திருமண அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே!
வருகிற ஞாயிறு, நவம்பர் 13ஆம் நாள், 2011, எனது திருமணம் கோவை இடையர்பாளையதிலுள்ள ஜோதிமணி பொன்னையா திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.

கல்யாணம் ஆன பின் பொண்டாட்டிய எங்கேயும் மறந்துட்டு வந்திடாதடான்னு அம்மா திட்டுற அளவுக்கு இருக்கும், என்னுடைய ஞாபகமறதி. இருந்தாலும் முடிந்தவரை யாரையும் மறந்திடாமல்  அழைப்பிதழைக் கொடுத்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.  அப்டி இப்டின்னு யாரையும் மறந்திருந்தா, கோவிச்சிக்காம இதையே அழைப்பிதழாக நினைத்து அவசியம் நேரில் வந்து வாழ்த்த வேண்டுகிறேன். நண்பர்களின் வாழ்த்துகளையே வரமாக நினைக்கிறேன்.

மறுபடியும் சொல்றேன், இங்கேயே பார்த்துட்டு இருக்கிற  நிறைய பேரை அங்கேயும் பார்க்கணும்ன்னு ஆசை, ஆக எல்லோரும் அவசியம் வாங்க. வரமுடியாதவங்க, நவம்பர் 13-ல்   எங்க இருந்தாலும் ஒரு நிமிடம் என்னை நினைத்துக் கொள்ளுங்கள். தலையில் விழுகிற பூக்களில் ஒன்றை உங்களுடையதாய் நினைத்துக்கொள்கிறேன்.

நன்றி.


அப்புறம் எல்லோருக்குமாய் இன்னொரு நல்ல விஷயத்தையும் சொல்லிடறேன், இன்னும் கொஞ்ச நாளுக்கு என் தொல்லை உங்களுக்கு இருக்காது. எழுதி சாவடிக்கமாட்டேன். சந்தோஷமா இருங்க. ஆனா ஒண்ணு, எதுவும் இங்கே நிரந்தரமில்லைங்கிறது மட்டும்தான் நிதர்சனம். ஹா ஹா ஹா :-)