கிறுக்கல்கள் 54

இந்த மழை இனி எப்போதும் பெய்யட்டும்.


இரயில் பயணங்களில்,
தூரல் தவிர்க்க
கதவடைக்கச் சொல்கிற
விருப்பங்களுக்கிடையே,
மழைத்துளிகளுக்கு
நடுவாயமர்ந்தபடி,
ஈரம் மணக்கும்
பூக்களை ரசிக்கவோ,
கிதாரை இசைக்கவோ,
அல்லது வெறுமனவே
நனைந்தபடியிருக்கவோ
விருப்பப்படும் 
எனக்கும்,

மழை நேர மாலைப்பொழுதுகளை
இன்னும் அழகாக்க, காகிதம் மடித்து,
கப்பல் விடும் குழந்தைகளுக்கு
காட்டுவதுபோல் கையை,
எனக்கும் காட்டிக்கொண்டு,
மழைக்கும் நீட்டிக்கொண்டே,

நின்று பெய்யும் மழையை,
மெல்ல அனுபவித்து,
பின் வியந்து, கேசம் திருத்தி,
பொட்டை சரி செய்தபடியே,
கிளம்புகிறேன் என்பதைக்கூட
கவிதைபோல சொல்லும், 
அவளுக்கும், 
நெருக்கம் தர,
மழையே! 
உன்னைத் தவிரப் பின் 
யாரால் முடியும்?

என் மீது விழும் முன்
குளிர்வைக்கொண்டிருக்கும்
உன் ஓவ்வொரு துளிகளும்,
அவளை அடைந்து
பின் வெம்மையேறி
என்னை அடையும்
நெருக்கம் பெறவேனும்,
நான்
எப்பொழுதும் விரும்பும் மழையே!
இப்பொழுது முதல் விரும்பும்
இவளுக்காகவும், 
இனி பெய்து விட்டுப்போ!
எனக்கும் அவளுக்கும்
நெருக்கம் தர,
உன்னைத் தவிரப்
பின் யாரால் முடியும்?

Post Comment

6 பின்னூட்டம்:

அன்புடன் அருணா said...

இன்னும் நல்லா எழுதுவீங்களே!!!

மோகன் குமார் said...

கல்யாணம் ஆகி அதுக்குள்ளே பதிவு எழுத ஆரம்பிச்சாச்சா என கேள்வியோடு உள்ளே வந்தேன். கவிதை படித்து உண்மை அறிந்தேன். இருவருக்கும் வாழ்த்துகள்

shri Prajna said...

"வாழ்க வளமுடன்"

அப்பாதுரை said...

ஆகா! பதிவின் உந்துதல் புரியுதே?!

rishvan said...

திருமண வாழ்த்துக்கள்..... நல்ல எழுதியிருக்கீங்க...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.

விக்னேஷ்வரி said...

அழகு.