்.....
எல்லோரையும் போல,
நாமும் தனித்தனியாய்
தெரிந்து வைத்திருந்தாலும்
சொல்லாமலேயே
வளர்த்தி வைத்திருந்தோம்
மனதிற்குள்ளாக,
நம் காதலை.
எப்பதாண்டா சொல்லப்போற?
எனும் தோழியின் கேள்விக்கு,
அவளுக்குப் பிடிக்கும் முன்
எனக்கு என்னைப் பிடிக்கனும்,
அப்ப ஒரு தைரியம் வரும்,
அப்ப சொல்வேன், என்றேன்.
உன்னையும் என்னையும்
ஒன்றாய்ப் பார்த்த
கோமதி அக்காவின்,
“யார்ரா பொண்ணு?” எனும்
கிண்டல் தொணிக்கும் கேள்விக்கு,
“எதிர் வீட்டுப் பெண்” என்றேன்.
பொதுவாக.
நான் எதிர் வீட்டுப்பெண், மட்டும்தானா?
என்பதுபோல நீ பார்க்கையில்
கொஞ்சமும்,
உச்சி வெயிலில்
வீடு திரும்பும் உன் அப்பாவிற்கு
தண்ணீர் கொடுத்துத் திரும்பும்போது
கூப்பிட்டது போல இருந்ததெனத்
திரும்பிப் பார்க்கும்பொழுது,
கூப்பிடப்போவது போல
இருக்கும் உன் அப்பாவின்
முகம் மாதிரியே,
உனக்கும் ஒரு களை இருக்குடான்னு
உனக்கும் ஒரு களை இருக்குடான்னு
அம்மா சொன்னபோது.
கொஞ்சமுமாய் தைரியம் வந்தது.
இன்று சொல்லிவிடுவதென
முடிவெடுத்த ஒருநாளில்,
நீயாக வந்தாய் வீட்டிற்கு.
“ரொம்ப நாளா ஒருத்தனைக்
காதலிக்கிறேன், நான்” என்றாய்.
“இருக்கட்டும்,
அதை என்னிடம், ஏன்...” என்றேன்.
“அது நீதானாவெனக்
கேட்டுப் போகவே வந்தேன்” என்கிறாய்.
நீ சிந்திய வெட்கத்தில்
கரையத்தொடங்கிற்று என் தயக்கம்
இனி எழுத ஒன்றும் இல்லை.

17 பின்னூட்டம்:
“ரொம்ப நாளா ஒருத்தனைக்
காதலிக்கிறேன், நான்” என்றாய்.
“இருக்கட்டும்,
அதை என்னிடம், ஏன்...” என்றேன்.
“அது நீதானாவெனக்
கேட்டுப் போகவே வந்தேன்” என்கிறாய்.
நீ சிந்திய வெட்கத்தில்
கரையத்தொடங்கிற்று என் தயக்கம்
இனி எழுத ஒன்றும் இல்லை.
அழகிய காதல்க் கவிதை வாழ்த்துக்கள் சகோ .இனித்தானே நிறையக் கவிதைகள் எழுதலாம் .இதை வைத்துக்கொண்டே மென்மேலும் முயற்சித்து அழகிய கவிதைகள் தொடரட்டும் சகோ .மிக்க நன்றி
பகிர்வுக்கு .........
தமிழ்மணம் 1
காலங்காத்தால இப்படி ஒரு கவிதை படிக்கறதுல என்னவொரு ஆனந்தம்... அப்படியே அந்த ஃபீலிங்.. சூப்பர்..
ennamo ponga murali.. anubavikkaringa elutharakku munnadi.. yetho cinema padam patha mari irunthathu padikkaila.. super :) mikka nandri pagirvukku!
சிம்பிளா, கியூட்டா இருக்கு :)
@அம்பாளடியாள்
நன்றி சகோ, இனி எழுத ஒண்ணுமில்லைன்னா, எழுதுனா சென்சார் பண்ணவேண்டியிருக்கும்ன்னு அர்த்தம். ஹிஹிஹி....
