கிறுக்கல்கள் 53



எப்பொழுதும் உன்னையே
எதிர்நோக்கியிருக்கும் எனக்கு,
வானவில்லின் நிறங்களை
முகத்தில் சுமந்தபடி,
தலை உயர்த்தி, மழை நோக்கி.
முகம் காட்டி நிற்கும்,
குழந்தைகளால் நிரம்பிய
மழைக்கு முந்தைய பொழுதுகளால்
மழையும் சரி,
பொழுதும் சரி,
அழகானதாகவே இருக்கிறது.

நினைக்கும் பொழுதெல்லாம்
பெய்திடாத வரை,
பெய்யும் பொழுதெல்லாம்
நனைந்திட முடியாத வரை,
ஏமாற்றங்களும் ஏக்கங்களும்
இருக்கும்வரை,
மழையையும் காதலிக்க முடியும்,
உன்னைப்போலவே.

நேற்றிரவு என் கனவில்
அடைந்து பெய்தது மழை,
அதன்
வன்தூறல்களுக்கிடையே
திறந்து கிடக்கும்
என் சாளரம் வழியாய்
வெளியேறிப் போகிறாய்
நீ.
நனைந்தே பின் தொடர்கிறேன்,
மழையோடு நானும்.

மழையின் கனவு
குளிராய்ச் சிரமிறங்க,
திடுக்கிட்டு விழித்தெழுகையில்
யாருமற்ற ரயில் நிலையத்தில்,
உதிர்ந்து கிடக்கும்,
பெயரறியா வெள்ளைப்பூக்களின் அருகே,
ஈரம் உலராத சிமெண்ட் பெஞ்சில்
குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கிறாய் நீ,
எப்போதைக்குமான
எனை நோக்கிய புன்முறுவலோடு.

அதிக நேரம் தூங்கி விட்டேனா?
மழை எதும் பெய்ததா?
என்றேன்.
பெய்யனுமா?
என்கிறாய் நீ.
-------------------------------------------------------
இன்று மழை பெய்யும், கிறுக்கல் வருமா? எழுத ஆயிரம் இருக்க, எப்போதும் மழையை எழுதுகிறாய், ஏன்? எனும் யாவருக்குமாய், இந்த கிறுக்கல். 

Post Comment

6 பின்னூட்டம்:

Ravikumar Tirupur said...

நல்ல கவி!
வார்த்தைகளெல்லாம் புரிவதில் சிறு சிரமம் ஏற்பட்டதால், நீர் முதல் தர கவிஞனாகிவிட்டீரென்று கருதுகிறேன்!

sivaraj said...

Ennamo poyya murali.. gavanathai thirupiruveer pola irukke!

வெண் புரவி said...

மழையில் முளைத்த கவிதை....இதை..இதைத்தான் எதிர்பார்த்தேன்.

கனிமொழி said...

:)

shri Prajna said...

"நினைக்கும் பொழுதெல்லாம்
பெய்திடாத வரை,
பெய்யும் பொழுதெல்லாம்
நனைந்திட முடியாத வரை,
ஏமாற்றங்களும் ஏக்கங்களும்
இருக்கும்வரை"..ம்ம் சரிதான்...

நல்லா இருக்குப்பா..short and sweet..

shri Prajna said...

நினைக்கும் பொழுதெல்லாம்
பெய்திடாத வரை,
பெய்யும் பொழுதெல்லாம்
நனைந்திட முடியாத வரை,
ஏமாற்றங்களும் ஏக்கங்களும்
இருக்கும்வரை,

நல்லா இருக்குப்பா..short and sweet aha..