"இசையின் பயனே இறைவன்தானே?
காற்றில் வரும் கீதமே!
என் கண்ணனை அறிவாயோ?"
எப்பொழுதும் இசையைக் கேட்கும் பொழுது, மனதில் தோன்றும் பிம்பங்கள் அற்புதமானது. அந்த பிம்பங்கள் காதலையோ அல்லது மிக மெல்லிய உணர்வுகளையோ பிரதிபளிப்பதாகவே இருக்கிறது. அதனால், மனம் இயல்பாகவே நம்மை அமைதி கொள்ளச் செய்கிறது. நமது சந்திக்கும் விசயங்கள் அனுபவங்களாய் மனதில் தங்கிவிடுவதைப் போலவே, இசையும். கிணற்றில் ஆழத்தில் குளிர்ச்சியை தக்கவைத்துக் கொண்டு உறங்கிக்கிடக்கும் கூழாங்கற்களைப் போல, மனதில் ஏதாவது ஒரு மூலையில் இசையில் படிந்திருக்கிறது. இசை குறித்து ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு விதமான பிடிமானங்களும், அளவுகோல்களும் இருப்பதால் பொதுவான இசையை அறிந்துகொள்ள முடிவதில்லை. இருந்தும் இசை அனைவருக்கும் பொதுவானது. புரியாமலும் கேட்பது சுகம், புரிந்து கேட்பதில் பரம சுகம். அவ்வளவே. இதனாலேயே எங்கோ, என்றோ, எவராலோ உருவாக்கப்பட்ட இசை கடல் கடந்து, எல்லை கடந்து காதுகளில் விழுகிறது.
உலகமெங்கும் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு வெறுப்பு இருக்குமேயானால், அது அறிவுரைகள் .அப்படிப்பட்ட அறிவுரைகளைக் கூட இசை தடவி கொடுக்கும்போது இனித்தே இருக்கிறது. எதையும் இலகுவாக்கும் திறன் இசைக்கு மட்டும் இருப்பதை சொல்லவே இதை இங்கே சொல்கிறேன். சமீபத்தில் நீலத்தாமரா மற்றும் சைத்தான் படம் பார்த்ததிலிருந்து, (சித் நா கரோ, கோயா கோயா சாந்த்) பழைய ஹிந்தி பாடலகளில் கலெக்ஷன்சை தேடிக்கொண்டிருந்தேன், அப்போ ஒல்ட் கல்ட்ஸ் என்று நான் எழுதிவைத்திருந்த ஒரு பழைய சி.டி.ஒன்று கிடைத்தது. உண்மையிலேயே இப்போ அது ஒரு பொக்கிஷம் மாதிரிதான் இருக்கு. ஆர்.டி.பர்மன், ரஃபி, கிஷோர்குமார் இவர்களுடைய ஹிட்ஸும். தேர்ந்தெடுத்த ஆங்கிலப்பாடல்களுமாய் சி.டி. நிரம்பியிருந்தது. ஆனால் இந்த சி.டியை உபயோகித்ததாக சற்றும் எனக்குத் தோன்றவில்லை.

பாப் மெர்ளி, போனி எம், ப்ரையன் ஆடம்ஸ், ஸ்டிங், ராட் ஸ்டூவர்ட், ரோனன் கீட்டிங், டேரன் ஹேஸ், ஜெனிஃபர் லோபஸ், பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் இப்படி நிறைய அருமையான பாடல்கள், சொல்லப்போனா எல்லாப் பாட்டுமே அந்தந்த காலகட்டங்களில் கலங்கடித்த மற்றும் எவர் க்ரீன் பாடல்கள்தான். ஆனால் மிகப்பெரிய குறை அந்த சிடி ப்ளே ஆவதில்லை. கணினியில் பாடல்களில் பெயர்கள் தெரிகிறது. அதைவைத்துக்கொண்டு மறுபடியும் தேடித்தேடி டவுன்லோட் செய்து கொண்டிருக்கிறேன். சில பாடலகள் MP3 யாக கிடைக்கவில்லை. யூட்யூபில் வேண்டுமானால் விடியோக்கள் கிடைக்கின்றன.