நன்றி சகோ.
க.பாலாசி
அதுலயும் கதவுக்கு கால முட்டுக்குடுத்துட்டு தூங்குறதுல என்ன ஒரு பேரனந்தம்... யோவ் நீ என்னை கிண்டல் பண்றேன்னு இப்ப புரிஞ்சிக்கிட்டேன்... :-)
@சிவராஜ்
சிவா, நீங்க கலாய்க்கலேன்னு உறுதியா நம்பறேன். தயவுசெய்து அந்த நம்பிக்கைய சிதைச்சிடாதிங்க, புண்ணியமாப்போகும்.... :-)
@சுசி
தேங்க்யூ சுசி மேம்.
nice one..
அழகா இருக்கு முரளி..
//நீ சிந்திய வெட்கத்தில்கரையத்தொடங்கிற்று என் தயக்கம்இனி எழுத ஒன்றும் இல்லை.//
அந்தப் பெண்ணின் மேல் எனக்குக் கொஞ்சம் கோபம்தான்... இன்னும் நிறைய கவிதைகள் வருவதை கெடுத்துவிட்டாளே....
அட்டகாசம் முரளி...
Dear Murli,
I had little confusion in fourth para " உச்சி வெயிலில்..” I like the last one ie"ரொம்ப நாளா...”..the poem is Another one jilu jilu from ur kirukkal..
பெண்: நமக்குள்ள என்னன்னு எங்க வீட்ல எல்லாரும் கேக்குறாங்க
ஆண்: நீ என்ன சொன்ன?
பெண் : ஒன்னும் சொல்லல
ஆண் : என்ன சொல்லலாம்னு இருக்க?
பெண் : தெரியல
ஆண்: இந்த மாதிரி சமயங்கள்ல விஞ்ஞான அடிப்படையில முடிவெடுக்கணும்
பெண்: (அவசரமாக) இல்ல, இல்ல, உணர்வுகளையும் விஞ்ஞானத்தையும் மிக்ஸ் பண்ணாத
ஆண்: அப்போ random ஆ முடிவு செய்
பெண் : சரி சரி ஒன்னோட அறிவியல் பூர்வமான ஐடியாவ சொல்லு பாப்போம் (அரை மனதுடன் சொல்கிறாள் இதை)
ஆண்: ஒரு ரூபா நாணயத்தை டாஸ் பண்ணு, தல வந்தா நாம லவ் பண்றோம். பூ வந்தா இல்ல
பெண்: (சிறிது இடைவெளிக்குப் பிறகு) ம்ம்ம்ம், நீ டாஸ் பண்ணிப் பாத்தியா?
ஆண்: (உடன் பதில் அளிக்கத் தடுமாறுகிறான்) நான் தான் coin ஒங்கிட்டக் கொடுத்திட்டேனே
பெண்: (உடனே பதில் அளிக்கிறாள்) அப்ப டாஸ் பண்ண வேண்டிய அவசியமே இல்ல
ஆண்: (சிறிது குழப்பத்துடன்): ஏன், நாம முடிவு பண்ண வேண்டாமா?
பெண் : டார்லிங், நீ குடுத்த காய்ன்ல ரெண்டு பக்கமும் தல தான்ப்பா இருக்கு
ஆண்: ??!!!
வேரின்றி விதையின்றி
வின் தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம்
பூ பூக்குதே....
advance wishes for a happy married life.
இது காதல் கவிதை.
வாழ்த்துக்கள்.
கலகலப்ரியா, ஷஹி, வெண்புரவி, ஸ்ரீ, கோபி, ஓப்பாஸ், அப்பாதுரை மன்னிக்கனும் தனியான பின்னுட்டங்களைத் தொகுக்கவோ பதிலளிக்கவோ இயலவில்லை. :-)
அனைவருக்கும் நன்றி,
Post a Comment