திருமண அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே!
வருகிற ஞாயிறு, நவம்பர் 13ஆம் நாள், 2011, எனது திருமணம் கோவை இடையர்பாளையதிலுள்ள ஜோதிமணி பொன்னையா திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.

கல்யாணம் ஆன பின் பொண்டாட்டிய எங்கேயும் மறந்துட்டு வந்திடாதடான்னு அம்மா திட்டுற அளவுக்கு இருக்கும், என்னுடைய ஞாபகமறதி. இருந்தாலும் முடிந்தவரை யாரையும் மறந்திடாமல்  அழைப்பிதழைக் கொடுத்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.  அப்டி இப்டின்னு யாரையும் மறந்திருந்தா, கோவிச்சிக்காம இதையே அழைப்பிதழாக நினைத்து அவசியம் நேரில் வந்து வாழ்த்த வேண்டுகிறேன். நண்பர்களின் வாழ்த்துகளையே வரமாக நினைக்கிறேன்.

மறுபடியும் சொல்றேன், இங்கேயே பார்த்துட்டு இருக்கிற  நிறைய பேரை அங்கேயும் பார்க்கணும்ன்னு ஆசை, ஆக எல்லோரும் அவசியம் வாங்க. வரமுடியாதவங்க, நவம்பர் 13-ல்   எங்க இருந்தாலும் ஒரு நிமிடம் என்னை நினைத்துக் கொள்ளுங்கள். தலையில் விழுகிற பூக்களில் ஒன்றை உங்களுடையதாய் நினைத்துக்கொள்கிறேன்.

நன்றி.


அப்புறம் எல்லோருக்குமாய் இன்னொரு நல்ல விஷயத்தையும் சொல்லிடறேன், இன்னும் கொஞ்ச நாளுக்கு என் தொல்லை உங்களுக்கு இருக்காது. எழுதி சாவடிக்கமாட்டேன். சந்தோஷமா இருங்க. ஆனா ஒண்ணு, எதுவும் இங்கே நிரந்தரமில்லைங்கிறது மட்டும்தான் நிதர்சனம். ஹா ஹா ஹா :-)

36 கருத்துரைகள்:

☼ வெயிலான் said...

// கொஞ்ச நாளுக்கு என் தொல்லை உங்களுக்கு இருக்காது. எழுதி சாவடிக்கமாட்டேன் //

மழை பெய்யுது பாஸ்! இந்த நேரத்துல இப்படி சொன்னா எப்படி?

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மகிழ்ச்சி. எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழ வாழ்த்துகள் முரளி! :))

குடந்தை அன்புமணி said...

//இன்னும் கொஞ்ச நாளுக்கு என் தொல்லை உங்களுக்கு இருக்காது.//

சந்தோஷமா இருங்க.திருமணத்திற்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்.

மோகன் குமார் said...

பத்திரிக்கை அழகு.

இலக்கியமும் எஸ். ராவும் போல எப்போதும் இணைந்து மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகள் !!

அகல்விளக்கு said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நண்பா... :)

ப்ரியமுடன் வசந்த் said...

உங்களின் கிறுக்கல்கள் தடம் பதிக்க இன்னொரு சுவர் கிடைத்திருக்கிறது இனி அங்கு கிறுக்குபவையெல்லாம் காதல் கிறுக்கல்களாக இருக்கட்டும்..!

மனம் நிறைந்த வாழ்த்துகள் முரளி :)

Rajan said...

வாழ்த்துகள்! மொதப் பந்தில துண்டப் போட்டு வைங்க!

dr.tj vadivukkarasi said...

13 அன்று உங்களிருவரையும் நினைத்துக்கொள்கிறேன். விழுகின்றபூக்களில் ஒன்று எனதாயிருக்கும். இனிமேல் மழை கவிதைகளா..மனைவி கவிதைகளா? எப்படியோ எங்களுக்கு கவிதைகள் இனி நிறைய படிக்க கிடைக்கும்.

dr.tj vadivukkarasi said...

பத்திரிக்கையும் அதில் பிரமிளின் கவிதையும் ரொம்ப அழகு.

அன்புடன் அருணா said...

ஆஹா!அருமையான அழைப்பு!
உங்கள் தலைமீது 13ம் தேதி விழும் ஒரு பூங்கொத்து என்னுடையது !!!மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

சுசி said...