கொஞ்சம் கொஞ்சமாக சில பாடல்களை ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்து கொண்டு இருக்கிறேன். இதுவரை கிடைத்த எல்லாவற்றையும் MP3 ப்ளேயரில் காப்பி செய்து வைத்துக்கொண்டு ஒரு வாரமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சத்தியமாக இசை என்ற ஒன்று இல்லையென்றால் இருக்கிற சூழ்நிலைக்கு, என்னவாகியிருப்பேனென தெரியவில்லை. இசையை ரசிக்கத் தெரிந்த ஒருவனால் கொலை செய்ய முடியாது என்ற பதம் நினைவிற்கு வருகிறது, மீண்டும்.
இங்கே சில உங்களுக்காகவும்,
அப்படி இப்போ அடிக்கடி கேட்கிற ஒரு பாடல், லெமன் ட்ரீ. அதிக இசைக்கருவிகள் இல்லாமல் மிதமான கம்போசிங்கில் பாடப்பட்ட பாடல். காதலின் மாயக்கரத்தின் பிடியின் தன் சுதந்திரத்தை இழந்த ஒரு ஆணின் பார்வையில் பாடப்பட்ட பாடலாகவே இருந்தாலும் இதை இருவருமாய் பொருந்திப் பார்த்துக்கொள்ள முடிவது இந்தப் பாடலின் சிறப்பு.
ஒரு மழை நேர ஞாயிறு மதியத்தில்,
உனக்கெனக் காத்துக்கொண்டு,
ஒரு அறையில் அமர்ந்திருக்கிறேன் என்பதும்,
எதுவும் செய்யாமல், வெறுமையாய்
சுற்றித் திரிந்துகொண்டும் இருப்பது,
ஏனோ புதிராகவே இருக்கிறது.
உனக்கான பயணங்களிலும் தனித்தே இருக்கிறேன்,
இப்படி தனிமையில் காத்திருப்பதிலிருந்து
விட்டு விலகி இங்கிருந்து வெகுதூரத்திற்கு,
வேகமாக காரை ஓட்டிச்செல்ல விரும்புகிறேன்.
இருந்தும், உனக்கெனக் காத்துக்கொண்டு,
ஒரு அறையில் அமர்ந்திருக்கிறேனென்பது
ஏனோ புதிராகவே இருக்கிறது.
இது எப்படி? ஏன் இப்படியென்பதும்
ஏனோ புதிராகவே இருக்கிறது.
நேற்று, நீ என்னிடம் சொன்னதெல்லாம் நீல வானை பற்றி,
நான் கண்டதெல்லாம் எலுமிச்சை மரம் மட்டுமே!
மேலே, கீழே மற்றும் சுற்றியும் பார்த்துவிட்டேன்,
நான் கண்டதெல்லாம்,
இன்னுமொரு மஞ்சள் எலுமிச்சை மரம் மட்டுமே!
குளித்துவிட்டு வெளியே செல்ல நினைக்கிறேன்,
ஆனால் ஒயாமல் மனதை சுற்றும் எண்ணங்கள்
என்னை ஒளியற்ற இந்த அறையிலேயே
அமரவைத்திருக்கிறது, இது ஆச்சர்யம்தானே?
தனிமையில் இருப்பதென்பது -அந்த
எலுமிச்சை மரத்தில் அமர்ந்திருப்பதைப்போல,
நான் அதை விரும்பவுமில்லை.
மேலும் இந்தத் தனிமை எனக்கானதல்ல.
மட்டுப்போன என் சந்தோசங்களில் எட்டிப்பார்த்தால்,
என்னால், எனக்கான இன்னொரு பொம்மையை
செய்து கொள்ள முடியுமென்றே தோன்றுகிறது.
இவை அனைத்தும் நடக்கும்போது, என் அன்பே!
உனக்குத்தான் புதிராக இருக்கும்.
இசையில் தொடங்குதம்மா .. ...