// நவம்பர் 13-ல் எங்க இருந்தாலும் ஒரு நிமிடம் என்னை நினைத்துக் கொள்ளுங்கள். தலையில் விழுகிற பூக்களில் ஒன்றை உங்களுடையதாய் நினைத்துக்கொள்கிறேன்//

அழகான வாழ்த்து.

மனமார நாங்கள் எல்லோரும் வாழ்த்திக்கொள்வோம்.

shri Prajna said...

எவ்ளோ நல்ல விஷயம் சொல்லிருக்கிங்க..murli(கொஞ்ச நாளுக்கு என் தொல்லை உங்களுக்கு இருக்காது)..

மாப்பின்னா கிண்டல் சுண்டல் எல்லாம் இருக்கும்..கண்டுக்கப்படாது..

மழை said...

திருமண வாழ்த்துக்கள்:)

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் தல :)

அருண்மொழித்தேவன் said...

ஜஸ்ட் திருமண வாழ்த்துக்கள் என்று சொல்லி எஸ்கேப் ஆவதற்கு கஷ்டமாக இருக்கிறது. இந்த மாதம் திருப்பூர் வருவேன் மச்சி அப்போ குடும்பத்துடன் வீட்டுக்கு வரேன் :)

தாமோதர் சந்துரு said...

நேரா வந்து உங்க தலையில் பூச்சொறியப் போகிறோம். வாழ்த்துகள் முரளி.

வி.பாலகுமார் said...

புதுமன புகுவிழா வாழ்த்துகள்.

அழைப்பிதழ் அழகு :)

சீனி மோகன் said...

வாழ்துக்கள் முரளி. முதல் பந்திக்கே வந்துடறேன்.

சீனி மோகன் said...

வாழ்த்துக்கள் முரளி. முதல் பந்திக்கே வந்துடறேன்.

சீனி மோகன் said...

இலக்கியமும் எஸ். ராவும் போல எப்போதும் இணைந்து மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகள் !!
மிக அருமையான வாழ்த்து.

KSGOA said...

வாழ்த்துகள்.திருமண அழைப்பு ரொம்ப நல்லா இருக்கு.

வெண் புரவி said...

// கொஞ்ச நாளுக்கு என் தொல்லை உங்களுக்கு இருக்காது. எழுதி சாவடிக்கமாட்டேன் //

//மழை பெய்யுது பாஸ்! இந்த நேரத்துல இப்படி சொன்னா எப்படி?//

அதனால்தான் திருப்பூரில் கூட வெள்ளம்....

முரளிகுமார் பத்மநாபன் said...

@வெயிலான்
தல, எல்லா மழையையும் அணை கட்டி தேக்கிக்கிறேன். அவ்ளோ சீக்கிரம் உங்களையெல்லா நிம்மதியா விட்டுடுவேனா என்ன? :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஷங்கர்
தேங்க்ஸ் தல... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@குடந்தை அன்புமணி
தேங்க்ஸ் அன்பு. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@மோகன்குமார்
தேங்க்ஸ் தல, வாழ்த்தே கவிதை மாதிரில்லா இருக்கு :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அகல்விளக்கு
நன்றி நண்பா!

முரளிகுமார் பத்மநாபன் said...

@பிரியமுடன் வசந்த்
நன்றி நண்பா!

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராஜன்
பங்குக்கு இல்லாத இடமா பந்தியில? நீ வா பங்கு ஆனா கொஞ்சம் மெதுவா :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@வடிவுக்கரசி
மிக்க நன்றீ மேடம். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்புடன் அருணா
உங்களிடமிருந்து பூ மட்டும் விழுந்தால்தான் ஆச்சர்யம். :-) நன்றி மேடம்.

அப்பாதுரை said...

அன்பு வாழ்த்துக்கள்!

விஜி said...

வாழ்த்துகள் முரளி..குடும்பத்தோட வரோம் :)

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் முரளி.

ஜோதிஜி திருப்பூர் said...

எங்கள் இதய பூர்வமான வாழ்த்துகள். பத்திரிக்கை மிக அற்புதம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நிச்சயமாக திக்குமுக்காடித்தான் போயிருக்கிறேன், உங்கள் வாழ்த்துக்களில்.

வாழ்த்திய அத்துனை அன்பு நெஞ்சங்களுக்கும் என் அன்பும் நன்றியும்.

அன்பிற்கு அன்பைத்தவிர எதைக்கொடுத்துவிட முடியும்?

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.